பட்ஜெட் பார்ட்டிகளுக்கான ஃபர்ஸ்ட் சாய்ஸ்... டட்சன் கோ டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

By Saravana

பட்ஜெட் கார்களுக்கென நிசான் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்துள்ள டட்சன் பிராண்டில் முதலாவது மாடலாக கோ சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பட்ஜெட் பார்ட்டிகளின் எதிர்பார்ப்புகளை ஓரளவு தன்னிறைவு கொடுக்கும் விதத்தில் வந்திருக்கும் இந்த புதிய காரை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு கிட்டியது. ஹைதராபாத்தில், இந்த காரின் டி என்ற டாப் வேரியண்ட்டை 150 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓட்டி பார்த்து, இந்த காரில் இருக்கும் சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 19ந் தேதி இந்த கார் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்பட்டது. பெட்ரோல் மாடலில் மட்டும் வந்திருக்கும் இந்த பட்ஜெட் காரின் இதர அம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

விலை விபரம்

விலை விபரம்

D வேரியண்ட் ரூ.3,12,270

A வேரியண்ட் ரூ.3,46,482

T வேரியண்ட் ரூ.3,69,999

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டிசைன்

டிசைன்

வாகனங்களின் வெளிப்புறத் தோற்றம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முக்கியத் தோற்றம். அந்த வகையில், டட்சன் கோ மிகச்சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. டட்சன் பிராண்டு சின்னத்துடன் கூடிய கிரில், பானட்டுடன் இயைந்து நிற்கும் ஹெட்லைட், அளவான ஏர் இன்டேக்குகள் அனைத்தும் சிறப்புற டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

காரின் தோற்றத்துக்கு கூடுதல் வலுசேர்க்கும் பாடி லைன்கள் டெயில்லைட்டுகள் வரை நீண்டுள்ளன. முன்புற வீல் ஆர்ச்சும் காருக்கு கம்பீரத்தை கொடுக்கிறது. ஆனால், வீல் ஆர்ச்சுடன் ஒப்பிடும்போது சக்கரங்கள் சிறிதாக தெரிகின்றன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுடன் ஒப்பிடும்போது, டட்சன் கோ காரின் பின்புறம் மிகச்சிறப்பான தோற்றத்தை கொண்டிருக்கிறது. டெயில்லைட்டுகள், டெயில் கேட், பம்பர் ஆகியவை காரின் தோற்றத்துக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

வெள்ளை, சில்வர், சிவப்பு மற்றும் வெளிர் நீல வண்ணங்களில் கிடைக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

வெளிப்புறத் தோற்றம் மிகச்சிறப்பான தோற்றத்தை கொண்டிருப்பதால், இன்டிரியர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே எகிறுகிறது. ஆம், டட்சன் கோ காரின் இன்டிரியர் மிக எளிமையாகவும், அதே நேரத்தில் நவீனத்துவமும், போதுமான வசதிகளையும் கொண்டுள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சில்வர் வளையும் கொண்ட ஏசி வென்ட்டுகள், கொண்ட சென்ட்ரல் கன்சோல், ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஷன், இரட்டை வண்ணத்திலான பினிஷிங்குகள் ஆகியவை கொஞ்சம் பிரிமியமான தோற்றத்தை தருகின்றன.

கியர் லிவர் அமைப்பு

கியர் லிவர் அமைப்பு

இந்த காரின் பிரத்யேக அமைப்புகளில் ஒன்று கியர் லிவர் அமைக்கப்பட்டிருக்கும் இடம். மற்ற கார்களை போன்று அல்லாமல், இதன் கியர் லிவர் டேஷ்போர்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பார்க்கிங் பிரேக்கும் கியர் லிவருக்கு அடுத்ததாக, ஸ்டீயரிங் வீலின் இடதுபுறத்துக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக காரில் உட்கார்ந்தபோது சற்று உறுத்தலாக இருந்த அமைப்பு பழக பழக கொஞ்சம் சவுகரியமாகவே தெரிய ஆரம்பித்தது.

