2023 Hyundai Verna Review: எஸ்யூவி எல்லாம் இந்த காருக்கு முன்னாடி பிச்சை எடுக்கனும்! ஹூண்டாய் வெர்னா ரிவியூ!

இந்தியாவில் சமீப காலமாக செடான் கார்களின் விற்பனை மந்தமாகி வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என விரும்புபவர்கள் அதிகமாக எஸ்யூவி கார்களையே தேர்வு செய்கின்றனர். இப்படி பெரும்பாலான மக்கள் எஸ்யூவி பக்கம் திரும்பியதால் புதிய செடான் கார்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

சமீபத்தில் இப்படி ஒரு அரிதான விஷயம் நடந்தது. டில்லியில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய வெர்னா செடான் காரை அறிமுகப்படுத்தியது. பல தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த சூப்பர் காராக, செடான் காரை வெறுக்கும் மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

2023 Hyundai Verna Review

ஹூண்டாய் நிறுவனம் இந்த 2023 வெர்னா காரை டில்லியில் டிரைவ் செய்ய ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தது. உடனடியாக டிரைவ்ஸ்பார்க் குழு இந்த புதிய ஹூண்டாய் வெர்னா காரை ஓட்டி பார்க்கச் சென்றோம். இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் இதில் உள்ள புதிய விஷயங்களை உங்களுக்காக இங்கே ரிவியூவாக வழங்கியுள்ளோம்.

2023 ஹூண்டாய் வெர்னா டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த புதிய ஹூண்டாய் வெர்னா கார் செடான் கார்கள் எவ்வளவு மாறியுள்ளது என்பதற்கு மிகப்பெரிய சாட்சி, இந்த 6வது தலைமுறை வெர்னா கார் இதன் முந்தைய தலைமுறையை காரில் இருந்த கர்வ் வடிவங்களை எல்லாம் நீக்கி புதிய ஷார்ப் மற்றும் எட்ஜி லுக் உடன் மார்கெட்டில் போட்டியாளர்களை வதம் செய்யக் களம் இறங்கியுள்ளது.

2023 Hyundai Verna Review

2023 வெர்னா காரை ஹூண்டாய் நிறுவனம் சென்சியஸ், ஸ்போர்ட்டினஸ் டிசைன் மொழியில் உருவாக்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவிகளான அல்காஸர், டக்ஸன் மற்றும் சமீபத்தில் அயானிக் 5 இவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை வடிவமைத்த அனுபவங்களை வைத்து ஹூண்டாய் நிறுவனம் இந்த வெர்னா காரை வடிவமைத்துள்ளது.

இந்த 6வது தலைமுறை வெர்னா காரின் எட்ஜி லுக் முன்பக்கத்திலிருந்து பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் ஸ்பிலிட் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இடையே எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ககள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் மற்றும் கார்னர் லைட்கள் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

2023 Hyundai Verna Review

மேலும் இந்த காரில் கருப்பு நிறத்தில் பாராமெட்ரிக் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது புதிய ஹூண்டாய் கார்களின் சிக்னேச்சர் டிசைனாக இருக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியின்ட்களுக்கு இது ஏர் இன்டேக் இருக்கிறது. இதன் பானட் பகுதியில் ஹூண்டாய் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கான ஸ்போர்ட்டி நேச்சரில் இருக்கிறது.

புதிய வெர்னா காரின் பக்கவாட்டைப் பொருத்தவரை முதலில் நம் கண்ணில் படுவது அதன் ஃபாஸ்ட் பேக் ஸ்டைல் ரூஃப் தான். அடுத்தாக இந்த காரில் 15 அல்லது 16 இன்ச் வீல்கள் வேரியன்டை பொருத்து பொருத்தப்படுகிறது. இந்த வீல்கள் சில்வர் அல்லது கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் z வடிவ கேரக்டர் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு ஸ்போர்ட்டி நேச்சரை வழங்குகிறது. இது போக சில இடங்களில் முக்கியமாக ஜன்னல் பகுதிகளில் க்ரோம் வழங்கப்பட்டுள்ளது. டோர் ஹேண்டிலிலும் க்ரோம் ஃபினிஷ் தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பின்பக்கத்தைப் பார்க்கும் போது முன்னர் சொன்ன ஃபாஸ்ட் பேக் ரூஃப் ஸ்மூத்தாக பூட் உடன் இணைகிறது. இது போகப் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ளது கனெக்டெட் எல்இடி டெயில் லைட் எம்பெடெட் வெர்னா லோகோ உடன் ஃப்யூச்சரிஸ்டிக்காக இருக்கிறது.

