மஹிந்திரா டியூவி300 Vs ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்: சிறப்பம்சங்கள் ஓர் ஒப்பீடு!

Written By:

எஸ்யூவி வகை வாகனங்கள் என்றாலே, வடிவத்தில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை உடைத்தெறிந்து, 4 மீட்டருக்குள் ஓர் சிறப்பான எஸ்யூவி மாடலை தர முடியும் என்பதை ஈக்கோஸ்போர்ட் மூலமாக உணரச் செய்தது ஃபோர்டு கார் நிறுவனம்.

இதையடுத்து, இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமைக்குரிய மஹிந்திரா நிறுவனம், அவசரமாக தனது ஸைலோ எம்பிவி காரை கத்தரி போட்டு குவான்ட்டோ என்ற காம்பேக்ட் எஸ்யூவியை அவசரமாக களமிறக்கியது.

ஆனால், குவான்ட்டோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாததையடுத்து, இந்த செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விடாப்பிடியாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் ஓர் புத்தம் புதிய மாடலாக டியூவி 300 என்ற காம்பேக்ட் எஸ்யூவியை சமீபத்தில் களமிறக்கியிருக்கிறது.

இந்தநிலையில், காம்பேக்ட் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி 300 ஆகிய இரு காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் இருக்கும் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து வழங்கியிருக்கிறோம்.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

மஹிந்திரா டியூவி 300: ரூ.6.98 லட்சம் முதல் ரூ.9.20 லட்சம் வரை

[டீசலில் மட்டும்]

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்: ரூ.6.75 லட்சம் முதல் ரூ.10.30 லட்சம் வரை

[பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை விபரம்]

 டிசைன்: மஹிந்திரா டியூவி 300

டிசைன்: மஹிந்திரா டியூவி 300

புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் பெரும்பாலான பாகங்கள் சதுர, செவ்வக வடிவிலேயே டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. க்ரில், பனி விளக்குகள், பானட், வீல் ஆர்ச், கூரை, டெயில் கேட் என எப்படி பார்த்தாலும் ஒரு செவ்வக வடிவிலான தோற்றத்தை கொண்டுள்ளது. இது பீரங்கியை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டதாக, சொல்லப்படுவதால் நளினத்திற்கு வேலை கிடையாது.

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

டிசைன்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் வெற்றிக்கு அதன் டிசைன்தான் மிக முக்கிய காரணம். நவநாகரீகமாகவும், கவர்ச்சியாகவும் டிசைன் செய்யப்பட்ட மாடல். மஹிந்திரா டியூவி 300 டிசைன் குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தினரின் எதிர்பார்ப்பை மட்டுமே பூர்த்தி செய்யும். ஆனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டிசைன் ஆண், பெண் இருபாலரையும் தவிர்த்து, அனைத்து தரப்பினரையும் கவரக்கூடியது. டிசைனில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முன்னிலை பெறுகிறது.

 வசதிகள்: மஹிந்திரா டியூவி 300

வசதிகள்: மஹிந்திரா டியூவி 300

மஹிந்திரா வாகனங்கள் எப்போதுமே, நவீன தொழில்நுட்ப வசதிகளில் முன்னோடியாக இருக்கின்றன. அந்த வகையில், புளூடூத், ஆக்ஸ்- இன் போர்ட் இணைப்பு வசதிகள் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம், மஹிந்திரா புளூ சென்ஸ் அப்ளிகேஷன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், வாய்மொழியாக மொபைல்போன் அழைப்புகளை கட்டுப்படுத்தும் வசதி, மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

வசதிகள்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

வசதிகள்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ஃபோர்டு எமெர்ஜென்சி அசிஸ்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதில், ஃபோர்டு எமெர்ஜென்சி அசிஸ்ட் வசதி அவசர காலங்களில் பயணிகளின் உயிர்காக்கும் வசதியை அளிக்கும்.

எஞ்சின்: மஹிந்திரா டியூவி 300

எஞ்சின்: மஹிந்திரா டியூவி 300

எஸ்யூவி மார்க்கெட்டில் 80 சதவீதத்திற்கு மேல் டீசல் மாடல்களே விற்பனையாகின்றன. அதன் காரணமாக, மஹிந்திரா டியூவி 300 டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோ கியர்ஷிஃப்ட் கொண்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்துகொள்ள முடியும்.

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதாவது, 90 எச்பி பவரையும், 203 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 110 எச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதுதவிர, மிகவும் பிரத்யேகமான 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஈக்கோஸ்போர்ட்டின் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டான ஆப்ஷன். இந்த எஞ்சின் 123 எச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. சிறப்பான எஞ்சின் தேர்வுகளுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முன்னிலை பெறுகிறது. ஆனால், டீசல் மாடலை மட்டுமே வாங்க எண்ணுபவர்களுக்கு எது சிறப்பானதாக இருக்கும் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

டீசல் எஞ்சின் ஒப்பீடு

டீசல் எஞ்சின் ஒப்பீடு

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே கிடைப்பதால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசல் மாடலுடன் ஒப்பீடு செய்வது சிறந்ததாக இருக்கும். அப்படி பார்க்கும் பட்சத்திலும், செயல்திறன், ஆற்றல் வெளிப்படுத்தும் திறன், மைலேஜ் போன்ற அனைத்திலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டீசல் மாடலே முன்னிலை பெறுகிறது. அதேநேரத்தில், நகர்ப்புறத்தில் கியர்மாற்றும் தொல்லையிலிருந்து விடுபட எண்ணுபவர்களுக்கு மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

வாடிக்கையாளர்கள் பார்க்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று மைலேஜ். மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி லிட்டருக்கு 18.49 கிமீ மைலேஜை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.5 டீசல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜை தரும் என்பதை குறிப்பிட்டு பார்க்க வேண்டும். இதிலும், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் கை ஓங்கி இருக்கிறது. மேலும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜையும், 1.0 லிட்டர் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும் தரும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டில்கூட ஆப்ஷனலாக ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை வழங்கப்படுகிறது. ஆனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில்தான் இந்த வசதிகளை பெற முடியும். மேலும், ஈக்கோஸ்போர்ட் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் மற்றும் எமெர்ஜென்சி அசிஸ்ட் ஆகிய வசதிகள் இருக்கின்றன.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

கவர்ச்சியான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், எரிபொருள் சிக்கனம் என அனைத்திலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிதான் பெஸ்ட். சில அம்சங்களில் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி முன்னிலை பெற்றாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

English summary
The sub-4 metre compact SUV segment was kicked off by the Ford EcoSport in India. Other carmakers such as Maruti Suzuki and the Hyundai Creta saw the potential in this segment and soon followed. That didn't deter the sales of the little Ford SUV since it still leads the market in this segment. The latest to join this battle is the Mahindra TUV300—Mahindra's newest sub-4 metre SUV that was launched. Mahindra has invested a lot for this SUV and has big plans with it. So how does it fare against the segment leader, the EcoSport? Let's find out:
Story first published: Tuesday, September 15, 2015, 10:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark