மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார் யாருக்கு பெஸ்ட்?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

குறைந்த எரிபொருள் செலவுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய எதிர்கால தாத்பரியத்துடன் எலக்ட்ரிக் கார்களின் வடிவமைப்பு மற்றும் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், எலக்ட்ரிக் கார்களின் அதிக விலையும் வர்த்தக மார்க்கெட்டில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்பு ரேவா நிறுவனம் தனியாக தயாரித்த காருக்கும், இப்போது மஹிந்திரா கைவசம் வந்தபின் ரேவாவிடம் இருந்து வெளிவந்துள்ள இந்த இ2ஓ எலக்ட்ரிக் காருக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. நவீன வசதிகளையும், சிறந்த கட்டுமான தரத்திலும் இந்த புதிய காரை மஹிந்திரா ரேவா வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை, மற்றும் விற்பனைக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட பிற மாநிலங்களில் இருக்கும் எமது வாசகர்களுக்கு பயன்படும் வகையில் இந்த டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

தோற்றம்

தோற்றம்

சிறிய காராக இருந்தாலும், தோற்றத்தில் நானோவைவிட மிக மிக கவர்ச்சிகரமாகவே இருக்கிறது இ2ஓ. டிசி நிறுவனத்தின் தலைவர் திலீப் சாப்ரியா கொடுத்த என்எக்ஸ்ஆர் டிசைன் கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு இந்த காரை செதுக்கியிருக்கின்றனர் மஹிந்திரா ரேவா எஞ்சினியர்கள்.

எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இதில், 25.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பின்புற சக்கரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

தரம்

தரம்

ஏபிஎஸ் பாடி பேனல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெளிப்புறம் நசுங்கி டென்ட் மற்றும் கீறல்கள் விழாத சிறப்பம்சம் கொண்டதுடன் உறுதியாகவும் இருக்கிறது.

இடவசதி

இடவசதி

இந்த காரில் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். நானோவைவிட குட்டியாக தெரியும் இந்த காரில் லெக்ரூமூம், ஹெட்ரூமும் தாராளமாக இருக்கிறது.

'நோ' பவர் ஸ்டீயரிங்

'நோ' பவர் ஸ்டீயரிங்

இந்த காரில் பவர் ஸ்டீயரிங் இல்லை என்பது குறைபாடு. எனவே, பார்க்கிங் மற்றும் வளைவுகளில் திரும்பும்போது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

 ஏசி.,யின் செயல்பாடு

ஏசி.,யின் செயல்பாடு

இதன் ஏசி குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. மதிய நேரத்தில் இதன் செயல்பாடு சிறப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இருப்பினும், எலக்ட்ரிக் காரில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டும் என்பது நியதியாக இருக்கிறது.

மொபைல்போன் கன்ட்ரோல்

மொபைல்போன் கன்ட்ரோல்

மொபைல்போன் மூலம் காரின் ஏசியை ஆன், ஆஃப் செய்ய முடியும். மேலும், வீடு அல்லது அலுவலகத்தில் அமர்ந்தபடியே, பேட்டரியில் இருக்கும் சார்ஜ் மூலம் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை மொபைல்போன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அருகாமையில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றிய தகவல்களையும் மொபைல்போன் மூலம் பெறலாம்.

சார்ஜ்

சார்ஜ்

முழு சார்ஜ் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாம் டெஸ்ட் டிரைவ் செய்த கார் 6 மணிநேரத்தில் சார்ஜ் ஆனது.

 பயண தூரம்

பயண தூரம்

ஒரு முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 85 கிமீ வரை சென்றது.

 ஆட்டோமேட்டிக் கியர்

ஆட்டோமேட்டிக் கியர்

இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், R, N, F, B ஆகிய நான்கு ஆப்ஷன்கள் இருக்கின்றன. R மற்றும் N ரிவர்ஸ், நியூட்ரல். மற்ற F(Forward)மோடில் கியரை மாற்றினால் இ2ஓ ஓசையில்லாமல் நகர்ந்து வேகமெடுக்கிறது. B(Boost)மோடில் கியர் லிவரை கொண்டு சென்றால் இன்னும் கூடுதல் சக்தியுடன் பறக்கிறது.

