செவர்லே செயில் செடான் - சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
புத்தாண்டில் புது உற்சாகத்துடன் துவங்கியிருக்கிறது செவர்லே பிராண்டு. கடந்த ஆண்டு இறுதியில் செயில் ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தற்போது அதன் செடான் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. கடும் போட்டி நிலவும் இந்த மார்க்கெட்டில் தாராள இடவசதியுடன் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் வந்திருக்கிறது செயில் செடான்.
மேலும், போட்டியாளர்களுக்கு பெரும் சவாலான விலையில் வந்திருக்கிறது செயில் செடான். டீசல் மாடல் ரூ.6.29 லட்சம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது. இதுதவிர, சிறந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் என அனைத்து விஷயத்திலும் நிறைவாகவே இருக்கிறது செயில் செடான். இந்த காரின் முழுமையான விபரங்களை இந்த சிறப்பு பார்வை தொகுப்பில் காணலாம்.

தோற்றம்
செயில் யுவா ஹேட்ச்பேக் மாடலின் செடான் வெர்ஷன் என்பதால் முகப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால், பின்புறம் சமரசம் இல்லாமல் சிறப்பாகவே செடான் வெர்ஷனாக மாற்றியிருக்கிறது செவர்லே. மொத்தத்தில் தோற்றத்தில் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது செயில் செடான்.

பூட் ஸ்பேஸ்
இதன் முக்கிய அம்சம் 370 லிட்டர் அளவுக்கு பூட் ரூமை கொண்டிருக்கிறது. நெடுந்தூற பயணங்களின்போது அதிக லக்கேஜ் எடுத்துச் செல்வதை பற்றி செயில் செடானை பொறுத்தவரை கவலை வேண்டாம்.

அலாய் வீல்
8 ஸ்போக்குகள் கொண்ட 14 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இது செயில் செடானுக்கு கூடுதல் வசீகரம் தருகிறது.

டூயல் காக்பிட்
செவர்லேயின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் மாடலான கார்வெட் காரின் காக்பிட்டை கண்டு ஈர்க்கப்பட்ட செயில் செடான் டிசைனர்கள் அதே போன்று டூயல் காக்பிட்டாக இருக்கும் வகையில் வடிவமைத்து இருக்கின்றனர்.

ஹெட்லைட்
பருந்து இறக்கையை போன்று இதன் ஹெட்லைட் வடிவமைக்கப்பட்டு இருப்பது முகப்பழகை கூட்டுகிறது.

லெக் ரூம்
செயில் செடான் சிறந்த லெக் ரூம் கொண்ட காராக வந்திருக்கிறது. எனவே, பயணத்தின்போது எப்போது இறங்குவோம் என்ற மனநிலை இருக்காது.

ஆர்ம் ரெஸ்ட்
பின்இருக்கையில் ஆர்ம் இருப்பது கூடுதல் சவுகரியம். தண்ணீர் பாட்டில்களை எளிதாக வைத்து எடுத்துச் செல்லலாம்.

மியூசிக் சிஸ்டம்
அனைத்து இணைப்பு வசதிகளுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 78 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 5 ஸ்பீட் கியர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது.

ரிமோட் கீ லெஸ் என்ட்ரி
ரிமோட் கீ லெஸ் வசதி செவர்லே செயில் செடானில் இருக்கிறது. ஒரு பொத்தானை அழுத்தினால் கதவுகளை திறந்து மூட முடியும்.

குளிர்சாதன வசதி
இந்த ரக கார்களிலேயே சிறந்த ஏர்கன்டிஷன் சிஸ்டம் கொண்டதாக செயில் செடான் வந்திருக்கிறது.

சொகுசான பின்புற இருக்கை
பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட்டை மடக்கி இருக்கையுடன் பொருத்திவிட்டால் 3 பேர் தாராளமாக அமரலாம்.

டிரைவர் கன்ட்ரோல் பட்டன்கள்
டிரைவர் கன்ட்ரோல் பட்டன்கள் வலதுபுறம் கதவில் இல்லாமல் இடதுபுறத்தில் கியர் லிவருக்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பூட் ரூம் திறவுகோல்
சிறிய திறவுகோல்கள் மூலம் எரிபொருள் டேங்க் மற்றும் பூட் ரூமை எளிதாக திறக்கும் வசதி இருக்கிறது.

டில்ட் ஸ்டீயரிங்
டிரைவரின் உடல்வாகுக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளும் டில்ட் ஸ்டீயரிங் வசதி இருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
அனலாக் ஸ்பீடோமீட்டருடன், டிரிப் மீட்டர் உள்ளிட்டவை டிஜிட்டல் டிஸ்ப்ளேயுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டூயல் ஏர்பேக்ஸ்
டூயல் ஏர்பேக்ஸ் கொண்டிருப்பது அதிக பாதுகாப்பை வழங்கும்.

ஏபிஎஸ் பிரேக்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல் விளக்கத்தை படத்தில் காணலாம்.

பாடி கலர் மிரர்
பாடி கலர் ரியர் வியூ மிரர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

இடம் கிடைக்குமா?
போட்டிகள் நிறைந்த இந்த மார்க்கெட்டில் சிறந்த வசதிகள் மற்றும் சரியான விலையில் செயில் செடான் வந்திருக்கிறது. ஆனால், மாருதி டிசையர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை தம் திருப்பி முக்கிய இடத்தை பெறுவதற்கு செயில் செடானுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








