சொகுசு கப்பல் கூட கிட்ட நெருங்க முடியாது!! 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி டெஸ்ட்-டிரைவ் ரிவியூ!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை ஜி.எல்.சி காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே இந்தியாவில் துவங்கிவிட்டது. வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய சந்தையில் இந்த மெர்சிடிஸ் லக்சரி எஸ்யூவி கார் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 300 4மேட்டிக் மற்றும் 220டி மேட்டிக் என்பவை அவை ஆகும்.

இந்த நிலையில், புதிய 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி காரை இயக்கி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. கர்நாடாகாவில் உள்ள ஹம்பி என்ற பகுதியில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். யுனெஸ்கோ-ஆல் உலக பாராம்பரியமிக்க பகுதியாக அறிவிக்கப்பட்ட கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் மன்னர்கள் பலர் தங்களது குதிரை வாகனங்களில் சென்றிருப்பர்.

mercedes-benz glc test drive review

அத்தகைய பகுதியில், மாடர்ன் குதிரை வாகனமான புதிய மெர்சிடிஸ் ஜிஎல்சி காரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறோம். டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்ததில் 2023 மெர்சிடிஸ் ஜிஎல்சி கார் குறித்து எங்களுக்கு தெரியவந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துள்ளோம். காரை பற்றிய விரிவான விமர்சனத்திற்கு, வாருங்கள் செய்திக்குள் போவோம்.

காரின் வெளிப்புறம், உட்புறம், சவுகரிய & தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்த பழைய மெர்சிடிஸ் ஜிஎல்சி காரின் தோற்றத்திலேயே புதிய ஜிஎல்சி காரும் தோற்றமளிக்கலாம். ஆனால் சற்று உன்னிப்பாக பார்த்தால், காரின் வெளிப்புற & உட்புற டிசைன்களில் பல்வேறு சிறு சிறு மாற்றங்களை மெர்சிடிஸ் கொண்டு வந்துள்ளதை பார்க்க முடியும். இவை, பழைய ஜிஎல்சி-இல் இருந்து புதிய ஜிஎல்சி காரை வேறுப்படுத்தி காட்டுவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியாகவும் காட்டுகின்றன.

mercedes-benz glc test drive review

காரின் முன்பக்கத்தில், சற்று பெரிய அளவில் உள்ள கிரில் பகுதியின் மத்தியில் வழக்கமான மெர்சிடிஸ் லோகோ பொருத்தப்பட்டு இருக்க, அதற்கு இரு பக்கங்களிலும் தடிமனான க்ரோம் பார்கள் உள்ளன. முன்பக்கத்தில் ஹெட்லைட்களின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஹெட்லைட்கள் காரின் முன்பக்கத்தில் இருந்து பக்கவாட்டு பகுதி வரையில் வளைத்து வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரின் இரு முனைகளிலும் சிறிய அளவில் இரு ஏர் இண்டேக்குகள் உள்ளன.

இவை இரண்டிற்கும் மத்தியில் பெரிய அளவிலான ஏர் இண்டேக் வழங்கப்பட்டு இருக்க, அதற்கு கீழே க்ரோம் பேஷ் தட்டு பொருத்தப்பட்டு உள்ளது. காரின் பக்கவாட்டில், ஸ்மூத்தான ஃபினிஷிங்கில் பாடி பேனல்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஜன்னல் கண்ணாடிகளுக்கு பார்டர் போல் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 ஜிஎல்சி காரில் வழங்கப்பட்டுள்ள 19-இன்ச் அலாய் சக்கரங்கள் கார் இயங்கும்போது, மத்தியில் ஒரு புள்ளியை சுற்றி ஓர் பெரிய வட்டம் சுழல்வதுபோல் காட்டுகின்றன.

mercedes-benz glc test drive review

காரின் பின்பக்கம் ஆனது மெர்சிடிஸ் ஜிஎல்இ மற்றும் புதிய சி-கிளாஸ் கார்களின் பின்பக்கங்களை கலவையாக கலந்து வழங்கியதுபோல் உள்ளது. குறிப்பாக, டெயில்கேட்டின் வடிவம் நமக்கு மெர்சிடிஸ் ஜிஎல்இ காரை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், 3டி எல்இடி டெயில்லைட்கள் 2023 ஜிஎல்சி காரில் தனித்துவமான டிசைனில் உள்ளன. காரின் மேற்கூரையில், ஸ்பாய்லரில் 3வது பிரேக் லைட்ஸ் உள்ளதை பார்க்க முடிகிறது.

