பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?

சீனாவை சேர்ந்த பில்டு யுவர் ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கியது. இந்நிறுவனம் முதலில் எலெக்ட்ரிக் பஸ்கள் தான் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு இ6 என்ற எம்பிவி காரை முதல் எலெக்ட்ரிக் காராக இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த இ6 எம்பிவி கார் முதலில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது கமர்சியல் மார்க்கெட்டிற்கு மட்டுமே இந்த கார் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2022ம் ஆண்டு தான் பொதுமக்களும் இந்த காரை புக் செய்து வாங்கலாம் என்ற பொது அறிமுகத்திற்கு இந்த கார் வந்தது. அந்தாண்டு மற்றொரு எலெக்ட்ரிக் காரையும் இந்நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டது. அதன்படி அட்டோ3 என்ற குடும்பத்துடன் பயணிக்கும் எஸ்யூவி கார் இந்தியாவிற்கு வந்தது.

byd seal review

இந்நிலையில் நிறுவனம் தற்போது தனது மூன்றாவது காரை இந்திய மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிஒய்டி சீல் என்ற செடான் கார் தான் இது . இந்நிலையில் இந்த காரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் டெல்லிக்கு பயணம் செய்திருந்தார்கள். இந்த காரை ஓட்டிப் பார்த்த அனுபவத்தை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக பகிரப் போகிறோம்.

வெளிப்புற டிசைன்: பிஒய்டி சீல் காரை பொருத்தவரை ஏரோ டைனமிக் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆழ்கடலை அடிப்படையாகக் கொண்ட டிசைன் வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 4800 மிமீ நீளம் கொண்ட செடன் காராக இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் உலகில் வேறு எந்த காரிலும் இல்லாத அளவுக்கு அதிக வீல் பேஸ் கொண்ட காராக இருக்கிறது.

byd seal review

இந்த காரின் முன் பக்கம் ஸ்பிலிட் ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட் பானட்டிற்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி டிஆர்எல் பம்பருக்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. இந்த பானட்டிற்கு கீழே 50 லிட்டர் கொண்ட பிராங்க் பூட் வழங்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜர்கள் சார்ஜிங் கேபிள்களை வைத்துக்கொள்ள போதுமான இட வசதி இருக்கிறது.

இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை கூப்பே வடிவ டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கிளாஸ் ரூஃப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி ரூஃப் என்பதால் காருக்குள் அதிகமாக வெப்பம் வரும் என நினைக்க வேண்டாம். வெப்பத்தை தடுப்பதற்கான ஃபிலிம்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் பிளாஷ் டோர் ஹேண்டில்கள், மற்றும் 19 இன்ச் கொண்ட ஏரோ வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தூரத்தில் இருந்தே இந்த காரை பார்க்கும் போது அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது.

byd seal review

இந்த காரின் பின்பகுதியில் முழு நீள லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பூத் வசதியை பொருத்தவரை 400 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் டிரிப் போபவர்கள் தேவையான பொருட்களை செல்ல இது வசதியாக இருக்கும். ஆனால் ஸ்பேர் வீல் இல்லாதது சற்று பிரச்சினை தான்.

உட்புற வசதி: இந்த காரின் உட்புறம் ஸ்டைலான கேபின் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இந்த காரின் உட்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக தரமான லெதர் கொண்டு உட்புறம் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு முதல் டோர் வரை தரமான பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மெட்டல் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

byd seal review

இந்த கார் உட்புறம் ஒரு சொகுசு காரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் கொண்டதாக இருக்கிறது. அட்டோ3 காரில் உள்ளது போல இந்த காரிலும் டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் பெருசாக வழங்கப்பட்டுள்ளது. இது 15.6இன்ச் கொண்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை லேண்ட் ஸ்கேப்பாகவும் போர்ட்ரேடாகவும் பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்த எளிதாக இருக்கிறது. அதே நேரம் வயர்லெஸ்சில் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியும் இருக்கிறது. ஆப்பிள் கார்ப்பிளே பயன்படுத்த கேபிள் தேவை.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பெரிய இன்ஃபோடைமென்ட் யூனிட் ஸ்மூத்தாக இருக்கிறது. அது நிச்சயம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இந்த காரில் உள்ள ஏசி உள்ளிட்ட பல்வேறு கண்ட்ரோல்கள் இந்த டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது கார் ஓட்டுபவர்களுக்கு சற்று தொந்தரவாக இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

byd seal review

இதுபோக இந்த காரில் 10.25 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பிளாட்பாட்டம் ஸ்டியரிங் வீலுக்கு பின்புறம் டிரைவர் டிஸ்ப்ளேயாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எலெக்ட்ரிக் காருக்கு தேவையான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் உள்ள ஆடியோ சிஸ்டத்தை பொறுத்தவரை டைஇன் ஆடியோ சிஸ்டத்தின் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இரண்டு ஒயர்லெஸ் போன் சார்ஜர் பேடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஸ்பி ஏ மற்றும் சி போர்டுகள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள முன்பக்கம் உள்ள சீட்டுகள் எல்லாம் வென்டிலேட்டர் மற்றும் ஹீட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர் மற்றும் பயணிக்கு பயணத்தின் போது சொகுசான பயணம் கிடைக்கும்.

இந்த காரின் பின்பக்கம் உள்ள சீட்டுகளை பொறுத்தவரை நீங்கள் அதிக உயரமாக இல்லை என்றால் உங்களுக்கு போதுமான அளவு கால் வைக்க இடமும், தொடைக்கு நல்ல சப்போர்ட்டும் கிடைக்கும். உட்காரும்போது உங்கள் முட்டி பகுதி சற்று தூக்கியது போல பொசிஷனில் நீங்கள் உட்கார வேண்டியது இருக்கும். சாய்வாக கொடுக்கப்பட்டுள்ள பேக் ரெஸ்டுகள் நீண்ட தூர பயணத்திற்கு சிறப்பாக இருக்கும்.

இதுவே உயரமானவர்களுக்கு தலைப்பகுதியில் அதிக இடம் இருக்காது.
கூப்பே வடிவ கிளாஸ் ரூப் கொண்ட காராக இருப்பதால் அதிக உயரத்தில் இருப்பவர்கள் குனிந்து கொண்டே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை 9 ஏர் பேக்குகள், ரேடார் கைடு அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. யூரோ என்கேப் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் : பிஒய்டி சீல் காரை பொறுத்தவரை இந்தியாவில் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. டைனமிக் என்ற வேரியன்ட் ரூபாய் 41 லட்சம் என்ற விலையிலும், பிரீமியம் என்ற வேரியன்ட் ரூபாய் 45.5 லட்சம் என்ற விலையிலும், பெர்ஃபார்மன்ஸ் என்ற வேரியன்ட் ரூபாய் 53 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

டைனமிக் மற்றும் பிரிமியம் ஆகிய இரண்டு வேரியன்ட்களும் சிங்கிள் மோட்டார் ஆப்ஷன் உடன் ரியல் வீல் டிரைவ் செட்டப்புடன் வருகிறது. பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனை பொருத்தவரை இரண்டு மோட்டார் ஆப்ஷன் உடன் ஆல் வீல் டிரைவ் செட்டப் உடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த பிஒய்டி சீல் கார் இ-பிளாட்பார்ம் 3.0 செட்டப்பில் உருவாக்கப்பட்ட காராகவும், இதில் 800 ஓல்ட் எலெக்ட்ரிக்கல் ஆர்க்கிடெக்சர் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிளேடு எல்பிஎஃப் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இ-பிளாட்பார்ம் 3.0 செட் டப்பின் படி இந்த காரின் பேட்டரி பேக் காரின் சேஸிஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரிக்கு அதிக பாதுகாப்பு மற்றும் உழைப்பு இருக்கும் வகையில் இந்த செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தவரை டைனமிக் காரில் 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் இந்த கார் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 510 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என என்இடிசி சான்று வழங்கி உள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரிமியம் வேரியன்டை பொறுத்தவரை பேட்டரி பேக் 82.56 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் போட்டால் 650 கி.மீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 38 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் காரை பொருத்தவரை அதில் 82.56 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 580 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என என்இடிச சான்று வழங்கி உள்ளது. இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆக்ஸிலிலுக்கும் ஒரு மோட்டார் என பொருத்தப்பட்டுள்ளது. இது இணைந்து 523 பிஎச்பி பவரையும் 670 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடியிலேயே பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கான சார்ஜரை பொறுத்தவரை பெரிய பேட்டரி பேக் 150 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0-80% வெறும் 45 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடும் வகையில் இந்த ஃபாஸ்ட் சார்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே என்ட்ரி லெவல் மாடல் என்றால் 110 கிலோ வாட் ஹவர் சார்ஜர் தான் வழங்கப்படுகிறது. ஏசியை பொருத்தவரை 7 கிலோ வாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது.

