டியாகோ EV-க்கு போட்டியாக மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ள நிறுவனம்

சிட்ரன் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் eC3 எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்துள்ளது. 2026ம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை e-C3X என்ற பெயரில் இனி அழைக்கவிருக்கிறது அந்நிறுவனம். காரை ரீபிராண்டின் செய்யும் நோக்கத்துடன் இந்த சிறிய பெயர் மாற்றத்தை அந்நிறுவனம் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. பெயர் மட்டுமல்ல, விலை முதல் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் வரை அனைத்திலும் மாற்றம் இருக்கிறது. அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் விலையைப் பார்ப்போம். இதுவரை 12 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியே இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அப்டேட் செய்யப்பட்ட காரை இதனை விடக் குறைவாக 10.25 லட்சம் ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது சிட்ரன். அதாவது 1.75 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் மேம்படுத்தப்பட்ட e-C3X எலெக்ட்ரிக் காரை நாம் வாங்கலாம்.

Citroen e-C3X

மேலும், காரின் மேம்பாடுகளுடன், BaaS திட்டத்தையும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சிட்ரன. இதன் மூலம் பேட்டரியை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பயன்படுத்திக் கொண்டு 6.29 லட்சம் ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை நாம் வாங்க முடியும். கூடுதலாக பேட்டரியின் பயன்பாட்டிற்கு ஒவ்வொரு கிமீ-க்கும் 2.26 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். புதிய e-C3X எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவை தற்போது தொடங்கிவிட்டது சிட்ரன்.

புதிய மாற்றங்கள்:

புதிய e-C3X காரில் பல்வேறு வகைகளிலும் மேம்பாடுகளைச் செய்திருக்கிறது சிட்ரன். குறிப்பாக LED முகப்பு விளக்குகள் மற்றும் LED DRL-கள் தற்போது புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதோடு, 15 இன்ச் டைமண்டு கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஆட்டோ ஃபோல்டிங் அவுட்சைடு ரியர் வியூ மிரர்கள் (ORVM), ஃபாக் விளக்குகள், முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்கள் ஆகியவையும் புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Citroen e-C3X

காரின் வெளிப்புறம் ஆங்காங்கே X பேட்ஜிங்கையும் சிட்ரன் கொடுத்துள்ளது. காரின் உட்புறம் கேபினை ஃப்ரஷ்ஷாகக் கொடுத்திருக்கிறது. எலெக்ட்ரிக் ப்ளூ தீமில் கேபின் மிகவும் ரெப்ரெஷிங்காக, கூலாக இருக்கிறது.
டேஷ்போர்டிலும் நீல நிற தீம் நீள்கிறது. இத்துடன் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவுடன்), 7 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 40 விதமான கனெக்டட் வசதிகளுடன் கனெக்டட் கார் 2.0 தொழில்நுட்பம், வயர்லெஸ் போன் சார்ஜர், எலெக்ட்ரோகுரோமிக் IRVM ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. JBL சவுண்டு சிஸ்டம், முன்பக்க மற்றும் பின்பக்க டேஷ்கேம் ஆகிய அம்சங்களை கூடுதல் தேர்வாகக் கொடுக்கிறது சிட்ரன். இந்த வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கூடுதல் விலை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

பவர்ட்ரெயின், பேட்டரி மற்றும் ரேஞ்சு:

எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 29.2 kWh பேட்டரி பேக் மற்றும் 56 hp பவர்/ 143 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் தான் புதிய e-C3X காரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 320 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் செட்டப் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேட்டரியை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 57 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்துள்ளது சிட்ரன். போலாக் ஒயிட், ஸ்டீல் கிரே, காஸ்மோ ப்ளூ, பியர்ல் நேரா பிளாக், கார்னெட் ரெட் மற்றும் டீப் ஃபாரஸ்ட் கிரீன் ஆகிய ஆறு தனித்துவமான நிறங்களில் இந்த எலெக்ட்ரிக் காரை நாம் தற்போது வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

முன்பை விட குறைவான விலையில் வாங்குவதற்கு பரிசீலனை செய்யக்கூடிய இடத்திற்கு வந்திருக்கிறது புதிய சிட்ரன் e-C3X. மிகவும் குறைவாக இந்தக் கார் விற்பனையாகி வரும் பொருட்டு, இந்த அப்டேட்டில் காரின் விலையை சிட்ரன் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் தற்போது BaaS திட்டத்துடன் உண்மையாகவே இந்தக் காரை வாங்குவதைக் குறித்து பரிசீலனை செய்யலாம்.

BaaS திட்டத்தின் கீழ் முந்தைய eC3 எலெக்ட்ரிக் காரின் கிட்டத்தட்ட பாதி விலையில் புதிய eC3X காரை நாம் வாங்க முடியும். இதன் மூலம் டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் EV ஆகிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது சிட்ரன் e-C3X. இந்த விலையில் இதன் நேரடிப் போட்டியாளர் பன்ச் தான். BaaS திட்டத்தின் கீழ் 6.49 லட்சம் ரூபாய் என்ற விலையில் பன்ச் EV விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, June 17, 2026, 14:31 [IST]
English summary
Citroen e c3x electric hatchback car launched in india at lower price under baas scheme
மேலும்... #citroen #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out