இந்த இ-லோடு வண்டி விலையுயர்ந்த கார்களுக்கே டஃப் கொடுக்கும் போலையே! என்னமா ரெடி பண்ணியிருக்காங்க! ரைடு ரிவியூ!

இந்தியாவின் கமர்சியல் வாகன (Commercial Vehicles) பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஸ்விட்ச் (Switch) நிறுவனம், அதன் 2024 ஐஇவி4 (IeV4) மற்றும் ஐஇவி3 (IeV3) ஆகிய மாடல்களை இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இவை மின்சாரத்தால் இயங்கும் லோடு வாகனங்கள் ஆகும். இவற்றையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதனை சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் டெக்னிக்கல் சென்டர் (Ashok Leyland Technical Centre)-இல் வைத்தே ஓட்டி பார்த்தோம். இந்த ரைடின் வாயிலாக வாகனங்கள் குறித்த பல்வேறு தகவல்களை நாங்கள் அறிந்துக் கொண்டோம்.

குறிப்பாக, வாகனத்தின் அதி-வேக திறன், ஹேண்ட்லிங் மற்றும் தனித் திறன் என்ன என்பது போன்றவற்றையே தெரிந்துக் கொண்டோம். இந்த தகவல்களையே இங்கே உங்களுக்காக விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். கமர்சியல் வாகன உலகிற்கு ஏற்ற வாகனம்தானா இவை என்பதையும் இங்கே பார்க்கலாம், வாங்க.

Switch iev3 and iev4 review

ஐஇவி4 மற்றும் ஐஇவி3 மின்சார வாகனங்களின் டிசைன் மற்றும் அழகியலை பற்றிய விபரம்: டிசைனைப் பொருத்த வரை இந்த வாகனங்கள் அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களான தோஸ்த் (Dost) மற்றும் படா தோஸ்த் (Bada Dost) ஆகியவற்றையே இவை பிரதிபலிக்கின்றன. ஆனால், இந்த இரண்டும் ஐசிஇ (Internal Combustion Engine) வாகனங்கள் ஆகும்.

ஸ்போர்ட்டியான மெல்லிய ஹெட்லேம்ப், முழுமையாக மூடப்பட்ட ஸ்டைலில் இருக்கும் கிரில், சார்ஜிங் போர்ட் மற்றும் தனித்துவமான கிராஃபிக்குகள் ஆகியவற்றாலேயே ஐஇவி4 மற்றும் ஐஇவி3 ஆகியவை அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த அம்சங்களே இந்த இரண்டு வாகனங்களும் சாலையில் தோன்றும்போது அவற்றிற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.

Iev3 and iev4

குறிப்பாக, வழக்கமான வாகனங்களிடம் இருந்து அவை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இதேபோல், இந்த வாகனங்களின் உட்பக்கமும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. வசதியான மற்றும் திறமையான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் அது உள்ளது. இதற்காக நவீன கால அம்சங்கள் பல இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டூயல் டோன் நிறம் கொண்ட டேஷ்போர்டு போன்ற பிரீமியம் அம்சங்களை ஸ்விட்ச்-இன் ஐஇவி4-இல் காண முடிகின்றது. இவற்றின் இருக்கையும் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்குவதற்கு ஏதுவாக உள்ளன. எனவே, இந்த மின்சார வாகனங்கள் கட்டாயம் சிறப்பான டிரைவிங் மற்றும் பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Switch ev review

ஐஇவி3 மாடலின் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் உருவ அளவு விபரம்: ஐஇவி4 மாடலைக் காட்டிலும் கொஞ்சம் சிறிய உருவம் கொண்ட மாடலாக ஐஇவி3 காட்சியளிக்கின்றது. பேட்டரி பேக் மற்றும் மோட்டார் விஷயங்களிலும் இது சற்று அதற்கு கீழாகவே உள்ளது. ஸ்விட்ச் நிறுவனம் இந்த மின்சார மாடலை 8ft x 5ft x 1.6ft ஆகிய அளவுகளிலேயே தயார் செய்திருக்கின்றது.

மேலும், இதன் பே-லோடு திறன் 1.25 டன் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, 1,200 கிலோ வரையிலான சரக்கைகூட அசால்டாக இது சமாளிக்கும். 40 kW மற்றும் 190 என்எம் டார்க் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 25.6 kWh பேட்டரி அட்வான்ஸ்டு லித்தியம் அயன் பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஐஇவி4 மாடலின் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் உருவ அளவு விபரம்: ஐஇவி3 மாடலைக் காட்டிலும் சற்று அதிக திறன் வெளியேற்றக் கூடியதாகவும், அதிக பாரத்தைச் சுமக்கக் கூடியதாகவும் ஐஇவி4 மாடல் காட்சியளிக்கின்றது. இதன் பே-லோடு திறன் 1.7 டன் ஆகும். இதில், 60 kW மற்றும் 230 என் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கூடுதல் சரக்கை ஏற்றி செல்ல ஏதுவாக 9ft x 5ft x 1.7ft ஆகிய அளவுகளிலேயே இந்த வாகனத்தை ஸ்விட்ச் தயார் செய்திருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை இதில் 32.2 kWh அட்வான்ஸ்டு லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

