காரை விட்டு இறங்க மனசே வரல! விலையை மட்டும் கரெக்ட்டா நிர்ணயித்தால் இந்த கியா கார் மார்க்கெட் ஹிட்டு!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கேரன்ஸ் கிளாவிஸ்' (Carens Clavis) கார் சமீபத்தில் மார்க்கெட்டில் வெளியீடு செய்யப்பட்டது. அதாவது, காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டதே தவிர்த்து, காரின் விலைகள் குறித்த விபரங்கள் வெளியிடவில்லை. காருக்கான புக்கிங்குகள் கடந்த மே 9ஆம் தேதி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மே 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமையில் அதிகாரப்பூர்வமாக கேரன்ஸ் கிளாவிஸ் காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கியா கேரன்ஸ் என்கிற எம்பிவி (MPV) ரக கார் 2022இல் இருந்து ஏற்கனவே விற்பனையில் உள்ள நிலையில், அதன் அடிப்படையிலான விலைமிக்க வெர்சனாக புதிய கேரன்ஸ் கிளாவிஸ் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கியாவின் விலை குறைவான எம்பிவி ரக காராக 2022இல் களமிறக்கப்பட்ட கேரன்ஸின் இன்றைய கால மேம்படுத்தப்பட்ட வெர்சனாக கேரன்ஸ் கிளாவிஸ் உள்ளது.

kia carens clavis first review

இதனாலேயே, நீளம், அகலம் உள்ளிட்ட அளவுகளில் கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் என கார்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், தோற்றத்தில் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட, புதிய கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரை தான் சமீபத்தில் நாங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். அப்போது காரை பற்றி எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை விரிவான ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

தோற்றம்: ஏற்கனவே கூறியதுபோல், கேரன்ஸ் காரை காட்டிலும் பிரீமியம் தரத்திலான வெர்சனாக புதிய கேரன்ஸ் கிளாவிஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. கேரன்ஸ் எம்பிவி காரின் உடலமைப்பில், கியாவின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆன இவி9 (EV9)-இன் டிசைனில் கேரன்ஸ் கிளாவிஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவி9 மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் என இரண்டுமே 'ஆப்போசைட்ஸ் அட்ராக்ட்' (Opposites Attract) என்கிற டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

kia carens clavis first review

புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் முன்பக்கத்தில் 3-விளக்குகளை உள்ளடக்கியதாக உள்ள ஹெட்லைட் சிஸ்டம் முக்கோண வடிவிலான குழிக்குள் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்களுக்கு பக்கத்தில் L-வடிவில் எல்இடி டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிஆர்எல்கள் இரண்டும் லைட்பார் ஒன்றின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் இரண்டும் முன்பை காட்டிலும் கூடுதல் வளைவாக உள்ளன.

இதில், முன்பக்க பம்பருக்கு கீழே சில்வர் நிறத்தில் ஃபாக்ஸ் பேஷ் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரில் புதிய டிசைனில் 17 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களுக்கு ஏற்ப காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருப்பதாலும், பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களை இணைக்கக்கூடிய லைட்பார் சற்று தடிமனானதாக இருப்பதாலும் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் கார் பார்க்க ரக்டு தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

kia carens clavis first review

பெவ்டர் ஆலிவ், கிராவிட்டி கிரே, ஸ்பார்க்லிங் சில்வர், அரோரா பிளாக் பேர்ல், கிளியர் வொயிட், கிளாசியர் வொயிட் பேர்ல், இம்பெரீயல் ப்ளூ மற்றும் ஐவோரி சில்வர் க்ளோஸ் என மொத்தம் 8 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கியா கேரன்ஸ் கிளாவிஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய காருக்கு உள்ளே சென்றால், முதலாவதாக நம்மை டேஸ்போர்டு (Dashboard) வசீகரிக்கிறது.

காரினுள் டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன் டிஸ்பிளேவுக்கு 10.25 இன்ச்சில் திரை மற்றும் ஓட்டுனருக்கான தகவல்களை வழங்கக்கூடிய 10.25 இன்ச் திரை என இரண்டும் ஒன்றாக ஒரே திரையாக 22.62 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், டிரைவர் சீட்டில் அமர்ந்தால், ஏதோ விமானத்தின் காக்பிட்டிற்குள் அமர்ந்தது போன்ற உணர்வு கிடைக்கிறது.

kia carens clavis first review

இதில், இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியதாக உள்ளது. டேஸ்போர்டுக்கு கீழே ஏசி செட்-அப்பிற்கான துளைகள் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்டேரிங் சக்கரமும் புதியதாக உள்ளது. கேரன்ஸ் கிளாவிஸ் காரினுள் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 4-வழிகளில் மடக்கக்கூடிய டிரைவர் இருக்கையை சொல்லலாம்.

