சும்மா சீறிப் பாயுது! லம்போர்கினி பெர்ஃபாமனேட் எஸ்யூவி கார் ரிவியூ!
லாம்போர்கினி இந்த நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை. இந்நிறுவனம் சூப்பர் கார் தயாரிக்கத் துவங்கியதற்குப் பின்னால் உள்ள கதை பலருக்கும் தெரியும் ஃபொராரி நிறுவனர் லாம்போர்கினி நிறுவனர் சொன்ன வார்த்தைகளைக் கேட்காமல் அவரது அவமானப்படுத்தியதற்குப் பின்பு தான் லாம்போர்கினி உருவானது.
லாம்போர்கினி லோகோ உலகம் முழுவதும் பலருக்கும் கண்ணிற்குள்ளேயே இருக்கும். ஒரு முரட்டுத்தனமான காளையின் லோகோ தான் அது. 1980 களில் தான் முதன்முதலில் லாம்போர்கினி நிறுவனம் ராம்போ லாம்போ - எல் எம் 002 என்ற எஸ்யூவி செக்மெண்ட் காரை முதன் முதலில் களம் இறக்கியது. ஆனால் அதன் பின்னர் சூப்பர் கார்களிலேயே கவனம் செலுத்தத் துவங்கிவிட்டது.

அதன்பின்னர் கடந்த 2017ம் ஆண்டு லாம்போர்கினி நிறுவனம் சான்ட் அகட்டா போலோநீஸை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்ட உரூஸ் என்ற எஸ்யூவி காரை உருவாக்கியது. சுமார் 5 ஆண்டுகளாக கான்செப்ட் காராக மட்டுமே இருந்த இந்த கார் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே விற்பனைக்கு வந்தது.
இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது பலர் இதை மோசமாக விமர்சனம் செய்தனர் ஆடி க்யூ7, போர்ஷே கேயன்னி காருடன் போட்டியெனக் கிண்டல் செய்தனர். ஆனால் மக்கள் மத்தியில் இந்த உரூஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதுவரை எந்த லாம்போர்கினி காரும் விற்பனையாகாத அளவிற்கு அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது.

சான்ட் அகண்டா போலோகினீஷ் மார்க் பிளாட்ஃபார்ம் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றது. மோசமான விமர்சனங்களையும் தாண்டி இந்த கார் மார்கெட்டில் பெரிய வெற்றியைப் பெற்றது. லாம்போர்கினி நிறுவனம் மோசமான விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்தாண்டு இந்த உரூஸ் காரில் புதிய அப்டேட்டாக இரண்டு வெர்ஷன் காராக இதை வெளியிட்டது.
அதன்படி உரூஸ் மற்றும் உரூஸ் பெர்ஃபாமனேட் ஆகிய இரண்டு கார்களாக அறிமுகமானது. இதில் உரூஸ் பழைய காரின் அப்டேட்டாகவும், உரூஸ் பெர்ஃபாமனேட் கார் சூப்பர் எஸ்யூவியாகவும் அறிமுகமானது. பெர்ஃபாமனேட் வெர்ஷன் எடை குறைவாகவும் அதிக பவர் கொண்ட ஸ்பெஷல் எடிசன் சூப்பர் கார்களாக அறிமுகமானது.

