ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி - சிறப்பு பார்வை

By Ravichandran

தற்போது, சந்தையில் உள்ள எஸ்யூவிகளிலேயே ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் தான் சிறந்த எஸ்யூவியா?

வாருங்கள், விவரமாக தெரிந்து கொள்வோம்.

hyundai-creta-automatic-suv-quick-car-review

டிசைன்;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, புதிய ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. இதன் முனைகள் முன்பைகாட்டிலும் கூர்மையாக காட்சியளிக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி தனக்கென ஒரு பிரிவை உருவாக்கியது போல் காட்சியளிக்கிறது.

இதப் உயர்ந்த தோற்றமும், ட்ரிபிள் ஸ்லாட் குரோம் கிரிள் இதனை தனித்து காண்பிக்கிறது.

பிற வ்ர்ரியண்ட்களை காட்டிலும், ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, ரூஃப் டெய்ல்கள், ட்யூவல் டோன் ரேடியேட்டர் கிரில், ரியர் சில்வர் கார்னிஷ் ஃபினிஷ், குரோம் பூச்சு செய்யபட்ட டோர் ஹேண்டில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன்);

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, 4-சிலிண்டர், 16 வால்வுகள் கொண்ட, 1.6 லிட்டர், சிஆர்டிஐ இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 4,000 ஆர்பிஎம்களில் 126 பிஹெச்பியையும், 1,900 - 2,750 ஆர்பிஎம்களில் 260 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனோடு அல்லாது, 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

அம்சங்கள்;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. இது ரியர் பார்க்கிங் சென்சார்கள், பை-பங்க்‌ஷனல் ஹெட்லேம்ப்கள்,
கார்னரிங் மற்றும் எல்இடி பொசிஷனிங் லேம்ப்கள், முழுவதும் ஆட்டோமேட்டிக் ஆன மோட் சேஞ்ச் ஏர் கண்டிஷனிங் வசதிகள் வழங்கபட்டுள்ளது.

மேலும், இதில் டச் ஸ்கீரின் ஆடியோ வீடியோ, புளூடூத் உடன் கூடிய நேவிகேஷன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதன் ஸ்டீயரிங் வீல் மீது ஆடியோ
கண்ட்ரோல் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ புளூடூத் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பாதுகாப்பு;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, ட்யூவல் ஏர்பேக்குகள், ஈபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இம்பேக்ட் சென்சிங் டோர் அன்லாக், ஆகிய வசதிகள்
கொண்டுள்ளது.

ஆனால், இந்த வேரியண்ட்டில் சைட் மற்றும் கர்டெய்ன் ஏர்பேக்குகள், இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹெச்ஏசி எனப்படும் ஹில் அசிஸ்ட்
கண்ட்ரோல், ஹைட் அட்ஜஸ்டிபிள் ஃப்ரன்ட் மற்றும் பேசஞ்ஜர் சீட்கள் மற்றும் ஸ்பீட் சென்சிங் டோர் லாக் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இல்லாமல் இருக்கிறது.

விலை;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, 14.38 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் விற்கபடுகிறது.

இறுதி கருத்து;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி, தனியாகவே ஒரு செக்மண்ட்டௌ உருவாக்கி கொண்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவிக்கு ரெனோ டஸ்ட்டர், ஃபோர்சு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதன் போட்டி மாடல்களையும், இதன் விலையுடன் ஒப்பிடும் போது, ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், இஎஸ்சி, மற்றும் பிற எஸ்யூவி அம்சங்கள் இதில் இல்லை.

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி சிறந்த பணிச்சூழலியல் மற்றும் வாகனம் இயக்கும் அனுபவம் வழங்குகிறது.

விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் விஷயத்தில், ஹூண்டாய் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் சர்வீஸ் மையங்கள் உள்ளதால், சர்வீஸ் தொடர்பான பணிகள் செய்து கொள்ள, எந்த சிக்கல்களும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 21, 2016, 17:22 [IST]
English summary
Hyundai Motors is producing Hyundai Creta Automatic SUV. It is considered as one of the best Automatic SUV available in Market. What is your take on it? - Here is a detailed review of Hyundai Creta Automatic SUV. Want to know about this SUV. To know more about Hyundai Creta Automatic, let's see a quick review. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X