மாருதிக்கு ரொம்ப தலைவலியா இருக்கும் மஹிந்திரா வாகனம்! 10 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்வாங்கனு எதிர்பார்க்கல!!

இந்தியாவில் மஹிந்திரா தார் 3-கதவு ஃபேஸ்லிஃப்ட் (2025) (Mahindra Thar 3-Door Facelift) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாடல் வெறும் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பாடி கலர் கிரில், மேம்படுத்தப்பட்ட தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சாலை மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை புதிய 3-டோர் தாரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற வடிவமைப்பு

மஹிந்திரா நிறுவனம் தாரின் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது மேட் பிளாக் மற்றும் சில்வர் அம்சங்களுடன் கூடிய இரட்டை-டோன் பம்பரைப் பெற்றுள்ளது. இது, வாகனத்தின் பாடி கலரில் புதிய முன் கிரில் உடன் உள்ளது. மஹிந்திரா தார் தனக்கே உரிதான 18-இன்ச் அலாய் சக்கரங்கள் (விலை குறைவான வேரியண்ட்களில் 16-இன்ச் இரும்பு சக்கரங்கள்), பாடி கிளாடிங் மற்றும் கதவு கீல்கள் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வைப்பர் மற்றும் டிஃபோகர்கள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறங்களாக டாங்கோ ரெட் மற்றும் சாம்பல் நிறம் சேர்க்கப்பட்டுள்ளன.

mahindra thar 3-door facelift launched

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் – வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங்

உட்புறத்தைப் பொறுத்தவரை, தார் ஃபேஸ்லிஃப்ட் முழுமையாக கருப்பு நிற கேபினைக் கொண்டுள்ளது. 10.25-இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். இது 5 கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் (Thar ROXX) பதிப்பைப் போலவே உள்ளது. இந்த பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலம் லாப் டைமர், ஆஃப்-ரோடு புள்ளி விவரங்கள் மற்றும் அடாப்டிவ் ரிவர்ஸ் கேமரா வழிகாட்டுதல்கள் போன்ற அம்சங்களை பெறலாம்.

இதனுடன், புதிய தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்டரி, ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய முன்பக்க ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் ஆகியவையும் பயணிகளின் வசதிக்காக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கதவுகளில் பவர் விண்டோ கண்ட்ரோல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

mahindra thar 3-door facelift launched

மேலும் முன்பக்க ஜன்னல்களுக்கு ஒன்-டச் அப்/ டவுன் வசதி மற்றும் எலக்ட்ரிக் பவர் மூலமாக எரிபொருள் மூடியை திறக்கும் வசதி போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கேபினில் A-பில்லரில் புதிய கிராப் ஹேண்டில்கள் இருப்பதால் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் எளிதாக இருக்கும். கதவு பேனல்களில் மென்மையான டச் மெட்டீரியல்கள் இருப்பதால் பயண அனுபவம் மேம்பட்டதாக இருக்கும்.

{video1}

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - என்ஜின் மற்றும் செயல்திறன்

புதிய தார் ஃபேஸ்லிஃப்ட் 2.2-லிட்டர் டீசல், 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என அதே என்ஜின் ஆப்ஷன்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. 4x4 டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்களில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கு-வீல் டிரைவ் உடன் தார் ஃபேஸ்லிஃப்ட் அதன் வலுவான ஆஃப்-ரோடு திறனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் முந்தைய மாடலைப் போலவே இருக்கும். இது என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து மாறுபடும்.

Engine Specifications
Engine Power Torque
2.0L mStallion Petrol 112 kW@5000 r/min

300 Nm@1250-3000 r/min (MT)

320 Nm@1500-3000 r/min (AT)

2.2L mHawk Diesel 97 kW@3750 r/min 300 Nm@1600-2800 r/min (MT & AT)
1.5L CRDe Diesel 87.2 kW@3500 r/min 300 Nm@1750-2500 r/min (MT)
mahindra thar 3-door facelift launched

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - தொழிற்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நிகழ்நேர ஓட்டுநர் தகவல்களை பெற உதவுகிறது. ஸ்டீயரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை புதிய தார் ஃபேஸ்லிஃப்ட்டின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற டிஃபோகர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - வேரியண்ட்கள் மற்றும் விலைகள்

தார் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பல வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை சுமார் ₹12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் ரக வகைகளின் விலை அதற்கேற்ப இருக்கும்.

வகை என்ஜின் டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கப்படும் விலை (₹ லட்சம்)
எல்.எக்ஸ்.டி RWD/ 4WD 2.0-லிட்டர் பெட்ரோல் மேனுவல்/ஆட்டோமேட்டிக் 13.99– 16.25
எல்.எக்ஸ்.டி 4WD 2.2-லிட்டர் டீசல் மேனுவல்/ஆட்டோமேட்டிக் 15.49– 16.99
ஏ.எக்ஸ்.டி RWD & எல்.எக்ஸ்.டி RWD 1.5-லிட்டர் டீசல் மேனுவல் 9.99– 12.19

mahindra thar 3-door facelift launched

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - கிடைப்பதும் போட்டியாளர்களும்

புதுப்பிக்கப்பட்ட தார் 3-கதவு ஃபேஸ்லிஃப்ட், இந்தியா முழுவதும் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குள் டெலிவரி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha) மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகியவை இதன் முக்கிய போட்டியாளர்களாகும். இவை இரண்டும் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் (Life style off-roader) பிரிவில் போட்டியிடுகின்றன.

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட், வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் வசதிகளில் மேம்பாடுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 2020இன் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் வாகனம் கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து முக்கியமான அப்டேட்டை பெற்றுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்தில் நிறைய அம்சங்கள் தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் ஆஃப்-ரோடு ஆர்வலர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 3, 2025, 10:11 [IST]
English summary
Mahindra thar 3 door facelift launched in india check first look review here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X