டெஸ்ட் டிரைவுக்கே அனுப்ப கூடாது.. போனாங்க கண்டிப்பா இந்த காரை வாங்கிருவாங்க.. ஹோண்டா அமேஸ் ரிவியூ!!

எஸ்யூவி (SUV) ரக கார்களின் ஆதிக்கம் பெரிய அளவில் காணப்படாத காலகட்டம் அது. 2013-ஆம் வருஷம், இந்த ஆண்டிலேயே ஹோண்டா (Honda) நிறுவனம் இந்தியாவின் செடான் (Sedan) கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக அமேஸ் (Amaze) கார் மாடலை இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Swift Dzire)-க்கு போட்டி அளிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த காரை அது கொண்டு வந்தது. பிரியோ (Brio), ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட சப்-4 மீட்டர் செடான் கார் மாடலே இதுவாகும்.

இந்த காரை எதை எதிர்பார்த்து ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்ததோ அது சிறப்பாக நடைபெற்றது. அதாவது, நல்ல விற்பனை வரவேற்பை இந்தியாவில் அமேஸ் பெற்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக மாறும் அளவிற்கு அதற்கு வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியது. குறிப்பாக, எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்ற இந்த காலகட்டத்திலும் அமேஸ்-க்கு என தனித்துவமான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Honda amaze review

இதேபோல், தன்னுடைய இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அமேஸ் தன்னை சந்தையின் தேவைக்கு ஏற்ப மெருகேற்றிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அதன் போட்டியாளனான டிசையர் புதிய தலைமுறையாக விற்பனைக்கு வந்த சில நாட்களில் அமேஸ்-ம் புதிய அவதாரத்தில் (புதிய தலைமுறையாக) இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இதனையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதுகுறித்த தகவலையே இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா அமேஸ்-இன் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற அம்சங்கள் பற்றிய விபரம்: ஹோண்டா நிறுவனம் தன்னுடைய இந்த அமேஸ் காரை அதன் சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய இரண்டு கார்களையும் தழுவியே உருவாக்கி இருக்கின்றது. சொல்லப்போனால் இதன் வெளிப்புற தோற்றம் எலிவேட் உடன் மிகப் பெரிய அளவில் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கின்றது.

Honda amaze interior design

மாற்றங்கள் நிறைய இருந்தாலும், எலிவேட்-இன் செடான் அவதாரம் என்கிற பிம்பத்தையே புதிய அமேஸ் வழங்குகின்றது. குறிப்பாக, அமேஸ் காரில் கிரில் அமைந்திருக்கும் விதமாகவே நம்மை அவ்வாறு நினைக்க செய்கின்றது. அதேவேளையில், சில தனித்துவமான அம்சங்களையம் இந்த காரில் பார்க்க முடிகின்றது. லைட் அமைப்பை இதற்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

முறுக்கு மீசை அல்லது புருவத்தின் உருவத்தை பிரதிபலிக்கின்ற அமைப்பு உடைய எல்இடி டிஆர்எல், எல்இடி ஹெட்லேம்ப்-க்கு மேல் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அமேஸ்-இன் முன் பக்க அழகிற்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் உள்ளது. இத்துடன், ஓர் பெரிய துண்டு 'குரோம் அணிகலன்' கிரில் இருக்கும் மேல் பக்கத்தில் இடம் பெற செய்யப்பட்டு இருக்கின்றது.

Honda amaze tracking shot

இது இருபுறமும் டிஆர்எல் லைட்டை கிழித்துக் கொண்டு உட்புகுந்திருக்கின்ற வகையிலான அமைப்பைப் பெற்றிருக்கின்றது. இதேபோல், இதன் ஹெட்லைட் இரு கருவிழிகளைக் கொண்ட கண்களை போல உள்ளது. இந்த அழகான கூறுகள் போதாதது என போர் விமானத்தை அமைப்புடைய அணிகலனில் பனி மின் விளக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், பெரிய அளவு காற்றை உள்வாங்கும் துளை, பம்பருடன் இணைந்தவாறு மைய பகுதியில் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்தே அமேஸ் காரின் முன் பக்கத்திற்கு வேற லெவல் அழகிய தோற்றத்தை வழங்குகின்றன. இதேபோல், இந்த காரின் பக்கவாட்டு பகுதியையும் ஹோண்டா அழகானதாக மாற்றியிருக்கின்றது.

