1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

'ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' திரைப்படத்தில் இடம் பெற்ற கார் ஒன்று வரலாற்றை உடைக்கும் வகையில் ஏலத்தில் விற்பனைக்கு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்களில் 1994 டொயோட்டா சுப்ரா மாடலும் ஒன்று. இந்த காரே ஏல சந்தையையே மிரள வைக்கின்ற வகையில் விற்பனைக்குப் போயிருக்கின்றது.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 5,50,000 டாலர்களுக்கு அக்கார் விற்பனையாகியிருக்கின்றது. இது இந்திய ரூபாய் 4 கோடிகள் ஆகும். இந்த அளவு ஓர் பழைய மாடல் கார் விற்பனைக்கு போவது ஆச்சரியமான ஒன்று வாகனத்துறை வல்லுநர்கள் பிரம்மித்திருக்கின்றனர்.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

அமெரிக்காவின் பார்ரட் ஜாக்சன் மார்க்கெட் தளம் எனும் நிறுவனத்தின் வாயிலாக டொயோட்டா சுப்ரா விற்பனையாகியிருக்கின்றது. இதனை ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் பாவுல் வால்கர் (பிரையன் ஓ கான்னர் எனும் கதாப்பாத்திரம்) பயன்படுத்தியிருப்பார்.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரிஸ் 2001 மற்றும் 2 ஃபாஸ்ட் அண்ட் 2 ஃப்யூரியஸ் 2003 ஆகிய இரு பாகங்களிலும் இக்கார் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காரையே அமெரிக்க ஏல நிறுவனம் அதிக லாபத்தில் விற்பனைச் செய்திருக்கின்றது.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

ஏலம் தொடங்கப்பட்ட வெகு சில நொடிகளிலேயே அக்களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதாகவும், பலர் அக்காரை வாங்க கடும் போட்டியதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே கடைசியாக 5.50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு டொயோட்டா சுப்ரா விற்பனையாகியிருக்கின்றது.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

இந்த கார் 1994 மாடலாக இருந்தாலும் தற்போதும் புதுப் பொலிவு குறையாமல் இருக்கின்றது. ஆரஞ்சு மிட்டாய் நிறத்தில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் அக்கார் காட்சியளிக்கின்றது. காரின் இரு பக்கத்திலும் நியூக்ளியர் கிளாடியேட்டர் கிராஃபிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

இதுதவிர, பாமெக்ஸ் பாடி கிட், டிஆர்டி ஸ்டைல் ஹூட், ஏபிஆர் அலுமினியம றெக்கை மற்றும் 19 இன்சிலான டாஸ் மோட்டார்ஸ்போர்ட் ரேசிங் ஹார்ட் எம்5 வீல்கள் ஆகியவற்றைக் கொண்ட டொயோட்டா சுப்ரா அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

தொடர்ந்து, காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்கள் திரைப்படத்தின் காட்சிப்பதிவிற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கருப்பு நிறத்தால் காரின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, சந்தைக்கு பிறகான கேஜ்கள், ஸ்டியரிங் வீல், நீல நிற இருக்கைகள் என எக்கச்சக்க அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

1994 டொயோட்டா சுப்ரா காரை வாங்க குவிந்த ஆர்வலர்கள்... எத்தனை கோடிக்கு ஏலம் போச்சு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க!

டொயோட்டா சுப்ரா காரில் 2ஜேஇசட்-ஜிடிஇ டர்போசார்ஜட் 3.0 லிட்டர் இன்லைன்6 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உண்மையான திறன் வெளிப்பாடு பற்றிய தகவல் வெளியிடப்பவில்லை. இருப்பினும் அது ஆச்சரியமளிக்கக் கூடிய வகையிலான திறனை வெளிப்படுத்தக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Paul Walker's Toyota Supra Auctioned For Over 4 Crore Rupees. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X