ஒட்டுமொத்த இந்தியாவை அதிரவிட போகும் எலக்ட்ரிக் காரை பார்த்துக்கோங்க... ஓட்டி பார்த்த எங்களுக்கு அள்ளு இல்ல!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி (SUV) ரக கார். இந்திய சந்தையில் தென்கொரிய ஹூண்டாய் நிறுவனம் தற்சமயம் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் கார். இதனாலேயே அவ்வப்போது கிரெட்டாவை மெருக்கேற்றுவதை ஹூண்டாய் மறப்பதில்லை. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு எதிர்பார்த்ததை போல் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்தான், கிரெட்டா எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ கொண்டுவர ஹூண்டாய் தயாராகி வருகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு தற்போதுதான் மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்துவரும் சூழலில், பெரிய ஆவலுக்கு மத்தியில் புதிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களை இந்த கொரியன் எலக்ட்ரிக் கார் கவர்ந்த விஷயங்களை இனி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

hyundai creta electric first review

தோற்றம்: பெட்ரோல்/ டீசல் கிரெட்டா காருக்கும், புதிய கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கும் இடையே தோற்றத்தில் பெரியதாக வித்தியாசமில்லை. சில நுணுக்கமான மாற்றங்களை மட்டுமே ஹூண்டாய் கொண்டுவந்துள்ளது. அவற்றுள் முதலில் நமது கவனத்தை பெறுவது என்றால், காருக்கு முன்பக்கத்தில் வழங்கப்படும் ஹூண்டாயின் லோகோ ஆகும். ஹெட்லைட்கள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதற்காக ஹூண்டாய் லோகோ சற்று கீழிறக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, காரின் கிரில் பகுதி முழுவதுமாக மூடப்பட்டதாக உள்ளது. எலக்ட்ரிக் காருக்கு கிரில் பகுதி தேவையில்லாதது ஆகும். ஹெட்லைட்களுக்கு கீழே டி.ஆர்.எல்-கள் (DRLs)-க்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள ஹூண்டாய் லோகோவிற்கு அடியில் மறைவாக சார்ஜிங் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் கேபிள்கள் பொனெட்டுக்கு அடியில் சிறிய இடவசதி ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

hyundai creta electric first review

முன்பக்க பம்பர் ஆனது கிரெட்டா என் லைன் காரில் இருந்து பெறப்பட்டது போல் உள்ளது. எலக்ட்ரிக் காராக இருப்பினும், இயக்கத்தின்போது கொஞ்சம் குளிர்ந்த காற்று தேவை என்பதால் முன்பக்க பம்பரில் காற்று உள்ளே நுழைய ஏரோ ஃப்ளாப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. அப்படியே புதிய கிரெட்டா எலக்ட்ரிக் காரின் பக்கவாட்டிற்கு சென்றால், 17-இன்ச்சில் புதிய ஏரோடைனாமிக் அலாய் சக்கரங்களின் டிசைன் நம்மை வசீகரிக்கிறது.

இந்த சக்கரங்களில் அதிகமாக சுழலாத டயர்கள் காரின் அதிக ரேஞ்சுக்காக பொருத்தப்பட்டுள்ளன. கிரெட்டா எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்திலும் பெரியதாக எந்த வித்தியாசமும் பார்க்க முடியவில்லை. ஏற்கனவே விற்பனையில் உள்ள கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை தான் அப்படியே உறித்து வைத்ததுபோன்று உள்ளது. முன்பக்கத்தை போலவே, பின்பக்கத்திலும் ஹூண்டாய் லோகோவின் இடம் மாற்றப்பட்டுள்ளது. பின்பக்க பம்பரில் ரிவர்ஸில் வருவதை எச்சரிக்கும் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

hyundai creta electric first review

கிரெட்டா எலக்ட்ரிக் காரை மொத்தம் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதில், அபிஸ் கருப்பு, அட்லாஸ் வெள்ளை, ஃபியரி சிவப்பு, ஸ்டார்ரி நைட் மற்றும் ஓசன் நீலம் என்கிற 5 பளபளக்கும் கலர் ஆப்ஷன்கள் அடங்குகின்றன. இதில், அட்லாஸ் வெள்ளை மற்றும் ஓசன் நீலம் ஆனது கருப்பு நிற மேற்கூரை உடன் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

