ஃபெர்பார்மென்ஸ் சும்மா பிச்சு உதறுது!ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் கார் எப்படி இருக்குது தெரியுமா?
இந்த 2024-ம் ஆண்டு துவக்கத்தில் ஹுண்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் அறிமுகமானது. இந்த கார் அறிமுகமாகி இரண்டு மாதத்தில் தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெக்டா என்-லைன் கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் என்-லைன் கார் என்றாலே நாம் எல்லோருக்கும் தெரிந்த படி ஏராளமான காஸ்மெட்டிக் மாற்றங்கள் இருக்கும். சில அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். அதுபோலவே இந்த கிரெக்டா என்-லைன் காரிலும் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெக்டா என் லைன் காரை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பெயரில் டில்லி சென்று எங்கள் குழுவினர் அதை ஓட்டிப் பார்த்தனர்.

இந்த ஹூண்டாய் கிரெக்டா என்-லைன் காரை பொறுத்தவரை முக்கியமான மாற்றம் என்றால், பார்ப்பதற்கு பல்வேறு விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது தற்போது உள்ள எஸ்யூவி மார்க்கெட்டில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. பலர் எதிர்பார்த்த பல்வேறு அம்சங்கள் மற்றும் லுக் இந்த காருக்கு கிடைத்துள்ளது.
காரின் வெளிப்புற மாற்றங்களை பொறுத்தவரை புதிய பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 215/55 ஆர் 18 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் கவனிக்கத்தக்க வகையில் பக்கவாட்டில் உள்ள ஸ்கிட் பிளேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்பகுதியை பொறுத்தவரை ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸாஸ்ட்டை பொறுத்தவரை இரண்டு டிப் கொண்ட எக்ஸாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சத்தம் சற்று வித்தியாசமாக வருகிறது.

ஹுண்டாய் நிறுவனம் கிரெக்டா என்-லைன் காரை மொத்தம் மூன்று விதமான சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி அபியாஷ் பிளாக் பியர்ல், அட்லஸ் ஒயிட் மற்றும் டைட்டான் கிரே மேட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் கார் முழுவதும் ஒரே நிறம் தான் இருக்கும்.
இது போக மூன்று டூயல் டோன் கலர் ஆப்ஷன்களும் உள்ளன. அதன்படி அட்லஸ் வைட், ஷேடோ கிரே மற்றும் தண்டர் ப்ளூ இந்த மூன்று நிறங்களும் கருப்பு நிற ரூப் ஆப்ஷன் உடன் வருகிறது. இதில் ஆங்காங்கே சிவப்பு நிற செக்ஷன்கள் உள்ளன.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை, உட்புறத்திலும் என் லைன் கார் என்பதால் சிவப்பு நிற ஆக்ஸென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் உள்ள லைட்டிங் சிவப்பு நிற ஆம்பியன்ஸ் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்குள்ளே நல்ல சிறப்பான லுக்கையும் நல்ல ஸ்போர்ட்டியான பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் இருக்கிறது.
இதுபோக ஸ்டேரிங் வீல், கியர் லிவர் ஆகிய பகுதிகளில் என் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியில் கருப்பு நிற லேதர் கொண்டு சீட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் சீட்டுகளில் என்லைன் லோகோ சிவப்பு நிற ஆக்சென்ட்களில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக சீட்டுகளில் சிவப்பு நிற நூல் கொண்டு தையல் வழங்கப்பட்டுள்ளது.இது கான்ட்ராஸ்டான லுக்கை தருகிறது.

இந்த புதிய கிரெக்டா என்-லைன் காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் என எடுத்துக் கொண்டால் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பழைய கிரெக்டா காரில் இருந்து, புதிய கரெக்டா காரில் உள்ள சஸ்பென்ஷன் சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக ஸ்டேரிங் செட்டப் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாம் என்லைன் காரின் பெர்ஃபார்மென்ஸ்காக மாற்றி அமைக்கப்பட்ட விஷயங்கள் ஆகும்.
புதிய கிரெட்டா என்-லைன் காரில் உள்ள என் 10 வேரியண்ட் கார் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவில் உள்ள டாப் வேரியண்டான எஸ்எக்ஸ் (ஓ) போலவே காட்சியளிக்கிறது. ஃபங்கியான லைட்டிங் சிஸ்டம், அனைத்து வீடுகளிலும் அலாய் வீல், முன்பக்கம் பார்ப்பதற்கு ஹூண்டாய் பாலிஷைட் எஸ்யூவி போன்ற வடிவமைப்பு, கிரே நிலத்தில் உள்ள பேஷ் பிளேட், இந்த காருக்கு ஒரு ரக்கடான லுக்கை தருகிறது.