சூப்பர் பவர்

சூப்பர் பவர்

சார்ஜிங் பாயிண்ட் தேடி ஒரு வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதிக்கு சென்றோம். அங்கிருந்து வெளியேறும் பகுதி மிகவும் ஏற்றமாக இருந்தது. உள்ளே 4 பேர் அமர்ந்திருக்கிறோமே, இதில் ஏறுமா என்ற எண்ணத்துடன் B மோடில் கியரை தட்டி ஆக்சிலேட்டரை மிதித்தேன். எந்த திக்கு திணறலும் இல்லாமல் அசராமல் மேலே ஏறி நம்மை ஆச்சரியப்படுத்தியது இ2ஓ.

"B" க்கு கட்டுப்பாடு

பேட்டரி முழு சார்ஜில் இருக்கும்போது 50 கிமீ வேகத்தை மிக எளிதாக தொடுகிறது. ஆனால், பேட்டரி சார்ஜ் 15 சதவீதத்திற்கும் கீழே குறைந்துவிட்டால் B என்கிற பூஸ்ட் மோடுக்கு செல்லாது. பேட்டரி சார்ஜ் சீராக எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும்போது அதிக ஏற்றமாக இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் லாட்டுகளுக்கு செல்வதை தவிர்த்தல் நலம்.

 டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட்

டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட்

இதில், 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. நேவிகேஷன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வீடியோ சிஸ்டம் ஆகிய அனைத்து வசதிகளையும் பெறலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இருக்கிறது. அதில், எந்த கியரில் இருக்கிறோம், கிலோமீட்டர் ரீடிங் உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

 ஸ்டெப்னி டயர்

ஸ்டெப்னி டயர்

ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி காரின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் பாயிண்ட்

சார்ஜிங் பாயிண்ட்

இதற்கு 15 ஆம்பியர் சார்ஜிங் பாயிண்ட் இருந்தால் போதும். வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்.இதற்கு 15 ஆம்பியர் பிளக் பாயிண்ட் தேவைப்படும். உங்களது அலுவலக பார்க்கிங் மற்றும் வீட்டு பார்க்கிங்கில் 15 ஆம்பியர் பிளக் பாயிண்ட் இருத்தல் அவசியம். 5 ஆம்பியர் பிளக் பாயிண்ட்டிலும் 15 ஆம்பியர் கன்வெர்ட்டர் மூலம் சார்ஜ் செய்யலாம். ஆனால், அரைமணி நேரத்தில் பிளக் பாயிண்ட் சூடாகிவிடும் ஆபத்து இருக்கிறது. மேலும், இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை.

கையாளுமை

கையாளுமை

வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் சென்று திரும்பும்போதும் மிகுந்த நிலைத்தன்மையுடன் திரும்புகிறது. மேலும், சிறப்பான கையாளுமை கொண்டதாகவும் கூறலாம்.

 வைப்பரில் நீர் பீய்ச்சும் குழாய்

வைப்பரில் நீர் பீய்ச்சும் குழாய்

அனைத்து கார்களிலும் வைன்ட் ஷீல்டு சுத்தம் செய்வதற்கான வாட்டர் ஸ்பிரே நாசில்ஸ் பானட்டில் இருக்கும். ஆனால், இந்த காரில் வைப்பர் பிளேடுகளில் நாசில்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இருக்கை

இருக்கை

இருக்கைகளும் அமர்ந்து செல்ல சிறப்பாக இருக்கிறது. மேலும், பின் இருக்கையை பொருட்கள் வைப்பதற்கு ஏதுவாக மடக்கி விரிக்க முடியும்.

சார்ஜ் குறித்த தகவல்

சார்ஜ் குறித்த தகவல்

பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது, இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது போன்ற தகவல்களை டச் ஸ்கிரீன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 டோர் மாடல்

2 டோர் மாடல்

இந்த கார் 2 கதவுகள் கொண்டிருப்பதால் முன் இருக்கையை முன்புறம் தள்ளிவிட்டு பின்புற இருக்கைக்கு செல்ல வேண்டும். இது மிகவும் சிரமமாக இருக்கும்.

