காரை விக்க சொன்னா கப்பலை கட்டி வித்திருக்காங்க! புதிய கியா கார்னிவெல் கார் எப்படி இருக்குது?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பு ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரை அறிமுகப்படுத்தியது. இது அப்பொழுது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த கார் ஒரு சொகுசு ரக காராக இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானது. பலரை ஈர்க்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த கியா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை கார்னிவெல் காராக அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த கார் விற்பனையில் இருந்தது. அதன் பிறகு இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் 4ம் தலைமுறை சொகுசு எம்பிவி கார் ஒன்றை கேஏ 4 என்ற பெயரில் கடந்து 2023ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த கார் தான் கியா கார்னிவெல் காரின் அப்டேட்டட் வெர்ஷன் கார் என அப்பொழுது கூறப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கியா நிறுவனம் இந்த கார்னிவெல் அப்டேட் செய்யப்பட்ட காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது0 தற்போது இந்த கார் ரூ63.90 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முந்தைய மாடலை விட தற்போது 2மடங்கு விலையில் இந்த கார் இந்திய மார்க்கெட் வந்துள்ளது.
இந்நிலையில் இந்த 2024 கியா கார்னிவெல் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதன்படி இந்த காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த ஓட்டி பார்க்கும்போது எப்படியான அனுபவம் எங்களுக்கு கிடைத்தது? இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இதன் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே விமர்சனமாக உங்களுக்கு வழங்கி உள்ளோம்.

மூன்றாம் தலைமுறை கியா கார்னிவெல் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை மக்களுக்கு பிடித்த மாதிரியான வடிவமைப்பு இருக்கிறது. இந்நிலையில் இதை அப்டேட் செய்து 2024 இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது இதன் டிசைனை சற்று போல்டாக வடிவமைத்துள்ளார்கள். புதிய டிசைன் மொழியை கையாண்டு உள்ளார்கள். இந்த காரை ஒரு எம்பிவி பாக்ஸர் காராக வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த காரின் முன் பக்கம் பெரிய டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. கிரில் பகுதிக்கு அருகே வெர்டிகலான எல்இடி ஹெட்லைடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஆங்கிலத்தில் உள்ள L என்ற எழுத்தை திருப்பி போட்டது போல ஒரு வடிவமைப்பை கொடுத்துள்ளது. இதுபோக எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கிரில் பகுதிக்கு கீழே ஏர்டேம் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இது டார்க் குரோம் நிறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் 18இன்ச் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சி-பில்லர் பகுதியில் கான்ட்ராஸ்டான நிறத்தில் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டனா, ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் பின் வரிசை சீட்டிற்கான டோர்கள், டார்க் குரோம் செய்யப்பட்ட பக்கவாட்டு ஸ்டெப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் பின் பகுதியில் சிறிய ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே விண்டு ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. விண்ட் ஸ்கிரீனுக்கு கீழ் எல்இடி லைட் பார் வடிவிலான டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது போக பின்பக்க கதவு பவர்டு டெயில் கேட்டாக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இதை சுலபமாக செய்ய முடியும். இது பெரிதாகவும் அதிக இட வசதியுடன் கூடதாக இருக்கிறது. மூன்றாவது வரிசை சீட்டை மடித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதிக இட வசதி தேவைப்படுபவர்கள் இந்த சீட்டை மடித்துக்கொண்டு அதிக இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய காரியங்கள் காருக்கு உள்ளே செல்லும்போது இதன் உட்புற வடிவமைப்பு டூயல் டோன் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்று நீங்கள் தொடும் இடமெல்லாம் ஃசாப்டான மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மக்களின் விருப்பதற்திற்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியில் 12.3 இன்ச் கொண்ட இரண்டு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், மற்றொரு டிஸ்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் வழங்கப்படுகிறது. இது எல்லாம் சிங்கிள் பேன் கிளாஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கியா கனெக்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ota மூலம் அப்டேட் செய்யக்கூடிய அம்சம் கொண்டதாக இருக்கிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடியோ சிஸ்டத்திற்காக 12 பிரீமியம் போஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரின் உட்பகுதியில் 11 இன்ச் கொண்ட ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது டிரைவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சுலபமாக அவர்கள் கண்முன்னே தெரியும்படி வடிவமைத்துள்ளது. இதனால் சாலையில் இருந்து அவர்கள் கண்ணை எடுக்காமலேயே இந்த தகவல்களை எல்லாம் அவர் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்பக்க டிரைவர் சீட்டைப் பொறுத்தவரை 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டாக வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் சீட்டில் 12 வழிகளில் நான்கு லும்பர் சப்போர்ட் மெமரி பங்க்ஷன் இருக்கிறது. பயணிகள் சீட் எட்டு வழியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர் சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டுகள் எல்லாம் வெண்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் சீட்டுகளாக உள்ளன.
