இது காரே கிடையாது, ஆஃப்ரோடு கப்பல் சார்! மாருதி ஜிம்னி காரின் ரிவியூ இதோ!

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஜம்னி என்ற லைஃப் ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவியை காட்சிப்படுத்தியது. இந்த கார் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும். நிலையில் இந்த காரின் விமர்சனத்தை இதோ உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவிற்குள் காலடித் தடத்தை எடுத்து வைத்து 1983 முதல் 800 காரை உருவாக்க ஆரம்பித்து விற்பனைக்குக் கொண்டு கொண்டு வந்தது. அதன் பின்னர் மஹிந்திரா நிறுவனத்தின் இந்திய மயமாக்க ஜீப்களை பார்த்த பின்பு ஜிம்னி என்ற ஆஃப்ரோடு எஸ்யூவி காரை உருவாக்கியது.

maruti suzuki jimny review

இதே காரை மாருதி சுஸூகி ஜிப்ஸி என்ற பெயரில் SJ40 சிரீஸ் காராக அறிமுகப்படுத்தியது. இது நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2018 ஆண்டு வரை இந்த கார் விற்பனையில் தான் இருந்தது. பாதுகாப்பு கட்டுப்பாடுகள் வந்த பிறகு தான் மாருதி நிறுவனம் இந்த காரை விற்பனையிலிருந்து நீக்கியது.

அதன் பின்னர் 4வது தலைமுறை ஜிம்னி கார் இந்தியாவிற்கு வருவது குறித்து ஆட்டோமொபைல் வட்டாரங்களில் அதிகமான பேச்சு இருந்தது. இதற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய லைஃப் ஸ்டைல் ஜம்னி கார் காட்சிப்படுத்தப்பட்டது.

maruti suzuki jimny review

இந்த கார் பழைய 3 டோர் கான்செப்டில் இல்லாமல் 5 டோர் காராக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது முதலே இந்த கார் எப்படி பெர்ஃபார்ம் செய்யும், இதன் இன்ஜின் திறன் எப்படி இருக்கும் எனக் கேள்வி ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் தான் மாருதி சுஸூகி நிறுவனம் டெகராடூன் பகுதிக்கு இந்த புதிய ஜிம்னி காரை டெஸ்ட் செய்ய டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்தது. நாங்களும் எங்கள் குழுவுடன் டெகராடூனிற்கு இந்த கார் எப்படி இருக்கிறது எனப் பார்க்கக் கிளம்பிச் சென்றோம். நாங்கள் ஓட்டி பார்க்கும் போது எப்படி இருந்தது. பழைய காரிலிருந்து என்னென்ன மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு பெர்ஃபாமென்ஸ் செய்கிறது? என்பதை விரிவாக இங்கே காணலாம்.

maruti suzuki jimny review

இந்த கார் பார்க்க அதன் 3 டோர் வெர்ஷன் கார் போலவே இருந்தது. இதில் எக்ஸ்ட்ரா 2 டோர் இருப்பதால் அதற்காக அதன் நீளம் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் விற்பனையாகும் 3 டோர் ஜிம்னியை விட இந்த இந்தியாவிற்கான ஜிம்னி கார் கொஞ்சம் பாக்ஸி மற்றும் ரக்கட் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்பக்கம் இந்த காரின் முதல் மற்றும் 2வது வெர்ஷில் இருந்ததை போல வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. நடுவே குரோம் நிறத்திலான நீள வாக்கிலான ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் நடுவே சுஸூகுி பேட்ஜ் இருக்கிறது. ஹெட்லைட் அருகே கிரில்லின் டாப் எட்ஜ் பகுதியில் சிறிய வட்ட வடிவிலான ஹெட்லைட் இருக்கிறது.