இவை இல்லாமல், ஓசன் ப்ளூ மேட், டைட்டன் கிரே மேட் மற்றும் ரப்பஸ்ட் எமெரல்ட் மேட் என்கிற 3 பளபளப்பு இல்லாத மேட் ஃபினிஷிங்கை கொண்ட கலர் ஆப்ஷன்களும் உள்ளன. இதில் எங்களுக்கு பிடித்தது என்றால், ஓசன் நீல நிறத்தில் அபிஸ் கருப்பு நிற மேற்கூரை ஆகும். காருக்குள் சென்றால், ஹூண்டாய் கிரெட்டா கார் தான் அப்படியே உள்ளது. டேஸ்போர்டில் 10.25-இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

hyundai creta electric first review

இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது, மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது ஆகும். இதில், இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யக்கூடியதாக, ஹூண்டாயின் ப்ளூலிங்க் உடன் இணைக்கப்பட்ட கார் சூட்டை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனால், சார்ஜ் செய்வதற்கான கட்டணத்தை காரினுள் இருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே உடன் போஸ் நிறுவனத்தின் 8-ஸ்பீக்கர் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் சவுண்ட் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் மத்திய ஏசி-க்கு கீழே வழங்கப்பட்டுள்ளன. டேஸ்போர்டுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல் பேனலில் யுஎஸ்பி ஏ மற்றும் சி துளைகள் உள்ளன. அத்துடன், 12 வோல்ட் சார்ஜிங் போர்ட் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜரும் இந்த எலக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

hyundai creta electric first review

ஏற்கனவே கூறியதுபோல், இவை எல்லாமே ஹூண்டாய் கிரெட்டா காரில் பார்த்தது போன்றே உள்ளது. டேஸ்போர்டு மட்டுமின்றி, கிரெட்டா எலக்ட்ரிக் காருக்குள் இரட்டை நிறத்திலான இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியும் நமக்கு கிரெட்டா காரையே ஞாபகப்படுத்துகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் கார் என்பதை நினைவூட்டுவதற்காக, ஒரு நீல நிற லைன் இருக்கைகளுக்கு மத்தியில் செல்கிறது.

வெண்டிலேஷன் வசதி உடன் உள்ள இருக்கைகள் வழக்கத்தை காட்டிலும் மிகவும் சவுகரியமாக உள்ளன. முன் இருக்கைகளை எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யலாம். அதிலிலும் குறிப்பாக, டிரைவர் இருக்கைக்கு 2 சீட் மெமரி ஆப்ஷன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இரு வெவ்வேறான நபர்கள் அவ்வப்போது காரை எடுத்தாலும் அவர்களுக்கு ஏற்ற சீட் பொசிஷனை எளியதாக கொண்டுவந்துவிட முடியும்.

hyundai creta electric first review

பெட்ரோல்/ டீசல் என்ஜின் கிரெட்டா காரில் இருப்பதை போன்று, பின் இருக்கைகள் போதுமான அளவிற்கான தலை, கால் மற்றும் கைமுட்டிகளுக்கான இடவசதி உடன் 3 பேர் வரையில் அமர்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், இவ்வாறு அமரப்படும் 3 பேரில் நடுவில் அமர்பவருக்கு மட்டும் தலையணையை அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை. இதனை ஹூண்டாய் நிறுவனம் மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்.

காருக்குள் வழங்கப்பட்டுள்ள அளவில் பெரியதான சன்ரூஃப் ஆனது காரின் கேபினை இன்னும் பெரியதாக காட்டுவது மட்டுமின்றி, அதிக ஒளி வெளிச்சம் மற்றும் காற்றையும் வழங்குகிறது. இவற்றுடன், டிஜிட்டல் சாவி, கூல்டு க்ளோவ்பாக்ஸ், முன்பக்க ஆர்ம்ரெஸ்டுக்கு அடியில் கூல்டு ஸ்டோரேஜ் பகுதி, இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளேக்கான கண்ட்ரோல்கள் உடன் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவையும் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

hyundai creta electric first review

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, வைகல்-2 லோடு வசதி இந்த எலக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளது. இது, காரின் பேட்டரி சார்ஜை மற்ற மின்சாதனங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்புக்கு, 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோ ஹோல்ட் உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, ஹில் டெஸ்செண்ட் கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் உடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இதில், லெவல்-2 அடாஸ் ஆனது லேன் கீப்பிங் அசிஸ்ட், முன்பக்க மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் வார்னிங் மற்றும் ஸ்டாப்& கோ உடன் ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட 19 விதமான அட்வான்ஸ்டு வசதிகளை பெற முடிகிறது.

hyundai creta electric first review

எலக்ட்ரிக் பவர்டிரெயின் & பரிமாண அளவுகள்: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 42kWh மற்றும் 51.4kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 42kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 390கிமீ தொலைவிற்கும், 51.4kWh பேட்டரியில் 473கிமீ ரேஞ்சையும் பெறலாம் என MIDC சோதனையில் சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பேட்டரி ஆப்ஷனிலும் பேட்டரி உடன் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த மோட்டார் வழங்கும் இயக்க ஆற்றல் ஆனது காரின் முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. 42kWh பேட்டரி உடன் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 133 பிஎச்பி வரையிலும், 51.2kWh பேட்டரி உடன் 169 பிஎச்பி வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

hyundai creta electric first review

0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் காரில் வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிட முடிகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் வெறும் 58 நிமிடங்களில் 10-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என ஹூண்டாய் தெரிவிக்கிறது.

