இந்தியாவிற்கு வரவே வராதுன்னு சொன்னாங்க! இப்ப வந்துடுச்சு! இந்த காரை ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?
2021ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வேதச அளவில் ஆட்டோமொபைல் துறையை புரட்டி போடும் அளவிலான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் அந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பெரிய மற்றம் போல்டான கார் ஒன்று கண்காட்சியை காண வந்தவர்களின் கண்ணை பறித்தது. இந்த கார் எப்பொழுது சாலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அந்த கார் தான் கியா இவி 9 கான்செப்ட் கார்.
இந்த கார் பெரியதாகவும், ஃப்யூச்சரிஸ்டிக்கான அம்சங்கள் கொண்டதாகவும், உட்புறத்தை பார்த்தால் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் ரூம் போல இருந்ததால் பலர் இந்த காரை விரும்பினர். இது மட்டுமல்லாமல் இது முற்றிலுமாக எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டதால் இந்த கார் விற்பனைக்க வந்தால் பெரும் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த கான்செப்ட் கார் அடுத்த 2 ஆண்டுகளில் விற்பனைக்கு வந்தது. கியா நிறுவனம் தனது இவி9 காரை முதலில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. பின்னர் படிப்படியாக மற்ற மார்கெட்களுக்கு கொண்டு வரப்பட்டும் என கூறப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் இந்த கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த காரை கியா நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது புதிய கார்னிவெல் காரை அறிமுகப்படுத்தும் போதே இந்த காரையும் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இப்பொழுது ரூ1.3 கோடி என் றவிலையில் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் பெரும்கோடீஸ்வரர்கள் மட்டுமே இந்த காரை வாங்க முடியும் என்ற நிலையிலங் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எல்லாம் இந்த காரில் இருக்குமா? இந்த காரை ஓட்டி பார்க்க எப்படி இருக்கும்? இந்த காரில் உள்ள மற்ற வசதிகள் எப்படி? 5 ஸ்டார் ஹோட்டல் ரூம் மாதிரி வடிவமைக்கப்பட்ட கேபின் எப்படி இருக்கிறது? இதை சோதித்து பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவினர் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்தனர். எங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கியா இவி 9 காரை பொருத்தவரை ஒரே ஒரு வேரயன்டில் மட்டுமே கிடைக்கிறது. டாப் வேரியன்டான ஜிடி லைன் வேரியன்டை மட்டுமே அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. பிளாங்க் செய்யப்பட்டு ஹெட்லைட் பொருத்தப்பட்ட புலி கண் போன்ற தோற்றத்தில் இதன் முன்பக்க கிரில் பகுதி இருக்கிறது. இதில் ஹெட்லைட் உயர வாக்கில் பொருத்தப்பட்டுள்ளது. அதிலேயே எல்இடி டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது போக பானட் பகுதியில் கியா பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. இது போக பெரிய ஏர் இன்டேக் பகுதி முன்பக்க பம்பரில் கீழ் பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக போலியான ஸ்கிட் பிளேட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பக்கவாட்டு பகுதி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களிலேயே சிறப்பான வடிவமைப்பை கொண்ட காராக இருக்கிறது. இதில் ஃபென்டர் பகுதியில் ஷார்ப்பான லைன்கள், ஃப்ளோட்டிங் ரூஃப் பகுதி கதவுகளின் கீழ் பகுதியில் வித்தியாசமான வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதில் 20 இன்ச் ஏரோ டைமிக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்பக்கமும் அதே டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது. டெயில் கேட் பகுதியிக்கு மேல பெரிய ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை சுற்றி கருப்பு நிற கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாககாரின் பின்பக்க ஸ்கிட் பிளடே்டாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இது காரின் லுக்கை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த காரின் உட்பகுதியில் வேற லெவல் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இ்நத காரில் 3 ஸ்கிரீன் கொண்ட டேஷ் போர்டுகள் வழங்கப்பட்டள்ளது. இதில் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்பிளே மற்றும் மற்றொரு 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றொரு 5 இன்ச் ஸ்கிரீன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஃபிஸிக்கல் பட்டன்கள் இல்லை. டச் ஸ்கிரீன் மூலமே கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.

