ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட காரா இது! வெளிநாட்டு நிறுவனங்களே பொறாமை கொள்ளும் அழகு.. டால் பாய் ஸ்டைல் வேற லெவல்!

கியா (Kia) நிறுவனம் எஸ்யூவி கார் (SUV Car)-கள் மார்க்கெட்டில் ஏற்கனவே தனக்கென ஓர் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, அதன் ராச்சியம் 'பி பிரிவு' எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் அதன் புகழ்பெற்ற சொனெட் (Sonet) மற்றும் செல்டோஸ் (Seltos) ஆகிய இரண்டு எஸ்யூவி கார் மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்துகின்ற மாதிரியான ஓர் தயாரிப்பை சமீபத்தில் வெளியீடு செய்தது. சிரோஸ் (Syros) எஸ்யூவி-யே அது ஆகும்.

இது ஓர் டால் பாய் உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். உயரமான மற்றும் பெட்டி போன்ற அமைப்பை இது கொண்டிருக்கும். மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் தன்னுடைய இந்த புதுமுக காரை சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே கியா நிறுவனம் வெளியீடு செய்தது. தன்னுடைய முந்தைய தயாரிப்புகள் சிலவற்றில் காணப்பட்ட குறையை மிகப் பெரிய அளவில் இந்த கார் மாடலில் நிறுவனம் போக்கி இருக்கின்றது.

Kia syros review in tamil

குறிப்பாக, பின் பக்க இருக்கை அதிக இட வசதியைத் தாங்கியதாக உள்ளது. இத்தகைய காரையே சமீபத்தில் குருகிராமில் வைத்து நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது இந்த கார் பற்றி அறிந்துக் கொண்ட தகவல்களையே இந்த பதிவில் நாங்கள் ரைடு ரிவியூ தகவலாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுபற்றிய விரிவான தகவலைக் காணலாம்.

கியா சிரோஸ் எஸ்யூவி காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: கியா நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக இவி9 மற்றும் இவி3 ஆகியவை இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. உலக சந்தைகள் சிலவற்றில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Kia syros suv cabin

இந்த கார் மாடல்களின் உருவ அமைப்பை தழுவியே சிரோஸ் கார் மாடலை கியா நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அதற்கு டால் பாய் உருவமும், பெட்டி போன்ற தோற்றமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், முற்றிலும் மாறுபட்ட வெளிப்புற தோற்றத்தை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, இதன் முன் பக்க தோற்றம் இருக்கும் ஸ்டைலை வேறு எந்த கார் மாடலிலும் பார்க்க முடியவில்லை. பட்டையான கிரில், காற்றை உள் வாங்கும் வசதிக் கொண்ட பம்பர், கருப்பு நிற கிளாடிங் மற்றும் சில்வர் நிற பிளேட் ஆகியவற்றை இதன் பக்கத்தில் பார்க்க முடிகின்றது.

Kia syros suv rear view

இவையே சிரோஸ் கார் மாடலுக்கு புதிய லுக்கை வழங்கக் கூடியதாக இருக்கின்றன. இதுமட்டுமல்ல மூன்று அடுக்காக நிறுத்தப்பட்டதைப் போல ஐஸ் கட்டி போன்ற அமைப்புடைய லைட்டுகள், மீன் தூண்டில் முல் போன்ற அமைப்புடைய லைட் (இது இன்டிகேட்டராகவும் செயல்படும்) உள்ளிட்டவையும் இந்த காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் பின் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதியும் மிகவும் கவர்ச்சியான லுக்கையேக் கொண்டிருக்கின்றது. ஃப்ளஷ் வகை டோர் கை பிடிகள், சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா, மேம்பாலத்தைப் போன்ற அமைப்பைக் கொண்ட ரூஃப் ரெயில், வீலின் வளைவுகளில் கிளாடிங் மற்றும் 17 அங்குல கிரிஸ்டல்-கட் ரக அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவையே சிரோஸ் காரின் பக்கவாட்டு பகுதிக்கு அதிக கவர்ச்சியான லுக்கை வழங்கும் விதமாக இருக்கின்றன. இதேபோல், பின் பக்கத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக எல் வடிவ லைட், பெரிய விண்ட்ஸ்கிரீன், சிறிய ஸ்பாய்ளர், அழகிய ஸ்டாப் லைட், கீழ் பக்கத்தில் பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சில்வர் நிற பேனல் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

கியா சிரோஸ் காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் மிகுந்த கவர்ச்சியானதாகவும், மனம் கவர்ந்ததாகவும் காட்சியளிக்கின்றது. இரண்டு விதமான வண்ணங்களால் இந்த காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இதன் உட்பக்கம் சற்றே சொனெட் எஸ்யூவி காரின் உட்பக்கத்தை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கின்றது.

