மாருதி எர்டிகா ஸ்பெஷலில் கூடுதல் விசேஷம் என்னென்ன?

கடந்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு மாருதி எர்டிகா விற்பனையில் திடமான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. மேலும், சிறிய கார் விற்பனை குறைந்தாலும், எர்டிகா மாருதிக்கு சமநிலையை கொடுத்து வருகிறது. இதுவரை 70,000 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

பல விருதுகளை பெற்று மார்க்கெட்டில் பீடு நடைபோட்டு வரும் மாருதி எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவடந்ததையொட்டி, கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசனை மாருதி விற்பனைக்கு விட்டுள்ளது. விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டும் ரூ.20,000 கூடுதலான விலையில் புதிய எர்டிகா ஃபெலிஸ் கிடைக்கும்.

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்

எர்டிகா ஸ்பெஷல் எடிசன் காரின் தோற்றத்தை மிக மிக கவர்ச்சியாக மாற்றுவதே அதில் போடப்பட்டிருக்கும் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்தான்.

 ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர்

எர்டிகா ஸ்பெஷலில் ரியர் ஸ்பாய்லர் நிரந்தர ஆக்சஸெரீயாக இருக்கும். இது காரின் தோற்றத்துக்கு கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது.

 சீட் பாக்கெட்

சீட் பாக்கெட்

டிரைவர் சீட்டின் பின்புறம் மொபைல்போன், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்வதற்காக சீட் பாக்கெட் இருக்கிறது.

சீட் கவர்

சீட் கவர்

இதமான சீட் கவர்களில் எர்டிகாவின் ஃபெலிஸ் என்ற ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 சில்வர் கிரில்

சில்வர் கிரில்

சில்வர் கலர் பூசப்பட்ட முன்பக்க கிரில் எர்டிகாவின் முகப்பின் வனப்பை கூட்டுகிறது.

 ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்

ஓஆர்விஎம் எனப்படும் பின்புற வாகனங்களை கவனிக்கும் கண்ணாடியில் சில்வர் நிறத்தில் மிளிர்கிறது.

ஸ்டீயரிங் வீல் கவர்

ஸ்டீயரிங் வீல் கவர்

உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல் காரை ஓட்டும்போது இதமான அனுபவத்தை கொடுக்கும்.

மிதியடி

மிதியடி

பிரத்யேக மிதியடிகளும் ஸ்பெஷல் எர்டிகாவுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கிறது.

டோர் சில் கார்டு

டோர் சில் கார்டு

எர்டிகா எழுத்துக்களுடன் கூடிய டோர் சில் கார்டு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

தலையணை

தலையணை

ஃபெலிஸ் பெயர் பொறிக்கப்பட்ட தலையணைகளும் ஸ்பெஷல் எர்டிகாவுடன் கிடைக்கும்.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

காருக்குள் இருக்கும் பின்புறம் பார்க்கும் வசதி கொண்ட கண்ணாடியில் டிஜிட்டல் திரையை கொண்டுள்ளது. காரை பின்புறம் எடுக்கும்போது பார்க்கிங் சென்சார்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த திரை மூலம் பின்புறம் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும்.

 பனி விளக்குகள்

பனி விளக்குகள்

சில்வர் நிற குடுவை கொண்ட பனி விளக்குகளும் எர்டிகாவின் முகப்பு வனப்புக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட் ரூ.8,23,740 விலையிலும், இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.9,14,674 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2013, 12:24 [IST]
English summary
Maruti Suzuki Ertiga Feliz special edition was rolled out recently for celebrating the popular Multi Purpose Vehicle's (MPV) first anniversary in the Indian auto market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+