இந்த காரின் சீட்டுகளை பொருத்தவரை பெரியதாகவும் சொகுசு வசதி நிறைந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள டிரைவர் சீட்டை 18 வழிகளில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதில் மெமரி ஃபங்சனும் இருக்கிறது. முன்பக்க பயணிகள் சீட்டை 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதனால் சிறப்பான சீட் வடிவமைப்பு இந்த காரில் இருக்கிறது.
இரண்டாவது வரிசை சீட்கள் கேப்டன் சீட்களாக உள்ளன. இந்த சீட்டுகள் எல்லம் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகளாகவும் மசாஜ் அம்சம் கொண்டதாகவும் இருக்கிறது. பயணத்தின் போது ரிலாக்ஸ் செய்து கொள்ள போதுமான வசதிகள் இந்த காரில் இருக்கிறது. மூன்றாவது வரிசை சீட்டை சாய்த்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால் பயணிகள் போதுமான இட வசதியை இதில் அனுபவிக்க முடியும்.
இது போக இந்த காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 4 ஸ்போக் கொண்டே எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் டெலஸ்கோப் ஸ்டியரிங் வீல் அதன் நடுவே கியா லோகோ லுமினேட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக இந்த காரில் வி2எல், ட்வின் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்,மற்றும் பவர்டு டெயில் கேட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்ககிறது.
இது போக இந்த காரில் பாதுகாப்பிற்காக 10 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெளபிலிட்டி கண்ட்ரோல்,பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் செய்யக்கூடிய 360 டிகிரி சரவுண்ட் கேமரா, 27 ஆட்டோமெட்டிக் அம்சங்களுடன் கூடிய லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்ப அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கியா இவி9 காரின் அளவுகளை பொருத்தவரைவ 5,015மிமீ நீளம், 1980 மிமீ அகலம், 180 மிமீ உயரம் மற்றும் 3100 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 3100மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 2664 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.
இந்த காரில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் முழு சார்ஜில் 561 கி.மீ ரேஞ்ச் தரும் என தெரிவித்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 350 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை டிசி சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 10-80 சதவீத சார்ஜை வெறும் 24 நிமிடத்தில் ஏற்றிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி டுயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது காருக்கு 380 பிிஎச்பி பவரையும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.3 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பெனி சொல்வது படி இந்த கார் பெரிய எஸ்யூவி காராகவே இருக்கிறது. டிரைவர் சீட்டில் அமரும் போது பெரிய காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது நமக்குதெளிவாக இரகு்கிறது. இந்த காரை ஓட்டடும் போது பெரிய காரையும் சுலபமாக ஓட்டிச்செல்ல முடிகிறது. முக்கியமாக ஹைவேயில் ஓட்டும்போது சிறப்பாக செயல்படுகிறது. மெதுவாக செல்லும்போசது சஸ்பென்சன் சற்று டைட்டாக இருப்பது தெரிகிறது. ஆனால் வேகமாக செல்லும் போது சிறப்பாக செல்படுகிதறது. சிறப்பான ரைடிங் அனுபவம் இந்த காரில் கிடைக்கிறது.
பெரிய ஆர்ம் சேர் கொண்ட சீட்கள், நீண்ட தூர பயணத்தையும் சுலபமாக கடந்து ரிலாக்ஸாக பயணிக்க உதவுகின்றனர். இதில் உள்ள சாஃப்டான சஸ்பென்சன் காருக்குள் கொஞ்சம் ரோல் ஆகும் அனுபவத்தை வழங்குகிறது. அதிக வேகத்தில் பயணிக்கும் போது பயணிகளுக்கு இதனால் சற்று அசெளகிரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த காரில் உள்ள பிரேக்குகள் சிறப்பாக செயல்படுகின்றனர். மிக விரைவாகவே வேகமாக செல்லும் காரை பாதுகாப்பாக நிறுத்துகிறது. இதில் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிங்கிள் பெடல் மூலம் கூட இந்த காரை டிரைவ் செய்ய முடியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கியா இவி 9 கார் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. வெளிப்புறமும், கேபின் பகுதியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் இதில் தாராளமாக சொகுசாக பயணிக்கலாம்.இதில் ஏராளமான தொழிற்நுட்பம் மற்றும் சொகுசு அம்சங்கள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









