மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார் - சிறப்பு பார்வை

ஒரு முழுமையான எலக்ட்ரிக் கார் நம் நாட்டில் இல்லையே என்ற குறையை தீர்த்து வைக்கும் வகையில் மஹிந்திரா ரேவா நிறுவனம் இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. எதிர்காலத்துக்கான வாகனமாக மஹிந்திரா ரேவா முன்வைத்திருக்கும் இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் டிசைன் மற்றும் வசதிகளுடன் வந்துள்ளது.

நகர்ப்புறத்துக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இந்த காரின் போக்குவரத்துக்கான செலவீனமும் மிக மிக குறைவாகவே இருக்கிறது. நாட்டின் 8 நகரங்களிலுள்ள 29 டீலர்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் இந்த காரை அடுத்த கட்டமாக தமிழகத்தில் இப்போதைக்கு விற்பனைக்கு கிடைக்காது. அடுத்த கட்டமாக அறிமுகம் செய்யும்போது தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில், மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த பார்வையை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசைன்

டிசைன்

பிரபல டிசி டிசைன்ஸ் கார் கஸ்டமைசேஷன் நிறுவனர் திலீப் சாப்ரியாதான் இந்த காருக்கான மாதிரி மாடலை உருவாக்கித் தந்தவர். அதில், பல மாறுதல்களை செய்து இ2ஓ கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ரேவாஐ காரை விட பன்மடங்கு மேம்பட்டிருக்கிறது இதன் டிசைன். நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

 மோட்டார்

மோட்டார்

இந்த காரில் 3 பேஸ் இன்டக்ஷன் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 26 பிஎஸ் பவரையும், 53 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஆட்டோமேட்டிக் கார்

ஆட்டோமேட்டிக் கார்

இந்த காரில் கியர்கள் கிடையாது. இது முற்றிலும் ஆட்டோமேட்டிக் காராக வந்துள்ளது. பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டர் மட்டும்தான்.

பிரேக்

பிரேக்

முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 81 கிமீ வேகம் செல்லும். இது நகர்ப்புறத்துக்கான காராக பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.

 சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணிநேரம் பிடிக்கும். மேலும், குயிக் சார்ஜ் என்ற வசதி மூலம் 15 நிமிடத்தில் சார்ஜ் செய்து 25 கிமீ தூரம் செல்ல முடியும்.

பேட்டரி சுத்தமாக தீர்ந்துவிட்டால்..

பேட்டரி சுத்தமாக தீர்ந்துவிட்டால்..

ஒருவேளை பேட்டரியில் மின்சாரம் முழுவதுமாக தீர்ந்துவிட்டால், சிறப்பு மொபைல்போன் சாப்ட்வேரால் இயங்கும் அவசரகால "ரேவாரிவைவ்" தொழில்நுட்ப வசதி மூலம் 8 கிமீ முதல் 9 கிமீ வரை செல்வதற்கான வசதி இருக்கிறது.

 மொபைல்போன் இணைப்பு

மொபைல்போன் இணைப்பு

இந்த காரில் சிம் கார்டு ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சிம் கார்டுடன் உங்களது ஐபோன், ஆன்ராய்டு மற்றும் பிளாக்பெர்ரி போன்களை இணைத்துக் கொண்டு ஏராளமான வசதிகளையும், கட்டுப்படுத்தும் வசதிகளையும் பெற முடியும்.

மொபைல்போன் வசதிகள்

மொபைல்போன் வசதிகள்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் சிம் கார்டுடன் மொபைல்போனை இணைத்துக் கொண்டால், தூரத்திலிருந்தே காரில் ஏறுவதற்கு முன்பாகவே ஏசி., மற்றும் ஹீட்டரை ஆன் செய்து விட முடியும். மேலும், ஏசி.,யை எந்த நேரத்தில் ஆன் செய்ய வேண்டுமே, அந்த நேரத்தை குறிப்பிட்டு செட்யூல் செய்யும் வசதியும் உள்ளது. இதேபோன்று, மொபைல்போன் வழியாக காரை திறக்கவும், பூட்டிவிடவும் முடியும்.

கம்ப்யூட்டர் கட்டுப்பாடு

கம்ப்யூட்டர் கட்டுப்பாடு

பல்வேறு வசதிகளை வழங்கவும், பிரச்னைகளை கண்டறியும் விதத்திலும், இந்த காரில் 10 ஆன்போர்டு கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரேக் ஆற்றல் சேமிப்பு வசதி

பிரேக் ஆற்றல் சேமிப்பு வசதி

பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் பவரை சேமித்து பேட்டரியில் சேமிக்கும் ரீஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம் இந்த காரில் உள்ளது.

டச் ஸ்கிரீன் திரை

டச் ஸ்கிரீன் திரை

இந்த காரில் 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் திரை பொருத்தப்பட்டிருக்கிறது. ஐபாட், யுஎஸ்பி மற்றும் டிவிடி பிளேயர்களுடன் இணைக்க முடியும். இதுதவிர, காரின் ஆற்றல் சேமிப்பு மற்றும் இதர முக்கியத் தகவல்களை இந்த திரை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஜிபிஎஸ் சிஸ்டம்

ஜிபிஎஸ் சிஸ்டம்

இந்த காரில் உள்ள ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறித்த தகவல்களையும் பெற முடியும் என்பது சிறப்பு.

