குடும்பத்தோட போகவும், அதிக மைலேஜுக்கு மட்டும்தான் இந்த கார் ஏற்றதா? நாங்க ஓட்டி பார்த்ததில் தெரிய வந்த தகவல்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்கஸார் (Alcazar) கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கிரெட்டாவை தழுவி உருவாக்கப்பட்ட சற்று பெரிய உருவம் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் மாடலே அல்கஸார் ஆகும். இந்த புதுப்பித்தல் பணிகளையும் அந்நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவை தழுவியே மேற்கொண்டு இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் பற்றி கிடைத்த அனுபவங்களையே இங்கே விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
குறிப்பாக, என்ன மாதிரியான மேம்படுத்தல்களை இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது? மற்றும் என்ன மாதிரியான அட்வான்ஸ்டு புதிதாக பெற்றிருக்கின்றது? மற்றும் டிரைவிங் அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்: ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை கண்களையும், மனதையும் கவரும் வகையிலேயே புதுப்பித்து இருக்கின்றது. குறிப்பாக, வெளிப்புறம் படுகவர்ச்சியானதாகவும், நவீன காலத்திற்கு ஏற்றதாகவும் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இக்காரின் முகப்பு பகுதிக்கு மாடர்ன் லுக் மிகப் பெரிய அளவில் சேர்த்திருக்கின்றது.
குறிப்பாக, ஹெட்லைட் மற்றும் பகல்நேரத்தில் ஒளிரும் டிஆர்எல்-ஆகியவையே இந்த காருக்கு அட்டகாசமான மாடர்ன் லுக்கை வழங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, பின் பக்க லைட்டும் ஃப்ரெஷ்ஷான லுக்கிலேயே உள்ளது. தொடர்ந்து, புதிய உடல் நிறத்திலான அப்டேட் செய்யப்பட்ட அலாய் வீல்கள், பனரோமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை அனைத்தும் இந்த காரை அதிக லக்சூரியான ஃபீல் கொண்டதாக மாற்றியிருக்கின்றது. மேலும், காரின் வெளிப்பக்கத்தை போலவே உட்பக்கத்தையும் கூடுதல் பிரீமியமானதாக காண்பிக்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு வசதிகளை ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது. இதன் டேஷ்போர்டு தொடங்கி இருக்கை வரை பல அம்சங்கள் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளன.
இந்த கார் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 7 இருக்கைகள் ஆப்ஷனைக் காட்டிலும் 6 சீட்டர் வெர்ஷன் அதிக சொகுசானதாக இருக்கும். இதில் கேப்டைன் வகை இருக்கையையே இரண்டாவது வரிசையில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. 7 சீட்டரில் பென்ச் வகை இருக்கையே இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் வழங்கப்பட்டு இருக்கும்.

தொடர்ந்து, பயணத்தை சுவாரஷ்யமானதாகவும், சௌகரியமானதாகவும் மாற்றும் பொருட்டு ஹூண்டாய் நிறுவனம் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகளையே வழங்கி இருக்கின்றது. பொதுவாக இந்த இருக்கை முன் பக்கத்திற்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், இந்த ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் கார் மாடலில் நடு வரிசையிலும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், இரண்டு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் மூன்று வரிசை இருக்கையில் தேவைக்கேற்ப தனி பயனாக்கம் செய்யும் திறன் கொண்ட ஏசி சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.
எஞ்சின் ஆப்ஷன் மற்றும் அதன் திறன் வெளிப்பாடு பற்றிய விபரங்கள்: இந்த காரை ஹூண்டாய் அழகாகவும், நவீன வசதிகள் தாங்கியதுமாகவே அப்டேட் செய்திருக்கின்றது. ஆமாங்க, எஞ்சின் விஷயத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஹூண்டாய் செய்யவில்லை. ஆகையால், முந்த அல்கஸாரில் வழங்கப்பட்ட அதே எஞ்சின் ஆப்ஷன்களே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன. இதில், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதாக உள்ளது. அதேவேளையில், பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இவை ஆற்றலை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல மைலேஜ் தருவதிலும் சிறந்த மோட்டார்கள் ஆகும். ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ முதல் 20 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது அராய் (ARAI) அமைப்பு சான்றளித்த மைலேஜ் விபரம் ஆகும். நேரம் குறைவாக இருந்த காரணத்தினால் எங்களால் இதன் ரியல்டைம் மைலேஜ் திறனை ஆய்வு செய்ய முடியவில்லை. அதேவேளையில், இதன் இயக்கம் அனுபவம் எப்படி இருந்தது போன்றவற்றை ஆய்வு செய்து பார்த்தோம்.