இருக்கை மற்றும் சிறப்பம்சங்களிலேயே இந்த ஃபீல் நமக்கு கிடைக்கின்றது. 30 அங்குல திரையை இந்த காரில் பார்க்க முடிகின்றது. மூன்று திரைகளின் தொகுப்பே இந்த திரை ஆகும். இதில், டிரைவருக்கான திரை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் என அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இது பார்க்க அழகாக தெரிந்தாலும், இதை பயன்படுத்துவதில் சற்றே சிரமமாக உள்ளது. குறிப்பாக, க்ளைமேட் கன்ட்ரோலை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் இது இருப்பதால், ஸ்டியரிங் வீலைச் சுற்றிச் சென்று அதை நாடக் கூடிய நிலையே உள்ளது. இதுவே எங்களுக்கு சிரமத்தை வழங்கும் விதமாக இருந்தது.

அதேவேளையில், இந்த விநோத வடிவமைப்பை ஈடு செய்ய சில கன்ட்ரோல் பட்டன்களையும் கியா வழங்கி இருக்கின்றது. ஆகையால், இந்த சிரமம் சற்றே தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கியா-வின் கார் இணைப்பு வசதி, வயர் இணைப்பு தேவைப்படாத ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதியைக் கொண்டதாக இருக்கின்றது.

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் கார் இணைப்பு வசதியின் வாயிலாக குரல் கட்டளை வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுவும், இந்தியாவின் சில முக்கிய மொழிகளிலேயே இதை செய்துக் கொள்ள முடியும். இத்துடன், ஓடிஏ அப்டேட் மற்றும் 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன் இருக்கைகள் சொகுசான அமர்வு அனுபவத்தை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. இதற்கு காரின் நான்கு இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் மோசமான கால சூழலில் சூப்பரான ரைடு அனுபவத்தைப் பெறவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது முதுகிற்கும் காற்றோட்டத்தை இதன் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்ந்து பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கைகளை போதுமான லெக் ரூமை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. சாய்த்தல் மற்றும் ரெக்லைன் ஆகியவற்றை இதில் செய்துக் கொள்ள முடியும். எனவே பின் இருக்கையாளர்களுக்கு இந்த காரில் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

மேலும், கூடுதல் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் பொருட்டு டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், கோப்பை தாங்கிகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பின்னிருக்கையாளர்களுக்கான மறைப்பான்கள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், ஏசி வெண்ட்டுகள், 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட் மற்றும் யுஎஸ்பி சி வகை சார்ஜிங் போர்ட்டுகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது.

ஆறு ஏர் பேக்குகள், பின் பக்க மற்றும் பக்கவாட்டு பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர் பாயிண்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பெரும் விபத்துகளின்போது போதிய பாதுகாப்பை சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வழங்க இவையே போதுமானவையாக இருக்கின்றன. ஆனால், இதில் பார்த்த குறிப்பிட்ட சில அம்சங்களை உயர்நிலை தேர்வில் மட்டுமே பார்க்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பத்தை அதிக விலைக் கொண்ட தேர்வுகளில் மட்டுமே பார்க்க முடியும்.

ஆமாங்க, இந்த அம்சத்தையும் கியா நிறுவனம் சிரோஸ் கார் மாடலில் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக 16பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மிக முன்பக்க மோதலை தவிர்க்கும் வார்னிங், லேனில் இருந்து தடம் மாறுவது குறித்த எச்சரிக்கை, க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய நிறுத்தம் மற்றும் செல்லுதல் போன்ற வசதிகளையே இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல வசதிகளை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கியா சிரோஸ்-இன் உருவ அளவு மற்றும் எஞ்சின் பற்றிய விபரங்கள்: கியா நிறுவனம் இந்த காரை அதிக இட வசதிக்கு முக்கியத்தும் வழங்கி வடிவமைத்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே டால் பாய் உருவத்தை இதற்கு வழங்கி இருக்கின்றனர். இதன் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,800 மிமீ மற்றும் உயரம் 1,665 மிமீட்டராகவும் இருக்கின்றது.

இதேபோல் இதற்கு 2,550 மிமீ அளவிலேயே வீல் பேஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த கார் கியாவின் சொனெட்டைக் காட்டிலும் அதிக உயரமானதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவைக் காட்டிலும் சிறியதாக இது இருக்கும். இந்த காருக்கு இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிக்கும் விதமாக 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், அதிக பொருட்களை ஏற்றிக் கொள்ளும் விதமாக 465 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் பின் இருக்கைகளை 40:20:40 அளவுகளில் மடித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும். இதன் டர்போ பெட்ரோல் மோட்டார் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த மோட்டாருடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதேபோல், டர்போ டீசல் மோட்டார் ஆப்ஷனும் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலையே அது உருவாக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றது.