திறன் வெளிப்பாடு மற்றும் அளவு உள்ளிட்டவற்றில் இந்த வாகனங்கள் வேறுபாடு தென்பட்டாலும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற விஷயத்தை மனதில் வைத்தே இந்த வாகனங்களை ஸ்விட்ச் வடிவமைத்திருக்கின்றது. எனவே, ரேஞ்ஜ் திறன் உள்ளிட்டவற்றில் வர்த்தக வாகன பயன்பாட்டாளர்களின் தேவையை கட்டாயம் இந்த வாகனம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டும் அனுபவம் எப்படி இருந்தது? முன்னதாக கூறியதைபோல பலநிலைகளில் வைத்து இந்த வாகனம் ஓட்டி பார்க்கப்பட்டது. அந்தவகையில், உயர்-வேக டிராக்-இல் வைத்தும் இந்த வாகனம் ஓட்டி பார்க்கப்பட்டது. அப்போது, ஐஇவி4 மாடலில் மிக சிறந்த ஸ்டெபிளிட்டியையும், கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தையும் நாங்கள் பெற்றோம்.

மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணித்த போதும் இந்த அனுபவமே கிடைத்தது. ஆனால், ஐஇவி3 மாடலில் இது சற்றே குறைவு. மேலும், கொஞ்சம் பாடி ரோல் இருந்தது. இத்துடன், மெதுவாக இதன் ஸ்டியரிங் வீல் பதிலளிப்பதையும் நாங்கள் இங்கே உணர்ந்தோம். திறந்த மைதானத்திலும் இந்த வாகனத்தை ஓட்டி பார்த்தோம்.

அப்போது இரண்டு வாகனங்களும் மிக சிறப்பாக செயல்பட்டன. ஐஇவி4 ஸ்டியரிங் சிஸ்டம் மிக சிறப்பாக செயல்பட்டதனால், அதிக மகிழ்ச்சியான ரைடு அனுபவம் இதில் கிடைத்தது. இதேபோல், ஐஇவி3-யும் சுறுசுறுப்பான ரைடு அனுபவத்தையே இந்த காலி மைதானத்தில் வழங்கியது. இதேபோல் சாய்வான பாதை-இல் வைத்தும் இந்த வாகனம் ரைடு செய்து பார்க்கப்பட்டது.

இந்த சோதனையின்போது ஐஇவி3 மற்றும் ஐஇவி4 ஆகியவை வேறுபாடான திறன்களை வெளிப்படுத்தின. 10.6 டிகிரி சாய்வான பாதையில் வைத்து இயக்கும்போது ஐஇவி3 கொஞ்சம் சிரமப்பட்டே பயணித்தது. சீராக இயங்க ஹில் கன்ட்ரோலை ஆக்டிவேட் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, ஸ்போர்ட் மோடில் போட்டு இயக்கியதில் கூடுதல் திறன் அதற்கு வழங்கப்பட்டது. ஆனால், ஐஇவி4 எந்தவொரு சின்ன சிரமமும் இன்றி அந்த 10.6 டிகிரி சாய்வான பாதையை சமாளித்துவிட்டது.

இரண்டில் எது பெஸ்ட்? இரண்டில் எது சிறந்தது என கூறுவது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும், அதிக எடையை ஏற்றி செல்வது, சிறந்த ரைடு அனுபவத்தை வழங்குவது மற்றும் அதிக ரேஞ்ஜை வழங்குவது போன்றவற்றில் சிறந்ததாக ஐஇவி4 மாடலே காட்சியளிக்கின்றது. அதேபோல், விலையிலும் சற்று உயர்ந்ததாகவே இது இருக்கின்றது.

ரூ. 15.3 லட்சமே இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட விலையில் குறைவானதாகவே ஐஇவி3 காட்சியளிக்கின்றது. இதற்கு ரூ. 12.33 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஐஇவி4 மாடலைக் காட்டிலும் திறன் வெளிப்பாடு உள்ளிட்டவற்றில் இது பின் தங்கி இருந்தாலும், இந்த விலைக்கு ஏற்ற ஓர் சிறந்த மின்சார லோடு வாகனமாக இது காட்சியளிக்கின்றது. சுற்றுச் சூழலுக்கும் இது நண்பனாக விளங்கும். அதிக லாபத்தை பெறவும், சிறந்த மற்றும் அட்வான்ஸ்டான ரைடு அனுபவத்தை பெற உதவும் இந்த வாகனங்கள் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, ஐசிஇ வாகனங்களைக் காட்டிலும் இவை இரட்டிப்பான லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் கமர்சியல் வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனம் ஐஇவி 3 மற்றும் ஐஇவி4 ஆகிய எலெக்ட்ரிக் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களை நவீன வசதிகளுடன் களமிறக்கி இருக்கின்றது. இவற்றை ஓட்டி பார்த்தால் கட்டாயம் நீங்களும் இதன் பிரியர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதே எங்களின் கருத்தாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 14:00 [IST]
English summary
2024 switch iev3 and iev4 electric commercial vehicles a comprehensive review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X