பார்க்கிங் பிரேக்

பார்க்கிங் பிரேக்

வளத்தியானவர்கள் ஓட்டும்போது, சிக்னல்களில் பார்க்கிங் பிரேக்கை இழுத்து நிறுத்தி வைத்திருக்கும்போது, அது இடது காலுக்கு தொந்தரவாக தெரிகிறது.

இணைப்பு இருக்கை

இணைப்பு இருக்கை

முன் இருக்கைகளுக்கு இடையில் ஒரு சிறிய இணைப்பு இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் அமர அனுமதி இல்லை என்றும், முன் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு வசதியாகவே இந்த இருக்கையை போட்டிருப்பதாகவும், டட்சன் தெரிவிக்கிறது. மேலும், கியர் லிவர், பார்க்கிங் பிரேக்கை டேஷ்போர்டில் பொருத்தியதற்கு காரணம் சிக்கன நடவடிக்கை இல்லை என்று டட்சன் கூறுகிறது. நெருக்கடியாக இடங்களில் பார்க்கிங் செய்யும்போது, டிரைவர் இருக்கையிலிருந்து எளிதாக மறுபுற கதவு வழியாக வெளியேறுவதற்கு இந்த இருக்கை மற்றும் கியர் லிவர் அமைப்பு உதவியாக இருக்கும் என்று டட்சன் சொல்கிறது.

பின்இருக்கை

பின்இருக்கை

முன் இருக்கைகளை போலவே பின் இருக்கையும் மிக வசதியாக தெரிகிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இந்த கார் மிகச்சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. இதன் வீல் பேஸ் மற்ற கார் மாடல்களைவிட அதிகம். இதனால், ஹெட்ரூம், லெக்ரூம் போன்றவை சிறப்பாக இருக்கிறது. ஆனால், இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தொடைகளுக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை என்பது மைனஸ்.

பூட் ரூம்

பூட் ரூம்

பட்ஜெட் விலை கொண்ட மாடல்களில் பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதி கொண்ட மாடலாக டட்சன் கோ காரை கூறலாம். மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 160 லிட்டர் பூட்ரூமும், ஹூண்டாய் இயான் காரில் 215 லிட்டர் பூட்ரூமும் உள்ளது. ஆனால், டட்சன் கோ காரில் 265 லிட்டர் பூட்ரூம் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதேவேளை, பின் இருக்கையிலும் போதுமான வசதி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்டெப்னி

ஸ்டெப்னி

டட்சன் கோ காரின் ஸ்டெப்னி வீலை எளிதாக எடுத்து வைக்க முடியும். ஆனால், இதனுடன் இருக்க வேண்டிய ஜாக்கி டிரைவர் இருக்கைக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் அசகவுரியத்தை தருகிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்

இந்த காரின் சிங்கிள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் சிம்பிளாகவும், அதேவேளை தெளிவாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் டாக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், எலக்ட்ரானிக் எரிபொருள் மானி, வேகத்துக்கு தகுந்தவாறு எந்த கியரில் செல்ல வேண்டும் என்பதை பரிந்துரைக்கும் கியர் ஷிப்ட் கெய்டு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஷன்

ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஷன்

பட்ஜெட் கார்களில் மியூசிக் சிஸ்டத்தை கூடுதலாக வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த காரிலும் மியூசிக் சிஸ்டம் கூடுதல் ஆக்சஸெரீயாக கிடைக்கிறது. ஆனால், அவ்வாறு வாங்க விருப்பமில்லாதவர்கள், தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனை ஆக்ஸ் போர்ட் வழியாக இணைத்து பாடல்களை கேட்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கதவுகளில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வதற்காக யுஎஸ்பி போர்ட் ஒன்றும் டாக்கிங் ஸ்டேஷன் அருகிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

டட்சன் நோக்கம்

டட்சன் நோக்கம்

தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் மொபைல்போன்களில் 70 சதவீதம் அளவுக்கு ஸ்மார்ட்போன்களே பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதனை மனதில் வைத்தே டட்சன் இந்த ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேசனை கோ காரில் வழங்கியுள்ளதாம். உள்ளூர் பண்பலை மட்டுமல்ல, இன்டர்நெட் மூலம் ட்யூன்இன், பாண்டோரா, ஐஹார்ட் உள்ளிட்ட அப்ளிகேஷன்கள் மூலமும் நீங்கள் விரும்பும் இசையை கேட்கலாம்.

