லம்போ வெனினோ vs லாஃபெராரி vs மெக்லாரன் பி1 சூப்பர் கார்கள் ஒப்பீடு

ஜெனீவா மோட்டார் ஷோவில் மிக முக்கிய மாடல்களாக கருதப்படும் இந்த மூன்று சூப்பர் கார்களும் அடுத்த தலைமுறை அம்சங்களை தாங்கி வந்துள்ளது. புதிய தொழில்நுட்பம், வசதிகள் என்பதோடு, இந்த மூன்று கார்களுமே லிமிடேட் எடிசன். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன.

பவர், ஸ்டைல் என நம்மை அசர வைக்கும் இந்த சூப்பர் கார்களை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாங்கியே தீருவேன் என பெரும் பணக்காரர்கள் கியூவில் நிற்பதற்கு காரணம் இல்லாமலா இருக்கும். இந்த மூன்று சூப்பர் கார்களிலும் முக்கிய அம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

விலை

விலை

லம்போ வெனினோ கார் 4.6 மில்லியன் டாலர் விலையிலும், லாஃபெராரி 1.5 மில்லியன் டாலர் விலையிலும், மெக்லாரன் பி1 கார் 1.3 மில்லியன் டாலர் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.

உந்துசக்தி

உந்துசக்தி

0-100 கிமீ வேகத்தை லம்போ வெனினோ 2.8 வினாடிகளிலும், லாஃபெராரி மற்றும் மெக்லாரன் பி1 கார்கள் 3.0 வினாடிகளிலும் எட்டிவிடும்.

 எஞ்சின் ஆற்றல்

எஞ்சின் ஆற்றல்

லம்போர்கினி வெனினோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் 750 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். லாஃபெராரி காரில் பொருத்தப்பட்டிருக்கும் 6.3 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சம் 963 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதேபோன்று, மெக்லாரன் பி1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3.8 லிட்டர் வி8 டிவின் டர்போ எஞ்சின் 915 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு லாஃபெராரி 350 கிமீ வேகத்தையும், வெனினோ 355 கிமீ வேகத்தையும், மெக்லாரன் பி1 350 கிமீ வேகத்தையும் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

இவை மூன்றுமே லிமிடேட் எடிசன் கார்கள். ஃபெராரி நிறுவனம் மொத்தம் 499 லாஃபெராரி சூப்பர் கார்களையும், மெக்லாரன் நிறுவனம் 375 பி1 கார்களையும், லம்போர்கினி வெறும் 3 வெனினோ கார்களையும் விற்பனை செய்ய உள்ளன.

எடை

எடை

லாஃபெராரி கார் 1100 கிலோ எடை கொண்டது. வெனினோ 1450 கிலோவும், மெக்லாரன் பி1 கார் 1395 கிலோ எடையையும் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2013, 14:37 [IST]
English summary
The three most sensational supercars of this year or even for some years to come - Lamborghini Veneno, Ferrari LaFerrari and McLaren P1 - were unveiled at the Geneva Motor Show. All three cars represent the best qualities of their makers and are the ultimate machines in their own rights.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+