வாங்குனா இப்படி ஒரு காரை வாங்கனும்! ஓட்டி பார்க்கவே இவ்வளவு அருமையா இருக்குதே!
2019ம் ஆண்டு கொரோனா என்ற பெயரே உலகிற்கு அறிமுகமாகாத காலம். இந்த நேரத்தில் ஐரோப்பாவில் நடந்த ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரை முதன் முதலில் காட்சிப்படுத்தியது. முன்னதாக 2018 இந்தியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இ்நத காரின் கான்செப்ட் காரான 45எக்ஸ் காரின் தயாரிப்பு வெர்ஷனை காட்சிப்படுத்தியிருந்தது.
இதற்கு பிறகு கொரோனா வந்தது. அதை தொடர்ந்து புதிய மாசு கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்தது. இதற்கிடையில் இந்த காரும் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு விற்பனக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு டாடா இந்த காரில் ஐசிஎன்ஜி மறஅறம் ரேஸர் ஆகிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தி இந்த காரை தொடர்ந்து மக்கள் மத்தியில் புத்துணர்வூட்டும் ஒரு காராக வைத்திருந்து.

இதற்கிடையில் டாடா நிறுவனத்தின் மற்ற கார்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டன. போட்டி நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட புதிய அப்டேட்களை பெற துவங்கின. போட்டி நிறுவன தயாரிப்பு நவீன காலத்திற்கு ஏற்றார் போல மாற துவங்கிய நிலையில் தற்போது டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரையும் அப்டேட் செய்ய முடிவு செய்து மிட்-லைஃப் அப்டேட்களை பெற துவங்கியது. இப்படியாக 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை நாம் பெங்களூருவிற்கு சென்று ஓட்டி பார்த்தோம். அதன் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புறத்தோற்றம் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. முகப்பு பகுதி முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய எல்இடி ஹெட்லைட், புருவ வடிவிலான டிஆர்எல், ஸ்லிம்மான லைன் கொண்ட கிரில் அதன் நடுவே டாடா லோகோ விடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பக்ககம் கீழ் பகுதியில் பம்பரில் செவ்வக வடிவிலான எல்இடி ஃபாக் லைட்டுகள் பெஆரத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மத்தி பகுதியில் ஏர் டேம் வழங்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதியில் பெரும்பான்மையான இடம் கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அல்ட்ராஸ் காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. கவனிக்கதக்க மாற்றம் என்னவென்றால் இதில் பொருத்தப்பட்டுள்ள 16 இன்ச் அலாய் வீல்கள் தான். இந்த வீல்கள் டாடாவின் புதிய இவி கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதே அலாய் வீல்கள் தான். இது போக இலுமினேட் செய்யக்கூடிய டோர் ஹேண்டில்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் பின்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பின்பக்கம் செங்குத்து அமைப்பில் T வடிவ எல்இடி டெயில் லைட் மற்றும் கனெக்டெட் லைட் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா பேட்ஜ் இந்த காரின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலில் இருந்த அளவை விட சற்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் பகுதி ஸ்போர்ட்டியான டுயல் டோன் செட்டப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிவர்ஸ் லைட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்குள் செல்லும் போது நீ்கள் பல்வேறு மாற்றங்களை காண முடியும். டாடா கர்வ் காரில் இருப்பது போலவே இந்த காரின் டேஷ் போர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரில் புதிய 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது மேப் ஸ்கிரீனாவும், அதே நேரம் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டராகவும் பயன்படும் அம்சம் கொண்டது. இது போக இந்த காரில் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாடா இலுமினேட்டட் பேட்ஜ் நடுவே வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோலும் இதில் இருக்கிறது.

இந்த காரில் உள்ள 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 3 டோன் டேஷ் போர்ட் உடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்கிறது. இது மட்டுமல்லாமல் இதில் டாடா ஐஆர்ஏ கனெக்டெட் கார் தொழிற்நுட்பமும் இருக்கிறது. இது 4 டிவீக்கர் மற்றும் 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டள்ளது.
இந்த அல்ட்ராஸ் காரின் டேஷ் போர்டில் கிளைமேட் கண்ட்ரோலுக்காக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது போக கூல்டு கிளவ் பாக்ஸ், பின்புற ஏசி வென்ட்கள், 65வாட் யூஎஸ்பி சி சார்ஜிங் போர்ட்கள் முன்பக்கமும் பின்பக்கமும் வழங்கப்பட்டுள்ளன. இது போக வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வாய்ஸ் மூலம் ஆக்டிவேட் செய்யக்கூடிய சன் ரூஃப், சீட்டுகள் செளகரியமாக இருக்கிறது. ஆனால் உயரமாக இருப்பவர்களுக்கு பின்பக்கம் போதுமான ஹெட்ரூம் இல்லை.

இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி,இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் குழந்தைகளுக்கான் சீட் மவுண்ட்கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் மற்றும் விண்ட்ஷீல்டு வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
புதிய டாடா அல்ட்ராஸ் காரில் இன்ஜின் ஆப்ஷனில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பழைய காரில் என்ன இன்ஜின் இருந்ததோ அதே இன்ஜின் தான் இதிலும் இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பர்டு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 86.8 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தறின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும், 6 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சிஎன்ஜி வெர்ஷனிலும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 72.5 பிஎச்பி பவரையும் 103 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது போக டர்போ சார்ஜ்டு 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த செக்மெண்டில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனையாகும் ஒரே கார் இது தான். இந்த இன்ஜின் 88.76 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஃபேஸ்லிஃப்ட் அல்ட்ராஸ் காரின் அளவுகளை பொருத்தவரை 3990 மிமீ நீளமும், 1755 மிமீ அகலமும், 1523 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 2501 மிமீ வீல் பேஸ் இருக்கிறது. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் ஆகிய இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பூட் பகதியில் 345 லிட்டர் அளவிற்கு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் காரில் மட்டும் தான். சிஎன்ஜியில் இது 210 லிட்டராக குறைகிறது. மற்ற இடத்தில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் நாம் முன்னரே சொன்னதுபடி 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 185/60 அளவிலான டயர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பேர் வீல் 14 இன்ச் கொண்ட அலாய் வீலில் 165/80 அளவிலான டயர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் டீசல் இன்ஜின் மற்றும் ஐசிஎன்ஜி கார்களை நாங்கள் ஓட்டி பார்த்தோம். டீசல் இன்ஜின் அதே பழைய இன்ஜின் போல தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நெக்ஸான் டீசல் இன்ஜின் போல செயல்படுகிறது. சிஎன்ஜி காரை சிஎன்ஜி மோடிலேயே ஸ்டார்ட் செய்ய முடிகிறது. டாடா காரில் இந்த ஆப்ஷன் சிறப்பானதாக இருக்கிறது.
இந்த காரின் பிக்கப்பை பொருத்தவரை 1800 ஆர்பிஎம் வரை லேக் இரு்கிறது. நல்ல பிக்கப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு பெட்ரோல், டீசல் இன்ஜின் தான் பெஸ்ட், சிஎன்ஜி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்த காரின் டீசல் வெர்ஷன் ஹைவேயில் நீண்ட தூரம் பணிக்கும் போது க்ரூஸ் கண்ட்ரோலில் பயணிக்க சிறப்பாக இருக்கிறது. 80-100 வேகத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் சிறப்பாக செயல்படுகிறது.
ஐசிஎன்ஜி காரில் பயணிக்கும் போது பெட்ரோலில் பயணிப்பதற்கும் சிஎன்ஜியில் மாற்றி பயணிப்பதற்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. சிஎன்ஜி மோடில் டார்க் சற்று குறைவாக இருக்கிறது. முந்தைய மாடலில் இருந்த அதே பெர்ஃபார்மென்ஸ் தான் இந்த காரிலும் இருக்கிறது. இது சிறப்பான பெர்ஃபார்மென்ஸை தர சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது. டாப் வேகத்திலும் ஃபிளாட்டான வேகத்தில் தான் பயணிக்க முடிகிறது.
இந்த காரின் கிளட்ச்சை பொருத்தவரை டீசல் மற்றும் ஐசிஎன்ஜி இரண்டு காரிலும் லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. கியர் மாற்றுவது சற்று சிரமாக உள்ளது. பிரேக் பெடல் லைட்டாக உள்ளது. இது ஸ்மூத்தாக செயல்படுகிறது. இதனால் பிரேக்கிங் அனுபவம் சிறப்பானதாக இருக்கும். இந்த காரின் ரைடிங் மற்றும் ஹேண்டிலிங் அகிய அம்சங்கள் சிறப்பாக இருக்கிறது. அதிக வேகத்தில் இந்த கார் ஸ்டெபிளான இருக்கிறது. திருப்பங்களிலும், அதிக வேகத்தில் பயணிக்கும் போது ஸ்டியரிங் வீல் வெயிட்டாகிறது. இதை ஓட்டும்போது ஸ்டிஃப்பாக இல்லை. பெங்களூருவில் உள்ள பள்ளம் மேடு நிறைந்த சாலைகளிலும் இதை ஓட்டும் போது செளகரியமான பயண அனுபவத்தை தான் வழங்கியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் கார் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமாகிய போது. இந்த கார் வாடிக்கையாளர்களையும் போட்டியாளர்களையும் ஈர்த்தது. அதன் பிறகு எலெக்ட்ரிக் கார் மீது தான் டாடாவின் கவனம் திருப்பியது. இந்நிலையில் 2025ம் ஆண்டு இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த கார் பலரது கண்களை கவர்ந்துள்ளது.
புதிய டாடா அல்ட்ராஸ் கார் ஷார்ப்பாகவும், ஸ்போர்ட்டியாகவும், வெளிப்புறமும், உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல அம்சங்கள் மற்ற செக்மெண்ட் காரில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இந்த கார் தான் இந்த செக்மெண்டிலேயே டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இருக்கும் ஒரே கார். இந்த அப்டேட் செய்யப்பட்ட பிரிமியம் ஹேட்ச்பேக் கார் நீங்கள் லிஸ்டில் ஒரு காராக நிச்சயம் இருக்கும்.


Click it and Unblock the Notifications









