23.24 கி.மீ மைலேஜ் தரும் மாருதி சுஸூகி இன்விக்டோ கார் எப்படி இருக்குது? ஓட்டி பாருங்க தாறுமாறா இருக்குது!

சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்கள் தங்களுக்குள் பேட்ஜ்களை மாற்றி கார்களை அறிமுகப்படுத்தும் ஒப்பந்தத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸூகி நிறுவனத்திடம் உள்ள பிரெஸ்ஸா மற்றும் பலேனோ ஆகிய கார்களை டொயோட்டாவின் பேட்ஜிற்கு மாற்றியுள்ளது. இந்த டீல் இந்தியாவில் டொயோட்டாவின் விற்பனையை அதிகரிக்க உதவியது.

தற்போது அந்த டீல் மாருதி பக்கம் மாறியுள்ளது. மாருதி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் காரை மாருதி பேட்ஜில் கிராண்ட் விட்டாரா என வெளியிட்டது. தற்போது டொயோட்டா வெளியிட்டுள்ள இன்னோவா ஹைகிராஸ் என்ற சிறந்த எம்பிவி காரை மாருதி நிறுவனம் தனது பேட்ஜில் வெளியிட்டுள்ளது. இந்த காருக்கு மாருதி சுஸூகி நிறுவனம் இன்விக்டோ எனப் பெயரை மாற்றியுள்ளது.

maruti suzuki invicto review

இன்னோவா ஹைகிராஸ் காரை அப்படியே வெளியிடாமல் சில மாற்றங்களைச் செய்து மாருதி நிறுவனம் அதை இன்விக்டோ காராக மாற்றியுள்ளது. மாருதி செய்த மாற்றம் இந்த காரையே தலை கீழாக மாற்றிவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் இந்திய மார்கெட்டில் என்ன செய்யப்போகிறது? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

டிசைன் மற்றும் அம்சங்கள்: மாருதி இன்விக்டோ கார் டொயோட்டோ மாருதியின் பேட்ஜ் மாற்றம் செய்யப்பட்ட கார் தான். ஆனால் இதை நாம் வெறும் பேட்ஜ் ஸ்வாப்பாக பார்க்காமல் முறையாக ஃபேஸ்ஃலிப்ட்டாக பார்க்கலாம். இதை மாற்றியமைக்கும் போது பிரிமியம் எம்பிவி ரக காராக மாற்றி மாருதியின் நெக்ஸா லைன் அப்பில் டிரேடுமார்க் காராக இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

maruti suzuki invicto review

இன்விக்டோ காரின் முன்பக்கம் வித்தியாசமான கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய குரோம் பார் சுஸூகி லோகோவுடன் இணைக்கிறது. இது போக மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள், புதிய 3 எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டுகள். கிரில் பகுதி கிராண்ட் விட்டாரா மற்றும் புதிய ஃப்ரான்கஸ் எஸ்யூவி கார்களில் உள்ளதைப் போல இருக்கிறது.

ஹெட்லைட் ஸ்மோக்டு லுக்கில் இருப்பது இதற்கான நெக்ஸா லுக்கை கொடுக்கிறது. பெரிய டர்ன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.இன்னோவா ஹைகிராஸ் காரிலிருந்து மற்ற மாற்றங்கள் என்றால் புதிய 3 எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 17 இன்ச் அலாய் வீல் இந்த இன்விக்டோ காரில் பொருத்தப்பட்டுள்ளது.

maruti suzuki invicto review

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை ஸ்டியரிங் வீல் மற்றும் டேஷ்போர்டில் உள்ள சில்வர் டிரிம் இதன் பிரிமியம் லுக்கை சற்று கெடுக்கிறது. சீட்கள் பெரும்பாலும் ஹைகிராஸ் போல தான் இருக்கிறது. முன்பக்க சீட்கள் வென்டிலேட்டட் சீட்களாக உள்ளது. டிரைவர் சீட் அட்ஜெஸ்டபிள் யூனிட்டாக இருக்கிறது. 7 சீட்டர் வெர்ஷன்களில் இன்விக்டோ காரில் இன்னோவா காரை போல ஓட்டோமேன் கேப்டன் சீட்களே வழங்கப்பட்டுள்ளன.

இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே சிஸ்டமும் அதே 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இன்னோவாவில் உள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில் கேட், பெரிய பானரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆகிய அம்சங்கள் உள்ளது.

maruti suzuki invicto review

இந்த கார் கனெக்டெட் கார் அம்சத்திற்காக மாருதி சுஸூகி நிறுவனத்தின் சுஸூகி கனெக்ட் சூட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஜியோ ஃபென்சிங் மற்றும் காரின் கதவுகளை லாக் மற்றும் அன்லாக் செய்யக்கூடிய அம்சங்களை ஸ்மார்ட் வாட்ச் மூலமே செய்து கொள்ள முடியும். இதனால் இந்த இன்விக்டோ காரை எளிதாகத் திருடர்கள் திருடிச்செல்வதது என்பது கடினமான விஷயமாகத் தான் இருக்கும்.

