இது காரா இல்ல சொகுசு கப்பலா? மெர்சிடீஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் கார் ரிவியூ!
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என சொல்லலாம். இந்த புரட்சியின் தாக்கம் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. அந்நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கி விட்டன. ஆனால் இந்தியாவில் இந்நிறுவனம் இதுவரை மூன்று விதமான எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.
தற்போதைய நிறுவனம் தனது நான்காவது எலெக்ட்ரிக் காராக மெர்சிடீஸ் பென்ஸ் இக்யூஏ என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் முதல் முதலில் கடந்த 2017ம் ஆண்டு கான்செப்ட் என்ற காராக காட்சிப்படுத்தப்பட்டது. இதன் புரொடக்ஷன் வெர்ஷன் கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானது. அதன் பின்பு 2023ம் ஆண்டு இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இகியூபி காருடன் சேர்ந்து அறிமுகமானது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐரோப்பாவில் அறிமுகமான இந்த காரை தற்போது இந்நிறுவனம் இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள.து இந்த காரை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் ஜெய்ப்பூர் சென்று இந்த காரை ஓட்டி பார்த்தோம்.
மெர்சிடீஸ் பென்ஸ் இக்யூஏ இந்திய வெர்ஷனை பார்க்கும்போது அதில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. சில சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. டிசைன் மற்றும் அம்சங்களில் பெரும்பாலும் இக்யூ காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய பியானோ பிளாக் நிறத்தில் கிரில் வழங்கப்பட்டுள்ளன. இதில் மெர்சிடிஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஸ்டார் லோகோ சிறிய அளவில் பேட்டனாக வழங்கப்பட்டுள்ளது. இது க்ரோம் பகுதியிலும் காணப்படுகிறது. கீரில் பகுதியின் பக்கவாட்டில் அடாப்டிங் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நீல நிற எலமென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக இக்யூ ரக கார்களில் இது போன்ற டிசைன் அம்சங்களை காண முடியும். கிரில் பகுதிக்கு மேலே இரண்டு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் வகையில் சிறிய லைடு பார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பக்கவாட்டில் 19 இன்ச் ஏஎம்ஜி லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜன்னல் பகுதிகள் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கம் கனெக்டெட் எல்இடி டெய்ல் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கமும் மெர்சிடீஸ் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. பின் பக்கம் ரியல் வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தேவைப்படும் நேரத்தில் மட்டும் பாப்போம் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உள்ளே செல்லும்போது நமக்கு வழக்கம் போல மெர்சிடீஸ் காரில் இருக்கும் சொகுசான பல்வேறு அம்சங்களை பார்க்க முடியும். மத்திய மற்றும் வலது பக்க டேஷ்போர்டு பகுதியில் இரண்டு டிஸ்ப்ளேகள் வழங்கப்பட்டுள்ளன. இடது பக்கம் ஸ்டார் வடிவ பேட்டன் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆம்பியன்ஸ் லைட்டிங் ஆன் செய்யும்போது ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இதில் உள்ள ஏசி வென்ட்கள் பிளேடு எல்லாம் ரோஸ் கோல்டு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள சீட்டுகள் எல்லாம் மனிதர்களாக உருவாக்கப்பட்ட லெதர் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள டோர் செல் பிளேடுகள் எல்லாம் இலுமினேட் ஆகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் ஹெட்சப் டிஸ்ப்ளே, இரண்டு ஸோன் கொண்ட ஆக்டிவேட் சார்கோல் பில்டர்கள் மூலம் இயங்கும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் ஐந்து யுஎஸ்பி சார்ஜிங் போர்டுகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உள்ளே வழங்கப்பட்டுள்ள டூயிங் டிஸ்ப்ளே எம்பக்ஸ் இரண்டாம் தலைமுறை சாஃப்ட்வேரில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்பிளே ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. இதிலுள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கெஸ்டர் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நேவிகேஷன் ஆர்க்யூமென்டட் ரியாலிட்டி மூலம் வழி காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இன்போடைமென்ட் சிஸ்டத்துடன் 710 வாட் கொண்ட பெம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது டால்பி அட்மாஸ் அம்சத்துடன் கூடிய 12 ஸ்பீக்கர் செட்டப்பாக இருக்கிறது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை மல்டிபிள் ஏர் பேக்குகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக டிரைவரின் முட்டி பகுதிக்கு தனி ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் பஞ்சரானாலும் தொடர்ந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக அடாஸ் தொழில்நுட்பம், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், லைவ் டிராபிக் மானிட்டரின், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்களும் இருக்கிறது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை மெர்சிடிஸ் நிறுவனத்தின் சிறிய காராக இருக்கிறது. இந்த கார் 4463 மிமீ நீளமும் 1834 மிமீ அகலமும், 1623மிமீ உயரமும், 2729 மீமி வீல் பேஸூம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் செட் ஆப் பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் முன் பக்க விளை டிரைவ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 190 பிஎச்பி பவரையும் 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 8.6 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 160 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த மோட்டாரை டிரைவ் செய்வதற்கு 70.5 கிலோ ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 560 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 கிலோ வாட் சார்ஜிங் ஆப்ஷன் இருக்கிறது.