அப்படியே காருக்கு உள்ளே நுழைந்தால், மின்னும் கேபினின் லக்சரி தோற்றம் நம்மை மூச்சடைக்க வைக்கிறது. அந்த அளவிற்கு, இதுவரையில் எந்தவொரு மெர்சிடிஸ்-பென்ஸ் காரிலும் இல்லாத அளவிற்கு பார்ப்போரை அடுத்த பரிணாம உலகத்திற்கு கொண்டு செல்வதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். இருக்கையில் அமர்ந்தால், எந்திரிக்கவே மனம் வரவில்லை. இதற்கேற்ப, மேற்கூரையில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளதால், இருக்கையில் அமர்ந்திருக்கையில் வானில் மிதப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது.

mercedes-benz glc test drive review

காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் சற்று அதிகரிக்கப்பட்டு இருப்பது கேபினுக்குள் நன்கு தெரிகிறது. 2-லேயர்களாக வழங்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் இரட்டை டிஸ்பிளே செட்-அப் நமது கவனத்தை ஈர்க்கிறது. மெர்சிடிஸ் சி-கிளாஸ் லக்சரி செடான் காரை போன்று, 11.9-இன்ச்சில் நீள் வடிவில் வழங்கப்பட்டுள்ள டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டிரைவரின் பார்வைக்கு ஏற்ப சற்று தாழ்வாக, சாய்த்து வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ கேம் போன்று இருக்கும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை மூலமாக இசையில் இருந்து ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட ஹீட்டட் இருக்கைகள் வரையில் கண்ட்ரோல் செய்ய முடிகிறது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை, ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்பட எந்தவொரு பொத்தான் & கண்ட்ரோல்களையும் மறைக்காத வகையில் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்டேரிங் சக்கரத்தை பிடித்திருக்கும்போது ஓட்டுனர் தலையை அட்ஜெஸ்ட் செய்யாமலேயே தனக்கு முன்பக்கமாக உள்ளவற்றை காணலாம்.

mercedes-benz glc test drive review

டிரைவ் செய்யும்போது சாலையில் இருந்து பார்வையை எடுக்கக் கூடாது என விரும்புபவர்களுக்காக 'ஹே மெர்சிடிஸ்' வாய்ஸ் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காரில் செய்ய விரும்புகிற கண்ட்ரோல்களை குரல் மூலமாக செய்துக் கொள்ளலாம். இந்த வாய்ஸ்-கண்ட்ரோல் வசதியானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ சாதனங்களை ஏற்கக்கூடியதாக உள்ளது. இசையோடு பயணம் செய்ய, 15-ஸ்பீக்கர், 710-வாட் பர்மெய்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்பக்க டெயில்கேட்டை திறந்தால், பொருட்களை வைப்பதற்கு 620 லிட்டர்களில் பூட் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது முன்பை விட கிட்டத்தட்ட 70 லிட்டர்கள் அதிகமாக இருக்கலாம். பயணிகள் மற்றும் காரின் பாதுகாப்பிற்கு 7-ஏர்பேக்குகள், ஆக்டிவ் பார்கிங் உதவி, 360-டிகிரி கேமரா, கார் டூ எக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அத்துடன் அட்டென்ஷன் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் லேன்-கீப்பிங் அசிஸ்ட் என சில அட்வான்ஸ்டு வசதிகளையும் இந்த எஸ்யூவி கொண்டுள்ளது.

mercedes-benz glc test drive review

காரின் என்ஜின், லைலேஜ், பரிமாண அளவுகள்: 2023 மெர்சிடிஸ் ஜிஎல்சி கார் இந்தியாவிற்கு மொத்தம் இரு விதமான டர்போசார்ஜ்டு என்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. இதில் ஒன்று பெட்ரோல் என்ஜின், மற்றொன்று டீசல் என்ஜின் ஆகும். இதில், 1,993சிசி டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 194.4 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜினுடன் இணைக்கப்படும் மைல்ட் ஹைப்ரீட் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் மூலமாக கூடுதலாக 23 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை பெறலாம்.

இந்த டர்போ டீசல் என்ஜின் & மைல்ட் ஹைப்ரீட் செட்-அப்பை 2023 ஜிஎல்சி காரின் 220டி 4மேட்டிக் வேரியண்ட்டில் பெறலாம். மேற்கூறப்பட்ட என்ஜின் & ஹைப்ரீட் சிஸ்டத்தின் உதவியில் இந்த வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த வேரியண்ட்டில் கிடைக்கும் மைலேஜ் 19.47kmpl ஆகும். அதுவே, ஜிஎல்சி 300 4 மேட்டிக் வேரியண்ட்டில் அளவில் சற்று பெரிய 1,999சிசி, டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

mercedes-benz glc test drive review

அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடனும் மைல்ட் ஹைப்ரீட் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 0-100kmph வேகத்தை சற்று விரைவாக 6.2 வினாடிகளிலேயே எட்டிவிடலாம். ஆனால் இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் 14.71kmpl என்ற அளவிலேயே மைலேஜை பெற முடியும்.

