ஆடி ஏ3 எஸ் - லைன் காரின் அழகை ஒண்ணுவிடாமல் கண்டு ரசிக்கும் வாய்ப்பு!
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆரம்ப ரக செடான் கார்களில் ஆடி ஏ3 கார் வாடிக்கையாளர்களின் முதன்மை விருப்பமாக இருந்து வருகிறது. அம்சமான டிசைன் கொண்ட இந்த காரை வாங்குவதற்கு இளம் கோடீஸ்வரர்கள் முதல் இலக்காக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆடி ஏ3 காரில் கூடுதலாக பாடி கிட்டை சேர்த்து, உயர் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் ஆடி ஏ3 எஸ் லைன் காரை மும்பையில் வைத்து சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எடுக்கப்பட்ட படங்களின் முழுமையான தொகுப்பை இப்போது கேலரியில் காணலாம்.
சாதாரண ஆடி ஏ3 காரைவிட கூடுதலாக பாடி கிட் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமாக, கவர்ச்சியாக தெரிகிறது. இந்த காரில் 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்டுத்தப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி ஏ3 எஸ்- லைன் கார் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது.
முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியரை கொண்டிருக்கிறது. எம்எம்ஐ திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிசைனில் பென்ஸ் கார்களுக்கு சவால் விடும் அழகான ஏசி வென்ட்டுகள் கவர்கிறது. இருக்கைகள் மிக சொகுசாக இருக்கின்றன. அதேசமயத்தில் பின் இருக்கையில் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். மூன்று பேர் அமர்ந்தால், சிறிது அசவுகரியமாக இருக்கலாம்.
மிக இறுக்கமான சஸ்பென்ஷன் அமைப்பு மூலமாக, சிறந்த கையாளுமையை தருகிறது. டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. ரூ.31.40 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி கார்களுக்கே உரிய தனித்துவமான வெளிப்புற டிசைன், சிறந்த இன்டீரியர், பாதுகாப்பு வசதிகள் போன்றவை இந்த காரின் மதிப்பை கூட்டுகின்றன.

ஆடி ஏ3 காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!


Click it and Unblock the Notifications


































































