பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ செடான் கார் மீது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு இன்றளவும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு வரையில், பலேனோ செடான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட பின்னர், பலேனோ 'நேம்பிளேட்' நீண்ட காலமாக புழக்கத்தில் இல்லை. எனினும் 2015ம் ஆண்டில் மாருதி சுஸுகி பலேனோ 'கம்பேக்' கொடுத்தது. இம்முறை ஹேட்ச்பேக் வடிவத்தில் பலேனோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பலேனோவின் பெயர் ஹேட்ச்பேக் காருக்கு பயன்படுத்தப்பட்டது ஆரம்பத்தில் கார் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் காலம் தவிடுபொடியாக்கியது. இன்றைய தேதியில் மாருதி சுஸுகி பலேனோ கார்தான், இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதன் விற்பனை எண்களுக்கு அருகில் கூட போட்டியாளர்களால் வர முடிவதில்லை. மாருதி சுஸுகி பலேனோ அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்துள்ளது.

இந்த சூழலில் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக, 2022 பலேனோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரை கோவாவில் வைத்து நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

டிசைன்

முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, மாருதி சுஸுகி பலேனோ துள்ளலான டிசைன் மொழியை கொண்டுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. மாருதி சுஸுகி பலேனோவின் இந்த அடிப்படையான பண்பில் சமரசம் செய்யாமல், 2022 மாடலுக்காக அதனை மறுவடிவமைப்பு செய்திருப்பது உண்மையிலேயே சவாலான காரியம்தான்.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த விஷயத்தில் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 2022 பலேனோ காரின் டிசைனை கூடுதல் மெருகேற்றியதற்காக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்து விடலாம்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

புதிய பலேனோவை முன் பகுதியில் இருந்து பார்க்கும்போது ஸ்டைலான ஹெட்லேம்ப்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். முன் பகுதியை இந்த ஹெட்லேம்ப்கள் ஸ்போர்ட்டியாக காட்டுகின்றன. இவை ப்ரொஜெக்டர் யூனிட்கள் ஆகும். இதனுடன் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

இதற்கு அடுத்தபடியாக முன் பகுதியில் உள்ள NEXWave க்ரில் அமைப்பு காரை கம்பீரமாக காட்டுவதுடன், கூடுதல் கவர்ச்சியையும் சேர்த்துள்ளது. இதற்கு அடியில் உள்ள க்ரோம் பட்டை பிரமாதம். அத்துடன் இந்த காரின் பம்பரும் புத்தம் புதிய டிசைனை பெற்றுள்ளது. இதன் இருபுறமும் பக்கவாட்டில் பனி விளக்குகள் அறை இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது Shoulder Line மற்றும் ஷார்ப்பான Character Line ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. ஆனால் இதை காட்டிலும் 16 இன்ச் அலாய் வீல்கள்தான் இன்னும் சிறப்பாக உள்ளன. டைமண்ட்-கட் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் தனித்துவமான டிசைனை கொண்டுள்ளன. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் புதிய மாருதி சுஸுகி பலேனோ மிகவும் ஸ்டைலான அலாய் வீல்களை கொண்டுள்ளது என்றும் கூட சொல்லலாம்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

அதேபோல் இந்த காரின் பின் பகுதி டிசைனும் நம்மை கவர்ந்து இழுக்கிறது. இங்கே ஸ்பிளிட் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எல்இடி டெயில்லேம்ப்கள் உண்மையிலேயே 'பிர்லியண்ட்' என பாராட்டக்கூடிய வகையில் இருக்கின்றன. பின் பகுதியை பொறுத்தவரை, தாழ்வாக வரும் மேற்கூரை, ஸ்டாம் லேம்ப் உடன் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

இது ஏற்கனவே பிரீமியமாக தோற்றமளிக்கும் ஒரு கார்தான். அப்படி இருக்கும்போது பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள தடிமனான க்ரோம் பட்டை இந்த காரை இன்னும் பிரீமியமாக காட்டுகிறது. இந்த க்ரோம் பட்டையுடன் பின் பக்க கேமரா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மாருதி சுஸுகி பலேனோவின் டிசைன் அருமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 'இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்' என டிசைனில் எதை நோக்கியும் குறை சொல்ல முடியாத வகையில் இருக்கிறது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

காக்பிட் & இன்டீரியர்

இந்த பகுதியில்தான், முந்தைய மாடலை காட்டிலும், புதிய மாருதி சுஸுகி பலேனோ மிகவும் விரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கேபின் லே-அவுட்டை மாற்றியமைத்துள்ளது. அத்துடன் புத்தம் புதிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ஒரு சில வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்ளே சென்ற உடனேயே புதிய மாற்றங்களை உடனடியாக உணர முடிகிறது.