கியா சிரோஸ் எஸ்யூவி ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? எங்கள் வசம் ரைடு ரிவியூ செய்து பார்க்க சிரோஸ் கார் மாடலின் பெட்ரோல் எஞ்சின், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட யூனிட்டே வழங்கப்பட்டது. இது மிக சிறப்பான நகர்தலை எங்களுக்கு வழங்கியது. காரை இயக்கத்தின் போது பிழிந்தெடுக்கக் கூடிய நபராக இருந்தால் இது நிச்சயம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மிகவும் விரைவான இயக்க உணர்வையே இது வழங்குகின்றது.

மிக முக்கியமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மென்மையானதாகவும், அதற்கு வழங்கப்பட்ட வேலையை நேர்த்தியாக செய்வதையும் நாங்கள் இந்த காரில் உணர்ந்தோம். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது மிகுந்த ஸ்மூத்தான ரைடு அனுபவத்தை இது வழங்கக் கூடியதாக இருந்தது.

இந்த காரில் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்றும் வெவ்வேறு விதமான இயக்க அனுபவத்தை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. குறிப்பாக, ஸ்போர்ட் மோட் வேற லெவல் இயக்க அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலேயே சிரோஸின் உச்ச வேகத்தை நம்மால் எட்ட முடியும்.

ஸ்டியரிங் வீல் ஹேண்ட்லிங்கும் மிக சிறப்பானதாக இருப்பதையே நாங்கள் உணர்ந்தோம். லேசானதாகவும், ஷார்ப்பான திருப்பங்களை வழங்கக் கூடியதாகவும் அது இருக்கின்றது. எனவே நெரிசலான போக்குவரத்தையும் இதன் வாயிலாக எளிதாக கையாளலாம். அதேவேளையில், அதிக வேகத்தில் இதில் சற்றே அதிக எடைக் கூடக் கூடிய உணர்வை உங்களால் பெற முடியும்.

நம்பிக்கையான அதி-வேக பயணத்திற்கு உறுதுணையாக இது இருக்கின்றது. இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பும் அருமையானதாக இருக்கின்றது. பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைகளில் பயணிக்க ஏற்ற சஸ்பென்ஷனே இவை ஆகும். பாடி ரோலும் இந்த காரில் குறைந்த அளவிலேயே இருக்கின்றது. சொல்லப்போனால் இது பெரிய அளவில் அசௌகரியத்தை ஏற்படுத்தாது.

ஆகையால், ஷார்ப்பான திருப்பங்களாக இருப்பின் கவலையே இல்லாமல் அதை நீங்கள் செய்யலாம். தொடர்ந்து பிரேக்கிங் செட்-அப்ம் கை தேர்ந்ததாக வேலை செய்கின்றன. நாங்கள் பயணித்தது உயர்நிலை தேர்வு என்பதால் அதில் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருந்தன. அது நச்சென்கிற பிரேக்கிங் அனுபவத்தையே வழங்கியது. விரைவான பிரேக்கிங்காக இருந்தாலும், பாதுகாப்பான பிரேக்கிங்காகவே அது இருந்தது. இதுபோன்று, இன்னும் பல நிலைகளில் இந்த கார் சிறப்பானதாகவே கியா சிரோஸ் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் தன்னுடைய முந்தைய கார் மாடல்கள் சிலவற்றில் காணப்பட்ட சிக்கல்களை சிரோஸ்-இல் இருந்து அகற்றியிருக்கின்றது. மிக முக்கியமாக பின்புற இடமின்மை சிக்கலை இதில் இருந்து அகற்றியிருக்கின்றது. இத்துடனேயே இந்த காரை தனித்து காட்சியளிக்கும் விதமாக அலங்கரிப்பம் செய்திருக்கின்றது. ஆகையால், சாலையில் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என நினைப்போர்களுக்கு ஏற்ற தேர்வாக இது இருக்கும்.

கியா நிறுவனம் இந்த காரையும் அதன் ஆந்திரா உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல் உலக நாடுகளின் தயாரிப்புகளுக்கு சவால்விடும் வகையில் இருக்கின்றது. ஆகையால், இந்திய கார் பிரியர்களின் கவனத்தை இந்த சிரோஸ் பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2025, 15:00 [IST]
English summary
Kia syros review in tamil design features specs dimensions driving impressions details
மேலும்... #kia motors #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X