குடும்பத்தோடு ஜாலியா டூர் போக செம கார் இது! மஹிந்திரா தார் ராக்ஸ் கார் விமர்சனம்!
ஆஃப் ரோடு பயணத்தில் நீங்கள் வாகனத்தில் செல்ல வேண்டுமென்று நினைத்தால், உங்கள் மனதில் ஏகப்பட்ட வாகனங்கள் தோன்றும். ஆனால் அதில் முதலில் தோன்றும் வாகனம் மஹிந்திரா கார் தான் மஹிந்திரா தார். இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தீவிரமான ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான காராக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.
என்னதான் இது மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருந்தாலும், குடும்பத்துடன் பயணிக்கும் ரக காராக இது இல்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் பின்பக்க சீட்டுக்கு தனியாக டோர் இல்லாததுதான். இதனால் சில மக்கள் இந்த காருக்கு உள்ளே செல்லவும் காரில் இருந்து இறங்கி செல்லவும் அதிக சிரமப்பட்டு வந்தார்கள்.

காரின் பின்பக்க சீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பக்க சீட்டை நகர்த்தி தான் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியும். ஆனால் இனி இந்த பிரச்சனை மஹிந்திரா தார் காரில் இருக்காது. மஹிந்திரா நிறுவனம் ஐந்து டோர் கொண்ட தார் காரை வெளியிட்டுள்ளது இந்த காருக்கு தார் ராக்ஸ் என பெயர் வைத்துள்ளது. இந்த கார் ரூபாய் 12.99 லட்சம் முதல் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் கேரளாவில் உள்ள கொச்சின் பகுதிக்கு இந்த காரை ஓட்டி பார்க்க சென்றோம். இப்படியாக எங்கள் குழுவினர் அங்கு சென்று இந்த காரை ஓட்டிப் பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் காரில் இருக்கும் அம்சங்கள் குறித்த விரிவான விமர்சனத்தை தான் இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.

டிசைன்: மஹிந்திரா தார் காரை போலவே கார் ரேஸ் காரிலும் பாக்ஸ் வடிவ டிசைன் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரில் தார் காரில் இருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் எல்இடி ஹெட் லைட்டுகள், சி வடிவ டிஆர்எல், எல்இடி ஃபாக் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதன் முன் பக்க கிரில் பாடி கலரில் வித்தியாசமான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது ஆப்-ரோடு கார் என்பதால் முன்பக்க பார்க்கிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 360 டிகிரி கேமரா அம்சத்திலும் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்த கார் மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க சிறப்பாக இருக்கிறது. இதன் பின்பகுதியின் வடிவமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பக்கவாட்டு வடிவமைப்பை பொறுத்தவரை 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. டயரை பொறுத்தவரை 255/60/ஆர்19 அளவிலான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க பெருசாகவும் ரக்காட் லுக்கிலும் இருக்கிறது. மேலும் இந்த காருக்கு பெரிய ஃபென்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கான மஸ்குலர் ஆஃப் ரோடு லுக்கை கொடுக்கிறது.
மேலும் இந்த காரில் கருப்பு நிற ஓஆர்பிஎம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பக்கத்திலும் கேமரா வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் முக்கிய மாற்றமாக பின்பக்க கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கதவுகளில் உள்ள ஹேண்டில்கள் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. பின்பக்க கதவுகளில் உள்ள ஹேண்டில்கள் பாடி கலரிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹேண்டில் சி பில்லர் அருகே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சி பில்லர் பகுதியில் ஸ்லோபிங் லைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரின் பின்பக்க லுக்கை வித்தியாசமாக காட்டுகிறது. எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது போக முழு சைஸ் ஸ்பேர் வீலும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்க வியூகாக வைப்பர்கள் மற்றும் டீஃபாகர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பின்பக்கம் உள்ள கதவை திறந்தால் இந்த காரில் 644 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய ஆளே இந்த இடத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு இது அதிக இட வசதியாக இருக்கிறது. இந்த காரின் பின்பக்க சீட்டைப் பொறுத்தவரை 60க்கு 40 என பிரிக்கப்பட்டுள்ளது. இதை மடித்துக் கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது
இன்டீரியர்: இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை முதலில் உங்கள் கண்களை கவர்வது இதில் உள்ள பெரிய பானரோமிக் சன்ரூஃப் தான். இந்த செக்மெண்டிலேயே மிகப்பெரிய சன்ரூஃப் இந்த காரில் தான் இருக்கிறது. இந்த காரின் உட்புறம் பெரும்பாலும் வெள்ளை நிறத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. காரின் அதிக காற்றோட்டமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் தையல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காருக்குள்ளே 10.25இன்ச் கொண்ட இன்ஃபோடைமென்ட் சிஸ்டமும் 10.25இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஏகப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் ஸ்டீரிங் வீலை பொருத்தவரை எலெக்ட்ரிக் சீலிங் வீல் வழங்கப்பட்டுள்ளது இதனால் இது மிக லைட்டாக ஃபீல் ஆகிறது இதனால் கூட்ட நெரிசல் உள்ள சாலைகளில் செல்லும்போது சுலபமாக இருக்கும். Uடர்ன் எடுப்பதும் சுலபமாக இருக்கும். இது ஒரு ஃபிளாட்பாட்டம் ஸ்டேரிங் வீலாக இருக்கிறது.
