ஓட்டி பாத்தாதான் எந்தெந்த கார் என்ன லட்சணத்துல இருக்குனு தெரியுது.. கியாவோட இந்த இ-கார் எப்படி இருந்துச்சு?..

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025) வாயிலாக தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட இவி6 (EV6) கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு மாற்றங்களை இந்த காரில் கியா செய்திருக்கின்றது. குறிப்பாக, அதன் டிசைனில் லேசான மறு சீரமைப்பு கியா செய்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, புதிதாக அடாஸ் (ADAS) தொழில்நுட்பத்தையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. மேலும், சற்றே இதன் பேட்டரி பேக் திறனையும் அது உயர்த்தியிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இத்தனை வேலைகளையும் கியா நிறுவனம் இவி6 கார் மாடலில் பார்த்திருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் வாயிலாக இந்த கார் பற்றி நாங்கள் அறிந்துக் கொண்ட விபரங்களையே இப்பதிவில் 'ரைடு ரிவியூ' (Review) விபரமாக வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுபற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

Kia ev6 review

புதுப்பித்தலின்கீழ் கியா இவி6 காரில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? புதிய அப்டேட்டால் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தை கியா இவி6 பெற்றிருக்கின்றது. மிக முக்கியமாக ஸ்டார் மேப்-பை பிரதிபலிக்கும் வகையில் உள்ள எல்இடி ஹெட்லைட் காரின் முன் பக்கத்திற்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்க்கும் விதமாக உள்ளது.

இதுமட்டுமல்ல, இதன் பம்பர், கொக்கி வடிவ டிஆர்எல், நீளமான எல்இடி லைட் துண்டு மற்றும் கிரில் உள்ளிட்டவையும் லேசாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், காரின் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பம்பர் மற்றும் 19 அங்குல அலாய் வீல்களும்கூட லேசாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

Kia ev6 interior design

இவை அனைத்தும் இவி6 எலெக்ட்ரிக் காரின் வெளிப்புறத்திற்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றன. இந்த காரின் வெளிப்புறத்தை மட்டுமல்ல உள்பக்கத்தையும் அழகானதாக தெரிய லேசான மாற்றங்களை கியா செய்திருக்கின்றது. 3 ஸ்போக்குகளைக் கொண்ட ஸ்டியரிங் வீல், மெருகேற்ற சென்டர் கன்சோல் பகுதி மற்றும் விரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவி உள்ளிட்டவையே காரின் உள்பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மிக முக்கியமான மாற்றங்கள் ஆகும்.

இவற்றைத் தொடர்ந்தே பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக லெவல் 2 அடாஸ் அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக 17க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகளை பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும். லேனுக்குள்ளேயே காரை இயக்குதல், லேனை விட்டு வெளியேறுவதற்கான அசிஸ்டன்ஸ், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய கார் நிறுத்தம் மற்றும் இயக்குதல் உள்ளிட்ட வசதிகளையே பெற்றுக் கொள்ள முடியும்.

Kia ev6 interior seat

இதுமட்டுமல்ல மோதலை தவிர்க்கும் வசதி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாற்றங்களைக் காட்டிலும் மிகப் பெரிய மாற்றமாக இந்த காரின் பேட்டரி பேக்கில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் இருக்கின்றது. 84 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முன்னதாக 77.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இதில் வழங்கினர் என்பது கவனிக்கத்தகுந்தது. என்எம்சி வகை பேட்டரி பேக்கே இதுவாகும். நீடித்து உழைத்தல், குறைவான எடை மற்றும் அதிக அடர்த்தி என பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாக இந்த பேட்டரி பேக் இருக்கின்றது.

Kia ev6 interior rear

ஓர் முழு சார்ஜில் இந்த பேட்டரி பேக்கில் 663 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அதிக ரேஞ்சைத் தரக் கூடிய பேட்டரி பேக் மட்டுமல்ல அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட பேட்டரி பேக்கும்கூட. வெறும் 18 நிமிடங்களிலேயே அது 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ளும். அதி-வேக சார்ஜிங் மையங்களினாலேயே இது சாத்தியமாகும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது?.. புதுப்பிக்கப்பட்ட கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் மின்சார மோட்டாரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே டூயல் மோட்டார் செட்-அப்பே ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதுவும் அனைத்து வீல்களும் இயக்கம் கொண்டதாக இருக்கின்றது.

புதிய கியா இவி6-இல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 320 பிஎச்பி மற்றும் 605 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.3 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

இதுவே முந்தைய வெர்ஷனுக்கு இந்த வேகத்தை எட்ட வெறும் 5.2 செகண்டுகளே போதுமானது ஆகும். நாங்கள் ஓட்டி பார்க்கும்போது நிறுழனம் குறிப்பிட்ட இந்த வேக இலக்கை மிகவும் சுலபமாக கியா இவி6 எலெக்ட்ரிக் கார் எட்டியது. குறிப்பாக, இதன் உயர் ஆற்றல் திறன் நமது டிரைவருக்கு குமட்டலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக, உயர் த்ரோட்டில்களின்போதே இந்த நிலை உருவாகியது.

அதேநேரத்தில், இந்த காரின் சஸ்பென்ஷன் செட்-அப் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக இருந்ததை நாங்கள் ஃபீல் செய்தோம். குறிப்பாக, தன்னுடைய அளவில் உள்ள மற்ற கார்களைக் காட்டிலும் மிக அதிக சுறுசுறுப்பான காராக இவி6 இருந்தது. ஆகையால், இந்த சஸ்பென்ஷன் செட்-அப்பால் கொஞ்சமும் நமக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படாது. இதுபோன்றே, இன்னும் பல நிலைகளில் இந்த கார் மிக சிறந்தது என்பதை இந்த ரைடின் வாயிலாக எங்களுக்கு இவி6 வெளிக்காட்டியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான எலெக்ட்ரிக் கார் மாடலாக கியா இவி6 இருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டே இந்தியாவில் ரூ. 65.8 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த காஸ்ட்லியான இ-காரை பணக்கார்கள் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு இக்கின்றனர்.

இவர்களைக் கூடுதலாகக் கவரும் நோக்கிலேயே குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்து புதிய இவி6 ஆக இந்த காரை கியா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி இருக்கின்றது. இதற்கும் நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக, எலெக்ட்ரிக் கார் ஆர்வலர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 15, 2025, 15:28 [IST]
English summary
2025 kia ev6 facelift review explore the enhanced features of the electric car
மேலும்... #kia motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X