இது காரா இல்ல குட்டி தியேட்டரா? 56 இன்ச் ஸ்கிரீன் 15 ஸ்பீக்கர்ன்னு சும்மா பட்டைய கிளப்புதே!
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் நிறுவனம் இந்த 2030 ஆம் ஆண்டிற்குள் தனது வாகனங்களை எல்லாம் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற கடினமான முயற்சி செய்து வருகிறது இந்தியா எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருப்பதால், இந்நிறுவனம் தனது இ க்யூ எலெக்ட்ரிக் தயாரிப்புகளை இந்தியாவில் அதிகமாக அறிமுகப்படுத்துகிறது.
இதற்கு முன்னால் நாம் மெர்சிடீஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தவதை பார்த்திருப்போம். இக்யூஎஸ் செடான் கார் அறிமுகமாகியுள்ளது. அதேபோல க்யூபி 7 சீட்டர் எஸ்யூவையும் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.இந்த வரிசையில் தற்போது உள்ள இக்யூஇ எஸ்யூவி என்ற கார் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த காரை ஒட்டிப் பார்க்க மெர்சிடீஸ் நிறுவனம் எங்களை காஷ்மீரில் உள்ள குல்மார்க் என்ற பகுதிக்கு அழைத்தது. எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவும் நேரடியாக அங்கு சென்று இந்த காரை ஓட்டிப் பார்த்தது. அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை கீழே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.
டிசைன் மற்றும் அம்சங்கள்: வழக்கமான இக்யூ கார்களில் உள்ள வெளிப்புறத் தோற்றம் மற்றும் ஸ்டார்டர்ன் உட்புற கட்டமைப்பு ஆகிய இந்த காரில் இருக்கிறது. இந்த மெர்சிடிஸ் இக்யூஇ எஸ்யூவி காரை பார்த்தவுடன் உங்களுக்கு மெர்சிடிஸ் இக்யூ எலெக்ட்ரிக் பிராண்டுகளில் உள்ள கார்களில் உள்ள டிசைன் அப்படியே இருக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் காரில் உள்ள முன்பக்க கிரில் பகுதி இதில் முற்றிலுமாக அடைக்கப்பட்ட வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் கிரில் பகுதிக்கு மேலே டிஜிட்டல் எல்இடி லைட் பார் ஹெட்லைட்களை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதியில் குரோம் நிறத்தில் பம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுக்கு கீழே இருக்கிறது.ஸ்மூத்தான வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன இதில் 20 இன்ச் ஏரோ அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் டோர் ஹேண்டில் ஜன்னல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் சார்ஜிங் பாய்ண்டுகள் ஆகியன சைனிங் குரோம் ஃபினிஷில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காரின் பின்பக்கம் முக்கியமான டிசைன் ஹைலைட்களாக ரூஃப் பகுதியில் சிறிய ஸ்பாய்லர் இருக்கிறது. அதில் மூன்றாவது பிரேக் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இக்யூ லைன்அப் கார்களில் 3டி ஹெலிக்ஸ் கனெக்டெட் டெயில் லைட்கள்தான் இதில் இருக்கிறது. இந்த வரிசையில் இந்த காரிலும் அதே லைட் இருக்கிறது. மூன்று பாயிண்ட் ஸ்டார் பேஜ் இருக்கிறது. அதை அழுத்தினால் பூட் பகுதியை திறக்கும் பட்டனாக இது மாறுகிறது.

இந்தக் காரின் உட்புறத்தை பொருத்தவரை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் போல இருக்கிறது. ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை 56 இன்ச் கொண்ட எம்பக்ஸ் ஹைப்பர் ஸ்கிரீன் செட்டப் இருக்கிறது. இந்த ஹைப்பர் ஸ்கிரீன் மூன்று டிஸ்ப்ளேக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று டிஸ்ப்ள களுக்கும் முன்னால் திக்கான டெம்பர்டு கிளாஸ் இருக்கிறது இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன் ஒவ்வொரு சைடும் நடுவில் 17.7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் இருக்கிறது.
