டாடா பஞ்ச் பக்கம் இனி திரும்பிக் கூட பாக்க மாட்டாங்க! ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இவ்வளவு சூப்பரா இருக்குதா?

இந்தியாவில் எஸ்யூவிகள் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் பாக்ஸி ரக எஸ்யூவிகளுக்கு மக்கள் அதிகமாக விரும்பம் காட்டி வருகின்றனர். டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் இந்த ரகத்தில் பஞ்ச் காரை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய அளவில் விற்பனையை செய்ஐ வருகிறது.

டாடா பஞ்ச் உடன் மஹிந்திரா கேயூவி 100 காரும் இதே செக்மெண்டில் தான் விற்பனையாகி வருகின்றன. தற்போது மாத டாப் 10 கார் விற்பனை பட்டியலில் ஹூண்டாயும், டாடாவும் போட்டிப் போட்டு மாறி மாறி இரண்டாம் இடத்தை பிடித்து வருகின்றனர். இதற்கு மிகப்பெரிய அளவில் உதவுவது டாடா பஞ்ச் காரின் விற்பனை தான்.

Hyundai Exter review

டாடா பஞ்ச் காரின் விற்பனையைக் குறைக்கவும் கடும் போட்டியை வழங்கவும் ஹூண்டாய் நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில்
எக்ஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் ஹூண்டாயின் விற்பனையை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லுமா? இந்த காரை மக்கள் விரும்புவார்களா? இதைத் தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் குழு இந்த காரை ஓட்டி பார்த்தது. அதன் ரிவியூவை காணலாம் வாருங்கள்.

டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக், ஆரா செடான் ஆகிய கார்கள் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் தான் தயாராகிறது. ஆனால் டிசைன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பாராமெட்ரிக் டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.

Hyundai Exter review

இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் முன்பக்கம் பார்க்க பக்காவான டிசைனாக உள்ளது. ஸ்பிலிட் ஹெட்லைட் செட்டப், பாராமெட்ரிக் கிரில் ஆகியன சிறப்பான லுக்கை கொடுக்கிறது. ஹெட்லைட் புரோஜெக்டர் ஹெட்லைட்களாக உள்ளன. இது போக H வடிவில் எல்இடி டிஆர்எல் லைட் வழங்கப்பட்டுள்ளது .

இது போக இந்த எக்ஸ்டர் காரின் முன்பக்கம் கீழ் பகுதியில் சில்வர் வடிவ ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது கிரில் பகுதிக்குக் கீழே வழங்கப்பட்டுள்ளது. பானட் பகுதியில் ஹூண்டாய் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பிலிட் ஹெட்லைட் இடையே எஸ்டர் என்ற பெயர் ஆங்கிலத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

Hyundai Exter review

இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் ஃப்ளார்டு வீல் ஆர்ச்சுகள் உள்ளது.வீலை பொருத்தவரை 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போகக் கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டனா, பாடி கிளாடிங், சி பில்லரில் பாராமெட்ரிக் டிசைன் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் பின்புறத்தைப் பொருத்தவரை எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் H வடிவ எலெமெண்ட்கள் உள்ளது.இதன் டெயில் லைட் ஹூண்டாய் பேட்ஜ் உடன் பாராமெட்ரிக் சிக்னேச்சர் டிசைன் கொண்ட பிளாஸ்டிக் செக்ஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் முக்கியமான ஹைலைட் ஸ்கிட் பிளேட் தான் இது சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலே ஸ்பாய்லர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது பார்க்கின் லைட்டு வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Exter review

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை அதன் டிசைன் உங்களுக்குப் பரிட்சியமானதாக இருக்கும். இது ஐ10 மற்றும் ஆரா காரின் உட்புற டிசைனை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மற்றும் கீழ்ப் பகுதி முழுவதும் கருப்பு நிற டிசைன் வழங்கப்பட்டுள்ளது.
மேல் பகுதி வழக்கம் போல வெள்ளை நிற தீம் வழங்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்கள் இருந்தது. இது ஹூண்டாய் ப்ளூ லிங்க் கனெக்டெட் கார் கனெக்டெட் கார் செட்டப் உடன் பில்டு இன் நேவிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Exter review

இந்த காரில் மற்ற அம்சங்களாக 4.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட், வாய்ஸ் கமெண்ட்ஸ், எலெக்ட்ரிக் சன்ரூஃப்,ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், 2 வழி டேஷ்கேம் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட் ஆகியன வழங்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்டர் காரின் சீட்கள் லெதர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் பெரிய அளவில் இடம் இருக்கிறது. உயரமானவர்களுக்கும் வசதியாக இருக்கும். மூன்று பேர்கள் அமர்ந்து செல்லலாம் ஆனால் சற்று இடைஞ்சலாகத் தான் இருக்கும்.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் அனைத்து சீட் பெல்ட்களுக்கான ரிமைண்டர், ஐஎஸ்ஓஃபிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான சீட் ஆங்கர்கள் உள்ளது.

