நாடே இந்த ஒரு காருக்கு தான் வெயிட்டிங்! ஓட்டி பார்க்க எப்படி இருக்குது தெரியுமா?

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யூவி (SUV) வாகனப் பிரிவில் நுழைந்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் (EV), நவீன வசதிகளையும், சுஸூகியின் நம்பகத்தன்மையையும் இணைக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. e-Vitara, பிரத்யேகமான EV தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் பிரீமியம் கேபின் அனுபவத்தை வழங்குகிறது. மாருதி சுஸூகி e-Vitara-வை நாங்கள் ஓட்டிப்பார்த்தோம், அதன் அனுபவம் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

e-Vitara, தன்னம்பிக்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், Y-வடிவ டிஆர்எல் உடன் கூடிய முழு LED ஹெட்லைட் அமைப்பு உள்ளது. இந்த DRL-கள், LED இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன. LED ஃபாக் லைட்களும் உள்ளன, மேலும் கிரில்லில் ஒரு தனித்துவமான வடிவமைப்பு உள்ளது. இந்தக் கிரில் காற்று ஓட்டத்தைக் கட்டுப்படுத்த தானாகவே திறக்கும் அல்லது மூடும் அமைப்பு கொண்டதாக உள்ளது. ஹெட்லைட்களை இணைக்கும் பளபளப்பான கருப்புப் பட்டையில் பெரிய மாருதி லோகோ உள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜிங் உட்பட சார்ஜிங் போர்ட்கள், ஃபென்டரில் அமைந்துள்ளன.

பக்கவாட்டில், e-Vitara 18-இன்ச் ஏரோடைனமிக் வீல்களை கொண்டுள்ளது. இந்த வீல்கள் இழுவையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது டிரைவிங் ரேஞ்சை அதிகரிக்க உதவுகிறது. எஸ்யூவி, அதன் பாடி பிளாஸ்டிக் கிளாடிங்கை கொண்டுள்ளது. வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் (ORVMs), ஒருங்கிணைந்த இண்டிகேட்டர்கள் மற்றும் கேமராவைக் கொண்டுள்ளன. இவை 360-டிகிரி கேமரா செட்டப்பின் ஒரு பகுதியாகும். இதன் பாடியில் கோடுகள் நுட்பமானவை மற்றும் நன்கு அமைக்கப்பட்டவை. திறக்க முடியாத சன் ரூஃப் நிறுவப்பட்டுள்ளது. பின்புற டோர் ஹேண்டில் வழக்கத்திற்கு மாறாக C-தூணில் வைக்கப்பட்டுள்ளன.

பின்புற வடிவமைப்பில் கண்ணாடியில் இணைக்கப்பட்ட மேட்ரிக்ஸ் LED டெயில் லைட்கள் உள்ளன. "e-Vitara" பேட்ஜிங் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பின்புற வைப்பர் மற்றும் வாஷர் செயல்பாடு மற்றும் டிஃபோகர்கள் உள்ளன. முன்புறத்தைப் போலவே, பின்புற பம்பரின் கீழ் பகுதி மேட் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பூட், ஒரு ரிக்வஸ்ட் சென்சார் மூலம் ஆப்ரேட் செய்யப்படுகிறது. பின்புற சீட்களைப் பயன்படுத்தும் போது பூட் ஸ்பேஸ் 236 லிட்டரிலிருந்து 306 லிட்டர் வரை இருக்கும், மேலும் சீட்களை மடிக்கும்போது 562 லிட்டராக விரிவடையும். பின்புற இருக்கைகள் 40:20:40 என பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

கேபினுக்குள், e-Vitara மற்ற மாருதி மாடல்களிலிருந்து வேறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது. இரண்டாவது வரிசையில் மூன்று அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெட்கள் உள்ளன, ஆனால் பிரத்யேக ஆர்ம்ரெஸ்ட் இல்லை. பின்புற ஏசி வென்ட்கள், சீட் பாக்கெட்டுகள் மற்றும் UV-கட் கண்ணாடி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கதவுகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கைகளை வைக்கும் இடத்தில் சாஃப்ட் டச் பொருள் உள்ளது. பின்புற சீட்களில்சாய்ந்து கொள்ளலாம், இது பயணிகளின் வசதி அல்லது பூட் ஸ்பேஸிற்காக இடமளிக்கிறது. பின்புற கால் இடம் நன்றாக உள்ளது. ஆனால் உயரமான பயணிகளுக்கு தலை பகுதியில் இடம் குறைவாக இருக்கலாம்.

