அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி - சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் மாடலான அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவியை டெல்லியில் நடந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும், அசோக் லேலண்ட் விளம்பர தூதருமான டோணி அறிமுகம் செய்து வைத்தார்.

நிசான் எவாலியா தனி நபர் மார்க்கெட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அசோக் லேலண்ட் ஸ்டைல் வர்த்தக மார்க்கெட்டை குறிவைத்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு தக்கவாறு சில மாறுதல்களை கண்டிருக்கிறது. எஞ்சின், மைலேஜ், வேரியண்ட்டுகள், விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள் & இருக்கை வசதி

வேரியண்ட்டுகள் & இருக்கை வசதி

அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி கார் 5 சீட்டர், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். எல்இ, எல்எஸ் மற்றும் எல்எக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

நிசான் எவாலியாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் கே9கே ரெனோ டீசல் எஞ்சின்தான் இந்த எம்பிவியிலும் செயல்புரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரையும், 185 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

எஞ்சின் பவர் குறைக்கப்பட்டு ட்யூனிங் செய்யப்பட்டு மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும், எவாலியாவை விட சற்று கூடுதல் மைலேஜ் கொடுக்கும். லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜ் தரும் என லேலண்ட் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தர வசதிகள்

நிரந்தர வசதிகள்

டில்ட் ஸ்டீயரிங், ஏசி ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிர்ந்தரமாக இடம்பெற்றிருக்கிறது. எல்எஸ் வேரியண்ட்டில் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட் மற்றும் பாடி கலர் பம்பர் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கின்றன. எல்எக்ஸ் டாப் வேரியண்ட்டில் ஃபேப்ரிக் சீட் கவர், சில்வர் பினிஷ் கொண்ட சென்ட்ரல் கன்சோல் ஆகியவை இருக்கின்றன.

பிடுங்கப்பட்ட வசதிகள்

பிடுங்கப்பட்ட வசதிகள்

டாக்சி மார்க்கெட்டை குறித்து வைத்து நிலை நிறுத்தப்பட்டதால் அதற்கேற்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக், இபிடி, ஏர்பேக்குகள், ஓஆர்விஎம் கண்ணாடிகள் மற்றும் ஸ்டீரியோ சிஸ்டம் ஆகியவை டாப் வேரியண்ட்டில் கூட இல்லை.

 மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

எவாலியாவில் இருந்த சில குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. எவாலியாவில் இல்லாத பின்புற பயணிகளுக்கான ஏசி வென்ட், மூடும் வசதி கொண்ட கிளவ் பாக்ஸ் ஆகியவை ஸ்டைலில் கொடுக்கப்பட்டுள்ளன. எவாலியா தோல்விக்கு காரணமாக பின்புற பட்டர் ஃப்ளை கண்ணாடி கதவுகளுக்கு பதில் ஸ்லைடிங் கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

 உற்பத்தி

உற்பத்தி

சென்னை ஒரகடத்தில் உள்ள நிசான் ரெனோ கூட்டணி ஆலையின் எவாலியா உற்பத்தி செய்யப்படும் அதே உற்பத்தி பிரிவில்தான் அசோக் லேலண்ட் ஸ்டைலும் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட்டின் இலகு ரக வாகனங்களுக்கான டீலர்ஷிப்புகள் வாயிலாக ஸ்டைல் விற்பனை செய்யப்படுகிறது.

விலை

விலை

எவாலியாவைவிட ரூ.1.2 லட்சம் குறைவான விலையில் புதிய அசோக் லேலண்ட் ஸ்டைல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பேஸ் மாடலான எல்இ வேரியண்ட் ரூ.7.49 லட்சத்திலும், டாப் வேரியண்ட்டான எல்எக்ஸ் ரூ.9.29 லட்சத்திலும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2013, 11:08 [IST]
English summary
Evalia MPV proved to be a poor performer. One way to give a push to the unpopular platform was with the launch of a low cost model and Ashok Leyland's Stile MPV has been given that responsibility. The Stile is a badge engineered, stripped out Evalia, with a starting price that is INR 1.2 lakhs less than the latter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+