காரை உற்பத்தி செய்வதில் டாடா எங்கேயோ போயிருச்சுங்க! ஹாரியரை ஓட்டி பார்த்ததில் மிரண்டு போய்ட்டோம்! ரைடு ரிவியூ!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஹாரியர் (Harrier)-ம் ஒன்றாகும். இந்த காரை 2019 ஆம் ஆண்டிலேயே டாடா முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பிரமாண்ட தோற்றம் கொண்ட இந்த கார் நிறுவனத்தின் 5 சீட்டர் சி-செக்மெண்ட் எஸ்யூவி கார் பிரிவிலேயே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது இந்த காரை டாடா புதுப்பித்து இருக்கின்றது. முன்பு இருந்ததைக் காட்டிலும் வேற லெவலுக்கு இந்த கார் தற்போது அப்கிரேடின் வாயிலாக மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Tata harrier review

நிறுவனத்தின் பிரபல கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவி-யே இந்த காரை டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்திருக்கின்றது. இதன் வாயிலாகவே இந்த காருக்கு மிக மிக அழகிய தோற்றம் தற்போது கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

ஹாரியர் மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட 7 சீட்டர் சஃபாரி கார் மாடலையும் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த ரிவியூ தகவல் நாளை வெளியாக உள்ளது. தற்போது இந்த பதிவில் 2023 ஹாரியர் எஸ்யூவி-யில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன?, குறிப்பாக, ரைடு ரிவியூ சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

2023 ஹாரியர் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன? டாடா மோட்டார்ஸ் வெகு சமீபத்திலேயே அதன் நெக்ஸான் எஸ்யூவி ரக காரை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதற்கு அடுத்தபடியாகவே சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களையும் அது புதுப்பித்து இருக்கின்றது.

2023 நெக்ஸானின் முகப்பு பகுதியில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இந்த கார்களிலும் காண முடிகின்றது. முன் பக்கத்தில் மட்டுமில்லைங்க பின் பக்கத்திலும் 2023 நெக்ஸானில் காணப்படும் அம்சங்கள் சில இடம் பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்களே முந்தைய ஹாரியரிடம் இருந்து புதிய ஹாரியர் காரை பெருமளவில் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் முகப்பு பகுதி முன்பைவிட தற்போது நிமிர்ந்துக் காட்சியளிக்கின்றது. மேலும், பானெட்டின் முழு அகலத்தையும் ஆளும் வகையில் எல்இடி டிஆர்எல் லைட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இதனை மேல் கிரில்லின் மேல் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பது அந்த காரின் அழகிற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அப்படினா இந்த காருக்கான ஹெட்லைட் எங்கே இருக்கும் என்கிற கேள்வி எழும்பக் கூடும். சதுர வடிவில் பனி மின் விளக்கைப் போல் இருக்கும், அதுவே முதன்மை முகப்பு மின் விளக்காகும். இது புரஜெக்டர் வகை எல்இடி லைட் ஆகும். இந்த லைட், க்ரில் மற்றும் பம்பர் ஆகிய இரண்டின் இரு முனைகளிலும் முக்கோண வடிவில் பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் பேனலுக்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

பனி மின் விளக்கும் இதே இடத்திலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரில் அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்திற்கான உபகரணங்கள் அனைத்தும் இரண்டாவது கிரில்லான கீழ் கிரில்லிற்கு பின்னால் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அடாஸ் அம்சமானது பல்வேறு நன்மைகளை காருக்குள் இருக்கும் பயணிகளுக்கும், வெளிப்புற பாதசாரிகளுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகின்றது.

