டட்சன் கோ Vs மாருதி ஆல்ட்டோ 800 Vs ஹூண்டாய் இயான்: சிறப்பம்சங்கள் ஒப்பீடு

By Saravana

மாருதி ஆல்ட்டோ காரைவிட்டால் ஹூண்டாய் இயான். அதையும் தாண்டி செல்ல விரும்புபவர்களுக்கு வேறு புதிய கார் மாடலை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு தற்போது இல்லை. செவர்லே ஸ்பார்க் இதே செக்மென்ட்டில் விற்பனை செய்யப்பட்டாலும், அதனை பலர் கணக்கில் கொள்வதில்லை.

இந்த நிலையில், ஆல்ட்டோ, இயானை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஓர் சிறப்பான பட்ஜெட் காரை டட்சன் பிராண்டில் கொடுக்கும் எண்ணத்தில் கோ காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பொதுவாக, பட்ஜெட் கார் என்றால் இடவசதி மற்றும் கூடுதல் அம்சங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையையே தகர்த்துள்ளது டட்சன் கோ கார்.

மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விலையில் வந்திருந்தாலும், போட்டி என்னவோ மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயானுடன்தான் டட்சன் கோ போட்டி போட போகிறது. மேலும், என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்ததாக காம்பெக்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் சில கார்களுக்கும் போட்டி போடும் விலையிலும், அம்சங்களிலும் வந்துள்ளது டட்சன் கோ.

இந்த நிலையில், மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுடன் டட்சன் கோ காரின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

டிசைன்

டிசைன்

மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட ஹூண்டாய் இயான் சிறப்பான டிசைன் கொண்ட கார்தான். ஆனால், இவற்றை விட டட்சன் காரின் தோற்றம் கவர்வதாக இருக்கிறது. பிற பட்ஜெட் கார்கள் போன்று இல்லாமல், பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாக பெரிய ஹேட்ச்பேக் கார் போன்று தெரிகிறது. இது டட்சனின் முக்கிய பலம்.

 இடவசதி

இடவசதி

மூன்று கார்களில் டட்சன் கோ காரின் கேபின் அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது. மேலும், இயான் காரைவிட 15மிமீ கூடுதல் ஹெட்ரூம் கொண்டதாக இருப்பதால் டட்சன் கோ இடவசதியில் முன்னிலை பெறுகிறது. பிற இரு கார் மாடல்களின் பின் இருக்கையில் 3 பேர் வசதியாக பயணம் செய்ய முடியாது. ஆனால், டட்சன் கோ காரின் பின் இருக்கையில் 3 பேர் பயணம் செய்ய முடியும். அத்துடன் முன் இருக்கைகள் இணைக்கப்பட்டிருப்பதால், கூடுதல் சவுகரியத்தை உணர முடிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

மூன்று கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மாருதி ஆல்ட்டோ 800 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 800சிசி எஞ்சின் 48 பிஎஸ் பவரையும், 69 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஹூண்டாய் இயான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 800சிசி எஞ்சின் 56 பிஎஸ் பவரையும், 74.5 என்எம் டார்க்கையும் அளிக்கும். டட்சன் கோ காரில் 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மூன்று கார்களில் டட்சன் கோ கார் சிறப்பான பவரையும், டார்க்கையும் அளிக்கும் எஞ்சின் உள்ளது. மூன்று கார்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்தான் உள்ளது.

வடிவம்

வடிவம்

டட்சன் கோ கார் 3785 மிமீ நீளம், 1635மிமீ அகலம், 1485மிமீ உயரம் கொண்டது.

மாருதி ஆல்ட்டோ 800 கார் 3395மிமீ நீளமும், 1490மிமீ அகலமும், 1475 மிமீ உயரமும் கொண்டது.

ஹூண்டாய் இயான் கார் 3495மிமீ நீளமும், 1550மிமீ அகலமும், 1500 மிமீ உயரமும் கொண்டது.

வீல் பேஸ்

வீல் பேஸ்

டட்சன் கோ கார் 2,450மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், மாருதி ஆல்ட்டோ 800 கார் 2,360மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், ஹூண்டாய் இயான் 2,380மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இதில், டட்சன் கோ கார் அதிக வீல் பேஸ் கொண்டதாக இருப்பதால், உட்புறத்தில் அதிக இடவசதியை வழங்குகிறது.

 கெர்ப் எடை

கெர்ப் எடை

டட்சன் கோ கார் 925 கிலோ எடையையும், மாருதி ஆல்ட்டோ 695 கிலோ எடையையும், ஹூண்டாய் இயான் கார் 795 கிலோ எடையையும் கொண்டது. மைலேஜுக்கு காரின் எடை மிக முக்கிய காரணியாக இருப்பதால், இந்த கார்களின் மைலைஜ் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 மைலேஜ்

மைலேஜ்

டட்சன் கோ கார் லிட்டருக்கு 20.63 கிமீ மைலேஜையும், மாருதி ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜையும், ஹூண்டாய் இயான் கார் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜையும் தருவதாக அராய் அமைப்பு சான்று கொடுத்துள்ளது. இதில், மாருதி ஆல்ட்டோ 800 கார் முன்னிலை வகிக்கிறது.

வாரண்டி

வாரண்டி

மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிலோமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. ஆனால், ஹூண்டாய் இயான் மற்றும் டட்சன் கோ கார்களுக்கு கிலோமீட்டர் வரம்பு இல்லாத வகையிலான 2 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

நம் நாட்டில் பெரும்பாலான சாலைகளுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்குமான இடைவெளி மிகச்சரியாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், மாருதி ஆல்ட்டோ 800 கார் 160மிமீ கிரவுண்ட் கிளியரன்சையும், ஹூண்டாய் இயான் மற்றும் டட்சன் கோ கார்கள் 170மிமீ தரை இடைவெளியையும் கொண்டுள்ளன.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

டட்சன் கோ காரின் பேஸ் வேரியண்ட் ரூ.3.12 லட்சம் முதல் ரூ.3.69 லட்சம் வரையிலான விலையிலும், போட்டியாளர்களான மாருதி ஆல்ட்டோ கார் ரூ.2.72 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் வரையிலான விலையிலும், ஹூண்டாய் இயான் கார் ரூ.2.83 லட்சம் முதல் ரூ.3.85 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

 டட்சன் கோ காரின் வெற்றி?

டட்சன் கோ காரின் வெற்றி?

டட்சன் பிராண்டில் முதலாவதாக கோ கார் வந்துள்ளது. எனவே, டட்சன் பிராண்டு மீதான நம்பகத்தன்மையில் வாடிக்கையாளர்களுக்கு சிறிய தயக்கம் இருக்கறது. தவிர, மாருதி, ஹூண்டாய் அளவுக்கு சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க்கும் டட்சன் பிராண்டுக்கு இல்லை. விற்பனைக்கு பிந்தைய சேவை, பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் விலை, மைலேஜ் ஆகியவற்றில் மாருதி ஆல்ட்டோ 800 காரும், ஹூண்டாய் இயான் காரும் நல்ல நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது. அதேவேளை, சிறப்பான இடவசதி, கூடுதல் அம்சங்களுடன் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளுகிறது டட்சன் கோ. சர்வீஸ் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் பட்சத்தில் டட்சன் கோ காருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதை கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2014, 9:48 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+