Maruti Suzuki Jimny Grille

இந்த ஜிம்னி காரின் முன்பக்க பம்பர் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸிற்காக உயர்த்தி வைக்கப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது. இது கடினமான பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பம்பரில் ஃபாக் லைட் மற்றும் சென்ட்ரல் ஏர் இன்டேக் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது காருக்கான ஒரு ரக்கட் லுக்கை கொடுக்கிறது.

இந்த காரின் பக்கவாட்டு பகுதியைப் பொருத்தவரை பாக்ஸி லுக்கில் ஒரு குட்டி பீஸ்ட் போல உருவாக்கப்பட்டுள்ளது. வீல் ஆர்ச்சுகள் கடினமான பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வீல்களை பொருத்தவரை 15 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஆஃப்ரோடிற்கு தகுந்த டயர் இதில் இருக்கிறது.

இந்த கார் டோர் கார் என்பதால் பின்பக்கம் உள்ள மூக்கால் பாக கிளாஸ் பேனல் சுருங்கியுள்ளது. இதன் ரூஃப் ப்ளூயிஷ் பிளாக் ஷேடில் டூயல் டோன் வெர்ஷனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளுக்கு மேல ட்ரிப் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மழை பெய்யும் போது காருக்குள் ஏறும் போதும் இறங்கும் போதும் உங்கள் மீது தண்ணீர் படாமல் தடுத்துவிடும்.

இந்த காரின் பின்பக்கத்தைப் பொருத்தவரை பாக்ஸி லுக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் நடுவே ஸ்பேர் வீலை பொருத்திடும் இடம் இருக்கிறது. பின்பக்க பம்பரில் மொத்த லைட் செட்டப்பும் பம்பர் பகுதியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 3வது பிரேக் லைட் இதில் வழங்கப்படவில்லை. பொதுவாக எஸ்யூவி கார்களில் இந்த 3வது பிரேக் லைட் இருக்கும்.

Maruti Suzuki Jimny Rear

இந்த புதிய ஜிம்னி கார் உள்ளே சென்று பார்த்தால் பிளேனான இன்டீரியரை காண முடியும். இதில் முக்கியமான கவனிக்கத்தக்க அம்சம் என்றால் இதில் வழங்கப்பட்டுள்ளது 7 அல்லது 9 இன்ச் ஸ்கிரீன் ஆப்ஷன் தான். இதை இன்ஃபோடெயின்மென்டாக பயன்படுத்தலாம். மேலும் இந்த காரில் 21ம் நூற்றாண்டின் பல டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரினில் ப்ளூடூத், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆகிய கனெக்டிவிட்ட அம்சங்கள் இருக்கிறது. மியூசிக் மற்றும் நேவிகேஷன் தேவைகளுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சவுண்ட் சிஸ்டத்திற்காக ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான மியூசிக் அனுபவத்தை தருகிறது.

உட்புறத்தின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆஃப்ரோடிங்கிற்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவர் முன்பு உள்ள இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கிளஸ்ட்கள் பெரியதாகவும் அனலாக் வடிவமைப்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறிய மல்டி ஃபங்சன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதில் கார்கள் குறித்த மற்ற சில தகவல்கள் இருக்கிறது.

இதன் சீட்கள் நீங்கள் ஆஃப்ரோடிங்கில் செல்லும் போது வரும் பள்ள மேடுகளில் கார் குதிப்பதற்கு ஏற்றார் போல வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பயணிக்கும் கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. கரடு முரடான பாதைகளில் வேகமாகச் செல்ல முயன்றால் இவர்கள் இதைப் பிடித்துக்கொண்டு இந்த ஆஃப்ரோடு ரைடிங் அனுபவத்தைப் பெற முடியும்.

