ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் ரிவியூ - முழு விவரங்கள்

By Ravichandran

ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் மாடல் குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரியுமா?

இதன் செக்மண்ட்டிலேயே ஹோண்டா ஜாஸ் நன்கு வடிவமைக்கபட்ட மற்றும் கூர்மையான தோற்றம் கொண்ட கார் ஆகும். ஆட்டோமேட்டிக் வேரியண்ட் இந்த ஹோண்டா ஜாஸ் காருக்கு எவ்வாறு பலன் தரும் வகையில் இருக்கும். இது குறித்து தெரிந்து கொள்ள, ஹோண்டா ஜாஸ் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர், அம்சங்கள்,
செயல் திறன் மற்றும் மைலேஜ், இறுதி கருத்து என அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் மாடல் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

முன் பக்க டிசைன்;

முன் பக்க டிசைன்;

ஹோண்டா நிறுவனம், தங்களின் இறக்கை போன்ற டிசைன் சித்தாந்தத்தை (விங் டிசைன் ஃபிலாஸஃபி) இந்த ஜாஸ் மாடலிலும் தொடர்ந்து வருகிறது. இது முன் பக்கத்தில் உள்ள ஃப்ரண்ட் கிரில்லில் தெளிவாக தெரிகிறது.

ஹெட்லேம்ப்களுக்கு இடையே மெல்லிய குரோம் பட்டை படர்ந்து உள்ளது. சிங்கிள் பேரலுடன் ஹெட்லேம்ப்களை சுற்றியுள்ள அமைப்பு ஹோண்டா ஜாஸ் காரின் முன் பக்க தோற்றத்திற்கு முக்கியமான அம்சமாக விளங்குகிறது.

பக்கவாட்டு புரொஃபைல்;

பக்கவாட்டு புரொஃபைல்;

ஹோண்டா ஜாஸ் காரின் பக்கவாட்டு புரொஃபைல், தடியான தோல்பட்டை வரிகள் (ஷோல்டர் லைன்) கொண்டுள்ளது. பிற கார்களில் இந்த டிசைன் காண்பதற்கு நன்றாக இருக்காது.

ஆனால், மென்மையான வண்ணங்கள் கொண்ட ஹோண்டா ஜாஸ் காரில் இந்த தடியான தோல்பட்டை வரிகள் அழகாக உள்ளது. டார்க்கான நிறத்திலான ஹோண்டா ஜாஸ் கார்களில் இந்த தடியான தோல்பட்டை வரிகள் மிரட்டலாக உள்ளது.

பின் பக்க புரொஃபைல்;

பின் பக்க புரொஃபைல்;

ஹோண்டா ஜாஸ் காரின் பின் பக்கத்தில், பருமனான எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளது. இது இந்த ஹேட்ச்பேக்கிற்கு மிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

லைசன்ஸ் பிளேட் மீது உள்ள குரோம் அலங்காரம் மட்டும் தான், இந்த காரிலேயே மிக பெரிய அளவில் குரோம் உள்ள பகுதியாக உள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஹோண்டா ஜாஸ் காரில் உள்ள டேஷ்போர்ட் மற்றும் சாதனமும் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளது போன்றே உள்ளது.

இன்ஸ்ட்ருமெண்ட் பேனலின் 3 பானை (3 பாட் டிசைன்) டிசைன் மொழி மற்றும் இகோ-இண்டிகேட்டர் உங்களை சரியான டிரைவிங் வேகத்தில் இயக்க உதவுகிறது. மேலும், இது சாலை பார்க்கும் வகையில் எளிமையாகவும் சுலபமாக உள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரில் உள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சாதனமும் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளது போன்றே உள்ளது. மேலும், இது டிரைவர் உபயோகிக்கும் வகையில் டிரைவருக்கு கூடுதல் நெருக்கமாக வைக்கபட்டுள்ளது.

செண்டர் கன்சோலில் உள்ள கண்ட்ரோல்கள், எளிமையாக உள்ளது.

கேபின்;

கேபின்;

ஹோண்டா ஜாஸ் காரின் கேபின், பழைய ஹோண்டா ஜாஸ் காரை காட்டிலும் அளவுகோள்களில் பெரியதாக உள்ளது.

இது முன் வரிசை இருக்கை மற்றும் பின் இருக்கை வரிசைகளுக்கு இடையேயான இட வசதியை கூட்ட உதவுகிறது. மேலும், இதன் ப்யூவல் டேங்க்-கும் அதிக இட வசதி வழங்கும் வகையில் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளது.

