ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவியின் வீடியோ விமர்சனம்... டிரைவ்ஸ்பார்க் தளத்தின் புதிய சேவை!
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி ஆடி க்யூ3. இதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய சொகுசு எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை மிக எளிதாக தெரிந்துகொள்ளவும், காரின் டிசைன் அம்சங்களை நேரடியாக காணும் விதத்தில், முதலாவது வீடியோ விமர்சனத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் தயாரித்துள்ளது.
கோவாவில் வைத்து வீடியோ ஷூட் செய்யப்பட்ட இந்த புதிய சொகுசு எஸ்யூவியின் சிறப்பம்சங்களை டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா தொகுத்து வழங்க, ஸ்ரேயாஸ் நாகராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வீடியோ தொகுப்பை கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து காணலாம். இது வாசகர்களுக்கு நிச்சயம் நிறைவான அனுபவத்தை தரும் என்று நம்புகிறோம்.
ஜோபோ குருவில்லா ட்விட்டர் பக்கம்
ஜோபோ குருவில்லா ஃபேஸ்புக் பக்கம்


Click it and Unblock the Notifications








