எந்திரன் சிட்டி 2.0 வை விட ஏகப்பட்ட அப்டேட் இந்த செல்டோஸ் 2.0ல இருக்குது! ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

கடந்த 2019ம் ஆண்டு கியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய செல்டோஸ் காருடன் காலடித் தடத்தை எடுத்து வைத்தது. ஆந்திராவில் தனது ஆலையை அமைத்து ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக இந்த செல்டோஸ் காரை களம் இறங்கியது. தற்போது 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.செல்டோஸ் விற்பனையில் பெரும் சாதனையே படைத்துள்ளது.

செல்டோஸ் காரின் விற்பனை கியா நிறுவனத்தை இந்தியாவின் 5வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக கியா நிறுவனத்தை மாற்றியது. இதற்கு முக்கியமான காரணம் அந்த காரின் லுக் தான். கியா அறிமுகமான காலகட்டத்தில் தான் மாருதி சுஸூகி, எம்ஜி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் இந்த செக்மெண்ட் உள்ளே வந்தனர். செல்டோஸ் காருக்கு போட்டியாக கார்களை களம் இறங்கினர்.

kia seltos facelift review

இந்நிலையில் தொடர்ந்து அப்டேட்களை செய்து கியா செல்டோஸ் கார் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விற்பனையாகி வருகிறது. கியா செல்டோஸ் கார் சமீபத்தில் செல்டோஸ் 2.0 என்ற பெயரில் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் இந்த காரை ஓட்டி பார்க்க கியா நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்தது. எங்கள் குழு நாக்பூருக்கு இந்த காரை ஓட்டி பார்க்க விரைந்தது. இந்த கார் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

டிசைன் மற்றும் அம்சங்கள்: முதலில் பார்க்கும் போது செல்டோஸ் 2.0 காரின் டிசைன் பழைய காரின் டிசைனை விட பெரிய அளவில் மாற்றப்படவில்லை என்பது தெரிந்து சற்று உற்றுக் கவனித்தால் அதில் உள்ள மாற்றங்களைக் கண்டு முடியும். முன்பக்கம் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேரியின்ட் பேட்ஜ் இல்லை.

kia seltos facelift review

இது போக டே டைம் ரன்னிங் லைட் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் புதிய டிசைனில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ஜிடி மற்றும் எக்ஸ் லைன் ஆகிய வேரியன்ட்கள் சற்று ஸ்போர்ட்டியாகவும், மற்ற வேரியன்ட்களுக்கு வேறு விதமான செட்டப் உடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. வீல்களில் புதிய டிசைன் வழங்கப்பட்டுள்ளது. வேரியன்டை பொருத்து வீலின் அளவுகள் மாறுபடும் 5 வீல் ஆப்ஷன்கள் உள்ளன. 4 அலாய் வீல்களும் 1 ஸ்டீல் வீல் ஆப்ஷன் உள்ளது. இது 16-18 இன்ச் என அளவுகளில் மாறுபடும்.

kia seltos facelift review

பின்பக்கம் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய காரில் இருந்த கிரோம் பாருக்கு பதிலாக கனெக்டெட் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. ஜிடி லைன் மாடலில் 2 எக்ஸாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் பின்பக்கம் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டை பொருத்தவரை இரண்டு 10.25 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதே டிஸ்பிளே தான் இவி 6 காரிலும் வழங்கப்பட்டுள்ளது. வலது பக்கம் இருப்பது டிஜிட்டல் டிஸ்பிளேவாகவும், இடது பக்கம் இருப்பது எச்டி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

kia seltos facelift review

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் கருவி போஸ் பிரிமியம் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது கியா கனெக்ட் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது செல்போன் மற்றும் ஸ்மாட் வாட்ச்களுடன் இணைக்க முடியும். இதில் ஏராளமான கனெக்டெட் கார் தொழிற்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செல்போன்/ ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் இதை கண்ட்ரோல் செய்யலாம்.

இந்த செல்டோஸ் 2.0 காரில் இரண்டு சோன், முழுமையான ஆட்டோமெட்டிக் ஏசி சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.சீட்கள் வசதியாக இருக்கும்படி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்களில் வென்டிலேஷன் ஆப்ஷன் இருக்கிறது. பின்பக்க சீட்கள் 6 அடி உயரம் இருந்தாலும் அவர்களுக்கும் வசதியாக இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

kia seltos facelift review

கேபினை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள டூயல் பேன் சன்ரூப் வழங்கப்பட்டுள்ளது. இதை வாய்ஸ் கமெண்டிலேயே ஒப்பன் செய்தும் கிளோஸ் செய்தும் கொள்ளலாம். மேலும் இந்த காரில் போன் சார்ஜர், ஏர்ஃப்யூரிபயர், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, லெதரேட் அப்ஹோல்சரி ஆகிய வசதிகள் இருக்கிறது.

இந்த புதிய செல்டோஸ் 2.0 காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ், மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

kia seltos facelift review

இந்த செல்டோஸ் 2.0 காரில் அடாஸ் லெவல் 2 அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாப்- கோ வசதிகளுடனான க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கம் கோலிஷன் வார்னிங் மற்றும் அவாய்டென்ஸ் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் கோலிஷன் வார்னிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது.

இன்ஜின் மற்றும் டைமெண்ஷன்: இந்த கியா செல்டோஸ் காரில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல நேச்சுரலி அஸ்பயர்டு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113 பிஎச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

அடுத்ததாக புதிய இன்ஜினாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது காருக்கு 158 பிஎச்பிபவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 6
ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வருகிறது.

அளவுகளைப் பொருத்தவரை பழைய செல்டோஸ் காரின் அளவுகள் எதுவும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது. இந்த கார் 4365 மிமீ நீளம், 1800 மிமீ அகலம், 1645 மிமீ உயரம், 2610 மிமீ வீல் பேஸ் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் 433 லிட்டர் பூட் வசதி ஆகியன உள்ளது.

டிரைவிங் இம்பிரஷன்: எங்கள் குழு அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸ் 2.0 காரின் டர்போது சார்ஜ்டு இன்ஜின் உடன் 7 டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்ட காரை ஓட்டி பார்த்தோம். இது இந்த செக்மெண்டிலேயே பவர்ஃபுல் இன்ஜினை கொண்ட காராகும். இது அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும், 253 என்எம் டார்க் திறனை 1500 முற்றும் 3500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் மூன்று இன்ஜின் மோடுகள் உள்ளது. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகியன உள்ளன. இது கொடுக்கப்படும் திரட்டலுக்கான ரெஸ்பான்ஸை பொருத்து வழங்கப்பட்டுள்ளது. எக்கோ மோடில் குறைவாகவும் ஸ்போர்ட் மோடில் அதிகமாகவும் இருக்கிறது. இந்த சிஸ்டம் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

இன்ஜினின் பவர் டெலிவரி ஆரம்பம் முதல் சிறப்பாக இருக்கிறது. டர்போ சிறப்பாக வேலை செய்கிறது. நடுத்தர வேகத்திலும், அதிக வேகத்திலும் இன்ஜின் திறன் சிறப்பாக இருக்கிறது. 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் கியர் ரேஸியோகளை ஸ்மூத்தாக ஸ்விஃப்ட் செய்கிறது. சிட்டி பகுதியில் பயன்படுத்த ஏற்ற காராக இது இருக்
கும். ஓவர் டேக் செய்யும் போது சில விநாடிகள் கியர் ரேஸியோவை ஸ்விஃப்ட் செய்து பயணிக்கத் தேவைப்படுகிறது.

சஸ்பென்சன் செட்டப்பை பொருத்தவரை வழக்கமாகச் சிறப்பாகவே வழங்கப்பட்டுள்ளது. சற்று ஸ்டிஃப்பான செட்டப் வழங்கப்பட்டுள்ளது. திருப்பங்களில் பாடி ரோல் இல்லாத அளவிற்கு இது செட் செய்யப்பட்டுள்ளது. ஸ்டியரிங் லைட்டாகவும், கையாள சுலபமாகவும் உள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் செல்லும் போது லேன்களை மாற்றுவது வெகு சுலபம் தான். அதே நேரம் டிரைவங் மோடை எக்கோவிலிருந்து ஸ்போர்ட்டிற்கு மாற்றும் போது ஸ்டிரயரிங் அதிக வெளியிட்டாகவும் ஷார்ப்பாகவும் மாறுகிறது.

அடாஸ் தொழிற்நுட்பம் உட்புகுத்தப்பட்டது வரவேற்றக்கப்பட வேண்டியது தான். இந்த சிஸ்டம் சிறப்பாக வேலை செய்கிறது. உங்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை இது உறுதி செய்யும். கியா இந்த செல்டோஸ் 2.0 காரில் பயணிப்பவர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பை அந்நிறுவனம் வழங்குகிறது. கியா நிறுவனம் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இறுதித் தீர்ப்பு: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டது, அடாஸ் தொழிற்நுட்பம் ஆகிய சேர்ந்து கியா செல்டோஸ் காரை ஒரு தரமான எஸ்யூவி காராக மாற்றியுள்ளது. தினந்தோறும் பயன்படுத்துபவர்களுக்கும், கொஞ்சம் வீக் எண்ட் ஃபன் தேவைப்படுபவர்களுக்கும் இந்த கார் நிச்சயம் ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 23, 2023, 10:09 [IST]
English summary
Kia seltos facelift review engine spec feature all other details discussed
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X