Maruti Suzuki Jimny Display

டேஷ் போர்டு உள்ளிட்ட மற்ற அனைத்து பகுதிகளும் ஸ்கிராட்ச் ப்ரூப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் உங்கள் செல்லப்பிராணிகளை அழைத்துச் சென்றாலும் அது ஸ்கிராட்ச்களை ஏற்படுத்தாது. கண்ட்ரோல்கள் பெரியதாகவும், கண்டுபிடிக்கச் சுலபமாகவும் தான் இருக்கிறது. ஆனால் அதை அரேஞ்ச் செய்வதில் மாருதி நிறுவனம் கொஞ்சம் நேரம் எடுத்துச் செய்திருக்கலாம்.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ், இபிடி, பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிரப்ரன்ஸியல், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா, ஐஎஸ்ஓபிக்ஸ் ஆங்கர் பாயிண்ட்கள், வழங்கப்பட்டுள்ளது. இது இந்த காரை பாதுகாப்பான காராகவும் காட்டுகிறது.

இன்ஜின்: இந்த புதிய மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை கே 15பி 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 103.4 பிஎச்பி பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 134.2 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது.

இந்த இன்ஜின் 4 வீல்களுக்கும் பவரை வழங்குகிறது. இதற்காக 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சுஸூகியில் ஆல் கிரிப் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்பர் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki Jimny Off Road

பழைய ஜிம்ஸி காரின் அதே லேடர் ஃப்ரோம் சேஸிஸில் தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்சனை பொருத்தவரை 3 லிங்க் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பக்கமும் பின்பக்கமும் ரிஜ்ஜிட் ஆக்ஸில் மற்றும் காயில் ஸ்பிரிங் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 இன்ச் ஸ்டீல் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன. இதில் 195/80 R15 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி ஜிம்னி காரை பொருத்தவரை பின்பக்கம் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீலுடன் சேர்த்து 3985 மிமீ நீளம் கொண்டது. 1645 மிமீ அகலமும், 1720 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரில் 2590 மிமீ வீல் பேஸ் இருக்கிறது. இந்த கார் ஒட்டு மொத்தமாக 1210 கிலோ எடை கொண்டது. 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 208 லிட்டர் பூட் வசதி இந்த காரில் இருக்கிறது.

டிரைவிங் இம்பிரஷன்: மாருதி சுஸூகி ஜிம்னி கார் லேடர் பிரேம் சேஸிஸ் மற்றும் ஆஃப் ரோடிங் சஸ்பென்சன் செட்டப் உடன் இந்த கார் வந்தாலும் இது ஆஃப்ரோடிங்கில் வெளுத்து வாங்கும் என்று எல்லாம் சொல்லி விட முடியாது. இந்த காரின் இன்ஜின் ஆஃப்ரோடிங்கிற்கு இன்னும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் மிட் மற்றும் டாப் பவரில்தேவையான அளவை விடச் சிறப்பாகவே செய்கிறது.

பிரேக் இல்லாமல் பாயிண்ட் ஏ முதல் பாயிண்ட் பி வரை பயணித்தால் சிறப்பாக இருக்கிறது. இப்படிச் செல்லும் போது இடையில் வரும் பள்ள மேடுகளில் ஜிம்னி கார் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் செயல்படும்.உங்கள் ரைடு ஸ்கூமூத்தாக இருக்கிறது. சிறு சிறு பள்ள மேடுகளில் எல்லாம் ஏறி இறங்குவதே தெரியாது. இதில் உள்ள ஆஃப் ரோடிங் அம்சம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜம்னி காரை கார்னர்களில் திருப்பும் போது ஒரளவிற்குதான் பாடி ரோல் இருக்கிறது. ஹை ரைடிங் செட்டப் காரணமாக இது தவிர்க்கப்படுகிறது. இதன் ஸ்டியரில் லைட்டாகவும் 5.4 மீட்டர் ரேடியஸிலும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. யூடர்ன் எடுக்கும் போது டிரைவருக்கு சிரமத்தைக் கொடுப்பதில்லை.