டாப் வேரியண்ட் வசதிகள் விபரம்

டாப் வேரியண்ட் வசதிகள் விபரம்

டெஸ்ட் டிரைவ் செய்த T என்ற டாப் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், மொபைல் டாக்கிங் ஸ்டேஷன், சென்ட்ரல் லாக்கிங், 12V சாக்கெட், 1.5 லிட்டர் பாட்டில்களை வைப்பதற்கான ஹோல்டர்கள், வேகத்தை பொறுத்து இயங்கும் வைப்பர் சிஸ்டம் ஆகியவை உள்ளன. ஆனால், இந்த காரில் ஆப்ஷனலாக கூட ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காது.

எஞ்சின்

எஞ்சின்

டட்சன் கோ காரில் 1,198சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் 3 சிலிண்டர் எஞ்சின்களில் இருக்கும் அதிர்வுகள் இந்த காரிலும் தெரிகிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

4 சிலிண்டர் எஞ்சினை ஒப்பிடும்போது, இந்த காரின் சப்தம் கூடுதலாகவே இருக்கிறது. போட்டியாளர்களைவிட இந்த காரின் 67 பிஎச்பி பவரும், 104 என்எம் டார்க்கும் அசரடிக்கிறது. டெஸ்ட் டிரைவின்போது மனதை கல்லாக்கிக் கொண்டு அதிகபட்சம் 165 கிமீ வேகத்தை தொட்டுவிட்டோம். 1 - 100 கிமீ வேகத்தை 13.5 வினாடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

இதுபோன்ற பட்ஜெட் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் கேள்வியே மைலேஜை பற்றியதாகவே இருக்கும். ஏனெனில், பாக்கெட்டை பதம் பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். அராய் சான்றுபடி லிட்டருக்கு 20.63 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், எமது டெஸ்ட் டிரைவின்போது நகரச் சாலை மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலும் சராசரியாக லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் கொடுத்தது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

டட்சன் கோ காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இது நகர்ப்புற காராகவே மனதில் கொண்டு எஞ்சினை ட்யூனிங் செய்துள்ளனர். எனவே, நகர்ப்புற டிரைவிங்கில் இதன் எஞ்சின் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் இதன் பிக்கப் எதிர்பார்த்த அளவு இல்லை. கியரை மாற்றி வேகமெடுக்க வேண்டியிருக்கிறது. மேலும், இதன் கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டர் ஆகியவற்றின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.

கையாளுமை

கையாளுமை

கையாளுமையை பொறுத்தவரை பாடி ரோல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 796 கிலோ எடை கொண்ட இந்த இலகு எடை கொண்ட காரை வளைவுகளில் திருப்பும்போது நிச்சயம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில், இதன் லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பு புவியீர்ப்பு மையத்தை கூட்டுவதால் பாடி ரோல் அதிகரிக்கிறது. எனவே, காருக்கு தகுந்தாற்போல் நம் டிரைவிங் ஸ்டைலையும் அவசியம் மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஸ்டீயரிங் செயல்திறன்

ஸ்டீயரிங் செயல்திறன்

இதன் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் மிதமான வேகத்தில் சிறப்பாக செயல்திறனை காட்டுகிறது. ஆனால், வேகமெடுக்க வேகமெடுக்க, கட்டுப்படுத்துவதற்காக கைகள் அதிக சக்தியை கொடுக்க வேண்டியிருக்கிறது.

சஸ்பென்ஷன், பிரேக், டயர்கள்

சஸ்பென்ஷன், பிரேக், டயர்கள்

காரில் 5 பயணிகள் அமர்ந்திருக்கும்போது கூட இதன் சஸ்பென்ஷன் அமைப்பு காருக்கு கூடுதல் தரை இடைவெளியை கொடுப்பதால், மேடு பள்ளங்களில் கூட எளிதாக டிரைவிங் செய்து செல்ல முடிகிறது. அதிவேகத்தில் சென்று பிரேக் பிடிக்கும்போது அதிக சப்தம் வருவதோடு, 120 கிமீ வேகத்தை தாண்டிவிட்டால், டயர்களின் சப்தம் காருக்குள் அதிகமாக கேட்கிறது.

ஃபிட் அண்ட் பினிஷ்

ஃபிட் அண்ட் பினிஷ்

பட்ஜெட் கார் என்பதால் டட்சன் சிக்கனத்தை காரின் பல பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள் பார்க்க ஷோவாக இருக்கிறதே தவிர, தரமாக இல்லை. இவை குறுகிய காலத்தில் கடகடத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்

காருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரரும் சிக்கன கொள்கையிலிருந்து தப்பவில்லை. சாதாரண ரியர் வியூ மிரர் பொருத்தப்பட்டிருப்பதால், இரவில் பின்னால் வரும் வாகனங்களின் ஹைட்லைட் ஒளி ரியர் வியூ கண்ணாடியில் பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பிரச்னை

பிரச்னை

வைப்பருக்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேனல்களும் சரியாக பொருத்தப்படாமல் இருந்தன. இவற்றில் சில கூடுதல் திருகுகளை பொருத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

அதிர்வுக்கு காரணம்

அதிர்வுக்கு காரணம்

காருக்குள் அதிர்வு கொஞ்சம் கூடுதலாக தெரிகிறதே என்று ஆராய்ந்து பார்த்தோம். அப்போது, இதன் எக்சாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டிருக்கும் கிளாம்ப் தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. அதிர்வுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதிலும் டட்சன் எஞ்சினியர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பூட்ரூம் திறப்பு

பூட்ரூம் திறப்பு

பூட்ரூமை வெளியில் இருந்து திறக்க முடியாது. டிரைவருக்கு அருகில் இருக்கும் லிவர் மூலமாக மட்டுமே பூட் ரூமை திறக்க முடியும் என்பதும் அசகவுரியமாக இருக்கிறது.

சாதகங்கள், பாதகங்கள்

சாதகங்கள், பாதகங்கள்

சிறப்பான வெளிப்புற தோற்றம்

வசதியான முன் இருக்கை

மொபைல் டாக்கிங் ஸ்டேஷன்

இடவசதி

அதிக கொள்ளளவு கொண்ட பூட்ரூம்

பவர் மற்றும் டார்க்

மைலேஜ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிலோமீட்டர்களுக்கான உச்ச வரம்பு இல்லாத 2 ஆண்டுகள் வாரண்டி

பாதகங்கள்

பாதகங்கள்

பாதகங்கள்

பூட் லாக் இல்லை

ஏர்பேக், ஏபிஎஸ் இல்லை

தரமற்ற பிளாஸ்டிக்

அதிர்வுகள், சப்தம்

வெளிப்புற ரியர் வியூ மிரர்களை காருக்குள் இருந்து சரிசெய்ய முடியாது

பவர் விண்டோஸ் வசதிக்கான டிரைவருக்கான மாஸ்டர் சுவிட்ச் இல்லை

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சிறந்த பட்ஜெட் கார். போட்டி கார் மாடல்களைவிட கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பல அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

மதிப்பீடு

3.5/ 5

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2014, 12:33 [IST]
English summary
Engineered in India, for India, do you think the Datsun GO will rise up to meet the mounting expectations? From best-in-class torque to contrasting flimsy plasticware, we review the highs and lows of the Datsun GO. Hop on, let's get started...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+