இந்த காருக்கு உட்புறத்தை பொருத்தவரை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரில் உள்ள அதே பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளன. வேண்டிலேட்டட் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு 10.25 இன்ச் கொண்ட ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷன்காகவும், மற்றொன்று இன்போடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. டூயல் டேஷ் கேம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், மற்றும் போஸ் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகிய வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கிரெக்டா என்-லைன் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 158 பிஎச்பி பவர் 5500 ஆர்பிஎம்மிலும் 252 என்எம் டார்க் திறனை 1500 மற்றும் 3500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் லிட்டருக்கு 18 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதே இன்ஜின் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டால், 18.7 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர் ஆப்ஷன்களிலும் மூன்று விதமான டிரைவ் மோடுகள் உள்ளன.
அதன்படி எக்கோ, நார்மல், ஸ்போர்ட் ஆகிய மூன்று இருக்கிறது. இதுபோக 3 டிராக்ஷன் மோடுகளும் உள்ளன. அதன்படி ஸ்னோ, சான்ட் மற்றும் மட் ஆகிய மூன்று டிராக்ஷன் மோடுகளும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா காரின் அதே பாதுகாப்பு அம்சங்கள் தான் இருக்கிறது.

இந்த காரில் 6 ஏர் பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், லெவல் 2 அடாஸ் ஆகியன இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் பலர் எதிர்பார்த்தபடி ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் என்-லைன் வெர்ஷனை சிறப்பாக உருவாக்கி உள்ளது என சொல்லலாம்.
இந்த காரை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெல்லியில் ஓட்டி பார்க்கும்போது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 டிசிடி கியர் பாக்ஸ் கொண்ட கார் தான் எங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த காரை ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு ஃபன்னான அனுபவம் கிடைத்தது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதால் நல்ல பஞ்சான பிக்கப் இருந்தது. 7டிசிடி கியர் பாக்ஸ் சிறப்பாக வேலை செய்வது.
இந்த காரை ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாத்தும்போது கியரை மேனுவலாக மாற்ற பெடல் ஷிப்டரை பயன்படுத்தி மாற்றுவதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த ஆப்ஷன் எல்லாம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவிலேயே இருக்கிறது. ரெகுலர் மாடல் காருக்கும் என்-லைன் மாடல் காருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டேரிங் தான்.
ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரின் சஸ்பென்ஷன் செட்அப்பை பொறுத்தவரை கொஞ்சம் ஸ்டிப்ஃபாக இருக்கிறது. இதுபோக புதிய 18 அலாய் வீல் மற்றும் லோ புரோபைல் கொண்ட டயர்கள் இந்த காரை அதிக ஸ்பீடில் இயங்குவதற்கு உதவி செய்கிறது. இது மட்டுமல்லாமல் சிறு சிறு பள்ளமேடுகளை எல்லாம் மிக அசால்டாக கடந்து செல்கிறது. என்-லைன் காருக்கான தன்மை என்பது இதில் சிறப்பாக தெரிகிறது.
ஸ்டேரிங்கை பொருத்தவரை திருப்பங்களில் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. மிகப்பெரிய அளவிலான திருப்பங்களையும் மிக அசால்ட்டாக செய்ய முடிகிறது. இதனால் நீங்கள் அதிக திருப்பங்கள் நிறைந்த சாலைகளில் செல்லும்போது பெரிய அளவில் சிரமப்படத் தேவையில்லை. ஈசியாக கணித்து வாகனத்தை ஓட்டும் வகையில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சீட்டுகள் சொகுசாக இருக்கின்றன. முக்கியமாக நீண்ட தூரம் பயணம் செய்யும்போது இது பயணிகளுக்கு அழுப்பை தராத வகையில் உள்ளது. முக்கியமாக இதில் உள்ள வென்டிலேட்டர் ஃபங்ஷன் இந்த வெயில் காலத்தில் நிச்சயம் பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பு: ஹுண்டாய் நிறுவனத்தின் சிறப்பான எஸ்யூவி ஆகவே இருக்கிறது. இதில் கொஞ்சம் ஃபன்னான திரில்லான ரைடு விரும்புவர்களுக்காக இந்த என்-லைன் வெர்ஷன் கொண்ட கிரெக்டா அறிமுகப்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ஜாலியாக பயணிக்க இது ஏற்ற கார் தான். இந்த கார் ரூபாய் 16.82 லட்சம் முதல் 20.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.
அதாவது இந்த என்-லைன் வெர்ஷனுக்கு இணையான ரெகுலர் ஃபேஸ்லிஃப்ட் கிரெக்டா காரின் விலையை விட ரூபாய் 30,000 அதிகமான விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது. மிகக் குறைவான விலை உயர்வு தான் என்பதால் கொஞ்சம் ஃபன்னான ரைடு விரும்புவர்களுக்கு இந்த ஹூண்டாய் கிரெக்டா என்-லைன் கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