இன்ஜின் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக ட்யூன் செய்பயப்ட்டுள்ளது. டிரைவர் கொடுக்கும் இன்புட்களுக்கு உடனுக்குடன் ரெஸ்பான்ட் செய்கிறது. இதன் லோஎன்ட் பவர் டஃப்பான பகுதிகளிலும் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்கள் ஆஃப்ரோடிங்கில் சிறப்பாகச் செயல்படுகிறது.ஆட்டோகியர் பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருக்கிறது.

மேனுவல் கியர் பாக்ஸ் கியர் மற்றும் ஆக்ஸிலரேஷனில் அதிகமான கண்ட்ரோலை வழங்குகிறது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் முதல் 2 கியர் ஆக்ஸிலரேட்டருக்கு சிறப்பான ரெஸ்பானஸை வழங்குகிறது. இந்த ஜிம்னி எஸ்யூவி கார் ஓவர் டிரைவ் செய்யும் போது தன்னை தானே லிமிட் செய்து கொள்கிறது.

இந்த காரை 4 ஹை மோடில் வைத்துப் பயணிக்கச் சிறப்பாக இருக்கிறது. கரடு முரடான பாதைகளை எளிதாகக் கடந்து விடுகிறது.ஒரு வீல் டிராக்ஷனை இழந்தாலும், பிரேக் லிமடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல் குறுக்கிட்டு ஒரு மேஜிக் செய்து காரை தொடர்ந்து நகர்த்த வைக்கிறது. இந்த காரின் லேடர் ஃபிரேம் சேஸிஸ் மற்றும் 3 லிங்க் சஸ்பென்சன் செட்டப் ஆஃப்ரோடிங்கில் சிறப்பாகச் செயல்படுகிறது.

இந்த காரின் கிரேஸியான பிரேக் ஓவர், அப்ரோச் மற்றும் டிப்பார்ச்சர் ஆங்கிள்கள் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இந்த காரில் எவ்வளவு பெரிய ஆஃப்ரோடு பகுதிகளாக இருந்தாலும் சரி சிறப்பாகவே இருக்கும். இந்த காரின் பிரேக்குகள் எல்லாம் சிறப்பாகச் செயல்படுகிறது. நீங்கள் நினைப்பதை விடச் சற்று அதிகம் தூரத்தை பிரேக்கிற்காக எடுத்துக்கொள்ளும். இதை மனதில் வைத்து பிரேக் பிடியுங்கள்.

இந்த காரில் உள்ள ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகியன ஆஃப்ரோடிங்கிற்கு ஏற்ற காராக இதை உருவாக்குகிறது. இந்த ஹில் ஹோல்டு நீங்கள் ஏற்றமான ரோட்டில் டிராபிக் ஜாமில் சிக்கினாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினந்தோறும் பயன்பாட்டிற்கும் இது ஏற்ற காராக இருக்கும்.

Maruti Suzuki Jimny Off Road

இறுதித் தீர்ப்பு: ஜிப்ஸி கார் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஜிம்னி காரை ஆஃப்ரோடிங் அம்சங்களுடன் களம் இறக்கியுள்ளது. ஜிம்னி கார் ஆஃப்ரோடுகளின் லிட்டில் மான்ஸ்டர் என்றே சொல்ல வேண்டும். இதில் பிராக்டிக்கல் கேபின் மற்றும் டிசென்ட் ரோடு மேனர்கள் உள்ளது.

இதன் சிறப்பான ரைடு குவாலிட்டியால் ஜிம்னி கார் ஆஃப்ரோடிங் விரும்பிகளாகவும், வார நாட்களில் சாலையில் மற்ற பயன்பாட்டிற்குக் காரை பயன்படுத்துபவர்களுக்கும் இது ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்த காரை வாங்க இதை விட வேறு என்ன தேவை? இப்பவே புக் பண்ணுங்க!

More from DriveSpark

Article Published On: Friday, May 26, 2023, 11:00 [IST]
English summary
Maruti suzuki jimny review perfomance engine features and much more discussed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X