டிரைவிங் இம்ப்ரஷன்: இந்த மூன்று வேரியன்ட் கார்களில் நாங்கள் ஓட்டியது பெர்ஃபார்மன்ஸ் வேரியன்ட் கார் ஆகும். அனைத்து கார்களிலும் மூன்று விதமான டிரைவ் மோடுகள் உள்ளன. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோடுகள் உள்ளன. எக்கோ மோடு குறைவான ரெஸ்பான்ஸ் கொண்ட மோடாக இருக்கிறது. இதில் நீங்கள் என்னதான் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினாலும் , பெரிய பிக்கப்பை எதிர்பார்க்க முடியாது.

இதுவே நீங்கள் ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாத்தி விட்டால் நிச்சயம் சாலையில் உள்ளவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த கார் பெர்ஃபார்மன்ஸ் செய்யும் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை மேறும் 3.8 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. கிட்டத்தட்ட சூப்பர் கார் வேகத்தில் இந்த கார் பயணிக்கிறது.

டிரைவ் மோடுகளை மாற்றும் போது ரீஜென்ட் லெவல்லும் மாறுகிறது. அதேநேரம் ஸ்டேரிங் வீல் ஃபீலும் வேறுவிதமாக நமக்கு கிடைக்கிறது. இந்த காரில் உள்ள ஸ்டேரிங் வீல் உலகில் சிறந்த ஸ்டேரிங் வீல் அனுபவத்தை எல்லாம் தரவில்லை என்றாலும், இந்த காருக்கு தேவையான அளவுக்கு நம்பிக்கையை தரக்கூடிய ஃபீலை நமக்கு கார் ஓட்டும்போது வழங்குகிறது.

இந்த பிஒய்டி சீல் காரை தயாரிக்கும் போது இதன் சேஸ் பகுதியிலேயே பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளதால், பள்ளமேடுகளில் இந்த கார் ஏறி இறங்கும் போது மற்ற எலெக்ட்ரிக் கார் போன்ற அனுபவத்தை தராமல் இது சிறப்பான அனுபவத்தை தருகிறது. இதற்கு 19 இன்ச் வீலும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்த காரில் செல்லும்போது நீங்கள் வேகம் எடுத்து விட்டால் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடிய அளவில் அதே நேரம் கான்ஃபிடென்ஸாக நீங்க கார் ஓட்டுவதற்கான அனைத்து விஷயங்களையும் இந்த கார் உங்களுக்கு தருகிறது. பல கார்களில் இப்படியான விஷயங்கள் தவறிவிடும். காரின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஸ்டேரிங் வீலிலேயே தன்னம்பிக்கை போகும் அளவிற்கு பெர்ஃபார்மன்ஸ் வந்துவிடும். அந்த பிரச்சினையை இந்த கார் சரி செய்துள்ளது.

இறுதி தீர்ப்பு: பிஒய்டி சீல் என்பது ஒரு எலெக்ட்ரிக் செடான் கார் இந்த கார் எதற்காக தயாரிக்கப்பட்டதோ அந்த விஷயத்தையே இது பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லலாம். ஆனால் இந்த காரின் ஏரோ டைனமிக் டிசைன், ப்ரீமியமான இன்டீரியர், சூப்பர் கார் போன்ற ஒரு பெர்பார்மென்ஸ் ஆகியவற்றையெல்லாம் பார்க்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இந்த காரை வாங்க நினைப்பவர்கள் வாங்கிவிடலாம்.

நீங்கள் ஜெர்மன், ஸ்வீடன் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின் காரில் உள்ளதை போல பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்தால் அந்த பெர்ஃபார்மென்ஸ் இந்த காரில் கிடைக்காது. எலெக்ட்ரிக் காரை வாங்கும் மனநிலையில் உள்ள மக்களுக்கு இந்த கார் நிச்சயம் ஒரு முதல் எலெக்ட்ரிக் காராக இருக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதிக பணம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த காரை தேர்வு செய்து வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 9:00 [IST]
English summary
Byd seal electric sedan review battery performance design
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X