சூப்பர் எஸ்யூவி என்ற பெயருக்கு நீதி செய்யும் வகையில் இந்த காரின் எடை சுமார் 47 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. பவரும் 16 எச்பிபவர் அதிகரிக்கப்பட்டு 666 எச்பி பவர் கொண்ட காராக இது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் சிறப்பான பெர்ஃபாமென்ஸை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாம்போர்கினி இந்த காரை பெங்களூருவிற்குக் கொண்டு வந்த போது இந்த காரை ஓட்டி பார்க்க டிரைவ் ஸ்பா்க் குழுவிற்கு ஒரு வாய்ப்பளித்தது. லாம்போர்கினி காரை ஓட்டி பார்க்கும் ஆர்வத்தில் எங்கள் குழுவும் முழு ஏற்பாடுகளுடன் சென்றோம். அந்த கார் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது என்ற ரிவியூவை காணலாம்
லாம்போர்கினி உரூஸ் பெர்ஃபாமனேட் - டிசைன்
ஒரிஜினல் உரூஸ் கார் முழுமையான லம்போர்கினி காராக அதன் ஸ்டைலிங்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஃபிளாட்ஃபார்மே எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷார்ப் மற்றும் எட்ஜி லுக் இந்த காரை ரோட்டில் யார் பார்த்தாலும் திரும்பிப் பார்க்கும்படி இருந்தது. பெர்ஃபாமனேட் காரில் ஓரிஜினல் உரூஸ் காரின் டிசைனை அப்படியே வைத்து சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளனர்.
உரூஸ் பெர்ஃபாமனேட் காரில் முன்பக்கம் பம்பரில் காற்றும் வகையில் அதிகமான வென்ட்கள் உள்ளன. இது வி8 இன்ஜினை விரைவாக கூல் செய்ய உதவுகிறது. இதன் பானட் பகுதி கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலும் வென்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் புதிய வீல் மற்றும் சைடு ஸ்கிட் கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பின்பக்கம் சைவு ஃபின் பகுதி அதே குறைந்த எடை மெட்டிரியலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டிஃப்யூசரும் கார்பன் பைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 4 டெயில் பைப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் அக்ராஃப்ரோவிக் டைட்டானியம் எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்டீரியர் ஒரிஜில் உரூஸ் காரின் அதே டிசைன் தான் உள்ளது. சில மாற்றங்களாக ஹெட்லைனர், ஹெக்ஸாகோனல் ஸ்டிரிட்ச்சிங் சீட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்டில் புதிய கிராஃபிக்ஸ், மோடை தேர்வு செய்வதில் புதிய ரேலி ஆப்ஷன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
லாம்போர்கினி உரூஸ் பெர்பாமனேட் - ஸ்பெக்ஸ்
லாம்போர்கினி உரூஸ் பெர்ஃபாமனேட் காரில் இன்ஜினை பொருத்தவரை 4.0 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 666எச்பி பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 850 என் எம் டார்க் திறனை 2250 முதல் 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த பவர் 4 வீல்களுக்கும் செல்கிறது. இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காராகும்.
உரூஸ் பெர்ஃபாமனேட் ஸ்போர்ட்ஸ் கார் புதிய ஆக்டிவ் சேஸிஸ் செட் மற்றும் 48 வி ஆக்டிவ் ஆண்டி ரோல் பார்கள் கொண்டுள்ளது. இந்த காரில் ரியல் வீல் ஸ்டியரிங் மற்றும் புதிய காயில் ஸ்பிரிங் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பழைய ஏர் சஸ்பென்சன் செட்டப்பால் ரைடிங் உயரம் 20 மிமீ வரை குறைந்திருந்தது. இந்த உரூஸ் பெர்ஃபாமனேட் கார் 5,137 மிமீ நீளமும், 2,026 மிமீ அகலமும், 1,618 மிமீ உயரமும் 3,006 மிமீ வீல் பேஸூம் கொண்டது. இந்த கார் மொத்தம் 2,150 கிலோ எடை கொண்டது.
இந்த உரூஸ் கார் 22 அல்லது 23 இன்ச் அலாய் வீல்களுடன் பைரலி பி ஜீரோ டிரோஃபியோ ஆர் செமி- ஸ்லீக் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பைரலி டயர் பொருத்தப்பட்ட முதல் எஸ்யூவி கார் இது தான் இந்த காரின் பெர்ஃபாமென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. 200 கி.மீ வேகத்தை வெறும் 11.5 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது. அதிகபட்சமாக இந்த கார் 308 கி.மீ வேகம் வரை சீறிப் பாயும் தன்மை கொண்டது.
டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ்
இந்த புதிய லம்போர்கினி உரூஸ் பெர்ஃபாமனேட் காரை எங்கள் குழு பெங்களூரு அருகே உள்ள நந்தி ஹில் பகுதிக்கு எடுத்துச் சென்று ஓட்டிப்பார்த்தோம். மொத்தம் 36 கி.மீ இந்த காரை ஓட்டினோம். தேசிய நெடுஞ்சாலை மற்றும் நந்தி ஹில் பகுதியில் உள்ள ஹேர்பின் வளைவுகள், ஆகிய பகுதிகளில் இந்த காரை ஓட்டிப்பார்த்தோம்.
Trofeo R டயர் மற்றும் லோயர்டு காயில் ஓவர் சஸ்பென்சன் செட்டப் ரோட்டில் சிறப்பாகச் செயல்பட்டது. இதன் ஸ்டிஃப்பர் பகுதி மோசமான சாலையில் அவ்வளவு மோசமாக ஒன்னும் செயல்படவில்லை. இந்த காரில் உள்ள வி8 ட்வின் டர்போ இன்ஜின் சிறப்பாகச் செயல்பட்டது. கஸ்டம் எக்கோ மோடில் பயணித்தோம். த்ராட்டல் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருந்தது. சாலையில் எங்கள் கார் செல்லும் போது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
குறுகலான வளைவுகள் நிறைந்த நந்தி ஹில் சாலையில் எளிமையாகப் பயணிக்க இந்த காரின் ரியர் வீல் ஸ்டிரியரிங் பயன்பட்டது. குறிப்பாகக் கொண்டை ஊசி வளைவுகளில் காரை திருப்பச் சுலபமாக இருந்தது. இந்த ரைடின் இரண்டாம் பாகமாக தற்போது கட்டுமானத்தில் இருக்கும் பிரேன் ரேஸ் வே பகுதியில் ஓட்டிப் பார்த்தோம்.
அந்த பகுதியில் லூசான, சரல் மண் இருந்தது. அதில் இந்த காரில் உள்ள புதிய ரேலி ஆஃப்ரோடின் மோடில் போட்டுப் பயணித்தோம். இந்த மோடில் பவர் பெரும்பாலும் பின்பக்க வீலுக்கு செல்கிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமாக இருந்தாலும் டிரிஃப்ட் மற்றும் டிரிட்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. ஃபன் ரைடிங்கை விரும்புபவர்களுக்குச் சிறப்பாக இருக்கும்.
இறுதித் தீர்ப்பு
லம்போர்கினி உரூஸ் பெர்ஃபாமனேட் கார் அதிக சத்தம் போடும் ஃபேன்ஸி கார் மட்டுமல்ல இதன் பெயருக்கு ஏற்றார் போல் பெர்ஃபாமென்ஸிலும் பிச்சு உதறுகிறது. சாலையிலும் இந்த கார் சிறப்பாகச் செயல்படுகிறது. அதிகமாக பெர்ஃபாமென்ஸ் மற்றும் எஸ்யூவியை விரும்புவார்களுக்கு இது நல்ல சாய்ஸ். உங்களிடம் காசு இருந்தால் இந்த காரை துணிந்து வாங்கி போடலாம்.


Click it and Unblock the Notifications