ட்யூயல்-டோன் இன்டீரியரை புதிய மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. நீலம் மற்றும் கருப்பு ஆகியவைதான் 'தீம்' கலர்களாக உள்ளன. இந்த காரின் டேஷ்போர்டும், ஸ்டியரிங் வீலும் சில்வர் வேலைப்பாடுகளையும் பெற்றுள்ளன. இது இன்டீரியரை இன்னும் கவர்ச்சியாக காட்டுகிறது. குறிப்பிட்ட இடங்களில் பியானோ பிளாக் வேலைப்பாடுகளையும் காண முடிகிறது. டேஷ்போர்டின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும், மைய பகுதி நீல நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே கருப்பு மற்றும் நீல நிறங்களை சில்வர் நிற பட்டை பிரித்து காட்டுகிறது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே சென்டர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கும் இந்த சில்வர் பட்டைகளை காண முடிகிறது. 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்போடெயின்மெண்ட் யூனிட் இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இதனுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் ஸ்மார்ட்போனை சிஸ்டத்துடன் இணைப்பது எளிமையான விஷயமாக இருக்கிறது.

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் Surround Sense தொழில்நுட்பத்துடன் ARKAMYS ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பீக்கர்கள் உருவாக்கும் சத்தத்தை உங்கள் ரசனைக்கு ஏற்ப 'கஸ்டமைஸ்' செய்து கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. எனினும் ஸ்பீக்கர்கள் இன்னும் கொஞ்சம் தரமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

அதே சமயம் இந்த காரின் 360 டிகிரி கேமரா ஆச்சரியமளிக்கும் வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது. திரையில் காட்டப்படும் வீடியோவின் தரம் நன்றாக இருக்கிறது. அத்துடன் இந்த காரில் சுஸுகி கனெக்ட் வசதியும் வழங்கப்படுகிறது. நீங்கள் தற்போது ஹெட்லேம்ப்கள், ஹசார்டு லைட்கள், டோர் லாக்ஸ் ஆகியவற்றை ரிமோட் முறையில் இயக்க முடியும். அத்துடன் உங்கள் செல்போனில் செய்யப்படும் கமாண்ட் மூலமாக நீங்கள் கேபினையும் 'கூல்' செய்யலாம். இதற்கு சுஸுகி கனெக்ட் வசதிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். வெய்லிக் டிராக்கிங், ஜியோஃபென்சிங் போன்ற வழக்கமான பாதுகாப்பு வசதிகளையும் இது பெற்றுள்ளது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

மேலும் புதிய மாருதி சுஸுகி பலேனோ காருடன் அமேஸான் அலெக்ஸா மற்றும் ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே புதிய மாருதி சுஸுகி பலேனோ தொழில்நுட்ப வசதிகளிலும் தலைசிறந்து விளங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் இந்த காரின் சென்டர் கன்சோல் எளிமையாக உள்ளது. கியர் லிவருக்கு பின்னால் ஹேண்ட் பிரேக் லிவரும், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

அதே நேரத்தில் புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் புத்தம் புதிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ, க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றுக்கான கண்ட்ரோல்கள் ஸ்டியரிங் வீலில் இடம்பெற்றுள்ளன. டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதியை இது பெற்றுள்ளது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. டேக்கோமீட்டரும், ஸ்பீடோமீட்டரும் அனலாக் யூனிட்கள் ஆகும். இடையில் உள்ள எம்ஐடி காரின் டிரைவருக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், சராசரி எரிபொருள் சிக்கனம், தற்போதைய எரிபொருள் சிக்கனம், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர்கள் உள்பட பல்வேறு தகவல்களை இது காட்டுகிறது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் மற்றொரு பயனுள்ள வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆம், நாங்கள் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியை பற்றிதான் பேசி கொண்டுள்ளோம். டேஷ்போர்டின் வலது பக்கத்தில் சிறிய கண்ட்ரோல் பேனல் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியை கட்டுப்படுத்த இது உதவி செய்கிறது. டிரைவருக்கு முன்னால் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே திரையை உயர்த்துவதற்கு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே திரையில் தகவல்கள் எங்கு தெரிய வேண்டும்? என்பதை அட்ஜெஸ்ட் செய்வதற்கும் பட்டன்கள் இருக்கின்றன. சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே டிரைவர் காரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வசதி உதவி செய்கிறது.