குறிப்பாக, இதன் சஸ்பென்ஷன் செட்-அப் மிக சிறந்த மற்றும் கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் இருந்தது. அதேவேளையில், இந்த கார் இயக்கத்தின்போது கொஞ்சம் பாடி ரோலிங்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும், முந்தை வெர்ஷனைக் காட்டிலும் 2024 வெர்ஷன் பலமடங்கு மேம்பட்டு இருப்பதை எங்களால் உணர முடிகின்றது.
டிரைவிங் அனுபவம் எப்படி இருந்தது? இதன் ஓட்டும் அனுபவம் மிகவும் சூப்பராக இருந்தது என்றே கூறலாம். குறிப்பாக, இதன் சஸ்பென்ஷன் மிகவும் சுவாரஷ்யமான ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. ஸ்மூத்தான ரைடுக்கு ஏற்ப இதை அவர்கள் தயார் செய்து இருக்கின்றனர்.
அதேவேளையில், இந்த காரில் பாடி ரோலிங் என்பது மிகவும் ஷார்ப்பான திருப்பங்களிலேயே மிகப் பெரிய அளவில் தெரிகின்றது. மற்றபடி இந்த கார் டிரைவிங்கிற்கு ஏற்றதுதான். மேலும், 10 செகண்டுகளுக்கு உள்ளாகவே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் கொண்டதாக இருக்கின்றது.
எனவே அதிக திறன் மற்றும் கம்ஃபோர்ட்டான டிராவல் என பலவற்றிற்கு உகந்த காராக இது இருக்கும் என தெரிகின்றது. இதேபோல், இதன் கியர்ஷிஃப்டிங் அமைப்பும் தரமானதாக உள்ளது. அந்தவகையில், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் குயிக்கான மாற்றத்தை வழங்கும் வகையில் நாங்கள் உணர்ந்தோம். இது தரமான ஓட்டும் அனுபவத்திற்கு வழிவகுக்கின்றது.
குறிப்பாக, ஸ்போர்ட் மோட் வேற லெவல் என் சொல்லலாம். தொடர்ந்து, இதன் ஸ்டியரிங் அமைப்பும் மிகவும் லைட்டாக இருக்கின்றது. எனவே நகர்புற பயணத்தின்போது பெரிய அளவில் அசௌகரியம் ஏற்படாது. இதுமட்டுமில்லைங்க, நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் பயணங்களுக்கும் இந்த அம்சங்கள் மிகுந்த உகந்தவையாக உள்ளன.
இவை அனைத்திற்கும் கூடுதல் பிளஸ்ஸாக இருக்கும் வகையிலேயே இதன் இருக்கைகள் உள்ளன. குறிப்பாக, இரண்டாவது வரிசை இருக்கைக்கும் வெண்டிலேட் வசதி வழங்கப்பட்டு இருப்பதுதான் அங்கு ஹைலைட்டே ஆகும். இதுதவிர, 6 சீட்டர் வெர்ஷனில் கேப்டைன் வகை இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், லாங் டிராவல்கூட ரம்மியமானதாக மாறும். எனவே, குடும்பத்துடன் எத்தகைய நீண்ட தூர டிராவலையும் இந்த காரில் மேற்கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹூண்டாய் அல்கஸார் ஏற்கனவே குடும்பம் அல்லது பெரிய பட்டாளத்துடன் பயணிக்க ஏதுவான காராகவே இருந்தது. இந்த காரையே தற்போது ஹூண்டாய் நிறுவனம் பலமடங்கு மேம்படுத்தி இருக்கின்றது. நகர்புறம், ஹைவே மற்றும் ஆஃப்-ரோடுகளையும் சமாளிக்கும் வகையில் இந்த காரை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த கார் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