இவற்றுடன், 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் பெரிய பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ள புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் டாப் வேரியண்ட்களில் 360-டிகிரி கேமரா மற்றும் கியா கனெக்டட் கார் தொழிற்நுட்பத்தை கூடுதலாக பெறலாம். கேரன்ஸ் கிளாவிஸ் காரில் மிக முக்கியமான அம்சமாக, லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது.

kia carens clavis first review

லெவல்-2 அடாஸ் மூலமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கமாக கார் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி, சாலையில் கார் பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளை பெறலாம். அதேநேரம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, ஹில் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், இறங்கு முகமான சாலையில் இறங்கும்போது தேவையான பிரேக் கண்ட்ரோல், ஏபிஎஸ் போன்ற வழக்கமான பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் பெற்றுள்ளது.

இயந்திர நுட்பங்கள்: கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டு வரும் அதே மூன்று என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தான் அப்படியே கேரன்ஸ் கிளாவிஸ் காரிலும் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் கேரன்ஸ் காரை போன்று, கேரன்ஸ் கிளாவிஸ் காரிலும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்காது.

kia carens clavis first review

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 113.4 பிஎச்பி மற்றும் 143.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது இல்லாமல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கேரன்ஸ் கிளாவிஸ் கிடைக்கும். அதிகப்பட்சமாக 158 பிஎச்பி மற்றும் 253 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

கேரன்ஸ் காரில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை பெற முடிவதில்லை. ஆனால், புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரில் டர்போ என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை வாங்க கியா வழிவகை செய்துள்ளது. டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்காக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

kia carens clavis first review

அதிகப்பட்சமாக 114.4 பிஎச்பி மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் புதியதாக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரில் பெரிய அளவிலான சக்கரங்கள் & டயர்கள் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் போன்ற மெக்கானிக்கல் அப்டேட்களையும் கியா கொண்டுவந்துள்ளது.

டிரைவிங் அனுபவம்: சாலையில் ஓட்டும்போது கேரன்ஸ் கிளாவிஸ் கார் எங்களுக்கு மிகவும் சவுகரியமான உணர்வை வழங்கியது. நாங்கள் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கேரன்ஸ் கிளாவிஸ் காரை ஓட்டினோம். குறிப்பாக, நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை என்ஜினின் அதிகப்படியான வேகத்தில் முந்தும்போது கார் ஜாலியான பயண அனுபவத்தை வழங்கியது.

kia carens clavis first review

கியர்களை மாற்றுவதற்கு டிசிடி கியர்பாக்ஸ் மிக மென்மையானதாக இருந்தது என்றாலும், கியர் சேஞ்ச் இன்னும் ஷார்ப்பானதாக இருந்திருக்கலாம். ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்று ரைடிங் மோட்களிலும் ஒவ்வொரு விதமான த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ரைடிங் மோடிலும் ஒவ்வொரு விதமான எடையில் ஸ்டேரிங் சக்கரம் இருந்தது.

சஸ்பென்ஷன் செட்-அப்பை பொறுத்தவரையில், கியா கேரன்ஸ் காரை காட்டிலும் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரில் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளம், மேடுகளில் கேரன்ஸ் கிளாவிஸ் இன்னும் சிறப்பானதாக செயல்பட்டது. பெரியதாக குலுக்கல் இல்லாத பயணத்துடன், நன்கு விசாலமான முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது கேரன்ஸ் கிளாவிஸ் காரின் மிகுந்த சவுகரியமான பயண அனுபவத்தை அனுபவிக்க முடிகிறது.

kia carens clavis first review

கேரன்ஸ் கிளாவிஸ் ஆனது மூன்று வரிசைகளில் இருக்கைகளை கொண்ட கார் ஆகும். இதில் 3வது இருக்கை வரிசையில் நிறைய இடவசதி கிடைக்கிறது என்றாலும், 3வது இருக்கை வரிசை ஆனது உயரம் குறைவானவர்களுக்கே ஏற்றதாக இருக்கும். சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையானதாக இருப்பதால், வளைவுகளில் திரும்பும்போது கூட 3வது இருக்கை வரிசையில் அமர்பவர்களுக்கு குலுக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் கியா கேரன்ஸை காட்டிலும் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் சிறப்பானதாக உள்ளதால், இன்றைய கால மாடர்ன் கார்களுக்கு ஏற்றதாக கியா கேரன்ஸ் கிளாவிஸ் உள்ளது என்பதை எந்தவொரு தயக்கமுமின்றி சொல்லலாம். ஆதலால், கியா கேரன்ஸை வாங்க நீண்ட நாட்களாக யோசித்து வருபவர்கள் தைரியமாக அதன் அப்டேட் வெர்சனான புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரை வாங்கலாம் என்பது எங்களது பரிந்துரைப்பு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 13:00 [IST]
English summary
Kia carens clavis first test drive review design features engine all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X