முன்புற கேபின் ஃப்ளோட்டிங் சென்டர் கன்சோலைக் கொண்டுள்ளது, இது கீழே சேமிப்பு இடத்தை வழங்குகிறது. சார்ஜிங் ஆப்ஷன்கள் மற்றும் கப் ஹோல்டர்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. பிரீமியம் கியர் ஷிஃப்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் உள்ளன. டிரைவர் சீட்டில் , லம்பர் சப்போர்ட் உட்பட 10-வழி எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் உள்ளது. பயணிகள் சீட்டில் மேனுவலி அட்ஜெ்ட் செய்யும் ஆப்ஷன் உள்ளது. ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர் வியூ மிர்ரர் (IRVM) கண் கூசலை குறைக்கிறது.

e-Vitara டுயல் டிஜிட்டல் ஸ்கிரீன்களுடன் வருகிறது. 10.1-இன்ச் ஒருங்கிணைந்த டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 10.25-இன்ச் மல்டி-இன்பர்மேஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த ஸ்கிரீன்கள் விரிவான தகவல்களையும் கட்டுப்பாடுகளையும் வழங்குகின்றன. வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு சப்போர்ட் செய்யப்படுகிறது. இந்த காரில் இன்பினிட்டி சவுண்ட் செட்டப்பும் உள்ளது. டேஷ்போர்டு, பழுப்பு நிறத்தில் சாஃப்ட் டச் பொருட்களையும், நல்ல தரமான பிளாஸ்டிக்கையும் ஒருங்கிணைத்து டபுள் டச்சை கொண்டுள்ளது.

ஸ்டீயரிங் வீல் இரண்டு-ஸ்போக் கொண்டதாகவும், ஃப்ளாட்-பாட்டம் (டி-கட்) கொண்டதாகும். இது பிரீமியம் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது. இது ரிக்லைனிங் மற்றும் டெலஸ்கோபிக் ரீச் ஆகிய இரண்டு அட்ஜெஸ்ட் மென்ட்களை கொண்டுள்ளது. சன் ரூஃப் இதில் வழங்கப்பட்டுள்ளது இதற்கு ஸ்கிரீனும் வழங்கப்பட்டுள்ளது. அதைத் திறக்கலாம் அல்லது மூடலாம், ஆனால் கண்ணாடி திறக்க முடியாது. இந்த வடிவமைப்பு, வாகனம் ஓட்டும்போது பயணிகள் தலையை வெளியே வைப்பதைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, பக்கவாட்டு ஜன்னல்களில் UV-கட் கண்ணாடிகள் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குகின்றன.

மாருதி சுசுகி e-Vitara, HEARTECT-e என அழைக்கப்படும் முற்றிலும் புதிய EV தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம், உயர் கட்டமைப்பு ஸ்திரதன்மை மற்றும் மேம்பட்ட உயர்-வோல்டேஜ் பாதுகாப்பை வழங்குகிறது. e-Vitara 4,275 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,640 மிமீ உயரம் கொண்டது. இது 2,700 மிமீ வீல்பேஸையும், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டுள்ளது.

இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன: 49 kWh மற்றும் 61 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி ஆப்ஷன் உள்ளது. இவை இரண்டும் BYD நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 49 kWh பேட்டரி, முன் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 144 bhp (106 kW) மற்றும் 193 Nm டார்க் திறனை உருவாக்குகிறது. இந்த வேரியண்ட் 344-346 கிமீ WLTP ரேஞ்சை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. 61 kWh பேட்டரி, முன் பொருத்தப்பட்ட மோட்டாருடன், 174 bhp (128 kW) மற்றும் 193 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த எடிச 428 கிமீ WLTP ரேஞ்சையும், 543 கிமீ ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் வழங்குகிறது.