சீட்;

சீட்;

ஹோண்டா ஜாஸ் காரின் டாப் வேரியண்ட்டில், பின் இருக்கையின் முன் பக்கம் சாய்த்து கொள்ளும் வகையிலான மேஜிக் சீட் வசதி வழங்கபட்டுள்ளது. இதனால் கூடுதல் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது.

எனினும், இந்த வசதி ஹோண்டா ஜாஸ் காரின் சிவிடி வேரியண்ட்களில் கிடைக்காது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா ஜாஸ் சிவிடி 1.2 லிட்டர், ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 6,000 ஆர்பிஎம்களில் 89 பிஹெச்பியையும், 4,800 ஆர்பிஎம்களில் 110 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்பின் ஒப்புதல்களின் படி, ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக், ஒரு லிட்டருக்கு 19.0 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

ஹோண்டா ஜாஸ் சிவிடி மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டா ஜாஸ் சிவிடி, எஸ் மற்றும் வி ஆகிய இரு வேரியண்ட்களில் கிடைக்கும்.

டாப் வேரியண்ட்டான வி வேரியண்ட்டில், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கபட்டுள்ளது.

இரு வேரியண்ட்களுக்கு மத்தியில், சிறிய அளவிலான வித்தியாசங்களை தவிர, பேடில் ஷிஃப்டர்கள், அல்லாய் வீல்கள், எல்சிடி டிஸ்பிளே மற்றும் புளூ பிளாக்லைட் கொண்ட அதிநவீன மல்டி-இன்ஃபர்மேஷன் காம்பினேஷன் மீட்டர் ஆகியவை முக்கிய வேறுபாடுகளாக உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஹோண்டா ஜாஸ் காரின் டாப் எண்ட் வேரியண்ட்டில், 5-இஞ்ச் அளவிலான அதி நவீன ஒருங்கிணைக்கபட்ட ஆடியோ சிஸ்டம் பொழுது போக்கு அம்சமாக உள்ளது.

மேலும், ஸ்டீயரிங் வீலில் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ தொலைபேசி கண்ட்ரோல் மற்றும் ஸ்பீட் வால்யூம் காம்பன்சேஷன் ஆகிய அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

கூடுதலாக, டாப் வேரியண்ட்டில் டச்ஸ்கிரீன் கண்ட்ரோல் உள்ள ஆட்டோ ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் முறையில் மடக்ககூடிய ஓஆர்விஎம்கள் (அவுட்சைட் ரியர் வியூ மிரர்கள்) உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை, ஹோண்டா ஜாஸ் சிவிடி காருக்கு ட்யூவல் ஏர்பேக்குகள் வழங்கபட்டுள்ளது.

இந்த ட்யூவல் ஏர்பேக்குகள் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை இந்த எஸ் வேரியண்ட்டில் வழங்கப்படிவதில்லை. ஆனால், எஸ் வேரியண்ட்டில் இபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ் வசதி வழங்கபட்டுள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

ஹேட்ச்பேக் செக்மண்ட்டில், ஹேண்ட்லிங் விஷயத்தில் ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் சிறந்த காராக விளங்குகிறது. இந்த சிவிடி மாடல் இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது.

பழைய ஹோண்டா ஜாஸ் காரை காட்டிலும், இந்த சிவிடி மாடல் நன்றாக உள்ளது. மேலும், இந்த சிவிடி மாடலில் ரப்பர் பேண்ட் விளைவு இல்லை.

போட்டி;

போட்டி;

ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக், ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

எனினும், மாருதி பலேனோ ஒரு ஆட்டோமேட்டிக் வேரியண்ட் மட்டுமே உள்ளது. இருந்தாலும், இந்த மாருதி பலேனோவில், ஹோண்டா சிவிடி ‘எஸ்' வேரியண்ட்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் உள்ளன.

விலை;

விலை;

ஹோண்டா ஜாஸ் சிவிடி (வி) வேரியண்ட் விலை, 8.13 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், எஸ் வேரியண்ட்டின் விலை 7.26 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் டெல்லி விலையிலும் விற்கபடுகிறது. இதே நேரத்தில், பலேனோ மாடலின் விலை 6.87 லட்சம் ரூபாயாக உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா ஜாஸும், கவரும் அந்த 8 விஷயங்களும்...!

ஹோண்டா ஜாஸ் தொடர்புடைய செய்திகள்

ஜாஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Sunday, April 10, 2016, 8:00 [IST]
English summary
New Honda Jazz Automatic was launched sometime ago. In its segment, Honda Jazz is a well designed and sharp looking hatchback. Would the automatic variant do justice to this car? Let's find out about interiors and exteriors, features, performance and mileage, and all-important verdict. To know more about New Honda Jazz Automatic, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+