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த மெட்டீரியல்களின் தரமும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், இந்த செக்மெண்ட்டின் மிகச்சிறந்த கேபின்களில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் இருக்கைகளிலும் இதே நீலம் மற்றும் கருப்பு நிறம்தான் வழங்கப்பட்டுள்ளது. இவை ஃபேப்ரிக் இருக்கைகள் ஆகும். ஸ்டைல் என்ற விஷயத்தில் இவை அதிக மதிப்பெண்களை ஸ்கோர் செய்கின்றன. டிரைவர் மற்றும் கோ-பாசஞ்சர் இருக்கைகளில் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோன்ற இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, நெருக்கடியான வளைவுகளில் திரும்புவது எளிமையானது. முன் பகுதி இருக்கைகளில் குஷனிங்கும் நன்றாக உள்ளது. தொலைதூர பயணங்களின்போதும் சௌகரியமாக இருக்கும்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

பின் பகுதி இருக்கைகளிலும் மாருதி சுஸுகி நிறுவனம் சௌகரியத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இங்கே போதுமான அளவிற்கு ஹெட்ரூம், லெக்ரூம் இருக்கின்றன. எனவே இடவசதி ஒரு பிரச்னையாக இல்லை. சிறப்பாக உள்ளது. அதேபோல் நடுவில் உள்ள டிரான்ஸ்மிஷன் ட்யூனல் மிகவும் உயரமாக இல்லை. எனவே மைய பகுதியில் அமரும் பயணிக்கு அசௌகரியம் ஏற்படாது. எனவே பின் இருக்கைகளில் 3 பேர் சௌகரியமாக அமர முடியும்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

ஆனால் ஒரு முக்கியமான வசதியை புதிய மாருதி சுஸுகி பலேனோ பெறவில்லை. பின் பகுதியில் அமரும் பயணிகளுக்கு மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கப் ஹோல்டர்களும் இல்லை. பொதுவாக இந்த ஆர்ம்ரெஸ்ட்டில் கப் ஹோல்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். எனினும் பின் பக்க பயணிகளுக்கு ஏசி வெண்ட்கள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் டோர் பாக்கெட்கள் நல்ல இடவசதியை பெற்றுள்ளன. 1 லிட்டர் பாட்டில் போன்றவற்றை வைத்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனம் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற கார்களைதான் உருவாக்கும். புதிய பலேனோவும் அப்படிதான் உள்ளது. இந்த காரின் பின் பகுதி இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்து வைத்து கொள்ள முடியும். தேவைப்படும் நேரங்களில் லக்கேஜ்களை ஏற்றுவதற்கு இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பின் பக்க இருக்கைகள் உயர்ந்து இருக்கும்போது இந்த காரின் பூட் ஸ்பேஸ் 318 லிட்டர்கள் ஆகும். இருக்கைகளை மடித்து வைத்து கொண்டால், இடவசதியை இன்னும் அதிகரித்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

இன்ஜின் செயல்திறன் & ஓட்டுதல் அனுபவம்

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு நன்கு பரிட்சயமான இன்ஜின்தான். இந்த 1,197 சிசி, 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 88.5 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பழைய பலேனோவுடன் ஒப்பிடும்போது கியர் பாக்ஸ் விஷயத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

பழைய மாருதி சுஸுகி பலேனோ காரில், மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது சிவிடி கியர் பாக்சுக்கு பதிலாக மாருதி சுஸுகி நிறுவனம் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வை வழங்கியுள்ளது. புதிய மாருதி சுஸுகி பலேனோ கார், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே, புதிய பலேனோ காரிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் முந்தைய மாடலின் சிவிடி கியர் பாக்சுக்கு பதிலாக தற்போது 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் இந்த 2 கியர் பாக்ஸ் மாடல்களையும் நாங்கள் ஓட்டி பார்த்தோம். அவை இரண்டுமே ஈர்க்க கூடிய வகையில் இருக்கின்றன. இந்த காரின் இன்ஜின் மென்மையாக உள்ளது. காரை ஓட்டும்போது நீங்கள் அதனை நன்றாக உணரலாம். இந்த காரின் மிட்-ரேஞ்ச் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த கார் மிக விரைவாகவே வேகம் எடுக்கிறது. 5,000 ஆர்பிஎம் வரை இன்ஜின் சத்தம் நன்றாக உள்ளது. ஆனால் அதற்கு பிறகு சற்று முரட்டுத்தனமாக மாறி விடுகிறது. ஆனால் புகார் தெரிவிக்கும் அளவிற்கு எல்லாம் பிரச்னை இல்லை.

