லிட்டருக்கு 25கிமீ மைலேஜ் தரும் புது மாருதி ஸ்விஃப்ட் கார்- ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் 2005ஆம் ஆண்டில் மொத்த கார் மார்க்கெட்டையும் திருப்பி போடுகிற அளவுக்கு ஒரு காரை அறிமுகப்படுத்தியது. அதுதான், ஸ்விஃப்ட் (Swift) ஆகும். மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஸ்விஃப்ட் எனலாம்.

சிறிய அளவில் க்யூட்டான டிசைன், பெப்பியான என்ஜின் என மக்கள் மத்தியில் உடனடியாக பிரபலமாகும் அளவிற்கு நிறைய அம்சங்கள் முதல் ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரில் இருந்தன. இந்த 19 வருடங்களில் ஸ்விஃப்ட் காரின் 3 ஜென்ரேஷன்கள் கடந்துவிட்டன. 4வது ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

maruti suzuki swift car review

ரூ.6.49 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்விஃப்ட் காரில் மிக முக்கிய அம்சமாக புத்தம் புதிய 3-சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த காரில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய 4ஆம் தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. புதிய என்ஜின் உடன் ஸ்விஃப்ட் காரை ஓட்டுவதற்கு எவ்வாறு உள்ளது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிப்பக்க தோற்றம்: வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஸ்விஃப்ட் காரின் தோற்றத்தை மாருதி சுஸுகி அதிகளவில் மாற்றவில்லை. முந்தைய ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரின் சாயலை புதிய ஸ்விஃப்ட்டிலும் காண முடிகிறது. இருப்பினும், ஸ்விஃப்ட் காரின் டிசைன் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

maruti suzuki swift car review

புதிய 2024 ஸ்விஃப்ட் காரின் முன்பக்கத்தில் முற்றிலும் புதிய டிசைனில் பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஹெட்லைட்களின் டிசைன் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள கிரில் பகுதியின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, புதிய ஸ்விஃப்ட்டின் முன்பக்கத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அப்படியே காரின் பக்கவாட்டிற்கு சென்றால், முன்பக்க ஹெட்லைட்டையும், பின்பக்க டெயில்லைட்டையும் இணைக்கும் விதத்தில் ஷோல்டர் லைன் ஒன்று செல்கிறது. காரின் 15-இன்ச் அலாய் சக்கரங்களை புதிய டிசைனில் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. அதேபோல், புதிய ஸ்விஃப்ட் காரில் முக்கியமான மாற்றமாக, பின் கதவுகளுக்கு சாதாரண டோர் ஹேண்டில்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

maruti suzuki swift car review

ஏனெனில், பழைய ஸ்விஃப்ட் கார்களில் பின் கதவுகளுக்கு டோர் ஹேண்டில்கள் வித்தியாசமாக காரின் மேற்கூரைக்கு அருகே வழங்கப்பட்டு வந்தன. தற்போது, இந்த விஷயத்தில் பாரம்பரிய முறையை மாருதி சுஸுகி பின்பற்றியுள்ளது. புதிய ஸ்விஃப்ட் காரின் பின்பக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு வளைவாக கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க டெயில்லைட்கள் C-வடிவில் கண்ணை கவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை மொத்தம் 9 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்கள் அடங்குகின்றன. வழக்கம்போல், ஸ்விஃப்ட் காருக்கு அதிகப்படியான ஆக்ஸஸரீஸ் ஆப்ஷன்களை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இந்த காருக்கான ஆக்ஸஸரீகளை ஸ்போர்டி ரேசிங் ரோட்ஸ்டர் மற்றும் எனர்ஜெட்டிக் த்ரில் சேஸர் என்கிற பேக்கேஜ்களில் வாங்கலாம்.

maruti suzuki swift car review

உட்பக்க தோற்றம் & தொழிற்நுட்ப வசதிகள்: 2024 ஸ்விஃப்ட் காரின் உட்பக்க கேபினின் தோற்றத்தை பார்க்கும்போது, எங்களுக்கு மாருதி சுஸுகி பலேனோ கார் தான் ஞாபகத்திற்கு வருகிறது. பலேனோ காருக்கு வழங்கிவரும் கேபின் டிசைனை ஸ்விஃப்ட்டிற்கு மாருதி சுஸுகி வழங்கியிருப்பது பாராட்டத்தக்க விஷயமே ஆகும். ஏனெனில், ஸ்விஃப்ட்டை விட பலேனோ விலைமிக்க காராகும்.

புதிய ஸ்விஃப்ட் காரின் டேஸ்போர்டின் மத்தியில் புதிய 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் மூலமாக நேவிகேஷன் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை பெறலாம். அதுமட்டுமின்றி, இந்த திரையை ரியர் கேமராவுக்கான டிஸ்பிளேவாகவும் பயன்படுத்தலாம்.

maruti suzuki swift car review

ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் வழங்கப்படும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திரை தற்போது 4.2 இன்ச்சாக மாற்றப்பட்டுள்ளது. இருக்கைகள் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரியை கொண்டுள்ளன. ஏசி காற்றுக்கான துளைகள் டேஸ்போர்டிற்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் செட்-அப்பிற்கான ஸ்விட்ச்கியர் இந்த காரில் உள்ளது. புதிய ஸ்விஃப்ட்டில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்ஸ், வயர்லெஸ் போன் சார்ஜர், பவரை அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய பொத்தான், ஸ்டேரிங் சக்கரத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கான கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

maruti suzuki swift car review

பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகளை 2024 ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பெறலாம். இவற்றுடன், குழந்தை இருக்கைகளுக்கான ISOFIX ஆங்கர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவையும் புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ளன.