 டர்னிங் ரேடியஸ்

டர்னிங் ரேடியஸ்

இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 3.9 மீட்டர்கள். இதனால், சந்துபொந்துகளிலும், குறுகிய சாலைகளிலும் கூட எளிதாக திருப்பலாம்.

ஹில்ஹோல்டு பங்ஷன்

ஹில்ஹோல்டு பங்ஷன்

இந்த காரில் ஹில்ஹோல்டு தொழில்நுட்பம் இருக்கிறது. சரிவான பாதைகளில் செல்லும்போது நிறுத்தி எடுத்தால் உடனே கார் பின்னோக்கி செல்லாதவாறு இந்த தொழில்நுட்பம் பார்த்துக் கொள்ளும்.

ரிவர்ஸ் கேமரா

ரிவர்ஸ் கேமரா

இந்த காரில் ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டில் இருக்கும் டச் ஸ்கிரீன் திரை மூலமாக பின்புறத்தை பார்த்து ரிவர்ஸ் எடுக்க முடியும்.

ஃபாலோ மீ ஹெட்லைட்

ஃபாலோ மீ ஹெட்லைட்

இரவில் காரை பார்க்கிங் செய்துவிட்டு வீட்டுக்குள் செல்லும்போது வெளிச்சம் இருப்பதற்கான தொழில்நுட்பம் இது. காரை முழுவதுமாக ஆஃப் செய்துவிட்டாலும் இதன் ஹெட்லைட்டுகள் ஒரு சில வினாடிகள் ஒளிரும்.

 புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளும், எல்இடி டெய்ல் லைட்டுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

ரியர் டிஃபாகர், சிசர் வைப்பர்கள், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் ரியர் வியூ மிரர்கள், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

 ஸ்பீக்கர்கள்

ஸ்பீக்கர்கள்

4 ஜேபிஎல் ஸ்பீக்கர்களும், 2 ட்விட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

சோலார் சார்ஜர்

சோலார் சார்ஜர்

வீடுகளில் இருக்கும் சாதாரண பவர் சாக்கெட்டுகள் மூலம் சார்ஜ் செய்ய முடியும். தமிழ்நாடு போன்று மின்சார தட்டுப்பாடு கொண்ட இடங்களுக்காக சோலார் சார்ஜரையும் சேர்த்து மஹிந்திரா விற்பனை செய்கிறது. ஆனால், இந்த சார்ஜரின் விலைதான் நம்மை கிறுகிறுக்க செய்கிறது. இந்த சார்ஜரின் விலை ரூ.1.5 லட்சமாம்.

பயண தூரம்

பயண தூரம்

இந்த காரை முழுமையாக 5 மணிநேரம் சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை செல்லலாம் என்கிறது மஹிந்திரா ரேவா. ஆனால், 80 கிமீ முதல் 90 கிமீ வரை செல்லலாம் என கூறப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

4 பெரியவர்கள் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. 2 கதவுகள் கொண்ட கார் என்பதால் முன் இருக்கையை நகர்த்திவிட்டு பின்இருக்கைக்கு செல்ல வேண்டும்.

 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பாடி

பாடி

இதன் பிரத்யேக பாடியில் கீறல்கள் மற்றும் டென்ட் விழாத சிறப்பு கொண்டதாகவும், பயணிப்பவருக்கு அதிக பாதுகாப்பு தரும் வகையில் உறுதிமிக்கதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சார்ஜிங் ஸ்டேஷன்

சார்ஜிங் ஸ்டேஷன்

தமிழகத்தில் விற்பனைக்கு கிடைக்காவிட்டாலும், சென்னை உள்பட நாடு முழுவதும் பெருநகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் மஹிந்திரா டீலர்களில் இந்த காருக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை மஹிந்திரா ரேவா அமைத்து வருகிறது.

பராமரிப்பு சேவை

பராமரிப்பு சேவை

ஆண்டுக்கு ஒரு முறை இந்த காரை சர்வீஸ் செய்தால் போதும். மேலும், வீட்டிலேயே வந்து பராமரிப்பு செய்து தரும் சேவையையும் மஹிந்திரா ரேவா வழங்குகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஆர்ட்டிக் சில்வர், கோரல் புளூ, ஈக்கோ கிரீன், ஓசியானிக் ஒயிட், ஸ்பானிஷ் ரெட் மற்றும் சன்ஃபையர் யெல்லோ ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

 விலை

விலை

ரூ.5.96 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.4 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும். இந்த காருக்கு டெல்லி அரசு வரிச்சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில்

ஒட்டுமொத்தத்தில்

மார்க்கெட்டிலேயே குறைந்த போக்குவரத்து செலவீனம் கொண்ட காராக கூறப்படுகிறது. ஒரு கிலோமீட்டருக்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பல புதுமையான அதேசமயம் தேவையான வசதிகளை கொடுத்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா ரேவா. இன்டடிரியர் ரம்மியாகவும், படு கவர்ச்சியாகவும் இருப்பதை கூற வேண்டும். ஆனால், 6 லட்ச ரூபாயை தாண்டும் இந்த கார் உண்மையிலேயே மதிப்புமிக்கதா என்பதை மற்றொரு செய்தியில் பிற கார்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2013, 14:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+