இந்த காரின் முன்பக்க சீட்டு பெரிதாகவும் ஒவ்வொரு பயணத்திலும் போதும் பயணிகளுக்கு சொகுசான மற்றும் சௌகரியமான பயணத்தை கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு அம்சமே இந்த காரில் உள்ள சீட்டுகள் என சொல்லலாம். அதைவிட மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்த காரில் உள்ள இரண்டாவது வரிசை சீட்டுகள் தான். இந்த சீட்டுகள் எல்லாம் இரண்டு கேப்டன் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதில் சாய்வு வசதி மற்றும் கால்களுக்கான சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீட்டுகளும் வெண்டிலேட் மற்றும் ஹீட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சொகுசான நீண்ட தூர பயணம் கிடைக்கும். அடுத்ததாக மூன்றாவது வரிசையில் சீட்டைப் பொறுத்தவரை சற்று வித்தியாசமாக இருக்கிறது.
பெரும்பாலும் பெரிய கார்களில் மூன்றாவது வரிசை சீட் குழந்தைகளுக்கான சீட்டாகவே இருக்கும். ஆனால் இந்த காரில் 6 அடி உயரம் உள்ள ஒருவர் கூட மூன்றாவது வரிசையில் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம். அந்த அளவுக்கு வசதியான காராக இந்த கார் இருக்கும். மூன்றாவது வரிசை சீட்டில் இருப்பவர்களுக்கு நிரந்தரமாக மூடப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் தான் இருக்கும்.
மூன்றாவது வரிசை சீட்டில் இருப்பவர்களுக்கு ஜன்னலில் நிரந்தரமாக பொருத்தப்பட்ட கண்ணாடியில் இருந்தாலும், அதில் சன் ப்ளைண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கியா நிறுவனம் தனது காரின் வடிவமைப்பை எவ்வளவு தூரம் நுணுக்கமாக கவனித்து ஒவ்வொரு விஷயங்களையும் வழங்கி உள்ளது என நீங்கள் பார்க்க முடியும்.
மற்றொரு முக்கிய அம்சமாக இந்த காரில் இரண்டு பெரிய எலெக்ட்ரிக் சன் ரூஃப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கான நல்ல லூக்கையும் பயணிகளுக்கான நல்ல அனுபவத்தையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் மூன்று ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது வரிசை சீட்டில் அமர்பவர்களுக்கான ஏசி தனியாக மேலே வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், இலுமினேட் செய்யக் கூடிய கிளவ்பாக்ஸ், ஒவ்வொரு வரிசைக்கும் இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், பெட்டல் ஸ்விஃப்டர், 4 ஸ்போக் கொண்ட லெதர் மூலம் கவர் செய்யப்பட்ட ஸ்டேரிங் வீல் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளது. காரில் ஆறு பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யக் கூடிய வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது.
மேலும் இந்த காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இதில் எட்டு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்பக்கமும், பின்பக்கமும், பக்கவாட்டிலும் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இதில் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பத்தில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் லேண் கீப் அசிஸ்ட், லேண் டிபார்ச்சர் வார்னிங், முன்பக்க கொலுஷன் வார்னிங், மற்றும் முன்பக்கம் மோதுதலை தவிர்ப்பதற்கான அசிஸ்ட், ஹைபீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த அடாஸ் தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது.
புதிய 2024 கியா கார்னிவெல் காரின் அளவுகளை பொருத்தவரை இதற்கு முந்தைய மாடலை விட சற்று பெரிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 5,155மிமீ நீளமும் 1,995மிமீ அகலமும் 1,775மிமீ உயரமும் 3,090மிமீ வீல் பேஸூம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 40மீமி நீளமும், 10மீமி அகலமும் 20மீமி உயரமும், 30மீமி வீல் பேஸூம் முந்தைய மாடலை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் இதற்கு முந்தைய கார்னிவெல் காரிலும் பொருத்தப்பட்டிருந்தது. அதே இன்ஜின் தற்போதும் தொடர்கிறது. இது பிஎஸ் 6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 190 பிஎச்பி பவரையும் 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்பக்க வீல் டிரைவ் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளத
டிரைவிங் இம்ப்ரஷன்: இந்த புதிய கியா கார்னிவெல் காரை ஓட்டி பார்க்கும்போது சுமார் இரண்டு டன் எடை கொண்ட கார் நாங்கள் ஓட்டி பார்க்கும்போது அவ்வளவு பெரிய கார் என்று தோன்றவே இல்லை0 மிகச் சிறப்பாக செயல்பட்டது. இதற்கு முந்தைய மாடல் கார் எப்படி இருந்ததோ அதேபோல இந்த காரும் சிறப்பாகவே செயல்பட்டது.