இதன் மூலம் 10 முதல் 80 சதவீத சார்ஜை வெறும் 35 நிமிடத்தில் ஏற்றி விட முடியும். ஸ்லோ சார்ஜ்க்காக 11 கிலோ சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சார்ஜ் ஏற்றினால் முழு பேட்டரியை சார்ஜ் ஏற்ற 7 மணி நேரம் 15 நிமிடம் ஆகும்..
ரைடிங் இம்ப்ரஷன்: இந்த காரை ஓட்டி பார்க்கும்போது மற்ற எலெக்ட்ரிக் கார்கள் போலவே இந்த மெர்சிடிஸ் இக்யூஏ காரும் செயல்படுகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளும் சரி அல்லது தேசிய நெடுஞ்சாலைகளும் சரி அதேபோன்ற பீல் தான் கிடைக்கிறது. இந்த காரின் பவர் அவுட்புட் ஸ்மூத்தாக இருக்கிறது. பெர்ஃபார்மன்ஸ் துடிப்பாக இருக்கிறது.
கம்ஃபோர்ட் மோடில் இந்த காரை ஓட்டும்போது மிதப்பது போன்ற உணர்வு தருகிறது. திருப்பங்களில் படகு திரும்புவது போன்ற உணர்வு கிடைக்கிறது. இதே ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாறும் போது சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கிடைக்கிறது. முக்கியமாக இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொஞ்சம் ஸ்டிப்பாக இருக்கிறது.
இந்த காரில் உள்ள பிரேக்குகள் சிறப்பாக வேலை செய்கின்றன. ரீஜென்ட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைந்து இது பணியாற்றுகிறது. ரீஜென் மோடுகளை அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷனும் இதில் வழங்கப்பட்டுள்ளது எந்த அளவுக்கு இதை அட்ஜஸ்ட் செய்யலாம் என்றால் வெறும் ஆக்சிலேட்டரை மட்டும் வைத்துக் கொண்டே இந்த காரை ஓட்ட முடியும். ஆனால் முற்றிலுமாக காரை நிறுத்த வேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் பிரேக் பிடித்து தான் ஆக வேண்டும்.
ரீஜென் சிஸ்டம் காரின் வேகத்தை மட்டுமே குறைக்கிறது. பிராக்டிகல் அம்சங்களை பொருத்தவரை முன்பக்க சீட்டில் எலக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட்மென்ட் ஆப்ஷன் இருக்கிறது டிரைவர் சீட்டை உயரமாக வைத்துக்கொள்ள ஆப்ஷன் இருக்கிறது இதனால் ரோடு சிறப்பாக கிடைக்கிறது முன்பக்க பயணி சீட்டையும் எலக்ட்ரிகலி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பின்பக்க சீட் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த காரின் பின்பக்கம் சீட்டுக்கு கீழ் தான் பேட்டரி செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூட் பகுதியிலும் சில இடம் பேட்டரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீட் பகுதி பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ஜிஎல்ஏ காரின் அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.
சீட் குறைவான உயரத்தில் வழங்கப்பட்டுள்ளதால் ஹெட் ரூம் பகுதி போதுமான அளவு இருக்கிறது. சன்ரூஃப் இருந்தாலும் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் காருக்குள் அமர முடியும். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பூட் வசதி இல்லை. வெறும் 340 லிட்டர் அளவிலான பூட் பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜிஎல்ஏ காரில் 435 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதி தீர்ப்பு: மெர்சிடிஸ் ஈக்வே 250 ப்ளஸ் எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் கார் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் புதுமையான அம்சங்களை கொண்ட காராக இருக்கிறது. இது காருக்குள் இருக்கும் இட வசதி மட்டும் பெட்ரோல் காரை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது. பேட்டரிக்காக அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இது பெரிய பிரச்சினையாக இருக்காது.
நாங்கள் இந்த காரை ஓட்டி பார்க்கும்போது இதன் பேட்டரி முழுவதும் காலியாகும் அளவிற்கு ஓட்ட முடியவில்லை. இந்த கார் ரியல் வேல்டில் ஓடும் போது 450 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கிறது. ஆனால் இதில் உங்களது டிரைவிங் ஸ்டைலும் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் தான்.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூ லைன் அப்பில் உள்ள கார்களை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த கார் முழுமையாக எலெக்ட்ரிக் காராக தயாரிக்கப்படுவதால், இதில் இருக்கும் பிராக்டிகல் அம்சம் குறைவு மட்டுமே முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