Hyundai Exter review

அளவுகள் மற்றும் இன்ஜின்: இந்த கார் 3815மிமீ நீளம், 1710 மிமீ அகலம், 1631 மிமீ உயரம் 2450 மிமீ நீள வீல் பேஸ் மற்றும் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியன உள்ளன. இந்த காரின் பூட் பகுதியில் 391 லிட்டர் இட வசதி இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை இதே பிளாட்பார்மில் தயாராகும் காரின் அதே 1.2 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும்படி வழங்கப்பட்டுள்ளது. இது 81.8 பிஎச்பி பவரையும் 113.8 என்எம் டார்க் திறனை பெட்ரோல் வெர்ஷனிலும், 67.7 பிஎச்பி மற்றும் 95.2 என்எம் டார்க் திறனை சிஎன்ஜி வெர்ஷனிலும் வெளிப்படுத்தும்.

Hyundai Exter review

இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதில் சிஎன்ஜி வெர்ஷன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது. இந்த கார் பெட்ரோல் மேனுவலில் 19.4 கிலோ மீட்டர் மைலேஜூம், ஏஎம்டியில் 19.2 கிலோ மீட்டர் மைலேஜூம், சிஎன்ஜியில் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜையும் வாரி வழங்குகிறது.

டிரைவிங் இம்பிரஷன்: எக்ஸ்டர் காரின் உள்ள 1.2 லிட்டர் இன்ஜின் ஸ்மூத்தாகவும், புது தன்மையுடனும் 100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றாலும் அதிர்வுகள் இல்லாமலும், ஸ்மூத்தான ரெவ் ரேஞ்ச் உடனும் விற்பனைக்கு வருகிறது. கியர்கள் சுலபமாக ஸ்விஃப்ட் ஆகிறது. ஹூண்டாயின் இதே பிளாட்ஃபார்மில் வரும் மற்ற கார்கள் ஜெர்க்கியாக இருக்கும். இதில் அது இல்லை. சுலபமாக ஸ்விஃப்ட் ஆகிறது.

Hyundai Exter review

குறைவான வேகத்தில் ஸ்டியரிங் லேசாக இருக்கிறது. இதனால் லேனில் செல்வது சுலம் தான் லேசான இன்புட் கொடுத்தாலே சிறப்பாக செயல்படும். வேகம் செல்ல செல்ல ஸ்டியரில் வெயிட்டாக மாறிவிடுகிறது. இதனால் ஹைவேயில் பயணிக்க ஒரு நம்பிக்கையைத் தருகிறது. இதனால் இந்த காரை ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.

இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சன்பென்சன் செட்டப் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருக்கிறது. இதனால் பள்ள மேடுகளில் செல்லும் போது ஸ்மூத்தாக இல்லை. அதே நேரம் திருப்பங்களில் வேகமாகச் செல்லும் போது சிறப்பாக இருக்கிறது. ஆனால் பாடிரோல் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கிறது.

பிரேக்குகளை பொருத்தவரை சிறப்பாக வேலை செய்கிறது. இனிஷியல் பைட் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து அழுத்தினால் குறைவான தூரத்திலேயே கார் நின்றுவிடுகிறது. டயர்கள் கிரிப் உள்ளதாக இருக்கிறது. இந்த டயரை சிறப்பான மைலேஜிற்காக ஹூண்டாய் தேர்வு செய்துள்ளது. மைலேஜிலும் இந்த கார் வெகு சிறப்பாகவே இருக்கிறது.

இறுதி தீர்ப்பு: டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் இந்த எக்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். பஞ்ச் காருக்கு இந்த கார் கடும் போட்டியை வழங்கும். இந்த காரின் பாக்ஸி லுக், குறைவான விலை மற்றும் அதிக அம்சங்கள் எல்லாம் இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 11:00 [IST]
English summary
Hyundai exter review features specs design and all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X