புதிய மாருதி சுஸுகி பலேனோ காரில் மிக எளிமையாக 3 இலக்க வேகத்தை எட்டி விடலாம். 3 இலக்க வேகத்திலேயே தொடர்ந்து பயணிப்பதும் எளிமையான விஷயம்தான். ஆனால் அதிக வேகத்தில் ஓவர்டேக் செய்யும்போது சில முயற்சிகள் தேவைப்படும். எனினும் இந்த இன்ஜின் அளவை கருத்தில் கொள்ளும்போது, அது பரவாயில்லைதான். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் கியர்களை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

கியர் ஷிஃப்ட்களை பொறுத்தவரையில், மேனுவல் கியர் பாக்ஸ் கிட்டத்தட்ட 'பர்ஃபெக்ட்' ஆக உள்ளது. கியர் மாற்றம் 'ஸ்மூத்' ஆக நடக்கிறது. இது டிரைவருக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும். இங்கே ஒரு சில சிறிய விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும். கியர் லிவர் டிரைவருக்கு மிகவும் உகந்த பொஷிஷனில் இருக்க வேண்டும் என்பதற்காக, சென்டர் கன்சோல் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த காரின் கிளட்ச் பெடல் அருமையாகவும், இலகுவாகவும் உள்ளது. நகர்ப்புறங்களில் காரை ஓட்டும்போது, குறிப்பாக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் காரை ஓட்டும்போது, இதனை ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, அடுத்து இந்த காரின் 5 ஸ்பீடு ஏஎம்டி மாடலுக்கு வருவோம். அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்திறன் சமரசம் செய்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த மாடலில் கியர் மாற்றுவது சற்று தாமதமாக நடக்கிறது. நாம் விரும்பும் அளவிற்கு வேகம் இல்லை. மேனுவல் மோடுக்கு மாற்றுவதன் மூலம் ஷிஃப்டிங் டைமும், ரெஸ்பான்சும் சற்று மேம்படுகிறது. ஆனால் மேனுவல் கியர் பாக்ஸை காட்டிலும் மெதுவாகதான் இருக்கிறது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய பலேனோ காரின் சஸ்பென்ஸன் அமைப்புகளிலும் வேலை செய்துள்ளது. எனவே பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் சஸ்பென்ஸன் சிறப்பாக இருக்கிறது. குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீல் இலகுவாகவும், வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெற வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் குறைவான வேகத்தில் கூட ஸ்டியரிங் வீல் மிகவும் இறுக்கமாக இருந்தது. அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும்போது இது சிறிய அளவில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலில் கையாளுமை நன்றாக மேம்பட்டுள்ளது. அத்துடன் பாடி ரோல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது டிரைவரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. அதேபோல் புதிய பலேனோ காரின் பிரேக்கிங் செயல்திறனையும் மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக மேம்படுத்தியுள்ளது. இதனை நம்மால் நன்றாக உணர முடிகிறது.

பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

பாதுகாப்பு & முக்கிய வசதிகள்

பாதுகாப்பு விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய பலேனோ அத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாகாது என எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளுடன் புதிய பலேனோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

  • 6 ஏர்பேக்குகள்
  • இபிடி உடன் ஏபிஎஸ்
  • இஎஸ்பி
  • சீட் பெல்ட் ரிமைண்டர்
  • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
  • ஹில் ஹோல்டு அஸிஸ்ட்
  • இந்த பாதுகாப்பு வசதிகளுடன், புதிய பலேனோவின் பாதுகாப்பு அளவையும் மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் மேலும் பல்வேறு வசதிகளுடன் 2022 மாருதி சுஸுகி பலேனோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய வசதிகள்

    • ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே
    • 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ ப்ளஸ் இன்போடெயின்மெண்ட்
    • 360 டிகிரி கேமரா
    • அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட்
    • க்ரூஸ் கண்ட்ரோல்
    • பின் பகுதியில் டைப்-ஏ மற்றும் டைப்-சி சார்ஜர்
    • ரியர் ஏசி வெண்ட்கள்
    • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல்
    • பாதுகாப்பு, டெக்னாலஜியில் புதிய பலேனோ வேற லெவல்... மாருதி நிறுவனத்தில் இப்படி ஒரு காரா? விலை அதை விட ஆச்சரியம்

      டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

      புதிய மாருதி சுஸுகி பலேனோ வேற லெவலுக்கு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வசதிகளை பாராட்டியே ஆக வேண்டும். மேலும் புதிய பலேனோ முன்பை காட்டிலும் பாதுகாப்பானது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். அத்துடன் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் இருப்பதை ஏஎம்டி கியர் பாக்ஸ் எளிமையாக்குகிறது. புதிய பலேனோ காரில் குறை சொல்வதற்கு ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்தத்தில் பழைய மாடலை காட்டிலும் மிகப்பெரிய அளவில் புதிய பலேனோ மேம்பட்டுள்ளது.

      புதிய மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.35 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு புதிய பலேனோ உண்மையிலேயே மதிப்பு வாய்ந்த கார்தான்!

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2022, 9:00 [IST]
English summary
2022 maruti suzuki baleno review design features engine performance driving impressions price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+