இந்த காரின் திராட்டல் ரெஸ்பான்ஸை பொருத்தவரை நன்றாக இருந்தது. இதன் காரின் பெர்பார்மென்ஸ் பஞ்ச்-ஆக இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த காரின் இன்ஜின் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மிட் மற்றும் லோ ஆர்பிஎம்மிலும் கூட சிறப்பான டாக்கை வெளிப்படுத்தியது. இதற்கு 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெரிய அளவில் உதவியாக இருந்தது. ஓவர் டெக் செய்யும் போது பிக்கப் சிறப்பாக இருந்தது.
இந்த காரின் ஹேண்டிலிங் சிறப்பாக இருந்தது. ஸ்டியரிங் வீல் வேகம் அதிகரிக்க அதிகரிக்க வெயிட்டாக மாறியது. மொத்தம் நான்கு விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் ஆகிய மோடுகள் உள்ளன0 மேலும் இந்த காரில் கம்போஸ்டான சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாக சென்று திரும்பும் போதும் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாத வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த காரின் சஸ்பென்ஷன் செட்டப் கார் வேகமாக செல்லும்போதும் மேடு பள்ளங்களை சுலபமாக கடந்து சென்றது. இதனால் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படவில்லை. மிக மோசமான மேடு பள்ளங்கள் வரும் போது மட்டுமே காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு அந்த உணர்வு கடத்தப்பட்டது. மற்ற சிறு சிறு மேடு பள்ளங்களை எல்லாம் சஸ்பென்ஷன் சிஸ்டமே தாங்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காருக்குள் அமர்ந்து செல்லும்போது பாடி ரோலும் மிக குறைவாகவே இருந்தது.
இந்த காரில் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டதுடன், அனைத்து வீல்களிலும் ஏபிஎஸ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாக சென்று பிரேக் பிடிக்கும்போது முடிந்த அளவுக்கு சீக்கிரமாக காரை நிறுத்துகிறது. இந்த காரில் பார்க்கிங் செய்வதும் பெரிய தொந்தரவாக இல்லை.
360 டிகிரி கேமரா மற்றும் சென்சார்கள் இருப்பதால் சுலபமாக பார்க்கிங் செய்ய முடியும். ஐந்து மீட்டர் நீளமுள்ள காரை இந்த வசதிகள் இல்லாமல் பார்க் செய்வது கடினம். இந்த வசதிகள் இருப்பதால் எளிமையாக சிறிய கார் போல பாக்கிங் செய்து விட முடிகிறது.
காருக்குள் பயணிக்கும் போது சத்தம் வைப்ரேஷன் மற்றும் ஹார்ஸ்னஸ் மிக குறைவாக தான் இருந்தது. முக்கியமாக இரண்டாவது வரிசை சீட்டில் கேப்டன் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு நல்ல ரிலாக்ஸான பயணம் கிடைத்தது. நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ஏற்ற வாகனமாக இது இருக்கிறது.
இறுதி தீர்ப்பு: புதிய கியா கார்னிவெல் கார் சொகுசு எம்பிவி ரக காராக வடிவமைக்கப்பட்டு போல்டான டிசைனில் அப்டேட் செய்யப்பட்டு புதிய தொழிற்நுட்பங்களுடன் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிக விலை கொடுத்து கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த காரை நிச்சயம் தேர்வு செய்வார்கள். குடும்பத்துடன் பயணிக்க இந்த கார் ஏற்ற காராக இருக்கும்.
விலையைப் பொறுத்தவரை முந்திய தலைமுறை காரைவிட இந்த தற்போது வெளியாகியுள்ள கார் இருமடங்கு விலை இருந்தாலும், இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு அம்சங்களுடன் இருப்பதால் இந்த விலை ஒரு நியாயமான விலையாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குடும்பத்துடன் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காரின் விலை பெரிய பொருட்டாக இருக்காது.


Click it and Unblock the Notifications