காரை சுற்றிலும், அதாவது, முன் பக்கம் தொடங்கி பின் பக்கம் முடிகின்ற வகையில் ஓர் 'கோடு' வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இன்டிகேட்டர் லைட்டுடன் கூடிய பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி, அதற்கு கீழே கேமிரா (உயர்நிலை தேர்வில் காணப்படும்) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், காரின் பக்கவாட்டு பகுதியை கூடுதல் அழகாக காண்பிக்கும் விதமாக 15 அங்குல அலாய் வீலால் அமேஸ் காரை ஹோண்டா அலங்கரித்திருக்கின்றது. முன் பக்கம், பக்கவாட்டு பகுதியை போலவே 2025 அமேஸ் காரின் பின் பக்கமும் மிகுந்த அழகானதாகவே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், சுறாவின் துடுப்பை போன்ற அமைப்புடைய ஆன்டென்னா, பறவைகளின் றெக்கையை பிரதிபலிக்கும் ஸ்டாப் லைட்டுகள், சிறிய ஸ்பாய்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன் பூட்-டை திறக்கும் பட்டன் ஸ்மார்ட் சாவி மற்றும் காருக்குள் வழங்கப்பட்டு இருக்கும். இந்த பூட்-இல் 416 லிட்டர் வரையிலான அளவுள்ள பொருட்களை ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா நிறுவனம் இந்த காரின் வெளிப்புறத்தை மட்டுமே வாடிக்கையாளர்களை மயக்கும் விதமாக வழங்கவில்லை, உட்புறத்தையும் அது மனதைக் கொள்ளையடிக்கும் வகையிலேயே தயார் செய்திருக்கின்றது.

அந்தவகையில், மிதந்துக் கொண்டே நிற்கின்ற வகையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இது 8 அங்குலம் அளவுக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த திரையை வயர் இணைப்பு இல்லாமலேயே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை இணைக்கின்ற வகையில் ஹோண்டா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

இத்துடன், பன்முக கன்ட்ரோல்களைக் கொண்ட ஸ்டியரிங் வீல், நடுத்தர டிஜிட்டல் வசதிகள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7 அங்குல எம்ஐடி (எச்விஏசி கன்ட்ரோலைக் கொண்டிருக்கும்) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் போதாதென்று வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் யுஎஸ்பி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கோப்பை தாங்கி, மேனுவல் ஹேண்ட் பிரேக் உடன் கூடிய பார்சல் அலமாரி உள்ளிட்டவையும் புதிய அமேஸ் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இதன் இருக்கைகள் அனைத்தையும் புதிய வகை மிருதுவமான துணியால் அலங்கரித்திருக்கின்றனர். குறிப்பாக, இதன் பின் இருக்கை மிகவும் சௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

போதிய அளவு உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைலே அது சிறந்த டிராவலை வழங்குகின்றது. அதேநேரத்தில், கால்களுக்கான சிறிய சப்போர்ட் மற்றும் அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டை இந்த காரில் ஹோண்டா வழங்கியிருக்கலாம். மிகவும் உயரமான மனிதராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

சிறந்த டிராவல் அனுபவத்திற்கு மட்டுமல்ல ஹோண்டா நிறுவனம் இந்திய பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகின்ற மாதிரியான அம்சங்களையும் சற்றே அதிகளவில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், புதிய அமேஸ் கார் மாடலில் அடாஸ் (ADAS) அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதியாகும்.

இந்தியாவில் வேறு எந்த சப்-4 மீட்டர் செடான் காரிலும் இந்த அம்சத்தை பார்க்க முடியாது. அதேவேளையில், உயர்நிலை தேர்வான அமேஸ் இசட்எக்ஸ்-இல் மட்டுமே இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, 6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், இஎஸ்சி மற்றும் ஐசோஃபிக்ஸ் ஆகிய அம்சங்களையும் பயணிகளுக்கு பாதுகாப்பான டிராவலை உறுதிப்படுத்தும் விதமாக ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

ஹோண்டா அமேஸ்-இன் உட்புற அளவு மற்றும் எஞ்சின் விபரம்: ஹோண்டா நிறுவனத்தின் புதிய அமேஸ் கார் மாடலை 3,995 மிமீ நீளம், 1,733 மிமீ அகலம், 1,500 மிமீ உயரம் மற்றும் 2,470 மிமீ வீல் பேஸ் ஆகிய அளவுகளைக் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது.

இதன் எடை 952 கிலோ முதல் 986 கிலோ வரையில் இருக்கும். மேலும், 4.7 மீட்டர் முதல் 4.9 மீட்டர் டர்னிங் ரேடியஸ் உடன் 170 மிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அமேஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகின்றது.