பின்பக்க டெயில் லைட் ஹூண்டாய் லேகோவிற்கு மேலே பொருத்தப்பட்டுள்ளது. வலது பக்கம் வேரியன்ட் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. பம்பரில் பேட்டர்ன் வழங்கப்பட்டுள்ளது. இது 2023 வெர்னா காருக்கு ஒரு பிரிமியம் லுக்கை வழங்குகிறது. இதில் 528 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்னா காரின் உட்புறத்தில் மினிமலிஸ்டிக் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. இது செடான் காருக்கு பிரிமியம் லுக்கை வழங்குகிறது. நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் கொண்ட காரில் டூயல் டோன் தீமும், டர்போ பெட்ரோல் இன்ஜினிலில் பிளாக் தீம் உடன் ரெட் ஆக்ஸன்ட்கள் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று ஸ்டியரிங்கிற்கு பின்புறம் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், மற்றொன்று டச் ஸ்கிரீன் யூனிட்டாக சென்ட்ரல் கன்சோலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இது ஹூண்டாய் ப்ளூ லிங்க் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தின் ஹப்பாக விளங்குகிறது.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் 8 யூனிட் போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஸ்பீர்க்கர், 1 சப் வூஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்குள் குத்துப் பாட்டுக் கேட்டால் நம்மை துள்ளிக் குதிக்க வைக்கும் அளவிற்கு குவாலிட்டியாக இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு கீழே ஏசி வென்ட்கள் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கிளைமேட் கண்ட்ரோல் செட்டப் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் கண்ட்ரோல் இருக்கிறது.

இந்த காரின் உட்புறம் அதிக இடவசதி இருக்கிறது. உயரமான மனிதர்களுக்கும் இந்த கார் ஏற்றதாக இருக்கும். இதற்காக முந்தைய மாடலை விட இதில் வீல்பேஸ் 70 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீட்கள் லெதரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆம்பிள் சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறது.

முன்பக்க ஹீட்டெட் வென்டிலேட்டட் பவர்டு சீட் டிரைவருக்கு வழங்கப்பட்டுள்ளது இதை டிரைவர் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இதன் மூலம் டிரைவருக்கு ஃபெர்பெக்ட் டிரைவிங் போசிஷன் கிடைக்கும். இது போக இந்த காரில் பெரிய, எலெக்டரிக்கலி ஆப்ரேட்டட் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் 64 வெவ்வேறு நிறங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது போக கூல்டு கிளவ் பாக்ஸ், 2 ஸ்போக் வீல்களுக்கு லெதரேட்வேர்ப் மற்றும் கியர் லிவர் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக 6 ஏர்பேக் இந்த காரில் உள்ளது. இது போக ஏபிஎஸ், இபிடி, விஎஸ்எம், டிராக்ஷன் கண்ட்ரோல், டிபிஎம்எஸ், ஐஎஸ்ஓஃபிக்ஸ், மற்றும் அடாஸ் தொழிற்நுட்பத்தில் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஹைபீம் அசிஸ்ட், ரியர் கிராஸ் -டிராஃபிக் அலர்ட், ரியர்-கிராஸ் டிராபிக் கோலிஷன், அவாய்டென்ஸ் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஸ்பெக்ஸ்: புதிய 2023 ஹூண்டாய் வெர்னா கார் பழைய மாடலை விட சற்று நீளமாக இருக்கிறது. இந்த கார் மெத்தம் 4,535 மிமீ நீளமும், 1,765 மிமீ அகலமும், 1,475 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் மட்டும் 2,670 மிமீ நீளம் கொண்டது. இந்த கார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது இந்திய சாலைகளுக்கு சிறப்பாக இருக்கிறது.

இந்த கார் பழைய மாடலை விட 95 மிமீ அதிக நீளம், மற்றும் 36 மிமீ அதிக அகலம் கொண்டது. இதில் 70 மிமீ வரை அதிக வீல் பேஸூம் இருக்கிறது.

இந்த புதிய ஹூண்டாய் காரை பொருத்தவரை 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இரண்டுமே 1.5 லிட்டர் தான். ஆனால் ஒன்று நேச்சுரலி அஸ்பயர்டு மற்றொன்று டர்போ சார்ஜ்டு இன்ஜின். இதில் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பழைய மாடல் காரில் இருந்த அதே இன்ஜின் தான். இது 113 பிஎச்பி பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஹூண்டாய் இன்டெலிஜென்ட் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்ஜின் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் இது இந்த காருக்கு புதியது இது 158 பிஎச்பி பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்னா காரில் 15 அல்லது 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 185/65 R15 மற்றும் 205/55 R16 ஆகிய அளவுகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கம் காயில் ஸ்பிரிங் உடன் கூடிய மெக் பெர்சன் ஸ்டிரட் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் கபிள்டு டாரிசன் பீம் ஆக்ஸில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்னா பிரேக்கிங்கள் முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக் உடன் பொருத்தப்பட்டுள்ளது. டாப் மாடலான டிசிடி மாடலில் மட்டும் அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவிங் இம்பிரஷன்: புதிய வெர்னா காரில் உள்ள புதிய 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின்களை பொருத்தவரை புதிய அல்காஸர் எஸ்யூவி காரில் உள்ள அதே இன்ஜின்தான். இந்த இன்ஜின் தான் இந்த வகையிலேயே அதிக பவர்ஃபுல் என ஹூண்டாய் சொல்கிறது.