அதுவே, வீட்டில் உபயோகிக்கக்கூடிய 11 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜரில் 4.2kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4 மணிநேரமும், பெரிய அளவிலான பேட்டரிக்கு 4 மணிநேரம் 50 நிமிடங்களும் தேவைப்படும். கிரெட்டா பெட்ரோல்/டீசல் காரின் வழக்கமான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், கிரெட்டா எலக்ட்ரிக் காரின் பரிமாண அளவுகளிலும் பெரியதாக மாற்றமில்லை. இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4,340மிமீ, அகலம் 1,790மிமீ, உயரம் 1,655மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2,610மிமீ ஆகும்.

hyundai creta electric first review

பயண அனுபவம்: கிரெட்டா எலக்ட்ரிக் கார் எங்களுக்கு மிகவும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கியது. நாங்கள் ஓட்டிப் பார்த்தது, 51.4kWh பேட்டரியை கொண்ட கிரெட்டா எலக்ட்ரிக் கார் என்பதால், வெறும் ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து 171 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைத்து எங்களுக்கு பரவசப்படுத்திவிட்டது.

இதனால் எங்களால் 0-இல் இருந்து 100kmph வேகத்தை 7.9 வினாடிகளில் எட்ட முடிந்தது. அதாவது, அந்த அளவிற்கு இந்த எலக்ட்ரிக் காரில் உடனடி டார்க் திறன் சிறப்பாக கிடைத்தது. குறிப்பாக, 'ஸ்போர்ட்' டிரைவிங் மோடில் காரில் பறந்தது போன்ற உணர்வு கிடைத்தது. ஸ்போர்ட் மோடில் இருந்து நார்மல் மோடுக்கு காரை மாற்றும்போதுதான் காரில் சிறிய தடுமாற்றத்தை நாங்கள் உணர்ந்தோம்.

hyundai creta electric first review

இருப்பினும், தினந்தோறும் நகர்புற நெரிசலில் நார்மல் மோடில் காரை ஓட்டும்போது எந்த பிரச்சனையும் இருக்காது. அதிக நேரத்திற்கு பேட்டரியின் சார்ஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஈக்கோ டிரைவிங் மோடை பயன்படுத்தலாம். கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ஸ்டேரிங் சக்கரம் குறைந்த வேகத்தில் செல்லும்போது எடை குறைவானதாகவும், அதிவேகத்தில் செல்லும்போது எடைமிக்கதாகவும் மாறுகிறது.

அதிக வேகத்தில் செல்லும்போது நன்கு எடைமிக்கதாக உள்ளதால், அதனை பிடித்து ஓட்டும்போதே ஆட்டோமேட்டிக்காக ஒரு தைரியம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, ஸ்டேரிங்கின் திசைக்கு ஏற்ப கார் நன்றாகவே ரெஸ்பான்ஸ் செய்தது. சஸ்பென்ஷன் செட்-அப்பை பொறுத்தவரையில், கிரெட்டா பெட்ரோல்/டீசல் காரை காட்டிலும் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் சஸ்பென்ஷன் சற்று கூடுதல் விரைப்பானதாக உள்ளது.

hyundai creta electric first review

இருப்பினும், பள்ளம் மேடுகளில் ஏற்றி இறக்கும்போது காருக்குள் எந்தவொரு குலுக்கல்களும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் வேகமாக வளைவுகளில் திரும்பும்போதும் கூட காருக்குள் குலுக்கல்கள் இல்லை. கிரெட்டா எலக்ட்ரிக் காரில் மிக சிறப்பான பயண அனுபவம் ஆனது அதன் ஐபெடல் மோடில்தான் கிடைத்தது.

ஏனெனில், இதன் மூலமாக ஹூண்டாயின் இந்த லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரை வெறும் ஆக்ஸலரேட்டர் பெடல் மூலமாக இயக்க முடிந்தது. அதாவது, கிட்டத்தட்ட ஸ்கூட்டரை ஓட்டுவதுபோல இருந்தது. ரீகன் லெவல்கள் மிகவும் வலிமையானவைகளாக உள்ளன. இதனால், ஆக்ஸலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுத்துவிட்டால், கிரெட்டா எலக்ட்ரிக் கார் அப்போதே நின்றுவிடுகிறது.

hyundai creta electric first review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, ஹூண்டாய் கிரெட்டா ஆனது ஓட்டுவதற்கு மிகவும் சவுகரியமான கார் ஆகும். அத்தகைய காரை எலக்ட்ரிக் என்கிற புதிய உலகத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. கிரெட்டா பெட்ரோல்/டீசல் காரை போன்று கிரெட்டா எலக்ட்ரிக் காரிலும் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், மிகவும் சவுகரியமான பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிரெட்டா எலக்ட்ரிக் ஆனது ஏற்ற கார் ஆகும்.

கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ரேஞ்சை சோதித்து பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. MIDC தெரிவித்த ரேஞ்சில் 70%, அதாவது 270இல் இருந்து 330கிமீ ரேஞ்சை நிஜ உலகில் பெறலாம் என எதிர்பார்க்கிறோம். முதல்முறையாக எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டு வருபவர்கள் தாராளமாக ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2025, 11:01 [IST]
English summary
Hyundai creta electric car first drive review design features battery range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X