விவரக்குறிப்பு 49 kWh வேரியண்ட் 61 kWh வேரியண்ட் (FWD)
பேட்டரி திறன் 49 kWh 61 kWh
அதிகபட்ச பவர் 144 bhp (106 kW) 174 bhp (128 kW)
அதிகபட்ச டார்க் 193 Nm 193 Nm
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் (WLTP) 344-346 km 428 km
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் (ARAI) - 543 km

பாதுகாப்பு அம்சங்களில் பல ஏர்பேக்குகள் தரமாக உள்ளன. e-Vitara, லெவல் 2 அடாஸ் (ADAS) பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிரேக்கிங்குடன் கூடிய ஃபார்வர்ட் மோதல் எச்சரிக்கை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது 5-ஸ்டார் பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Suzuki Connect ஆப், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கார் செயல்பாடுகளுக்கான ரிமோட் மூலம் கண்காணிக்கும் அல்லது செயல்படுத்தும் ஆப்ஷன்களை வழங்குகிறது.

e-Vitara காரை ஓட்டுவது ஒரு கிளீனான டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது. சஸ்பென்ஷன் செட்டப் சமநிலையானது, அதிக சாஃப்ட் அல்லது ரஃப்பாக இல்லாமல், ஒரு தனி விதமான வசதியை அளிக்கிறது. இது சாலைகளின் மேடு பள்ளங்களை திறம்பட கையாளுகிறது, இது ஒரு சிறப்பான பயணத்திற்கு பங்களிக்கிறது. வளைவுகளில் திரும்பும் போது, ​​கார் திறமையாக கையாளுகிறது. பேட்டரி பேக், ஃப்ளோர் பகுதிக்கு கீழே இருப்பதால், குறைவான கிராவிட்டி கண்ட்ரோல் வாகனத்தின் ஸ்டெபிளிட்டி மற்றும் கிரிப்பை அதிகரிக்கிறது. இது ஒரு சரியான ஆஃப்-ரோடராக வடிவமைக்கப்படவில்லை என்றாலும், ஒட்டுமொத்த செட்டப் ஒரு நிலையான மற்றும் நம்பிக்கையான பயணத்தை வழங்குகிறது.

மாருதி சுஸூகி e-Vitara, அதன் அம்சம் நிறைந்த சலுகை மற்றும் பிரீமியம் கேபினுடன் ஒரு எலெக்ட்ரிக் வாகனமாக தன்னை நிலைநிறுத்துகிறது. இது பல்வேறு ரோடு கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு ஒரு வசதியான மற்றும் ஸ்டெபிளான ஒரு டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ஒரு நல்ல ரேஞ்ச் கிடைப்பது, வெவ்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு அதன் முறையீட்டை அதிகரிக்கிறது. லெவல் 2 ADAS மற்றும் 5-ஸ்டார் பாரத் NCAP ரேட்டிங் உள்ளிட்ட வலுவான பாதுகாப்பு தொகுப்பு, அதன் மதிப்பு முன்மொழிவுக்கு உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதன் வடிவமைப்பு, தொழிற்நுட்பம், பாதுகாப்பு மற்றும் டிரைவிங் கண்டிஷன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாருதி சுஸூகி e-Vitara மின்சார எஸ்யூவி பிரிவில் வலுவான இடத்தை வகிக்கிறது. இதன் ஒட்டுமொத்த தொகுப்பு, இந்தியாவில் ஒரு நவீன, நம்பகமான மற்றும் திறமையான எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தேடுபவர்களுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்யத் தகுந்த ஒரு மாடலாக அமைகிறது. விற்பனை ஜனவரி 2026-ல் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 19, 2025, 11:00 [IST]
English summary
Maruti suzuki e vitara review performance battery range features all details
மேலும்... #maruti suzuki #review #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+