இந்த ஸ்டேரிங் வீலின் இரண்டு பக்கத்திலும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த ஸ்டேரிங்கை டில்ட் செய்யவும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டெலஸ்கோபிக் ஆப்ஷன் இதில் இல்லை. முன்பக்க டிரைவர் சீட் ஆறு வழிகளில் எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள இரண்டு சீட்டுகளும் வென்டிலேட்டர் சீட்டுகளாக உள்ளன. இதனால் நீண்ட தூர பயணம் சுலபமாக இருக்கும்.
பின்பக்க சீட்களும் வசதியாக இருக்கிறது. ஆனால் தொடை பகுதிக்கு சப்போர்ட் இதில் வழங்கப்படவில்லை. மேலும் பின்பக்க சீட்டில் ஆர்ம் ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 ஹெட் ரெஸ்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு மட்டுமே அட்ஜஸ்ட் செய்யும் ஆப்சனுடன் இருக்கிறது. பின்பக்கமும் ஏசி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பின்பக்கம் சுலபமாக குளிர்ச்சியாகி விடும்.
இன்ஜின் மற்றும் ஹேண்டிலிங்: மஹிந்திரா தார் ராக்ஸ் காரை பொறுத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை பேஸ் வேரியன்டாக மஹிந்திரா ராக்ஸ் காரின் பேஸ்வேரியன்ட்டை பொருத்தவரை 160எச்பி பவரும் 330என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே டாப் வேரியன்டை பொருத்தவரை 177எச்பி பவரும் 380என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை பேஸ் வேரியண்டில் 150 எச்பி பவரும் 330 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 175 எச்பி பவரும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதில் டாப் டீசல் மேனுவல் 4X4 காரை தான் ஓட்டிப் பார்த்தோம்.
இந்த காரை பொறுத்தவரை துவக்கத்தில் ஆக்ஸிலரேஸர் லீனியராக தான் இருந்தது. ஆனால் செல்ல செல்ல டர்போ மூலம் திடீரென பவர் நன்றாக கிடைத்தது. இதனால் கார் வேகமாக பயணம் செய்ய முடிந்தது. இதனால் மிட்-ரேஞ்சில் ஸ்டிராங்காகவும் டாப் பவரில் சிறப்பாகவும் இந்த கார் செயல்பட்டது.
இந்த காரில் உள்ள பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பிரேக் பவர் சிறப்பாக இருக்கிறது. இந்த காரின் சஸ்பென்ஷன் செட்டப்பும் மிகப்பெரிய அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதில் டபுள் விஸ் போன் சஸ்பென்ஷன் செட்டப் முன்பக்கத்திலும், பென்டா லிங்க் சஸ்பென்ஷன் செட்டப் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காரை ஹேண்டில் செய்வது சிறப்பாக இருந்தது.
இதனால் இந்த காரில் வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போதும் பள்ளமேடுகளில் ஏற்றி இறக்கும் போதும் அப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ததாகவே உள்ளே இருப்பவர்கள் உணரவில்லை. ஒரு எஸ்யூவி காரில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியாக இந்த சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்: மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சீட் பெல்ட் ரிமைண்டர், பயணிகளுக்கான ஏர் பேக் ஆன்-ஆப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்காக வழங்கப்பட்டுள்ள வசதியாகும். ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் மவுண்ட்கள், இஎஸ்பி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசெண்ட் கண்டரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், டிபிஎம்எஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இதில் அடாஸ்2 நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பு: தற்போது மஹிந்திரா தார் காரை அதிகமாக குடும்பங்கள் விரும்புவார்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு டோர் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். சஸ்பென்ஷன் விஷயத்தில் மஹீந்திரா நிறுவனம் ஒரு அதிசயத்தை செய்துள்ளது என்று என்றே சொல்லலாம். இந்த காரின் உட்புற கட்டமைப்பு ஸ்டைலிங் மற்றும் விலை ஆகியவற்றை பார்க்கும்போது நிச்சயம் இது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.
ஒரு நல்ல எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸ். இந்த காரில் டிரைவர்களுக்கு ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சொந்தமாக கார் வாங்கி ஓட்ட நினைப்பவர்களுக்கு இந்த காரும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும் உடனே செல்லுங்கள். மஹிந்திரா தார் ராக்ஸ் காரை அருகில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் புக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