இந்த காரில் உள்ள இன்ஜினில் சிறிய லேக் இருக்கிறது. ஆனால் பிக்கப் ஆனவுடன் நாம் எதிர்பார்க்காத பெர்ஃபாமென்ஸை வழங்குகிறது. விரைவாகவே 3 இலக்க வேகத்திற்குக் காரை எடுத்துச் செல்கிறது. இந்த காரில் உள்ள இன்ஜின் 6 மேனுவல் ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது குறைவான நேரத்திலேயே கியரை மாற்றும் திறனுடன் இருக்கிறது.

குறிப்பாக இதில் ஸ்மூத் மற்றும் லைட் கிளட்ச்கள் வழங்கப்பட்டுள்ளது. இது நிறுத்தி நிறுத்திச் செல்லும் டிராஃபிக்கில் சிறப்பாகச் செல்லும் படி கட்டமைக்கப்பட்டுள்ளது. கம்ஃபோர்ட் மற்றும் ஃபன்னிற்கு டிசிடி தான் சிறந்த ஆப்ஷன். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் பாக்ஸ் ஸ்லீக் ஸ்விஃப்டர், விரைவான கியர் மாற்றம் மற்றும் மேனுவலாக கியரை மாற்ற பெடல் ஸ்விஃப்டர் கூட வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வெர்னா காரில் மொத்தம் 3 விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போர்ட் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. கியர் ஸ்டிக்கிற்கு அருகே உள்ள பட்டன்கள் மூலம் இந்த டிரைவ் மோட்களை மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் எக்கோ மோட் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அல்லது அதிக மைலேஜ் விரும்புபவர்களுக்கு ஏற்றது. இதில் லேஸியான த்ராட்டல்கள் இருக்கும். ஸ்போர்ட் மோடில் அதிக திறன் வெளிப்படும். ஆனால் இதில் நீங்கள் அதிக மைலேஜை எதிர்பார்க்க முடியாது.

நார்மல் மோட் என்பது சிட்டி டிராஃபிக்கிற்கு ஏற்றது.இது குறைவான த்ராட்டிலில் குறைவான பவரையும் அதிகம் ஆக்ஸிரேலட்டரை மதித்தால் அதிக பவரையும் வெளிப்படுத்தும். திறன் கொண்டது. இந்த காரின் ஸ்டியரிங் வீல் சரியான வெயிட்டில் உள்ளது. அதிக லைட்டாகவும் இல்லை, அதிக டைட்டாகவும் இல்லை. இன்புட்டிற்கு ஏற்றார் போல் சிறப்பாக ரெஸ்பான்ஸ் செய்கிறது.

இந்த காரில் செல்லும்போது லேன்களை மாற்றுவது எளிதாக இருக்கிறது. பிளைன்ட் ஸ்பார்க்களும் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால் இந்த காரில் உள்ள சாஃப்டான சஸ்பென்சன் காரணமாக பாடிரோல் ஏற்படுகிறது. ஆனால் இந்த சாஃப்டர் சஸ்பென்சன் இருந்தால்தான். குழிகளில் கார் இறங்கினால் உள்ள இருப்பவர்களுக்குச் சொகுசாக இருக்கும்.

இந்த சஸ்பென்சனை சற்று ஸ்டிப்பாக அமைத்திருக்கலாம். அமைத்திருந்தால் அது எல்லா இடங்களுக்கும் ஏற்றவாறு இருந்திருக்கும். புதிய வெர்னா காரில் என்-லைன் வெர்ஷன் வெளியாகும். அதில் இதை எதிர்பார்க்கலாம்.

இறுதித் தீர்ப்பு: 2023 ஹூண்டாய் வெர்னா காரை பார்க்கும் போது துண்டு போயுள்ள செடான் செக்மெண்டில் விற்பனையை அதிகரிக்கவே இதைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் எஸ்யூவியை நோக்கி ஓடிய ஆட்கள் சற்று திரும்பிப் பார்ப்பார்கள். 6வது தலைமுறை வெர்னா கார் எல்லா அம்சங்களையும் பூர்த்தி செய்கிறது.

கொஞ்சம் ஸ்போர்ட் டிரைவிங்கில் ஆர்வம் உள்ள ஆட்கள் இந்த காரின் என்-லைன் வேரியன்டிற்காக காத்திருக்க வேண்டும். எஸ்யூவி கார்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை ஆனால் நீங்கள் வாங்கும் கார் சிறந்ததாக இருக்க வேண்டும் என விரும்பினால் ஹூண்டாய் வெர்னா கார் உங்களுக்கு நல்ல சாய்ஸ், இந்த கார் ரூ10.99லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 30, 2023, 11:00 [IST]
English summary
2023 hyundai verna review design engine spec price details and driving impression
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+