புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் சிறப்பம்சங்கள் - ஒரு பார்வை

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான செடான் கார் மார்க்கெட்டில் 2012ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மாருதி டிசையர் விற்பனையில் பல புதிய சாதனைகளை பதிவு செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா அமேஸ் காரும் விற்பனையில் சாதித்து வருகிறது.

இந்த இரு மாடல்களின் வெற்றியை பார்த்து பல முன்னணி நிறுவனங்கள் புதிய காம்பெக்ட் செடான் கார்களை இந்த ஆண்டு வெளியிட உள்ளன. அதில், முதலாவதாக ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் செடான் மாடலாக எக்ஸ்சென்ட் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுக விலை

அறிமுக விலை

ரூ.4.66 லட்சம் என்ற விலையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனைக்கு வந்தது. மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களைவிட இது குறைவான விலையில் வந்துள்ளது. இது அறிமுக சலுகை விலையாகும்.

பெயர்

பெயர்

மார்க்கெட்டில் ஹூண்டாய் பிராண்டுக்கு பெயர் வாங்கி கொடுத்த ஆக்சென்ட் காரை நினைவூட்டும் விதத்தில் எக்ஸ்சென்ட் என்று இந்த காருக்கு ஹூண்டாய் பெயரிட்டுள்ளது. இது கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷனாக வந்திருப்பதால், முகப்பு, பக்கவாட்டு டிசைன் அப்படியே ஒத்திருக்கிறது. பின்புற டிசைனில் பூட்ரூம் சேர்க்கப்பட்டு உருவம் மாறியுள்ளதோடு, டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை இதனை வேறுபடுத்துகிறது. மொத்தத்தில் வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் டிசைனுடன் வந்துள்ளது.

வடிவம்

வடிவம்

கிராண்ட் ஐ10 கார் 3,765 நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பூட்ரூம் சேர்த்திருப்பதால், இந்த கார் 3,995 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2,425 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருப்பதால், கிராண்ட் ஐ10 காரைவிட இதன் பின் இருக்கை பயணிகள் சற்று வசதியாக கால் வைப்பதற்கு கூடுதல் இடவசதியை அளிக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரும் கிராண்ட் ஐ10 காரை ஒத்திருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்ச்சுகள், புளூடூத், யுஎஸ்பி மற்றும் 1 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம், கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகியவை எஸ் மற்றும் எஸ்எக்ஸ் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரியர் ஆர்ம் ரெஸ்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், ரியர் வியூ கேமரா ஆகியவை எஸ்எக்ஸ் டாப் வேரியண்ட்டில் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

பூட்ரூம்

பூட்ரூம்

பொருட்களை வைப்பதற்கு கூடுதல் இடவசதி இருப்பதாலேயே ஹேட்ச்பேக் கார்களை விட்டுவிட்டு, காம்பெக்ட் செடான் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் தாவுகின்றனர். இந்த காருக்கு 407 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் வசதி இருக்கிறது. ஹோண்டா அமேஸ் காரில் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சின்

பவர்ஃபுல் டீசல் எஞ்சின்

கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே டீசல் எஞ்சின்தான் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் டர்போ சார்ஜர் துணையுடன் கூடுதல் சக்தியை அளிக்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 72 பிஎஸ் பவரையும், 180.4 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் கிடைக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 83 பிஎஸ் பவரையும், 111.8 என்எம் டார்க்கையும் அளிக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடலில் மேனுவல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.9 கிமீ மைலேஜையும் அராய் சான்று தெரிவிக்கிறது. இதில், பெட்ரோல் மாடல் அமேஸ் காரைவிட கூடுதல் மைலேஜையும், டீசல் மாடல் அமேஸ் காரைவிட சற்று குறைவான மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இந்த காரின் எந்தவொரு வேரியண்ட்டிலும் வழங்கப்படவில்லை. ஆனால், எஸ் மற்றும் எஸ்எக்ஸ் வேரியண்ட்டுகளில் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், டிரைவர் மற்றும் சக பயணிக்கான ஏர்பேக்குகள் பேஸ் மாடல் மற்றும் எஸ் வேரியண்ட்டில் ஆப்ஷனலாக கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான தருணம்

சரியான தருணம்

புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரை வாங்குவதற்கு இது சரியான தருணமாக கூறலாம். ஏனெனில், தற்போது அறிவிக்கப்பட்ட விலை அறிமுக சலுகையாக இருப்பதால், விரைவில் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று, காருக்கான காத்திருப்பு காலமும் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2014, 15:35 [IST]
English summary
Going just by the popularity of Grand i10 hatchback (on which the Xcent is based) the answer would be a definite yes. But things are not always that simple. In the end it is the buyer who makes or breaks a product. Here are top things about Hyundai Xcent you should know to help you make a wise decision.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+