மேம்படுத்தப்பட்ட மாருதி எஸ்எக்ஸ்-4 செடான் காரில் என்னென்ன புதுசு?
விற்பனையில் பின்தங்கிவிட்ட எஸ்எக்ஸ்-4 செடான் காரை போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் பார்வைக்கு சற்று புதுப்பொலிவு கொடுத்து, கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மாருதி. எஞ்சின், டிரான்ஸ்மிஷன்களில் எந்த மாற்றங்களும் இல்லை.
கம்பீரமான செடான் காரான எஸ்எக்ஸ்-4 இந்த இடைப்பட்ட புதுப்பொலிவும், கூடுதல் அம்சங்களும் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் என மாருதி நம்புகிறது. இந்த நிலையில், புதிய எஸ்எக்ஸ்-4 காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு மாற்றம்
குரோம் பூச்சுடன் கூடிய முகப்பு கிரில் மற்றும் டியூவல் வண்ண பம்பர் புதுசு.

ரியர் வியூ மிரர்
எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் மடக்கி விரிக்கும் வசதி கொண்ட ரியர் வியூ மிரர். அதன் பின்புறத்தில் இண்டிகேட்டர் உள்ளது.

டேஷ்போர்டு
டேஷ்போர்டின் மேலே கருப்பு அதற்கு கீழே பீஜ் என இரட்டை வண்ணத்தில் மிளிர்கிறது.

ஸ்பெஷல்
கதவில் பொருத்தப்பட்டிருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டில் கிரானைட் கல் போன்ற கியூபிக் பிரின்ட்டிங் செய்யப்பட்டுள்ளது கவர்ச்சியாக இருக்கிறது.

அப்ஹோல்ஸ்டரி
புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி பினிஷிங் கவரும் வகையில் இருக்கிறது.

குரோம் பினிஷிங்
கதவு பிடிகள் மற்றும் ஏசி வென்ட்டுகளில் குரோம் பூச்சுடன் அழகு சேர்க்கிறது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரியோ யூனிட் மற்றும் சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் கூடுதல் அம்சம்.

புதிய வண்ணங்கள்
செரீன் புளூ மற்றும் கிரானைட் கிரே ஆகிய இரண்டு புதிய வண்ணங்களிலும் மேம்படுத்தப்பட்ட புதிய எஸ்எக்ஸ்-4 கிடைக்கும்.

எஞ்சின்
104 பிஎச்பி ஆற்றலையும், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சின்.
86 பிஎச்பி ஆற்றலையும், 122 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கும் 1.6 லிட்டர் எஞ்சின்.
90 பிஎச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய எஸ்எக்ஸ்-4 கிடைக்கும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.51 கிமீ(பழைய மாடலைவிட 6 சதவீம் கூடுதல்) மைலேஜ் தரும் எனவும், சிஎன்ஜி-பெட்ரோல் மாடல் கிலோவுக்கு 22.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.79 கிமீ மைலேஜை தரும் என்று மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரவுன்ட் கிளியரன்ஸ்
கரடு முரடான சாலைகளிலும் அச்சமின்றி ஓட்டும் வகையில் 180 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

கூடுதல் நீளம்
பழைய மாடலைவிட மேம்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்-4 காரின் பம்பர் சற்று கூடுதல் நீளத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால், புதிய எஸ்கஎஸ்-4 நீளம் 10மிமீ அதிகரித்துள்ளது. பம்பர்

விலை(டெல்லி ஆன்ரோடு)
விலை(டெல்லி ஆன்ரோடு)
விஎக்ஸ்ஐ: ரூ8,12,920
இசட்எக்ஸ்ஐ: ரூ.9,07,327
டீசல்
விடிஐ: ரூ.9,29,994
இசட்டிஐ: ரூ.10,35,103
சிஎன்ஜி
விஎக்ஸ்ஐ சிஎன்ஜி: ரூ.8,80,316


Click it and Unblock the Notifications








