ஆடியின் பேபி எஸ்யூவி... க்யூ3 காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்தியாவின் நம்பர்-1 சொகுசு கார் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தில் இருக்கும் ஆடி நிறுவனத்தின் விற்பனையில் க்யூ3 எஸ்யூவி மிக முக்கிய பங்கு அளித்து வருகிறது. க்யூ வரிசையில் ஆடி விற்பனை செய்யும் எஸ்யூவிகளில் ஆரம்ப ரகத்திலான இந்த எஸ்யூவியை ஆடியின் பேபி எஸ்யூவியாக குறிப்பிடுகின்றனர்.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட போதே, முன்பதிவில் இந்த எஸ்யூவி அசத்தியது. இந்த நிலையில், ஆடி க்யூ3 எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீமுக்கு கிடைத்தது. இந்த காரில் இருக்கும் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

டெஸ்ட் டிரைவ் மாடல்

டெஸ்ட் டிரைவ் மாடல்

ஆடி க்யூ3 எஸ்யூவியின் டிஎஃப்எஸ்ஐ 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலை மும்பையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது. மொத்தம் 180 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து தகவல்களை அளிக்கிறோம். ரூ.32.63 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது.

தோற்றம்

தோற்றம்

க்யூ5 மற்றும் க்யூ7 எஸ்யூவி மாடல்களில் இருப்பது போன்ற தோற்றத்திலேயே இதன் முகப்பு அதிக வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. இதன் கிரில் அமைப்பு க்யூ வரிசை மாடல்களுக்கு நிரந்தரமானதாக இருக்கிறது. ஆடி க்யூ3 எஸ்யூவி மிக சிறப்பான முறையில் ஃபிட் அண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்லைட், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவை ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு முகப்பை அலங்கரிக்கின்றன.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

கம்பீரமான கோடுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் எக்சாஸ்ட் பைப்புகள் என மிடுக்காக தெரிகிறது. ஆடி லோகோவும் காரின் பின்புற தோற்றத்துக்கு அழகு சேர்க்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

சாம்பல் மற்றும் பீயேஜ் வண்ணக் கலவையில் இன்டிரியர் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டின் சென்ட்ரல் கன்சோலின் மேலே பொருத்தப்பட்டிருக்கிறது. சென்ட்ரல் கன்சோலில் கொடுக்கப்பட்டிருக்கும் மரத்திலான ஃபினிஷிங் முகத்தை சுளிக்க வைக்கிறது. சென்ட்ரோல் கன்சோலில் இருக்கும் வசதிகளையும் ஓட்டுபவர் இயக்குவதற்கு லாவகமாக இல்லை. இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்தால் வசதியாக இருக்கும். 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன் இருக்கை

முன் இருக்கை

ஆடி க்யூ3 எஸ்யூவியின் இருக்கைகள் உயர்ரக லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அமர்ந்து செல்வதற்கு வசதியாகவும், கால்களுக்கு நல்ல சப்போர்ட்டையும் தருகின்றன. ஓட்டுபவரின் உயரத்திற்கு ஏற்ப டிரைவரின் இருக்கைகையின் உயரத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ள முடியும்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கைகள் 3 பேர் தாராளமாக பயணிக்கலாம். ஹெட்ரூம், லெக்ரூம் சிறப்பாக இருப்பதால் உயரமானவர்களும் வசதியாக அமர்ந்து செல்லலாம். முன் இருக்கையை பின்புறம் தள்ளினால் கூட மிக தாராளமான லெக்ரூம் இருக்கிறது. மூன்று பேருக்கு ஹெட்ரெஸ்ட் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.

பூட்ரூம்

பூட்ரூம்

ஆடி க்யூ3 எஸ்யூவியில் 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இருக்கிறது. பின் இருக்கையை மடக்கினால் பூட்ரூமை 1,365 லிட்டர் வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு மவுண்டெயின் பைக்கை வைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டரும், டாக்கோமீட்டரும் அனலாக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையில் டிஜிட்டர் திரை ஒன்று உள்ளது. அனலாக் டயர்களில் காரின் வேகம், ஆர்பிஎம், எஞ்சின் ஆயில் வெப்பநிலை, எரிபொருள் அளவு போன்ற தகவல்களை பெறலாம். டிஜிட்டல் திரையில் டிரிப் கம்ப்யூட்டர், சராசரி வேகம், சராசரி மைலேஜ், கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் வசதி போன்றவை இருக்கிறது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

மியூசிக், ரேடியோ உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளுடன், ரிவர்ஸ் பார்க்கிங், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

க்யூ3 காரை ஓட்டும்போது மனதுக்கு பிடித்த விஷயங்களில் ஸ்டீயரிங் வீலையும் ஒன்றாக கூறலாம். ஸ்டீயரிங் வீல் மிக எளிமையாக இருப்பதுடன், கன்ட்ரோல் பட்டன்கள் அதிகமில்லாமல் இருப்பது இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. அதேவேளை, அதிக வசதிகளையும் தருகிறது. டிரிப் மீட்டர், மியூசிக், டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி போன்றவற்றை ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் பட்டன்கள் மூலம் இயக்கலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

டெஸ்ட் டிரைவ் செய்த 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் க்யூ3 கார் அதிகபட்சமாக 211 எச்பி பவர் கொண்டது. ஆடியின் குவாட்ரோ சிஸ்டம் மூலம் எஞ்சினிலிருந்து ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. எஞ்சின் மிகவும் மென்மையாக இருப்பதோடு, கேபினில் அதிக இரைச்சல் இல்லை என்பதும் இனிதான பயணங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

காரின் சிறப்பம்சம்

காரின் சிறப்பம்சம்

இந்த காரின் எஞ்சின் மிக சிறப்பாகன ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், வளைவுகளில் அதிக வேகத்தில் திரும்பும்போது மிக ஸ்திரமாக செல்கிறது. இதனால், அச்சமின்றி நம்பிக்கையுடன் காரை செலுத்த முடிகிறது. பிரேக்குகள் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

டிரான்ஸ்மிஷன் & மைலேஜ்

டிரான்ஸ்மிஷன் & மைலேஜ்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மிக சிறப்பாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் வைக்கும்போது கியர்களை மேனுவலாக மாற்றும் வசதி கிடைக்கிறது. ஆடி காரை வாங்குவோர் மைலேஜை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. டெஸ்ட் டிரைவின்போது இந்த கார் லிட்டருக்கு 10.2 கிமீ மைலேஜ் தந்தது.

சாதகங்கள்

சாதகங்கள்

சிறப்பான ஓட்டுதல் தரம்

ஓட்டுதலை இனிதாக்கும் வகையிலான வசதிகள்

சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ்

சொகுசான இன்டிரியர்

பிரிமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி

கட்டுமான தரம்

பாதுகாப்பு அம்சங்கள்

பாதகங்கள்

பாதகங்கள்

லேசான டர்போ லேக்

சென்ட்ரல் கன்சோலில் பேருக்கு ஒரு மரவேலைப்பாடு

 கார் எப்படி?

கார் எப்படி?

சொகுசையும், நடைமுறைக்கு எளிதாக பயன்படுததுவதற்குமான எஸ்யூவியை விரும்புபவர்களுக்கு ஓர் சிறந்த எஸ்யூவி மாடல். ஆனால், எரிபொருள் செலவீனம் குறைவு என்பதால், பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடலையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2014, 10:29 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+