டிரைவர் சீட்டிற்கு அருகே ஸ்டேரிங் வீலுக்கு பின்னால் இருக்கும் டிஸ்பிளே இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டராகவும், அதே நேரம் முன்பக்க பயணி சீட்டிற்கு முன்னால் இருக்கும் பயணிகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை பெறும் ஸ்கிரீனாகவும் நடுவில் உள்ள 17.7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்கிரீன் காரின் ஒட்டுமொத்த இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தையும் கண்ட்ரோல் செய்யும் ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது.

மத்தியில் உள்ள 17.7 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் நேவிகேஷன் சிஸ்டத்தை இன்பில்டாக கொண்டுள்ளது. அதே நேரம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிவற்றை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது பர்மிஷ்டர் 3டி சவுண்ட் சிஸ்டம் உடன் 15 ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த ஒட்டுமொத்த காரையும் ஒரு தியேட்டர் போல மாற்றுகிறது.
இத்தனை ஸ்கிரீன்கள் மட்டும் போதாது என மெர்சிடிஸ் நிறுவனம் இந்த இக்யூஇ எஸ்யூவி காரில் ஹெட்சப் டிஸ்ப்ளே வழங்குகிறது. இன்னும் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக பெரிய பேனரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ஸ் லைட்டிங், ஏர் பில்ட்ரேஷன் சிஸ்டம், நான்கு ஸோன் கொண்ட ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியன இந்த காரில் இருக்கிறது.

இந்தக் காரின் சீட்டுகள் எல்லாம் சிறப்பாக உள்ளன. முன்பக்கம் வென்டிலேட்டர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது காரில் அமர்ந்திருப்பவர்களை எப்பொழுதும் கூலாக வைத்திருக்கிறது. மேலும் இந்த சீட்டில் மசாஜ் பங்க்ஷன் இருக்கிறது. கடினமான வேலை பார்த்து வந்து விட்டு அன்று காரில் செல்லும் போது மசாஜ் செய்து கொண்டே பயணிக்க முடியும்.
பின்பக்க சீட்டிலும் ஏராளமான சொகுசு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக நீண்ட தூர பயணத்திற்கு களைப்படையாமல் இருக்கும் வகையில் இந்த சீட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டில் கால் வைப்பதற்கான போதுமான இட வசதி இருக்கிறது. இதனால் உயரமானவர்கள் கூட பின்பக்கம் சொகுசாக அமைந்து கொண்டு பயணிக்க முடியும்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த இக்யூஇ எஸ்யூவி காரை பாதுகாப்பான காராக வழங்கியுள்ளது. இதற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இரண்டாவது லெவல் அடாஸ் சிஸ்டம், மல்டிபிள் ஏர் பேக்குகள், டிஜிட்டல் லைட்டிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் பார்க்கின் அசிஸ்ட் ஆகிய இந்த காரில் இருக்கிறது.
ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: புதிய மெர்சிடிஸ் இகியூஇ எஸ்யூவி காரில் அளவுகளை பொருத்தவரை 4863 மிமீ நீளமும், 1940 மிமீ அகலமும் 1685 மிமீ உயரமும் 3030 மிமீ வீல் பேஸூம் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 2.5 டன் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 520 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது.

இந்தக் காருக்கான பவர் செக்மெண்ட்டை பொருத்தவரை இது ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் என்பதால் இதில் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் 90.56 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த டூயல் மோட்டார் ஆல்வீல் டிரைவ் செட்டப்பாக இந்த இக்யூஇ 500 காரில் இருக்கிறது. இது மொத்தம் 402 பிஎச்பி பவரையும் 858 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் காராக இருக்கிறது. இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடிகளில் பிக்கப் செய்து விடும் வகையில் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் உடன் இருக்கிறது.