1.2 லிட்டர் 4 சிலிண்டர் ஐ-விடிஇசி எஞ்சினே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சினில் இ20 ஃப்யூவலிலும் இயங்கும். மேலும், 6,000 ஆர்பிஎம்மில் 88.5 பிஎச்பி பவரையும், 4,800 ஆர்பிஎம்மில் 110 என்எம் டார்க்கையும் இந்த மோட்டார் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கியர்பாக்ஸை பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகியவையே அவை ஆகும். இதில், மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட அமேஸ் ஒரு லிட்டருக்கு 18.65 கிமீ வரையிலான மைலேஜையும், சிவிடி 19.46 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹோண்டா அமேஸ் ஓட்டி பார்த் அனுபவம் எப்படி இருந்தது?.. நாங்கள் ஓட்டி பார்த்து ரிவியூ செய்ய எங்கள் வசம் அமேஸ் கார் மாடலின் மேனுவல் வெர்ஷன் ஒப்படைக்கப்பட்டது. இதையே ஓட்டியதில் எங்களுக்கு முந்த தலைமுறை அமேஸ்-ஐ இயக்கிய அனுபவமே கிடைத்தது. ஆகையால், நீங்கள் அமேஸ் காரில்தான் இருக்கின்றீர்கள் என்கிற உணர்வு எப்போது மறையாது.

இதேபோல், ஸ்மூத்தான இயக்கம் மற்றும் சுலபமான இயக்கத்தை வழங்கக் கூடியதாகவும் இது இருந்தது. ஐ-விடிஇசி எஞ்சினின் உண்மையான திறனை நாங்கள் உயர் Revving-இல் கண்டறிந்தோம். அதாவது, காரை முன்னோக்கி நகர்த்தாமலே ஆக்சலரேஷனை அழுத்தி பார்த்தோம். இதிலேயே உற்சாகத்தை பொங்கச் செய்யக் கூடிய அனுபவத்தை இந்த நான்கு சிலிண்டர் எஞ்சின் எங்களுக்கு வழங்கியது.

இதேபோல், இதன் கிளட்சம் மிகவும் லைட்-டானதாக இருந்தது. கால்களால் அதை கடினமாக அழுத்த வேண்டும் என்கிற நிலை உங்களுக்கு இருக்காது. இதுமட்டுமில்லைங்க, இதன் கியர்பாக்ஸ்-ம் வேற லெவல் இயக்க அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருந்தது. பொதுவாக நெரிசல் மிகுந்த சாலையில் கியரை மாற்ற சிலர் சலிப்பாக நினைப்பார்கள்.

ஆனால், இந்த கியரை மாற்றுவது ஒரு வேலையாகவே தெரியாது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்மூத்தானதாக இதன் மேனுவல் கியர் இருக்கின்றது. டிராவலை சௌகரியமானதாக மாற்றுவதில் இதன் சஸ்பென்ஷன் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. பள்ளம், மேடுகள் அனைத்தையும் சர்வசாதாரணமாக அது கடந்து சென்றது.

தொடர்ந்து, திருப்பங்களில் சட்டென திருப்ப ஏதுவாக இதன் ஸ்டியரிங் இருக்கின்றது. ஆகையால், இந்த புதிய அமேஸ் நகர மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற காராக தயாராகி இருப்பதை நாங்கள் இந்த ரைடு ரிவியூவின் வாயிலாக உணர்ந்தோம். குறிப்பாக, காருக்குள் இருக்கும் மிகவும் அமைதியான சூழலும் எங்களுக்கு கிடைத்தது. ஆகையால், ஆடம்பர காரில் கிடைக்கக் கூடிய பல வசதிகளை இந்த அமேஸ் காரிலேயே நமக்குக் கிடைத்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டிசையர் கார் மாடலுக்கு இது சிறந்த போட்டியாளனாக விளங்கும். இந்த கார் மாடலுக்கு மட்டுமல்ல சப் 4 மீட்டர் செடான் ரக கார்களுக்கும் இது மிகப் பெரிய போட்டியை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரில் சிவிடி ஆப்ஷனையே நாங்கள் பரிந்துரைக்கின்றோம். அதேவேளையில், மேனுவல் கியர்பாக்ஸை ஓட்டியே பழக்கம் கொண்டவர்கள் தாராளமாக இதை தேர்வு செய்யலாம். இது டிரைவருக்கு என்ஜாய்ஃபுல்லான டிராவல் அனுபவத்தை வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2024, 11:00 [IST]
English summary
Honda amaze review design features and driving impressions details in tamil
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X