டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் 2022 பலேனோ காரின் டெலிவரி பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2022 பலேனோ காரை நேற்று (பிப்ரவரி 24) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 6.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

சிக்மா (Sigma), டெல்டா (Delta), ஜெடா (Zeta), ஜெடா (ஓ) Zeta (O), ஆல்ஃபா (Alpha) மற்றும் ஆல்ஃபா (ஓ) Alpha (O) ஆகிய தேர்வுகளில் புதிய பலேனோ விற்பனைக்குக் கிடைக்கும். மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகளை நெக்ஸா ஷோரூம் மற்றும் ஆன்-லைன் வாயிலாக தொடங்கிவிட்டது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் இப்பணிகள் மிக அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே, புதிய பலேனோ காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுசுகி நிறுவனம் அவற்றை டெலிவரி வழங்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

இதுமட்டுமின்றி, ரூ. 13,999 என்ற கட்டணத்தில் இக்காருக்கு சந்தா திட்டத்தையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. மாருதி பலேனோ ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த காரை பன்மடங்கு சிறப்பானதாக மாற்றும் வகையிலேயே புதுப்பித்தல்கள் அமைந்துள்ளன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

புதிய தேன் கூடு அமைப்புக் கொண்ட க்ரில், சில்வர் அக்செண்டுகள் கொண்ட ஹெட்லேம்ப், கிளாம்ஷெல் பான்னெட், புதுப்பிக்கப்பட்ட பம்பர், எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

இவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான மாற்றமாக 16 இன்ச் அலாய் வீல், குரோம் ஸ்ட்ரிப் ஆகியவை 2022 பலேனோவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த குரோம் ஸ்ட்ரிப்கள் காரின் முன் பக்கம், ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின் பகுதி என பல இடங்களில் காட்சியளிக்கின்றன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

இதுமட்டுமின்றி, சி வடிவிலான எல்இடி டெயில் லைட் மற்றும் புதிய பம்பரும் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புற தோற்றத்தைப் போலவே காரின் உட்புறமும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக காரின் டேஷ்போர்டு உள்ளது. அது மூன்று விதமான டிசைன் அமைப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

கருப்பு நிற டாப்பும், சில்வர் நிற அக்செண்டும், அடர் நீல நிற அடிப்பகுதியையும் இது கொண்டிருக்கின்றது. இத்துடன், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம் பெற்றிருப்பதைப் போல ஸ்டியரிங் வீல் தட்டையான அமைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதிய இருக்கைகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இக்காரில் சேர்க்கப்பட்டுள்ளது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

மேலும், 9 இன்ச் அளவுள்ள எச்டி திரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் ப்ளே ப்ரோ-ப்ளஸ் கார் இணைப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் அமேசான் அலெக்ஸா உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமிரா, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்-கள் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் அட்ஜெஸ்ட்மென்ட் உள்ளிட்ட அம்சங்களும் 2022 பலேனோவில் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பலேனோ கார் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

அவை, ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White), ஸ்பிளெண்டிட் சில்வர் (Splendid Silver), ஒபுலெண்ட் ரெட் (Opulent Red), லக்ஸே பீஜ் (Luxe Beige), நெக்ஸா ப்ளூ (Nexa Blue) மற்றும் கிராண்டியர் கிரே (Grandeur Grey) ஆகும். பாதுகாப்பு விஷயத்திலும் புதிய பலேனோ சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

6 ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் புரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஹை ஸ்பீடு அலர்ட், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கையாளருக்கு சீட் பெட்ல் ரிமைண்டர், இபிடி மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை பாதுகாப்பான பயணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

புதிய பலேனோ காரின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மாருதி சுசுகி நிறுவனம் ஏஎம்டி மற்றும் எம்டி தேர்வை தற்போது வழங்குகின்றது. பழைய பலேனோவில் சிவிடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. 1.2 லிட்டர் ட்யூவர் ஜெட் விவிடி பெட்ரோல் எஞ்ஜினே தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... 2022 பலேனோ காரை மகிழ்ச்சியோடு வாங்கி சென்ற கார் பிரியர்கள்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 66கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடியது. இத்துடன், 113 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இத்துடன், சிறந்த எரிபொருள் சேமிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக ஐடில் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் தொழில்நுட்பம் பலேனோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2022, 14:17 [IST]
English summary
Maruti started 2022 baleno deliveries here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+