குறிப்பாக, விபத்து காலத்தில் விபத்தை தவிர்க்கவும், பெரும் சேதங்களைத் தவிர்க்கவே இந்த அம்சம் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அம்சத்திற்கு தேவையான உபகரணங்களையே டாடா, ஹாரியரின் கீழ் கிரில்லிற்கு பின்னால் நிலை நிறுத்தி இருக்கின்றது. இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ஆகையால், அதன் பக்கவாட்டு பகுதி முந்தைய ஹாரியர் எஸ்யூவி உடன் அப்படியே ஒத்துப் போகின்றது. அதேவேளையில், ஸ்போர்ட்டியான ஹாரியர் எனும் பேட்ஜ்கள் காரின் பக்கவாட்டு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், விருப்பத்தின் பேரில் 17, 18 மற்றும் 19 அங்குல அலாய் வீல் தேர்வுகள் ஏரோ இன்செர்ட்டுகளுடன் வழங்கப்பட இருக்கின்றது.

முன் பகுதியைப் போலவே இந்த காரின் பின் பக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பின் பக்கத்தின் முழு அகலத்தையும் ஆளக் கூடிய எல்இடி டெயில் லைட்டும், காரின் கீழ் பகுதியில் பம்பரை தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் விளிம்பு பகுதியில் பனி மின் விளக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், இந்த காரின் பம்பரிலேயே சென்சார்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், இதன் பின் பகுதிக்கு அழகு சேர்க்கும் விதமாக மினு மினுக்கும் கருப்பு நிற பட்டை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், காரின் பின் பகுதிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக ஹாரியர் எனும் பெயர் பேட்ஜ் ஆட்டோமேட்டிக் டெயில்கேட்டின் கீழ் பகுதியிலும், ரூஃபில் ஸ்பாய்ளரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரை பன்முக நிற தேர்வில் விற்பனைக்கு வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. அந்தவகையில், சன்லைட் யெல்லோ (Sunlit Yellow), கோரல் ரெட் (Coral Red), பெப்பிள் கிரே (Pebble Grey), லூனார் ஒயிட் (Lunar White), ஓபெரோன் பிளாக் (Oberon Black), சீவ்டு கிரீன் (Seaweed Green) மற்றும் ஆஷ் கிரே (Ash Grey) ஆகியவையே அவை ஆகும்.

இதில் ஒரு சில நிற தேர்வுகள் பிரத்யேக வண்ண ஆப்ஷன்கள் ஆகும். வெளிப்புறத்தைப் போலவே மிக முக்கியமான வேலைகளை அப்கிரேட் வேலைகளை டாடா மோட்டார்ஸ் ஹாரியரின் உட் பகுதியில் செய்திருக்கின்றது. புதிய டேஷ் மற்ரும் கைப் பிடிகள் காருக்குள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர,

சென்டர் கன்சோலையும் அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு அது அப்கிரேட் செய்திருக்கின்றது. வெளிப்புற நிறத்தை ஒத்த நிறத்தையே காரின் உட்பகுதியில் உள்ள அம்சங்கள் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்டர் கன்சோல் மற்றும் கை பிடிகளுக்கு அந்த நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காரின் மையப் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

12.3 அங்குல திரையே காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை 10 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஜேபிஎல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளையும் இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்துடன், பிராண்ட் நியூ 4 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதில் உள்ள டாடா லோகோ மின்னும் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இததுவிர பன்முக கன்ட்ரோல்கள் இந்த ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், இந்த காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் பேடில் ஷிஃப்டர்களையும் காண முடிகின்றது.

இது ஸ்டியரிங் வீலின் பின் பக்கத்தில் எளிதில் கையாளும் வகையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஹாரியர் கார் வாய்ஸ் கன்ட்ரோல் வசதியைக் கொண்டிருக்கின்றது. அதாவது, அமேசானின் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஐஆர்ஏ 2.0 இணைப்பு வசதியும் இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த காரில் வழங்கி ஹாரியரை மேலும் நவீன மயப்படுத்தி இருக்கின்றது, டாடா. இதன் இரண்டு ஜோன் ஆட்டோமேட்டிக் எச்விஏசி சிஸ்டத்திற்கான கன்ட்ரோல்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர் 45w யுஎஸ்பி-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்டும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காருக்கான எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் இடம் பெற்றிருக்கும் முன்பக்க இருக்கைகள் வென்டிலேட் வசதிக் கொண்டவை ஆகும்.