 ஸ்டார்ட் ஸ்டாப்

ஸ்டார்ட் ஸ்டாப்

இந்த காரில் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சாவியை ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் அருகே கொண்டு காட்டினால்தான் எஞ்சின் ஸ்டார்ட் ஆகும்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார் ஒன்றில் முதல்முறையாக புரொஜெக்டர் ஹெட்லைட் பொருத்தப்பட்டிருப்பது இ2ஓ.,வில்தான். இது இரவு பயணத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

 டெயில் கேட்

டெயில் கேட்

டெயில் கேட்டை ரிமோட் கீ மூலம் திறக்கலாம்.

 அவசரத்துக்கு...

அவசரத்துக்கு...

வெளியில் சென்றிருக்கும்போது பேட்டரி சார்ஜ் முற்றிலும் தீர்ந்துவிட்டால்கூட, ரிவைவ் என்ற வசதி இருக்கிறது. டச் ஸ்கிரீன் அல்லது மொபைல்போன் மூலம் இந்த ரிவைவ் வசதி மூலம், 10 கிமீ தூரம் செல்ல முடியும்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

நாம் செய்தபோது மணிக்கு அதிகபட்சமாக 87 கிமீ வேகம் வரை தொட்டது இ2ஓ.

பின்புற பயணிகளுக்கு அசகவுரியம்

பின்புற பயணிகளுக்கு அசகவுரியம்

பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடிகள் திறந்து மூடும் வசதி இல்லாதது பின்புற பயணிகளுக்கு அசகவுரியத்தை தருகிறது.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

டோர் பாக்கெட்டுகளில் சிறிய பாக்கெட் இருக்கிறது. மேலும், ஒரு சில பாட்டில் ஹோல்டர்களும் உண்டு.

பவர் விண்டோஸ்

பவர் விண்டோஸ்

கியர் லிவருக்கு பின்னால் பவர் விண்டோ சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இடைஞ்சல்

இடைஞ்சல்

ஆக்சிலேட்டருக்கு பக்கத்திலேயே ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருப்பது கொஞ்சம் அசகவுரியத்தை தருகிறது.

யுஎஸ்பி போர்ட்

யுஎஸ்பி போர்ட்

யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் மொபைல் சார்ஜர் ஆகியவை கியர் லிவருக்கு முன்புறம், சென்ட்ரல் கன்சோலுக்கு கீழே இருக்கின்றன.

 பெண்களுக்கு ஏற்ற காரா?

பெண்களுக்கு ஏற்ற காரா?

பவர் ஸ்டீயரிங் இல்லாததால் பார்க்கிங் செய்வதில் சிரமம் இருப்பதுடன், பெண்களுக்கு டிரைவிங் செய்வதிலும் சிரமம் இருக்கும்.

 டிரைவ்ஸ்பார்ட் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்ட் தீர்ப்பு

சுற்றச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத குறைந்த எரிபொருள் செலவீனம் கொண்ட காராகவும், சிறந்த இடவசதி மற்றும் நவீன வசதிகள் கொண்டதாக இ2ஓ இருந்தாலும், டெல்லியை தவிர பிற மாநிலங்களில் இந்த காருக்கு மானியம் இல்லை. இதனால், டீசல் கார்களுக்கு இணையான விலையுடன் இருக்கிறது. முதல் கார் வாங்குவோருக்கு இந்த கார் நிச்சயம் சரிவராது. வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செல்வதற்கும், 10 கிமீ.,க்குள் அலுவலகம் இருப்போருக்கும் தினசரி பயன்படுத்த முடியும்.

5 ஆண்டுகளில் பேட்டரியை மாற்ற வேண்டி இருக்கும். இதற்கு ரூ.1.5 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 5 ஆண்டுகளில் லித்தியம் அயான் பேட்டரியின் சப்ளை அதிகரித்தால் இதன் விலை குறைய வாய்ப்புண்டு. எனவே, தற்போதைக்கு இரண்டாவது கார் வாங்கும் திட்டமிட்டுள்ள நகர்ப்புறவாசிகளுக்கு ஏற்ற காராக இ2ஓ.,வை கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2013, 10:39 [IST]
English summary
The e2o is an electric car developed by the Mahindra Reva Electric Car Company. It's the successor to the Reva India's first electric car. The big question is if India is prepared for a car of its kind. Nearly a decade ago it wasn't but how far have things progressed with the E2O. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+