சான்ஸே இல்ல... புதிய ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவி டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Posted By:

சொகுசு கார் ஒன்றை முதல்முறையாக வாங்க திட்டமிடுகிறீர்கள். சொகுசு கார் மார்க்கெட்டில் ஆரம்ப விலை கொண்ட மாடல்கள் அனைத்தும் அலசுகிறீர்கள். அதில், அனைத்தும் ஏதோ ஒரு குறையுடன் உங்கள் மனதை கவரவில்லை அல்லது எதிர்பார்த்த அளவு சொகுசு காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வை அளிக்கவில்லை. சில சமயம் டிசைன் கூட பழமையாக இருந்து கடுப்பேற்றலாம்.

அவ்வாறு சலிப்படைந்தவர்களுக்கு, சிறிய டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் சமீபத்தில் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி மாடல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த புதிய ஆடி க்யூ3 காரை சமீபத்தில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

அப்போது கிடைத்த அனுபவம் மற்றும் இந்த காரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் ஆடி க்யூ3 எஸ்யூவியுடன் ஸ்லைடரில் ஒரு குட்டி செய்திப் பயணத்தை மேற்கொள்ளளாம். ஒரு சுற்று சுற்றி பார்க்கலாம்.

01. டிசைன்

01. டிசைன்

முன்புறத்தில் ஆடியின் நான்கு வளைய சின்னத்தை நடுநாயகமாக வைத்து, ஒற்றை க்ரோம் பட்டைக்குள் அடைக்கப்பட்ட புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது காரின் கம்பீரத்தையும், அழகையும் பன்மடங்கு உயர்த்துகிறது. அத்துடன், இந்த க்ரில்லின் காதுகள் ஹெட்லைட்டுகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஆடி க்யூ3 மாடலின் ஸினான் ஹெட்லைட்டுகளுடன் கூடிய எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு படுகவர்ச்சியாக இருக்கிறது. போட்டி மாடல்களை பார்த்துவிட்டு, இந்த காரை பார்க்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஆடி க்யூ3 எஸ்யூவியின் முக வசீகரத்தை கண்டவுடன் மயங்கிவிடுவது நிச்சயம்.

 02. பக்கவாட்டு டிசைன்

02. பக்கவாட்டு டிசைன்

மெல்லிய பாடி லைன்கள், 10 ஸ்போக்குகள் கொண்ட 17 இன்ச் அலாய் வீல்கள், சரிவான கூரை அமைப்பு ஆகியவை பக்கவாட்டில் பார்க்கும்போதும் படு அசத்தலாக இருக்கிறது.

03. பின்புறம்

03. பின்புறம்

பின்புறத்தில் குறிப்பிட்டு கூற வேண்டியது எல்இடி டைனமிக் இன்டிகேட்டர் விளக்குகள். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அலை அலையாய் ஒளிர்ந்து உள்ளத்தை கொள்ளையடிக்கிறது. இது பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து, எச்சரிக்கும் விதத்தில் உள்ளது. எங்களது வீடியோ விமர்சனத்தில் பார்த்தால், கண்டிப்பாக இந்த உணர்வு உங்களுக்கும் கிடைக்கும். மேலும், க்ரோம் பூச்சு கொண்ட புகைபோக்கிக் குழாய் முனைகள், புதிய பம்பர் ஆகியவையும் ஆடியின் மீதான ஈர்ப்பை அதிகமாக்குகின்றன.

 04. இன்டிரியர்

04. இன்டிரியர்

இன்டிரியரில் தரமும், அழகான டிசைனும் உச்சத்தை தொட்டிருக்கின்றன. மென்மையான டேஷ்போர்டு மற்றும் உள்ளலங்காரம் நிச்சயம் பென்ஸ் ஜிஎல்ஏ., காரைவிட மிகவும் சிறப்பாகவே தெரிகின்றன.

 05. லெதர் இருக்கைகள்

05. லெதர் இருக்கைகள்

லெதர் இருக்கைகள் மிகவும் சொகுசான உணர்வையும், பயண அனுபவத்தையும் தருகிறது. ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கான இடவசதி சிறப்பாகவே இருக்கிறது. பின்புறத்தில் ஒல்லியான தேகம் கொண்ட 4 பேர் வசதியாக அமரலாம். ஆனால், பின்புறத்தில் சரியும் கூரை வளத்தியானவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

 06. பூட் ரூம்

06. பூட் ரூம்

ஆடி க்யூ3 எஸ்யூவியில் 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. போட்டியாளரான பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமை விட இது அதிகம்.

ஒரு ஒப்பீடு

_ ஆடி க்யூ3: 460 லிட்டர்

_ மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ: 421 லிட்டர்

_ பிஎம்டபிள்யூ எக்ஸ்1: 420 லிட்டர்

_வால்வோ வி40 சிசி: 324 லிட்டர்

07. எஞ்சின்

07. எஞ்சின்

2015ம் மாடலாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி சர்வதேச அளவில் பல எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் ஏற்கனவே இருந்த அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டர்போசார்ஜர் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் எங்களது ஓட்டுதல் அனுபவத்தில், நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் எஞசின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு ஏமாற்றம் தரலாம்.