குறிப்பாக, டிரைவருக்கான இருக்கை வரவேற்கும் மற்றும் மெமரி ஃபங்க்சன் வசதிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதேபோல், அதிக சிறப்பு வசதிகளை இந்த காரின் பின் பக்க இருக்கைகள் தாங்கி இருக்கின்றன. அந்தவகையில், பெரிய ஹெட்ரெஸ்ட்டுகள் அதில் கொடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, பெரிய சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் என ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்களாக அடாஸ் தொழில்நுட்பம், 7 ஏர் பேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்புகள், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், ஏர் ப்யூரிஃபையர், பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம் மற்றும் இஎஸ்பி உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

2023 ஹாரியர் காரில் எந்தெந்த விஷயங்கள் மாற்றப்படவில்லை? மெக்கானிக்கல் விஷயத்தில் பெரிய அளவில் மாற்றத்தை டாடா செய்யவில்லை. இந்த காரில் ஸ்டெல்லன்டஸ் குழுமத்தின் தயாரிப்பான 2.0 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனே இந்த காரில் கொடுக்கப்படுகின்றது. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண் ஹாரியரில் பெரிய அளவில் புதிய ரைடிங் அனுபவம் கிடைக்கவில்லை. முந்தைய மேனுவல் ஹாரியரை ஓட்டும்போது எத்தகைய உற்சாகமான ரைடிங் அனுபவம் கிடைத்ததே அதே அனுபவமே 2023 மேனுவல் ஹாரியரிலும் கிடைக்கின்றது.

இருப்பினும், இந்த எஞ்ஜினில் இரைச்சலைக் குறைக்கின்ற வகையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இந்த மேனுவல் டிரான்ஸ்மிஷன் slickest ஷிஃப்டராக இல்லாவிட்டாலும், கியர்களை ஸ்லாட் செய்வது எளிதாகவே இருக்கின்றது. அதேவேளையில், பயன்படுத்துவதற்கு அது சற்று கனமாக தெரிகின்றது. கிளட்ச் வாயிலாகவே இந்த குளறுபடி ஏற்படுகின்றது.

205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் பன்முக ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த திறன்கள் இணைந்து டாடா ஹாரியரை எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் வசதிக் கொண்ட வாகனமாக மாற்றி இருக்கின்றது. அதேவேளையில், ஒரு விஷயங்களில் லேசான பின்னடைவை இந்த கார் கொண்டிருக்கின்றது.

ஆனால், கை தேர்ந்த ஓட்டுநர்களாக நீங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் உணர முடியும். இல்லை எனில் இந்த கார் எந்த அளவு அதிக கவர்ச்சியானதாக தெரிகின்றதோ, அதோபோல், இயக்கத்தின்போதும் உங்கள் மனதைக் கவரும் வாகனமாக புதிய ஹாரியர் இருக்கும். குறிப்பாக, அதிக இட வசதி உங்களை மெய்மறந்து பயணிக்கச் செய்யும்.

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பயணிக்கும்போது அவர்களுடன் என்ஜாய் செய்துக் கொண்டு பயணிப்பதற்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இதேபோல், இந்த காரை பார்க் செய்வதும் மிக சுலபமாக உள்ளது. இதற்கு உதவியாகவே முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை உங்களுக்கு செல்ஃப் கான்ஃபிடன்ஸை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காஸ்மெட்டிக் மாற்றத்தால் மிகவும் அழகிய மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட காராக புதிய ஹாரியர் மாறி இருக்கின்றது. சொல்லப்போனால் முன்பைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றத்தில் புதிய ஹாரியர் காட்சியளிக்கின்றது. இந்த அழகிற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாகவே பன்முக நிற தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இந்த கார் அதிகம் தொழில்நுட்பம், அதிக இட வசதி மற்றும் அதிக கவர்ச்சியான காரை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 14, 2023, 12:01 [IST]
English summary
Facelift tata harrier ride review details in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+