இந்த இரு வேரியண்ட்களிலும் என்ஜின் அமைப்பில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-சக்கர-டிரைவ் சிஸ்டம் இடம்பெறுகிறது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் 2ஆம் தலைமுறை மெர்சிடிஸ் ஜிஎல்சி காரின் நீளம் 4,716மிமீ, உயரம் 1,890மிமீ, வீல்பேஸ் நீளம் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,888மிமீ ஆகும். முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும், 2023 ஜிஎல்சி கார் 60மிமீ கூடுதல் நீளமானது மற்றும் 15மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தை கொண்டது ஆகும்.

mercedes-benz glc test drive review

காரில் கிடைத்த பயண அனுபவம் & ஹேண்ட்லிங் கண்ட்ரோல்ஸ்: 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரில் எங்களுக்கு கிடைத்த பயண அனுபவத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சாலையில் இயங்கும் சொகுசு கப்பல். வெளியில் என்ஜின் & சக்கரங்கள் இயங்கும் சத்தமும், அதிர்வுகளும் கூட கேட்காத அளவிற்கு மென்மையான & அமைதியான பயணத்தை பெற முடிந்தது. இத்தனைக்கும் ஹம்பி மாநகர சாலைகளில் கூட காரை இயக்கிப் பார்த்தோம். அப்போதும் கூட மென்மையான சவுகரிய பயணத்தை பெற முடிந்தது.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணிக்கும்போது, ஒருக்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரும் பயன்பாட்டிற்கு வருவதால், ஜெனரேட்டரின் ஓவர்-பூஸ்ட் செயல்பாடு ஏறக்குறைய 30 வினாடிகளுக்கு ராக்கெட்டில் பயணப்பது போன்ற உணர்வை தருகிறது. இதனால், 100kmph+ வேகத்திலும் மகிழ்ச்சியான பயணம் கிடைக்கிறது. ஆக்ஸலேரேஷன் பெடலை மிகவும் அழுத்தமாக மிதிக்கும்போது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கியர்களை மாற்றுவதில் சற்று தயக்கம் காட்டுவதை எங்களால் உணர முடிந்தது.

mercedes-benz glc test drive review

அதிவேகத்தில் டிரைவ் செய்யும்போது கார் சற்று அலையுறுவதை காண முடிகிறது. ஆனால், இது குறை சொல்லும் அளவிற்கு இல்லை. ஸ்போர்ட் மோடில் காரை இயக்கும்போது, வளைவுகளில் எளிதாக திருப்ப முடிகிறது. அதாவது அத்தகைய நேரத்தில் காரின் எடையை குறைவானதாக உணர முடிந்தது. ஆனால் ஸ்போர்டி என சொல்லும் அளவிற்கு இல்லை. பிரேக் பெடலில் இருந்து காலை எடுக்கும்போது ஒரு விதமான நிலையற்ற அதிர்வை உணர முடிந்தது. டிரைவ்கின் போது, ஸ்டேரிங் சக்கரம் எடை குறைவானதாக, இலகுவானதாக உணர வைத்தது.

இருப்பினும் இதுவும் மிகவும் பாராட்டும் அளவிற்கு எல்லாம் இல்லை. வழக்கமாக லக்சரி கார்களில் கிடைப்பதற்கு இணையானதாகவே உள்ளது. புதிய ஜிஎல்சி காரின் மெர்சிடிஸ் 4மேட்டிக் 4-சக்கர-டிரைவ் சிஸ்டம் அருமையாக செயல்படுவதை சொல்லியே ஆக வேண்டும். காரின் முன்பக்க பொனெட்டில் எளிதில் புலப்படாத வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக காருக்கு முன்பக்கமாக என்ன நிகழ்கிறது என்பதை அறிய முடிகிறது. பார்க்கிங் செய்வதற்கு உதவியாக விளங்கும் இந்த வசதியை 8kmph வரையிலான வேகத்தில் காரை இயக்கும்போது வரையில் பயன்படுத்த முடியும்.

mercedes-benz glc test drive review

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரை சொகுசாக காட்டுவதற்கு பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் அவற்றை விடவும் காரை செயல்படுதிறன் மிக்கதாக காட்டுவதற்கு பல அப்டேட்களை மெர்சிடிஸ் நிறுவனம் செய்துள்ளது. காரின் கேபின் எந்தவொரு இரைச்சலையும் அனுமதிக்காத கூடு போன்று இருப்பது உண்மையில் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஆக மொத்தத்தில், டிசைன், தொழிற்நுட்பம் மற்றும் லக்சரி என அத்தனை அம்சங்களிலும் 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி டாப் நாட்ச்!!

More from DriveSpark

Article Published On: Tuesday, August 8, 2023, 11:59 [IST]
English summary
Mercedes benz glc luxury suv review design interior engine performance details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X