இந்த இக்யூஇ எஸ்யூவி காரில் பெரிய பேட்டரி செட்டப் இருப்பதால் இது முழு சார்ஜில் 550கி.மீ வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 11கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 0-100% சார்ஜை 9.5 மணி நேரத்தில் ஏற்றி விடும். மேலும் இந்த காரில் டிசி பாஸ்ட் சார்ஜிங் சார்ஜரும் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கிறது. இதற்காக 170கிலோவாட் டிசி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் பொருத்தவரை 174 மிமீ கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 25 மிமீ வரை ஏன் சஸ்பென்ஷன் செட்டப் மூலம் உயர்த்திக் கொள்ளும் ஆப்ஷன் உடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான நேரங்களில் இந்த உயரத்தை 201 மிமீ ஆக உயர்த்திக் கொள்ள முடியும். இந்திய சாலைகளில் உள்ள வேகத்தடைகள் மற்றும் பள்ள மேடுகளை கடக்க இது சற்று உதவியாக இருக்கும்.
டிரைவிங் இம்பிரஷன்: இந்த மெர்சிடிஸ் இக்யூஇ எஸ்யூவி கார் தயாரிக்கப்படும் போது ஸ்மூத்தான அதே நேரம் அமைதியாக கார் ஓட்டும் வகையில் தான் இது தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்காக இந்த காரில் ஃபன்னான விஷயங்கள் எதுவும் இல்லை என நினைக்க வேண்டாம். நீங்கள் இந்த காரில் ஏறி அமர்ந்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் போதும் நிச்சயம் உங்களுக்கு ஃபன்னான ஒரு அனுபவம் கிடைக்கிறது.
இந்த காரின் டிரைவ் டிரெயின்கள் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 விதமான டிரைவ் மோடுகள் உள்ளன. எக்கோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஆஃப் ரோடு மற்றும் இன்டிவிஜுவல். இந்த டிரைவ் மோடுக்கு தகுந்தாற்போல ஸ்டியரிங் வீலும் அட்ஜெஸ்ட் செய்கிறது. எக்கோ மோடுக்கும், ஸ்போர்ட்ஸ் மோடுக்கும் இடையே ஸ்டேரிங் வீல் வெயிட் ஆகும் அனுபவம் மாறி மாறி கிடைக்கிறது.
அதே நேரம் இந்த காரில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டமும் நீங்கள் செட் செய்யும் டிரைவிங் மோடுக்கு ஏற்ப மாறுகிறது. இதன் மூலம் உங்களது அனுபவத்தை முடிந்த அளவுக்கு ஸ்மூத்தாக இருக்க இந்த கார் உங்களுக்கு உதவுகிறது. இந்த பள்ளமேடுகளில் செல்லும்போது உள்ளே இருப்பவர்களுக்கு அதிர்வு தெரியாத வகையில் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக திருப்பங்களின் போது இந்த கார் ஒரு துடிப்பான செயல்பாட்டுடன் இருக்கிறது.
இந்தக் காரில் மொத்தம் மூன்று லேயர்களான ரீஜன் சிஸ்டம் இருக்கிறது. இந்த காரின் பிரேக் பெடல்கள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதை மெர்சிடிஸ் நிறுவனம் நிச்சயம் சரி செய்ய வேண்டும். மற்றபடி ரீஜன் சிஸ்டம் எல்லாம் சிறப்பாக செயல்படுகிறது. காரும் ஓட்டு மொத்தமாக பார்த்தால் சிறந்த காராக தான் இருக்கிறது.
இறுதி தீர்ப்பு: இந்த மெர்சிடிஸ் நிறுவனத்தின் இக்யூ மாடலில் மூன்றாவது எலெக்ட்ரிக் காராக இந்த இக்யூஇ எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்திய சாலைகளில் இந்த கார் நிச்சயம் சொகுசாகவும் அதே நேரம் ஸ்மூத்தான ஒரு டிரைவிங் அனுபவத்தை தரக்கூடிய காராக இருக்கிறது. மெர்சிடிஸ் நிறுவனத்தில் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
இந்த காரின் முக்கியமான மிகப்பெரிய எதிர்பார்ப்பு இதன் விலையாக தான் இருக்கிறது. இந்த இக்யூஇ எஸ்யூவி 500 கார் தற்போது முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த காரின் விலை நிச்சயமாக தான் இருக்கும். எலெக்ட்ரிக் காரை விட இந்த காரின் விலை அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









