புது ஸ்கோடா காரை வாங்க ஷோரூமில் கூட்டம் கூட போகுது!! ஹெட்லைட்டுக்காகவே எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), உலகின் மிக பெரிய கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் பல தரமான கார்களை விற்பனை செய்கிறது. அந்த கார்களுள் ஒன்று, ஸ்கோடா குஷாக் ஆகும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் எஸ்யூவி காரான குஷாக் இந்திய சந்தையில் கடந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், கடந்த 3 ஆண்டுகளில் சில புதிய வேரியண்ட்கள் ஸ்கோடா குஷாக் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது, ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் (Onyx Automatic) என்கிற பெயரில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய குஷாக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களை மக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அதன் குஷாக் எஸ்யூவி காரில் புதிய ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய குஷாக் ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.13.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். குஷாக் ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் காரில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜின் கிடைக்கும். ஸ்கோடா குஷாக் காரில் முதல்முறையாக 'ஓனிக்ஸ்' என்கிற பெயரில் புது வேரியண்ட் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே குஷாக் ஓனிக்ஸ் கார் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, குஷாக் ஓனிக்ஸ் காரில் புதியதாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குஷாக் ஓனிக்ஸ் காரில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் வழங்கும் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 178 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஸ்கோடா குஷாக் ஓனிக்ஸ் காரில் டி.ஆர்.எல்-களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், கார்னரிங் ஃபாக் விளக்குகள், டிஃபாக்கர் உடன் ரியர் வைப்பர், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், பெடில் ஷிஃப்டர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்ஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இவற்றுடன் ஃப்ளோர் மேட்ஸ், ஸ்கஃப் பிளேட்ஸ், ஓனிக்ஸ் பேட்ஜ் மற்றும் ஓனிக்ஸ்-தீம் குஷின்களையும் பெறலாம்.

ஸ்கோடா குஷாக் காரில் ஏற்கனவே ஆக்டீவ் மற்றும் அம்பிஷன் வேரியண்ட்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றன. தற்போது அவற்றுடன், ஓனிக்ஸ் வேரியண்ட்டும் இணைந்துள்ளது. குஷாக் ஆக்டீவ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை காட்டிலும் விலைமிக்கதாகவும், குஷாக் அம்பிஷன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை காட்டிலும் விலை குறைவானதாகவும் புதிய குஷாக் ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய குஷாக் ஓனிக்ஸ் ஆட்டோமேட்டிக் காரின் அறிமுகம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் பீட்ர் ஜனேபா கருத்து தெரிவிக்கையில், "டாப் வேரியண்ட்களின் வசதிகளுடன் ஆக்டீவ் வேரியண்ட்டை வழங்கும் எங்களது முயற்சியில் ஓனிக்ஸ் வேரியண்ட் ஒரு முக்கிய சேர்க்கையாக உள்ளது. இந்த புதிய குஷாக் ஓனிக்ஸ் வேரியண்ட் ஆனது, எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது.
இது ஏற்கக்கூடிய விலையில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கான ஆரோக்கியமான தேவையை சுட்டிக்காட்டுகிறது. தொந்தரவில்லாத கார் உரிமை அனுபவத்தை வழங்குதல், எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகுதல் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து செவி சாய்த்தல் ஆகியவை எங்கள் முயற்சியாகும். மேலும், எங்களது வளர்ச்சிக்கான உத்தியில் முக்கிய பகுதியாகும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு அதிகம் விற்பனையாகும் ஸ்கோடா கார்களுள் ஒன்று குஷாக் ஆகும். இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில், இவ்வாறான புது, புது வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியமாகின்றன. இந்தியாவில் மேனுவல் காரை வாங்கவே நிறைய பேர் விரும்புகின்றனர் என்றாலும், ஏற்கனவே கூறியதுபோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