என்ஜின் & பரிணாம அளவுகள்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய 4ஆம் ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான அப்டேட் என்று பார்த்தால், அது புத்தம் புதிய 3-சிலிண்டர் இசட்-சீரிஸ் என்ஜின் ஆகும். ஸ்விஃப்ட் காரில் முன்பு கே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கே-சீரிஸிற்கு பதிலாக இசட்-சீரிஸ் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

maruti suzuki swift car review

கே12என் என்ஜினுக்கு பதிலாக இசட்12இ பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 4 சிலிண்டர்களில் இருந்து 3 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இயக்க ஆற்றலும் 8 பிஎச்பி மற்றும் 1.3 என்.எம் டார்க் திறன் குறைந்துள்ளது.

புதிய இசட்12இ என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 5,700 ஆர்பிஎம்-இல் 80.46 பிஎச்பி மற்றும் 4,300 ஆர்பிஎம்-இல் 111.7 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். என்ஜின் வெளிப்படுத்தும் பவர் அவுட்-புட் குறைக்கப்பட்டு இருப்பதினால், காரில் மைலேஜ் அதிகமாக கிடைக்கிறது. புதிய ஸ்விஃப்ட் காரை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி (ஆட்டோமேட்டட் மேனுவல்) கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.

maruti suzuki swift car review

இதில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 24.8kmpl வரையிலான மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் 25.75kmpl வரையிலான மைலேஜையும் புதிய ஸ்விஃப்ட் காரில் பெறலாம். காரின் மைலேஜ் சாலையின் தரம், பயண சூழல் மற்றும் டிரைவிங் ஸ்டைலை பொறுத்தது ஆகும். பரிணாம அளவை பொறுத்தவரையில், பழைய ஸ்விஃப்ட் காரை காட்டிலும் புதிய ஸ்விஃப்ட் அளவில் கொஞ்சம் பெரியதாக காட்சியளிக்கிறது.

இருப்பினும், இந்த காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் 2,450மிமீ ஆக உள்ளது. 2024 ஸ்விஃப்ட் காரின் நீளம் 3,860மிமீ, அகலம் 1,735மிமீ மற்றும் உயரம் 1,520மிமீ ஆகும். பழைய ஸ்விஃப்ட் காரை விட புதிய மாடல் 15மிமீ கூடுதல் நீளமானது, 40மிமீ அகலம் குறைவானது மற்றும் 30மிமீ உயரமானது ஆகும்.

maruti suzuki swift car review

தரையில் இருந்து காரின் அடிப்பக்கம் 163மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் காரின் எடை 920 கிலோ ஆகும் (ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் 925 கிலோ). காருக்கு பின்பக்கத்தில் 265 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 37 லிட்டர்கள் ஆகும். ஆதலால், ஸ்விஃப்ட் ஏஎம்டி காரில் டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 950கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம்.

பயண அனுபவம்: புதிய ஸ்விஃப்ட் காரின் என்ஜினில் ஒரு சிலிண்டர் குறைக்கப்பட்டு இருப்பதினால், என்ஜினின் பவர் அவுட்-புட் சற்று குறைந்து இருப்பினும், அது காரை ஓட்டும்போது பெரியதாக தெரியவில்லை. த்ரோட்டல் ரெஸ்பான்ஸ் வழக்கம்போல் மிகவும் ஷார்ப்பாக உள்ளது. காரின் என்ஜினில் இருந்து ஊம்ப் மிக சிறப்பாக வெளிவருகிறது.

maruti suzuki swift car review

இந்த அதிகப்படியான உடனடி இயக்க ஆற்றல் காரின் குறைவான எடையுடன் இணையும்போது புதிய ஸ்விஃப்ட் காரை ஹேண்டில் செய்வது எளிதாகிறது. இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை 12.5 வினாடிகளில் எங்களால் எட்ட முடிந்தது. நாங்கள் இயக்கி பார்த்தது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட புதிய ஸ்விஃப்ட் காரை ஆகும். காரின் சஸ்பென்ஷன் செட்-அப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மேடு, பள்ளங்களை இது சிறப்பாக கையாள்கிறது.

சஸ்பென்ஷனுக்கு ஏற்ப ஸ்டேரிங் சக்கரமும் துரிதமாக செயல்படுவதால், உங்களால் ஷார்ப்பான வளைவுகளிலும் எளிதாக திரும்ப முடிகிறது. இதனால், ஜாலியான பயணங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு 2024 ஸ்விஃப்ட் ஏற்றதாக இருக்கும். காரில் இருக்கைகளில் குஷின்கள் அந்த அளவிற்கு சிறப்பானதாக இல்லை. முன் இருக்கைகள் நன்கு இடவசதி உடன் உள்ளன என்றாலும், பின் இருக்கைகளில் உயரமான நபர்கள் அமர்வதும், வெளியே வருவதும் சற்று சிரமமாக உள்ளது.

maruti suzuki swift car review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், தொழிற்நுட்ப அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு இருப்பது உண்மையில் பாராட்டத்தக்க விஷயமாகும். ஏற்கனவே கூறியதுபோல், காரின் என்ஜின் சிஸ்டத்தில் ஒரு சிலிண்டர் குறைக்கப்பட்டு இருப்பதால் அதிக மைலேஜை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 11:03 [IST]
English summary
2024 maruti suzuki swift first drive review design features engine all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X