மாருதி சுஸூகி இன்விக்டோ காரை பொருத்தவரை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டைனமிக் கைடுலைன்ஸ் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, முன்பக்கமும் பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

maruti suzuki invicto review

மாருதி நிறுவனம் இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பத்தை சேர்க்கவில்லை. இதை நிச்சயம் மாருதி நிறுவனம் செய்திருக்க வேண்டும். இந்த தொழிற்நுட்பம் நிச்சயம் டிரைவருக்கு டிரைவிங்கில் உதவியாக இருந்திருக்கும், சாலையில் இந்த கார் விபத்தில் சிக்கும் வாய்ப்பை குறைத்திருக்கும். மாருதி இந்த விஷயத்தில் சமரசம் செய்திருக்கக் கூடாது.

டிரைவிங் இம்பிரஷன்: டொயோட்டாவில் உள்ள அனைத்து இன்ஜின்களை இந்த இன்விக்டோ காருக்கு எடுக்காமல் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்தை மட்டும் இன்விக்டோ காருக்காக எடுத்துள்ளது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு முன்பக்க வீல் டிரைவாக மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

maruti suzuki invicto review

ஹைபிரிட் செட்டப்பை பொருத்தவரை 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் 4 சிலிண்டர் இன்ஜினாக வருகிறது. இது 150 பிஎச்பி பவரையும் 187 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. அது 111பிஎச்பி பவரையும் 206 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மோட்டார் 1.7 கிலோ வாட் ஹவர் NIMH பேட்டரி பேக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் அதிகப்பட்ட பவராக 184 பிஎச்பி பவர் லிமிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இன்விக்டோ கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.5 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சம் லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

maruti suzuki invicto review

இந்த இன்விக்டோ கார் எலெக்ட்ரிக் பவரிலேயே ஸ்டார்ட் ஆகி அதன் மூலமே சிட்டியில் சிறிது தூரம் சென்று வர உதவியாக இருக்கும். இதில் சற்று வேகமாகச் செல்லவும் முடிவும், சற்று வேகம் அதிகம் ஆகும்போது எலெக்ட்ரிக்கல் மோட்டாரே சிக்னல் அனுப்பி ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை ஸ்டார்ட் செய்து விடும் டிரைவருக்கு கவலையே வேண்டாம்.

இந்த காரை ஓட்டும் போது முதலில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருந்தது. ஆனால் அதிக வேகத்தில் இ-சிவிடி கியர் பாக்ஸ் சற்று கடினப்பட்டது. ஆனால் குறைந்த வேகத்தில் இந்த காரை இயக்குவது வெகு சிறப்பாகவே இருந்தது. பெரிய காரை ஓட்டும் ஃபீலிங்கே இல்லை.

maruti suzuki invicto review

இந்த காரில் மோனோக்யூ சேஸிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 17 இன்ச் அலாய் வீல் 215/60 டயர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒட்டும் போது இன்னோவா ஹைகிராஸ் காரை விடச் சற்று சிறப்பாகவே இருந்தது. திருப்பங்களில் எல்லாம் இவ்வளவு பெரிய கார் சுலபமாகத் திரும்பியது. கார்னர்களில் திரும்பும் போது இந்த கார் மிகச் சுலபமாக எந்த வித கஷ்டத்தையும் தராமல் திரும்பியது.

இந்த காரின் பிரேக்கை பொருத்தவரை ஹைபிரிட் செட்டப்பில் ரீஜெனரேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரீஜெனரேட்டிவ் சிஸ்டத்தை மாற்றியமைத்தும் கொள்ளலாம். இது போக அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால் சுலபமாக இருக்கிறது. பிரேக் பெர்ஃபாமென்ஸ் வெகு சிறப்பாகவே இருக்கிறது. குறைவாக தூரத்திலேயே கார் நின்றுவிடுகிறது.

maruti suzuki invicto review

இறுதித் தீர்ப்பு: மாருதி இன்விக்டோ கார் டொயோட்டா நிறுவனத்திடமிருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் என்றாலும் இதன் விலை இன்னோவா ஹைகிராஸ் காரை விட ரூ1 லட்சம் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இந்த காரில் அடாஸ் தொழிற்நுட்பம் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி வாடிக்கையாளர்கள் இதை நிச்சயம் ஒரு நல்ல ஐடியாவாக கருதலாம். எது எப்படியோ கடைசியில் காரின் விலைதான் அதன் விற்பனையை தீர்மானிக்கக்கூடிய விஷயமாக இருக்கும்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 16:00 [IST]
English summary
Maruti suzuki invicto review engine design specs and price discussed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X