மாருதி வி்ட்டாரா பிரெஸ்ஸா காரில் உள்ள நிறை - குறைகள் என்னென்ன?

By Meena

மாருதி நிறுவனத்தின் புதிய மாடல்கள் எது மார்க்கெட்டுக்கு வந்தாலும், அது பிற கார்களைக் காட்டிலும் அதிக கவன ஈர்ப்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதற்குக் காரணம், அந்த கார்களின் மீதான நம்பிக்கையும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் ஒருசேர அந்நிறுவனம் கொண்டிருப்பதுதான்.

கடந்த ஆண்டு மாருதி கார்களில் மொத்த விற்பனையை எடுத்துப் பார்த்தால் பிரம்மித்துப் போய் விடுவீர்கள். ஆமாங்க, ஒரே ஆண்டில் மாருதி நிறுவனத்தின் 14.15 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவு விற்பனையின் உச்சம். அதனால்தான் மாருதி எந்த மாடல் அறிமுகப்படுத்தினாலும், ஒருவேளை அது தோல்வியே அடைந்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனத்தை அந்த கார்கள் ஈர்த்துவிடும்.

கடந்த மார்ச் மாதம் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான விடாரா பிரேஸா மாடலை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி நிறுவனம் சமீபத்தில்தான் கால் பதித்ததால், அதன் செயல்பாடுகளை முழுமையாக ஆராய இயலாது.

அதேவேளையில், காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் பல கார்கள் தெறி ஹிட்டடித்துள்ள நிலையில், புதிதாக வந்துள்ள விடாரா பிரேஸாவில் என்னதான் இருக்கிறது? என்பதை அலசிப் பார்க்க வேண்டியுள்ளது.

அந்த மாடலில் உள்ள சாதக பாதக அம்சங்கள் இதோ உங்களுக்காக....

முதலில் விடாரா பிரேஸா மாடலில் உள்ள சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், அதன் தோற்றம்தான் முதலில் கண் முன்னே வந்து நிற்கிறது. காம்பேக்ட் காராக அல்லாமல் பார்க்க பிரம்மாண்டமான எஸ்யூவி மாடலைப் போன்றதொரு லுக்கைத் தருகிறது.

இதனால் முதல் பாலிலேயே சிக்ஸரை அடிக்கிறது விடாரா பிரேஸா. அடுத்தது விலை. இந்த மாடல் கார்களில் சற்று குறைந்த விலை காராக மாருதி விடாரா பிரேஸா உள்ளது (ரூ.6.99 லட்சத்திலிருந்து ஆரம்பம்). உள்புறத்தில் இரண்டு டோன் கலர்களில் இன்டீரியர் செய்திருப்பது, விலாசமான இருக்கை வசதி, குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான இட வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாடலின் ஹைலைட்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாமாக இயங்கும் முகப்பு விளக்குகள், சாவி இன்றி வாகனம் இயக்கும் வசதி, ஆட்டோமேடிக் வின்ட்ஷீல்டு வைப்பர் (முகப்புக் கண்ணாடி துடைப்பான்), தானியங்கி வெப்பநிலை மாற்ற வசதி உள்ளிட்டவை விடாரா பிரேஸாவின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் சிறப்பு அம்சங்கள்.

1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 89 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. மைலேஜைப் பொருத்தவரை லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்றும் மாருதி நிறுவனம் உறுதி அளிக்கிறது.

எரிபொருள் டேங்க்கின் கொள்திறன் 48 லிட்டராக இருப்பது நெடுந்தூரப் பயணத்துக்கு சாதகமான அம்சம்.

சரி, இத்தனை ஹைலைட்டான விஷயங்கள் இருந்தாலும், விடாரா பிரேஸா மாடலில் சில குறைபாடுகளும் ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் பார்க்கலாம்...

டீசல் எஞ்சின் மாடல் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் கார்கள் இந்த மாடலில் இல்லை. எஸ்யூவி மாடலில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் இருக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதை மாருதி நிறுவனம் விடாரா பிரேஸா மாடலில் பூர்த்தி செய்யவில்லை.

இந்த மாடலை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பலேனோ காரில் இடம்பெற்றிருக்கும் பல சிறப்பம்சங்கள் கூட இந்த மாடலில் இல்லாதது ஏமாற்றம்தான். ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், லெதர் ஸ்டீரிங் உள்ளிட்ட வசதிகள் விடாரா பிரேஸாவில் இல்லை.

இதைத்தவிர உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான பூட்ஸ்பேஸ் வசதி 328 லிட்டர் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பது, இந்த ரக மாடல்களுக்கு மிகவும் குறைவான ஒன்று.

விரைவில் இந்திய அரசாங்கம் கொண்டு வர இருக்கும் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு அம்சங்களுக்க ஏற்ற கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மாருதி தெரிவிக்கிறது.

மொத்தத்தில், விடாரா பிரேஸாவில் உள்ள குறைபாடுகளைக் காட்டிலும், சிறப்பம்சங்கள் அதிகமாக இருப்பதால் இந்த மாடல் மார்க்கெட்டில் வெற்றி பெறும் என நம்பலாம். குடும்பத்துடன் பயணிக்கவல்ல பாதுகாப்பான எஸ்யூவி மாருதி விடாரா பிரேஸா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2016, 15:52 [IST]
English summary
Maruti Vitara Brezza: Some Of The Pros & Cons.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+