 08. கியர்பாக்ஸ்

08. கியர்பாக்ஸ்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ட்ரைவ் மற்றும் ஸ்போர்ட் என இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ட்ரைவ் மோடில் கியர் ஷிஃப்ட் சாதாரணமாகவும், ஸ்போர்ட் மோடில் கியர் ஷிஃப்ட் அதிவேகமாகவும் நடக்கிறது. மேலும், விரும்பினால் மேனுவல் கியர்பாக்ஸ் போன்று ஓட்டுவதற்கான வசதியையும் அளிக்கிறது. பேடில் ஷிப்ட் வசதியும் ஓட்டுதலை எளிதாக்குகிறது.

09. டிரைவிங் ஆப்ஷன்

09. டிரைவிங் ஆப்ஷன்

கியர்பாக்ஸ் ஆப்ஷன் தவிர்த்து, மூன்றுவிதமான ஓட்டுதல் முறைகளை கொண்டிருக்கிறது. கம்ஃபோர்ட் என்ற ஆப்ஷனில் சஸ்பென்ஷன் மென்மையாகவும், மிக சொகுசான ஓட்டுதல் மற்றும் பயண அனுபவத்தை வழங்குகிறது. இது நகர்ப்புறத்துக்கு சிறப்பானதாக இருக்கும். ஆட்டோ என்ற ஆப்ஷனில் ஓட்டுனர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை கண்காணித்து, அதற்கு தக்கவாறு சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் மாறுதல்களை செய்து கொள்ளும். டைனமிக் என்ற ஆப்ஷனில் எஞ்சின் அதிகபட்ச செயல்திறனை காட்டுவதோடு, கையாளுமையும் சிறப்பாக இருக்கிறது.

10. முக்கிய வசதிகள்

10. முக்கிய வசதிகள்

புதிய ஆடி க்யூ3 எஸ்யூவியில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. அதில், எம்எம்ஐ நேவிகேஷன் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், எல்இடி இன்டிரியர் விளக்குகள், ரியர் வியூ கேமராவுடன் கூடிய பார்க்கிங் சிஸ்டம் ப்ளஸ், ஆடி சவுன்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவைகள். ஆடி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆடி மியூசிக் இன்டர்ஃபேஸ், 20 ஜிபி ஸ்டோரேஜ், இரண்டு எஸ்டிஎச்சி போர்ட்டுகள், புளூடூத் வசதி ஆகியவை அடக்கம்.

11. மைலேஜ்

11. மைலேஜ்

இதன் பட்ஜெட் மற்றும் ரகத்திலான போட்டியாளர்களை ஒப்பிடும்போது, மைலேஜில் பின்தங்குகிறது ஆடி க்யூ3 எஸ்யூவியின் டீசல் மாடல். அவற்றை ஒப்பீடு செய்து தந்திருக்கிறோம்.

ஆடி க்யூ3: 15.73 கிமீ/லி

பிஎம்டபிள்யூ எக்ஸ்-1: 17.05 கிமீ/லி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ: 17.9 கிமீ/லி

வால்வோ வி40 சிசி: 16.81 கிமீ/லி

 12. நிறை, குறைகள்

12. நிறை, குறைகள்

நிறைகள்

சிறப்பான டிரைவிங் பொசிஷன்

பானோரமிக் சன்ரூஃப்

ஜோரான கையாளுமை

நவீன தொழில்நுட்ப வசதிகள் அதிகம்

க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

குறைகள்

ஆக்சிலரேசன்

கைகளுக்கு லாவகமில்லாத கன்ட்ரோல் சுவிட்சுகள்

 13. மதிப்பீடு

13. மதிப்பீடு

போட்டியாளர்களைவிட கொடுக்கும் பணத்திற்கு கூடுதல் மதிப்பு கொண்ட மாடல். மதிப்பீட்டில் 5க்கு 4ஐ பெறுகிறது.

14. பாதுகாப்பு வசதிகள்

14. பாதுகாப்பு வசதிகள்

ஆடி பார்க்கிங் ப்ளஸ் சிஸ்டம்

6 ஏர்பேக்குகள்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

பிரேக் அசிஸ்ட் என பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த எஸ்யூவி கொண்டுள்ளது.

15. டெஸ்ட் டிரைவ் வீடியோ

2015 ஆடி க்யூ3 சொகுச எஸ்யூவியின் வீடியோ விமர்சனம்

எங்களது ஃபேஸ்புக் பக்கம்

எங்களது டுவிட்டர் பக்கம்

 

யூ ட்யூப் வீடியோ: 2015 ஆடி க்யூ3 எஸ்யூவியின் வீடியோ விமர்சனம்!!

English summary
DriveSpark gets behind the wheel of the 2015 Audi Q3. Read the test drive report to discover how the Q3 drives, exterior styling, interior design, features, and verdict

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark