எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த தலைவர் கருணாநிதியின் கார்!

Posted By:

நாட்டின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழும் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இன்று அகவை 90. எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த பெரும் தலைவரான கருணாநிதிக்கு இப்போது உறுதுணையாக இருந்து வருவது அவரது காரும்தான்.

உடலால் முதிர்ந்தாலும், உள்ளத்தால் துறுதுறுப்பாக இயங்கி வரும் அவரின் வேகத்துக்கு டொயோட்டா அல்ஃபார்டு மினிவேன்தான் ஈடுகொடுத்து வருகிறது. முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரால் காரில் ஏறி இறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஆட்சிப் பணிகளுக்கும், கட்சிப் பணிகளுக்கும் ஏற்ற வகையில் இந்த வேனை கஸ்டமைஸ் செய்து வாங்கினர்.

டொயோட்டா அல்ஃபார்டு

டொயோட்டா அல்ஃபார்டு

ஹைட்ராலிக் இருக்கை மூலம் காருக்குள் எளிதாக ஏறி இறங்கும் வசதி கொண்டதாக அவருக்காக இந்த வேன் கஸ்டமைஸ் செய்யப்பட்டது. பல்வேறு பணி நிமித்தங்களுக்கு அவர் செல்ல நேரிட்டபோது அவருக்கு உறுதுணையாக நின்றது இந்த மினிவேன்தான் என்றால் மிகையில்லை. அவர் பயன்படுத்தி வரும் டொயோட்டா அல்ஃபார்டு வேனின் சிறப்பம்சங்கள் குறித்து அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டொயோட்டா அல்ஃபார்டு

டொயோட்டா அல்ஃபார்டு

2002ம் ஆண்டு இந்த மினி வேன் தயாரிப்பை துவங்கியது டொயோட்டா. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் இந்த வேனில் திமுக தலைவர் கருணாநிதிக்காக சிறப்பு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அல்ஃபார்டில் 117 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த சொகுசு மினி வேன் அதிகபட்சம் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

4840 மிமீ நீளமும், 1830 மிமீ அகலமும், 1905 மிமீ உயரமும் கொண்டது. 1800 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது.

வசதிகள்

வசதிகள்

லேன் மானிட்டரிங் சிஸ்டம், ராடர் குரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம், பேக் கெய்டு மானிட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

இந்த வேன் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் அம்சம் கொண்டது.

சொகுசு

சொகுசு

இந்த வேனில் சிறப்பு சஸ்பென்ஷன் கொண்டிருப்பதால் சொகுசான பயண அனுபவத்தை கொடுக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை அல்ஃபார்டு கொண்டுள்ளது.

விலை

விலை

இந்தியாவில் இந்த மினி வேன் விற்பனைக்கு இல்லை. இறக்குமதி செய்தே வாங்கினர். இறக்குமதி வரி உள்பட இந்த மினி வேனின் விலை இந்தியாவில் ஒரு கோடியை நெருங்குகிறது.

Please Wait while comments are loading...

Latest Photos